தமிழாக்கம்: புதுவை ஞானம்
நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நனைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஒருவர் உயரத்தில் ஏறியாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிரமப்பட்டு வண்டிக் கொட்டகையில் இருந்த ஏணியில் ஏறினேன். அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அரிச்சுவடி போலிருந்த மார்த்தியின் கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படித்தேன்.
எனது பதின் மூன்றாவது வயதில் மார்த்தியை மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டேன். தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்த முயற்சியில் உழைத்தேன். இறுதியாக நான் மொழி பெயர்ப்பினை முடித்த போது சற்றேறக்குறைய அவர் இந்தக் கவிதைகளை இயற்றிய வயதினை எட்டிவிட்டேன். ஆனால், நான் அது வரை இருந்ததை விட அவரை விட்டு மேலும் விலகியிருந்தேன். ஏனெனில் எந்த ஒரு ஏணியும் அவரை எட்டும் அளவுக்கு உயரம் வாய்ந்ததாக இல்லை– அவரது எல்லையற்ற புகழை எட்டும் அளவு இல்லை.இருந்த போதிலும் இந்த மொழி பெயர்ப்பு உலகின் முக்கியமானவர்களில் ஒருவராய் விளங்கும் ஹொசே மார்த்தியிடம், பலரை நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஏணியின் முதற்படியாக இருக்கும் என நம்புகிறேன்.
ஹொசே ஜுலியன் மார்த்தி பெரஸ் ( JOSE JULIAN MARTI PEREZ ) கியூபாவின் ஹவானா நகரில் ஜனவரி, 28, 1853ல் பிறந்தார். பின் ஒரு காலத்தில் கியூப தேசிய இனத்தின் வரலாற்று நாயகனாகவும், கலாச்சாரச் சின்னமாகவும் வரப்போகின்ற அவர் MARIANA MARTI NAVARO என்னும் இஸ்பானிய சிப்பாய்க்கு மகனாகப் பிறந்தார். ( எளிய கவிதைகள் : XLI ). கேனாரி தீவினைச் சேர்ந்த Leonar Perez Cabra ( கவிதை XXVII ) அத்தீவின் குடியேற்ற அலையின் கடைசித் தருணத்தில் அங்கு வந்தடைந்தார். எந்தவொரு மனிதரும் தனது சொந்த நாட்டோடு, பிறந்ததிலிருந்தே இந்த அளவு பிடிப்போடு இருந்ததில்லை ; அல்லது, தன்களது இலட்சியம் விடுவித்துக்கொள்ள இயலாத படிக்கு அந்நாட்டுடன் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாக இருந்ததில்லை. தனக்கென கியூப வேர்கள் இல்லாத போதிலும், இன ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும்தனது நாட்டவர்களிடையே துலாம்பரமாகத் தெரிந்த மார்த்தி, கியூபர்களுக்கென பொது அடையாளம் ஒன்றினை வடித்து உருவாக்கினார். இரட்டிப்பு அடிமைத் தளை பூண்டிருந்த இனத்தின் முன்னணி வீரரானார். ( கவிதை (XXX) .
.
கியூபாவில் இஸ்பானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியான போராட்டங்களை நடத்தி வந்த் முற்றிலும் வேறுபட்ட போராட்டங்களை ஒரணியில் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். கியூபா சுதந்திரம் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததன் மூலம், கொலம்பசால் தொடங்கி வைக்கப்பட்ட காலனியாதிக்கத்தையும் – அதற்கு எதிராக பொலிவரால் தொடங்கி வைக்கப்பட்ட அரைக்கண்ட விடுதலைக்கான போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். 19, மே,1895 அன்று தனது 42 ஆவது வயதில் விடுதலைப் போரில் அவருக்கு ஏற்பட்ட வீர மரணமானது இலத்தீன் அமெரிக்கவின் புதுயுகத் தொடக்கம் என மதிக்கப்படுகிறது. மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் சிந்தனையாளரும், இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகத்தை எட்த்தியம்பினவருமான மார்த்தி உண்மையில் அந்நாட்டின் மகத்தான கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
மார்த்தியின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும் இரட்டைப் பிறவிகள். தனது பதினைந்தாவது வயதில், 1868 இல் கியூப சுதந்திரத்துக்கான பத்தாண்டுப்போருக்கு சற்று பின்னர், இஸ்பானிய கொடுங்கோன்மையினை முதன் முதலில் எதிர் கொண்டார்.
Volunteer என அழைக்கப்பட்ட உள்ளூர்க் காவலர்கள், Villanuea Theatre இல் சுதந்திர கோஷங்களுக்கு எதிராக, நிராயுதபானியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தார்கள் ( கவிதை XXXVII ) இந்த நிகழ்ச்சியின் பின் விளைவாக மார்த்தியின் ஆசிரியரும் வழிகாட்டியுமான கவிஞர் Rafael Maria de mendive புரட்சிகர லட்சியங்களுக்கு ஆதரவாளர் என அறியப்பட்ட இவர் கைது செய்யப்பட்டு இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். அந்தப் படுகொலைக்கு அடுத்த நாள் La patria libre என்ற தலைமறைவு ரகசியப் பத்திரிக்கையில், ஒரு விடலைக் கதாநாயகன் அந்நியப் படையெடுப்பை எதிர்த்து உயிர் துறப்பதான தனது Abdala
என்ற நாடகத்தைப் பதிப்பித்தார். பின்னர் ஒரு மாதத்திற்குள்ளேயே“10 de octubre!” அவரது பாடல் El Siboney என்ற மாணவர் பத்திரிக்கையில் வெளியாகியது. கியூப சுதந்திரத்துக்கு போராடியதாலும், தனது பள்ளியில் படித்த சக மாணவர் ஒருவர் கொலைகாரப் படையில் தொண்டராகச் சேர்ந்ததைக் கண்டித்து கடிதம் எழுதியதாலும் , தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு San Lazaro Quarry யில் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் என இராணுவ நீதி மன்றம் அவருக்குத் தண்டணை வழங்கியது. இடுப்பிலும், கால்களிலும் பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலித் தளையானது அவரது சிறைக்காலம் முழுமைக்கும் அகற்றப்படவில்லை. அந்த இரும்புத்தளை சதையில் பதிந்த இரத்தக் காயத்தினை அவர் வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொள்ள நேரிட்டது.
செல்வாக்குள்ள ஒரு நண்பர் மூலமாக மார்த்தியின் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தங்களது மகனை பைன்ஸ் தீவுக்கு இடமாற்றம் செய்வித்து இறுதியாக 1871 _ ல் அவரது தண்டனையை ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்துவதாகக் குறைத்து விட்டனர். அங்கு மார்த்தி சரகோசா மற்றும் மாட் ரிட் பல்கலைக் கழகங்களில் படித்துக்கொண்டே El precidio politico en Cuba (1871) என்ற ,கியூபச் சிறைகளில் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட நூலினையும், La Republica espanala ante la revolucion cubana (1873) என்ற, இஸ்பானியர்கள் புதிதாக உருவாக்கிய குடியரசில் உள்ளது போன்ற அதே சுய நிர்ணய உரிமை கியூபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வீணே வற்புறுத்திய நூலையும் பதிப்பித்தார். இஸ்பானிய காலனிய ஆதிக்கத்தின் எடுபிடிகளால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மீறி, இச்பெயினில் தான் கழித்த காலத்தை தன்னை உருவாக்கிய காலம் அது என அன்புடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு மட்டுமின்றி இஸ்பானியர்களின் பாரம்பரியக் கொள்கையான மூடநம்பிக்கை மற்றும் சகிப்பின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராடி உயிர் துறந்த தியாகிகளின் நினைவையும் போற்றினார்.
சட்டம், தத்துவம், மற்றும் இலக்கியத்துறையில் பட்டம் பெறுவதற்காக பரீட்சிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பின்னரும், இன்னமும் நாடு கடத்தல் தண்டணைக் காலத்தில் இருந்த மார்த்தி இஸ்பானியக் கண்காணிப்பை மீறி ஏமாற்றி சிறிது காலம் பாரீசில் இருந்தார். அங்கு விக்டர் ஹ்யூகோவைச் சந்தித்ததுடன் அவரது Mes fils என்ற நூலினை மொழி பெயர்த்தார். பாரீசிலிருந்து சவுத் ஆம்ப்டன் மற்றும் நியூயார்க் வழியாக மெக்சிகோவுக்கு கடற்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக, 1875 இல் அதறவற்ற தனது குடும்பத்தினருடன் இணைந்தார். Revisita universal பணியாளராக சேர்ந்தார். அவரது Amor con amor se paga (1875) என்ற நாடகம் Teottro principal என்ற அரங்கில் நடத்தப் பட்டது. மெகிகோவில் தனது ஏழு சகோதரிகளில் மிகவும் பிரியமான Mariana Matilde வைப் பறிகொடுத்தார். (கவிதை VI) தனக்கு எதிர் காலத்தில் மனைவியாய் அமைந்த ஒரு பணக்காரக் குடியேற்றக்காரரின் மகளான Carmen zayar Bazan உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. (கவிதை XVIII, XX, XXXV, மற்றும் XXXVII). அங்கு அவர் வழக்கறிஞரான Manuel Mercado வைச் சந்தித்தார். அவரது நெருங்கிய நண்பராகவும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அவருக்கும் சேர்த்து ‘எளிய கவிதைகள்’ சமர்ப்பனம் செய்யப்பட்டது.
“ எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் மிகவும் நேசித்தது இந்த நாடுதான்” என்று மெக்சிகோ பற்றிப் பேசுகையில் மார்த்தி குறிப்பிட்டார். அங்கும் கூட தொடர்ந்து வசிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. Porfrio Diaz இன் திடீர் எழுச்சி அவரது வெளியேற்றத்தைக் கட்டாயமாக்கியது. கண்டு பிடிக்கப்பட்டால் நிச்சயம் சிறைவாசம் தான் என்ற ஆபத்து இருந்த போதிலும் கூட, 1877 இல் திருட்டுத்தனமாகவும் திடீரெனவும் Julian Prez என்ற பொய்ப் பெயரில் அவர் ஹவானா வந்து சேர்ந்தார். வந்த இரண்டு மாதத்துக்குள்ளேயே அவர் கவுதமாலா சென்று Jose Maria Izaguirre என்ற கியூபர் நடத்திய பொதுப்பள்ளியில் ஆசிரியரானார். பின்னர் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். கவுதமாலாவில் அவர் இருந்த அந்த ஆண்டில் அரசின் வேண்டுகோளினை ஏற்று கவுதமாலாவின் பண்டைய வரலாற்றை எழுதிப் பதிப்பித்தார். ஆனால் அது பயனற்றதாக ஆகிவிட்டது. ஏனெனில் அவரது நண்பர் Iza Guirre பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது தானும் தனது பதவியை விட்டு தன்னிச்சையாக விலகி அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.
தான் கவுதமாலாவில் தங்கியிருந்தபோது Maria Garcia Granodos உடைய வெகுளித்தனமான காதலை உதறித் தள்ளியது பற்றி எப்போதுமே நினைந்து நினைந்து வாடினார். அவளது இறப்பிற்குப் பின்னர்தான் அவளும் தன்னை உண்மையாக நேசித்தது அவருக்குப் புரிய வந்தது. (கவிதை IX)
இஸ்பெயின் நாட்டில் 1878 இல் பத்தாண்டுப் போரின் முடிவில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன் படுத்திக்கொண்டு மார்த்தி ஹவானாவுக்குத் திரும்பினார். அவரது மனைவி கார்மெனும் உடன் வந்து நவம்பர், 22 அன்று அவரது ஒரே மகனான Jose Francisco Marti Zyaz Bazan ஐ ஈன்றெடுத்தார். (கவிதை 1:10 மற்றும்XXI )
வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான உரிமம் மறுக்கப்பட்ட நிலையில் நியூயார்க்கினைத் தளமாகன் கொண்டு செயல்பட்ட Comitee Revolucionario cuba என்ற அமைப்பின் வழிகாட்டுதலுக்கேற்ப ஒரு புதிய கிளர்ச்சியை உருவாக்குவதில் உதவிக்கொண்டே ஒரு வக்கீல் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அந்தத் தீவில் மீண்டும் பகைமைகள் உருவானபோது தனக்கு எதிராக எந்த ஒரு குற்றமும் சாட்டப் படாத நிலையிலேயே மீண்டும் ஒரு முறை இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். ஆனால் அவர் மீண்டும் தப்பித்து Pyreness ஐக் கடந்து, தான் மிகவும் நேசித்த மகனையும் ,குடும்பத்துக்கும் அப்பால் வியாபித்திதிருந்ததும் ஆனால் குடும்பத்தை விலக்காததுமான அவரது பரிவுணர்வை, சில சமயங்களில் குடும்பத்தைத் தாண்டியது மட்டுமல்ல அதனை விலக்குவது எனத் தவறாகப் புரிந்து கொண்டு வீணே பிணங்கிய மனவியையும் பிரிந்து ஜனவரி 1880 இல் நியூயார்க் வந்தடைந்தார்.
நிச்சயமான வாழ்வாதாரம் ஏதுமில்லாத அன்னிய பூமியில் Manuel Mantilla, Carmen என்கிற கியூபாவிலிருந்து புலம் பெயர்ந்த தம்பதிகள் நடத்திய உணவு விடுதியில் தங்கினார். முதலில் போதுமான வேலை கிடைக்காததாலும், இஸ்பானிய தூதரகத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்ட Pinkerton Agents நாள் முழுவதும் பின் தொடரப்பட்ட போதிலும்; உடனடியாகத் தனது புரட்சிகரப் பணிகளைத் தொடங்கி Comite Revolucionario cubana வின் இடைக்காலத் தலைவராகவும் ,செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். மார்த்தி, தான் “மனிதர் குல மாணிக்கம்” என மதித்த புகழ் மிகு பத்திரிக்கை ஆசிரியரான Charles A.Dana நடத்தி வந்த THE HOUR AND THE SUN பத்திரிக்கையில் கலை விமர்சகராக வேலையேற்று இறுதியாக கியூபாவிலிருந்த தனது குடும்பத்தை வரவழைத்தார். இருந்த போதிலும் புதிய குடியேற்றக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளை அவரது மனைவியால் தாங்க முடியவில்லை. தீவில் எழுச்சி ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே மார்த்தியை தன்னுடன் கியூபாவுக்கு திரும்ப ஒப்புக்கொள்ளவைக்க இயலும் என்ற நம்பிக்கை இல்லாமல், அப்படி அவர் ஒப்புக்கொண்டிருந்தாலும் நிச்சயமான எதிகாலம் இல்லாத நிலையில் நவம்பர்,1880 இல் தங்களது மகனுடன் புறப்பட்டு விட்டார் . பின்னர் கணவருடன் ஒன்று சேரச் சம்மதித்தார். எனினும், நியூயார்க்கிலிருந்த இஸ்பானிய தூதரகத்தின் சதியால் மீண்டும் குடும்பத்தை விட்டு வெளியேறினார்.
ஜனவரி 1881 இல் இன்னமும் நியூயார்க்கில் அவரை ஈர்த்துவைக்க ஏதுமில்லாத நிலையில் அவர் வெனிசுவேலாவுக்குப் பயணமானார்.அங்கு ஆறு மாதம் தங்கி இருந்தார்.Revisita Venezolana என்ற நவீனமானதொரு கலை மற்றும் இலத்தீன் Ismaelillo அமெரிக்கக் கருத்துக்களைத் தாங்கி வரும் பத்திரிக்கையைத் தொடங்குமளவும் Ismaelillo Ismaelillo என்ற, ஒரு தந்தை மகனுக்கென சர்ப்பிக்கப் பட்டவற்றுள் எல்லாம் மிக அழகிய கவிதை நூலினை எழுதவும் அவகாசம் இருந்தது.
வெனிசுவேலாவில் இருந்தபோது, Cecilio Acousta அவர்களைச் சந்தித்து அவர் காலமாகு முன்னரே நண்பராக்கிக் கொண்டார். “பெரும் புகழ் வாய்ந்த புத்துணர்வாளர்” என அறியப்பட்ட GENERAL BLANCO வினால் அந்த நண்பர் வீட்டுக்காவல் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். Acosta வுக்கு மார்த்தி எழுதிய அஞ்சலியில் அன்னாரது வாழ்வினைப் போற்றியும், அவர் எந்த ஜனநாயக மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தாரோ அவற்றை நியாயப்படுத்தியும் எழுதியிருந்தார். அத்தகையதொரு புகழாரத்தை Gusman Blanco வுக்கு சூட்ட மறுத்ததால் மார்த்திக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெனிசுவேலாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு, தான் ஏற்கனவே மெக்சிகோவிலும் கவுதமாலாவிலு முயற்சித்ததைப் போன்று முயற்சித்தார். ஆனால் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஆட்சியின் அக்கிரமங்களை எதிர்த அவரது சமரசமற்ற போக்கு ,அவரது பாராட்டினை விலைக்கு வாங்கவோ , அவரது வாயை அடைக்கவோ முடியாத அந்த நாட்டுத் தலைவர்களுடன் மோதலை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் அநீதிக்குத் தலை வணங்காத அவரது வெளிப்படையான பேச்சு , எந்தெந்த நாடுகளில் அவர் வசித்தாலும் அந்நாடுகளின் மிகவும் முன் மாதிரியானவர்களின் பாராட்டினை அவருக்குப் பெற்றுத் தந்தது.
ஆகஸ்ட் 1881 இல் மார்த்தி நியூயார்க்குக்குத் திரும்பி வந்தார். அவர் வாழ்வில் எஞ்சியிருந்த பதிநான்கு ஆண்டுகளை அவர் அங்கே கழிக்க நேர்ந்தது. இங்குதான், தன்னை விட்டு விலகி விலகிச் சென்றதும், தான் மிகவும் ஆவலோடு நேசித்ததுமான சுதந்திரத்தையும் குடும்ப வாழ்வினையும் அவரால் அடைய முடிந்தது. மார்ட்டில்லாவின் இறப்பிற்குப் பிறகு Carman Miyares அவர்களின் நான்கு குழந்தைகளுக்கு மாற்றுத்தந்தை ஆனார். Carman Miyares இடம் தான் கியூபா மீது மார்த்தி கொண்டிருந்த நேசத்தை மறுதலிக்காத நிலைத்த துணையைக் காண முடிந்தது. (கவிதை IV ).
அமெரிக்காவில் மார்த்தி இரு புரட்சிகளைத் தொடங்க வேண்டி இருந்தது.ஒன்று எழுத்துலம் சார்ந்தது, மற்றது மானுட விவகாரங்கள் பற்றியது. எழுத்துலகப் புரட்சி 1882 இல் Isamallillo வைப் பதிப்பித்ததில் தொடங்கியது. பெரும்பாலான விமர்சகர்கள் அதனை இஸ்பானிய கவிதைத் தளத்தில் நவீனத்துவம் உதயமாகக் காரணமாக இருந்தது என மதித்தனர். 1885 இல் தொடராக வந்த அவரது புதினமான AMISTAD FUNESTA தான் முதன் முதலாக நற்பண்புகள் (Manners) பற்றிய கருத்துகளை அறிமுகப் படுத்தியதாகும். La Edad de Oro (1889) நூல் தான் குழந்தை இலக்கிய மரபினை முன்னெடுத்துச் சென்றது என்பதுடன் இன்றும் அவ்வகையில் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இருந்த போதிலும் மார்த்தியின் அதிக பட்ச செல்வாக்கு இதழியல் துறையில்தான் செலுத்தப்பட்டது என்பதோடு, அவர் இதழியலை இலக்கியத்தரத்துக்கு உயர்த்தி மானுடச் சேவையில் அதனை ஈடுபடுத்தினார்.
வேறு எந்த ஒரு மனிதரையும் விட மேலை அரைக்கோளத்தின் மூன்றில் இரண்டு பதியை மீதியிருந்த ஒரு பகதிக்கு அறிமுகப்படுத்தியதில் மார்த்திக்குப் பெரும் பங்கு உண்டு. இதனை அவர் மெக்சிகோவின் El Patrido Liberal மற்றும் Buenos Aires இல் இருந்து வெளிவந்த La Nacion இதழ்களில் இருவாரங்களுக்கு ஒரு முறையாக தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு, தான் எழுதியவற்றின் மூலம் சாதித்தார்.அவை இலத்தீன் அமெரிக்காவின் எல்லா நாளிதழ்களிலும் மறுபதிப்பு செய்யப்பட்டன என்பதோடு முதன் முதலாக சர்வதேச அளவில் மார்த்தியை அரசியல் விமரிசகர் என ஏற்றுக் கொள்ள வைத்தன. மார்த்திக்கு மச்ற்றொரு பிரதான எழுது பொருளும் இருந்தது. அது அமெரிக்க ஐக்கிய குடிஅரசுகள் பற்றியதாகும்.Obras Completas என்ற தனது 28 தொகுதிகள் கொண்ட தொகுப்பில் 5 தொகுதிகள் இதற்கெனவே கவனம் செலுத்தின. எமர்சனையும் விட்மனையும் மார்த்தி இஸ்பானிய உலகுக்கு அறிமுகப்படுத்துனார் என்பதோடு, அரைக்கோள கலாச்சாரப் பரவலில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த விளக்க உரையாளராகவும் இருந்தார். உண்மையில், De Tocquille ஐரோப்பாவுக்கு செய்ததைப் போலவே,இலத்தீன் அமெரிக்காவுக்கு அமெரிக்க ஐக்கிய குடியரசுகள் பற்றிய கருத்து உருவாகக் காரணமாக இருந்தார்.ஜிங்கோயிசத்தின் வெறித்தனமான உச்சகட்ட நாட்களில் அமெரிக்காவின் அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பகுத்தாய்ந்து, இலத்தீன் அமெரிக்காவுக்கு அதனால் நேர இருக்கும் ஆபத்துகள்/ நாசம் பற்றி எச்சரித்தார். அமெரிக்க அரசாட்சி முறையில் பொதிந்திருந்த தவறுகளை அவர் மூடி மறைக்கவில்லை. ஒரு அனுதாபியுடைய முழு சக்தியடனும் அதனை எதிர்த்துச் சாடினார். ஆனால் குற்றங்குறைகளைக் கண்டித்தாரேயழிய அமைப்பை குறை கூறவில்லை.அந்த அமைப்பு ‘சமூக மிருகம்’ என்ற அளவில் மனிதன் சாதித்ததில் உச்சகட்டமானது என மதித்தார்.
இலத்தீன் அமெரிக்காவில் அவரது புகழும் செல்வாக்கும் பரவிய போது மார்த்தி அர்ஜெந்தினா மற்றும் பராகுவே நாடுகளால் அமெரிக்காவில் இருந்த தங்கள் தூதரகத்துக்கு தலைமை தாங்க நியமிக்கப் பட்டார்.அதே ஆண்டில் உருகுவே நாட்டால் வாஷிங்டனில்செயல் பட்ட International American Monetary conference என்ற அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இலத்தீன் அமெரிக்கப் பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் பிராந்திய செலாவணி உடகமாக தங்கத்துக்குப் பதில் வெள்ளியைப் புகுத்த முயன்ற அமெரிக்க சதியை முறியடிக்கக் காரணகர்த்தாவாக செயல் பட்டார். மேற்கே ஏராளமான வெள்ளிப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால் இப்படி ஒரு திட்டத்தை அமெரிக்கா முன் மொழிந்தது.
‘மோசமான பனிக்காலம்’ என வர்ணிக்கப்பட்ட அந்தப் பருவத்தில் பணிச்சுமையால் சோர்ந்து போன – மார்பக நோயால் பாதிக்கப்பட்ட( – அது எலும்புருக்கி நோயாய் இருந்திருக்கலாம் – ) மார்த்தியை, நியூயார்க்கின் மேட்டுப் பகுதியில் இருந்த Catskill என்ற இடத்தில் காற்றாடத் தங்கி ஓய்வெடுக்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
***
தன்னால் சோம்பி இருக்க முடியாது என்பதைக் கண்ட மார்த்தி , தனது நோயாறுதல் காலத்தில் Versos sensillos கவிதைத் தொகுதியின் பெரும்பகுதியை எழுதி முடித்தார். அது இஸ்பானிய- அமெரிக்கக் கலாச்சாரத்தின் ஒப்புயர்வற்ற சிகரமாக அமைந்தது அவரது மற்றெல்லாப் படைப்புகளும் மறைந்து போனாலும் கூட, அந்த ஒன்றே கூட இலக்கியப் படைப்புலகில், அவருக்கு இருக்கும் அதே உயர்ந்த இடத்தை நிச்சயம் பெற்றுத் தரும்.
Versos Sensillos (Simple verses – எளிய கவிதைகள் ) மார்த்தியின் ஆன்மாவை வெளிப்படுத்தும் சுயசரிதை ஆகும். ஒவ்வொரு கவிதையும் ஒரு உணர்வு நிலையை அல்லது; ஒரு கவிஞனையும் மனிதனையும் உருவாக்கிய கணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தீவினுக்கும், ஒரு கண்டத்திற்கும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. மார்த்தி மறு வார்ப்பு செய்ததான Golden Rule “La rosa blanca” VERSE XXXIX என்ற கவிதைதான் இலத்தீன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கவிதை எனலாம். {மொழி பெயர்ப்பாளரின் குறிப்பு : “மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறாயோ அவ்வாறே பிறரை நடத்துவாயாக!” “ Whatsoever ye would that men should do to you, do ye even so to them; for this is the law and the prophets” Matt.vii,12 } அவரது இந்தக் கவிதையைத்தான் பள்ளியில் குழந்தைகளுக்கு முதன் முதலாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். “La nina de Gautamala” கவிதை (IX) ,இஸ்பானிய இலக்கியத்திலேயே மிகவும் புகழ் வாய்ந்த காதல் கவிதை ஆகும். “La bailarina Espanola ( கவிதை X ) நடனத்தின் தாள லயமான அடவுகளை முதன் முதலில் மனதில் பதிய வைத்த இஸ்பானியக் கவிதை ஆகும். “Yo tengo un amigo muerto”(கவிதைVIII) அந்த மொழியில்முதல் முதலில் வெளியான உள்மன வெளிப்பாட்டியல் கவிதை ஆகும். தேச பக்த கவிதைகளான ( கவிதை எண் :XXIII, XXV, XLV )ஆகியவை , அவரது காலத்தில் தனது நாட்டின் மீதான நேசத்தை எந்தப் படாடோபமும் வெறியும் இல்லாமல் இயல்பாக வெளிப்பட்ட கவிதைகள் ஆகும்.ஆனால் எவ்வளவுதான் திகைக்க வைத்த போதிலும் ‘ எளிய கவிதைகள்’ தனித்தனிக் கவிதைகள் என்பதற்கும் மேலானவை. அந்தக் கவிஞன், அந்தப் போராளி, அந்தப் பாடலாசிரியன், அந்தத் தத்துவ ஞானி, அந்த சட்ட மேதை, அந்த உண்மை தேடுபவன், உவகை ஊட்டவல்ல அதே சமயம் மதிமயக்கம் ஊட்டாத காதல் மன்னன், கவிதைக்காக களம் இறங்கியவன் ஆனால் கவிதையை மேம்படுத்தியவன். அறிஞன் ஆனாலும் பரிசுத்தமானவன். எளிய கவிதைகள், வாழ்க்கையில் பிரதிபலிக்கும் எதிரும் புதிருமான அனைத்தும் அடங்கிய – சிறந்த இசை மேதையால் வடிவமைக்கப்பட்ட கூட்டு இசையாகும் ( Sympony ). மார்த்தி உலக முழுமைக்குமான மனிதர்.அவரது தியாகம் புரிவதற்கான சாத்தியம் வரம்பற்றது. அவரது கொள்கைகள் அசைக்க முடியாதவை.
டிசம்பர் 13, 1890 – ல் ‘எளிய கவிதைகள்’ கையெழுத்துப் பிரதியிலிருந்து சில பகுதிகளை, 361 மேற்கு 58 ஆவது தெரு, நியூயார்க் என்ற முகவரியில், கார்மென் மியாரஸ் இல்லத்தில் Francisco chacon caldron அவர்களைக் கவுரவிக்கும் மாலை விருந்து ஒன்றில் வாசித்தார். ‘எளிய கவிதைகள்’ அக்டோபர்,1890-ல் LOUIS WEISS & CO of Newyork என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படவிருந்தது. அவரது வாழ்நாளிலேயே வெளியிடப்பட்ட கடைசி நூலாகும் அது. எளிய கவிதையின் முடிவுரையாக அவர் பேசிய “hirsute versos libres” அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது. அவரது வாழ்வில் மிஞ்சி இருந்த ஒரெ செல்வமான எளிய கவிதைகளின் பிரதிகளை தான் சென்ற இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று , பழைய புதிய நண்பர்களுக்கு வழங்கினார். தனது ஆன்மாவின் ஒரு பகுதியான அத்தொகுப்பை, தான் சந்தித்த ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையிடமும் விட்டுச் சென்றார்.
ஒரு கவிஞன் என்ற முறையில் இன்னும் கூட ஒரு விஷயம் மார்த்தியைப் பற்றி சொல்லப்பட வேண்டி இருக்கிறது. வால்ட் விட்மன் அவர்கள் காலமான 1892 ஆம் ஆண்டிலிருந்து மார்த்தி மறைந்த 1895 வரை; ஆங்கிலமொழியின் கவிதை ஆயினும் சரி – இஸ்பானிய மொழியின் கவிதை ஆயினும் சரி ,அந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் கவிஞர்களில் மார்த்தி தான் தலை சிறந்த கவிஞராக இருந்தார் என்பது அன்றும் சரி இன்றும் சரி பலருக்கும் தெரியாத உண்மையாகும். அந்த நாட்டிலிருந்துதான் தனது பெரும்பாலான நூல்களை எழுதினார், பதிப்பித்தார் என்பதனாலும்; அவை அமெரிக்க கலாச்சார மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்பவும்,பல சமயங்களில் அவற்றை விஞ்சியும் இருந்ததனால் அமெரிக்க இலக்கியப் பாரம்பரையின் ஒரு அங்கம் என்பதனையும், நிச்சயமாக அதற்கு பங்களித்தவர்களுள் மகத்தான இஸ்பானியர் என்பதையும் யாராலும் மறுக்க இயலாது.
இலகியப் படைப்பும் சீர்திருத்தமும் ஆன அவரது காலகட்டம் முழுவதுமே ,கியூப விடுதலை மீதான அக்கறையைக் கைவிட்டதில்லை அது எப்போதுமே அவரது வாழ்வின் தலையாய நோக்கமாக இருந்தது .அவரது அனைத்து நடவடிக்கைகளும்
அதற்கெனவே ஆகவும் அதற்கு கீழ்ப்படிந்ததாகவுமே இருந்தன. “ ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்றும் வெளிச்சமும் தேவையாய் இருப்பது போலவே கவிதையும் தேவைப்படுகிறது” என்று மார்த்தி எழுதினார். மற்றெந்த மனிதர்களையும் விட கவிஞனுக்கு அது தேவைப் படுகிறது என்பதனை எளிய கவிதைகள் உறுதிப்படுத்தின(கவிதை XLVI ) .ஆனால் கலை கலைக்காகவே என்று நம்பிய அழகியல்வாதி அல்ல அவர். இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் மகத்தான கலைஞரான அவர், “புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் கலை ஆயினும் கூட!” என்றும் எழுதினார்.
1884- ல் பத்தாண்டுப் போரின் இரு முக்கிய ராணுவ தளபதிகளான ஜெனரல் மாக்சிமோ கோமஸ் மற்றும் அந்தானியோ மேசியோ ஆகியவர்களால் கியூபத்தீவின் புதிய கிளர்ச்சிக்கென நிதி திரட்டும் பணியின் பிரச்சாரத்தில் முன் கையெடுத்து செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், குடிமை விவகாரங்களில் இராணுவத்தின் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய கருத்து வேறுபாடு காரணமாகவும், அந்த ஜெனரல்கள் ஒரு ராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ விரும்புகிறார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும், அந்த ஜெனரல்களின் திட்டத்தை விட அவர்கள் நல்லவர்கள் என்பதனை உணர்ந்து அவர்களின் முதிர்ச்சியற்ற திட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.( கடந்த யுத்ததின் தோல்விக்கு ஆயுதம் தாங்கியகுடியரசு ஆட்சிதான் காரணம் என அவர்கள் பழி சுமத்தினர்). கோமஸ் – மேசியோ திட்டம் தோல்வியுற்றதும்,கடந்த யுத்தத்தின் தோல்வியால் ஏற்பட்ட, தோல்வி மனப்பான்மையிலிருந்தும் தனிப்பட்ட குரோதங்களிலிருந்தும் விடுபட்டு ஆறுதல் அடைய நாட்டுக்கு அவகாசம் தேவைப் படுகிறது என்று மார்த்தியை நம்ப வைத்தன.
1891 ஆம் ஆண்டு வாக்கில் கியூப விடுதலைப் போருக்கு ‘அவசியமான’ சரியான நிலைமை கனிந்து வந்திருப்பதாகப் புரிந்து கொண்டார். சுதந்திரம் பெறுவதற்கு அவசியமானது மட்டுமல்ல; தனது வரலாற்று ரீதியான பலத்தால், விலை கொடுத்தோ அல்லது நிர்ப்பந்தம் செய்தோ கியூபாவைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் அமெரிக்க ஆசையை தடுத்து நிறுத்துவதற்கும் அவசியமான நேரம் வந்து விட்டதாகக் கருதினார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையிலும் , ஒரு தூதுவர் என்ற முறையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொங்கி வரும் பேரலையைத் தடுக்கப் போராடியிருக்கிறார். இப்போது ஒரு படை வீரனாகவும் போராட முடிவு செய்தார்.
ஏப்ரல் 5, 1892 -ல் KEYWEST என்ற இடத்திலிருந்த பல்வேறு கியூப மன்றங்களின் கூட்டத்தில் “ ஒரு நோக்கத்துக்காக ஒன்று படவும், தேவையான அனைத்து சக்திகளையும் தூண்டி துரிதப்படுத்தவும், உணவிலும் செயலிலும் ஜனநாயக முறையில் செயல்படும் ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கி , எங்கு ஒவ்வொரு குடிமகனும் பணியிலும் அமைதியிலும் ஒரு மனிதனுக்கான அனைத்து உரிமைகளையும் அடைவானோ அத்தகையதொரு குடியரசினை நிறுவுவதற்காகவும் , ஒரு கியூபப் புரட்சிகரக் கட்சியை” உருவாக்கும் யோசனையை முன் வைத்தார். மார்த்தி வரைவு செய்த Bases and Estatutos பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மனதாக ஏற்கப்பட்டது. எதிர்ப்பு ஏதுமின்றி கியாபப் புரட்சிக் கட்சியின் பிரதிநிதியாக அல்லது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஆளுமையின் சக்தியையும் தனது பேச்சாற்றலையும் மட்டுமே துணைக்கொண்டு, புலம் பெயர்ந்தும் பிளவு பட்டும் கிடந்த ஒரு சமுதாயத்தினை ஒன்று படுத்தி ,தொலைந்து போன இலட்சியம் என்பதாக மனம் சோர்ந்து கிடந்தவர்களுக்கு புது வாழ்வு கொடுத்தார்.
அடிக்கடி கடுமையாக நோய்வாய்ப்பட்டும் ,இஸ்பானிய ஏஜண்டுகளால் ஒரு முறை நஞ்சூட்டப்பட்டும், மற்றொரு முறை கிட்டத்தட்ட படுகொலைத் தாகுதலுக்கு உள்ளாகி, Pinkerton உளவாளிகளாலும், அமெரிக்க காவல் துறையினராலும் கண்காணிக்கப்பட்டு வந்த போதும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மார்த்தி அமெரிக்கா முழுவதிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் பல பயணங்களை மேற்கொண்டு , தனது சக புலம் பெயர்ந்தவர்களிடையேயான பிணக்குகளைத் தீர்க்கவும் ஆயுதங்கள் கப்பல் வாங்கத் தேவையான நிதி திரட்டவும் செய்தார். ‘ Patritia’ என்ற கட்சிப் பத்திரிக்கைக்கு நிறையவே எழுதியதுடன் அதன் ஆசிரியராகவும் இருந்தார்.
அவரது புரட்சிகரப் பணிகளின் உச்சகட்டமான “ FERNANDINA” கடற்பயணம் 1895 – இல் அமெரிக்க அரசாங்கத்தால் சூழ்ச்சியாக முறியடிக்கப்பட்டு கப்பல்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்ட போது, சில வாரங்களேயான வெகு குறுகியகால இடைவெளியில் ஆண்டுக்கணக்காக செலுத்தப்பட வேண்டிய உழைப்பைக் குறுக்கி மற்றொரு கடற்பயணத்தை ஏற்பாடு செய்தார் .அது கண்டு பிடிக்கப்பட வில்லை. ஜனவரி 29 அன்று போர் தொடுக்கும் ஆணையில் கையெழுத்திட்டு விட்டு இரண்டு நாள் கழித்து, தனது கடந்தகாலப் பிணக்குகளைப் புறமொதுக்கி ,யுத்த்தின் தலைமைத் தளபதியாக இருக்க ஒப்புக்கொண்ட ஜெனரல் மேக்சிமோ கோமசைச் சந்திக்க டொமினிகன் குடியரசுக்குப் பயணமானார். மார்ச் ,25 அன்று,மார்த்தியால் வரைவு செய்யப்பட்டதும், புரட்சியின் ஜனநாயக துவக்கத்தையும் புரட்சியின் கொள்கைகளையும் உறுதி செய்ததுமான “ MANIFESTO DE MONTICRISTI” பிரகடனத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
கோமசின் விருப்பத்துக்கு எதிராக ; புரட்சிக்கும் கியூபாவின் எதிர்காலத்துக்கும் மார்த்தியின் உயிர் மிகமிக இன்றியமையாத மதிப்பு மிக்கது – அதனைப் பணயம் வைக்கக்கூடாது என எச்சரித்திருந்த போதிலும்,ஏப்ரல் ,11 அன்று அவரும் மார்த்தியும் மேலும் ஐவருடன் இணைந்து இரவு நேரத்தில் ஒரு துடுப்புப் படகி ஏறி ,ஓரியந்தே மாநிலத்தின் Playitas என்ற இடத்தை அடைந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி ,மே ஆறாம் தேதி மார்த்தியும், கோமசும் புரட்சிக்கு தனது முக்கியமான ஆதரவைத் தெரிவித்திருந்த ஜெனரல் அந்தானியோ மேசியோவும் மக்கள் மத்தியில் “La Majorana”
வெளியிட்டனர்.
1895,மே,19 அன்று புரட்சியின் முதல் போர் சம்பவத்தில் ஓரியந்தே மாநிலத்தின் Dos Rios எண்ரைடத்தில் தனது கன்னிப்போரில், தான் தனது எளியகவிதைகள் XXIII இல் வரும் பொருள் உரைக்கும் அமைச்சாக முன் கூட்டியே எழுதியது போலவே கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார்.
அடுத்து வந்த நூற்றாண்டு வாக்கில், வாக்குப் பலிதமாகும் அவரது அருள் வாக்கு :
“எனது கவிதை வளரும்
நானும் வளருவேன்
புற்களுக்கு அடியில்!.”
BY : .MANUEL A.TELLECHEA
தமிழாக்கம்: புதுவை ஞானம் – 6 December 2006
- கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்
- புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006
- இலை போட்டாச்சு! – 5 – அவியல்
- ‘இளைஞர் விழிப்பு’
- அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..
- சூபியின் குழப்பம்
- ஜார்ஜ் ஒர்வலின் 1984
- கடித இலக்கியம் – 35
- சிங்கப்பூர் கணையாழி விருது-2006
- ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை
- புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)
- ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை
- புதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை
- தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000)
- ஒன்று ! இரண்டு ! மூன்று !
- மனு நீதி
- பெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!
- தேவதையின் கையில்
- இயான் ஹாமில்டன் கவிதைகள்
- சுஜாதா பட் கவிதைகள்
- கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)
- அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்
- எது ‘நமது’ வரலாறு?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.
- சுயம்பிரகாசம்
- அவல்
- எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)
- ம ந் தி ர ம்
- மடியில் நெருப்பு – 15
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14