வேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

ஆசாரகீனன்


இரான், நைஜிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடித்து வருவது பலரும் அறிந்ததே. முறை தவறிய உறவு வைத்துக் கொள்ளும் அல்லது முறை தவறிய உறவுக்கு ஆளாக்கப்படும் பெண்கள், அவர்கள் சிறுமியராக இருந்தாலும் கூட, இஸ்லாமிய சட்டமாகிய ஷரியத்தின் படி கல்லால் அடித்துக் கொல்லப்படுவர். எதிர்ப்புகளையும் மீறி, கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மர்யம் அயவ்பி (Maryam Ayoubi) என்ற இரானியப் பெண் இச் சட்டத்தின் படி கற்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிரான சர்வதேச தினமாகக் (International Day against Stoning) கடைபிடிக்கப்படுகிறது.

சமீபத்தில், இத்தகைய குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லச் சொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் இரு பெண்கள் நைஜீரியர், ஒரு பெண் இரானியர்.

இரானில் மரிவான் என்ற இடத்தைச் சேர்ந்த ஜிலா (Zhila) என்ற 14-வயதுப் பெண் தன் சகோதரனுடன் உறவு கொண்டு ஒரு குழந்தையையும் பெற்று விட்டார். இக் குற்றத்திற்காக இவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

நைஜீரியாவைச் சேர்ந்த ஹாஜர் எப்ரஹிமி ((Hajar Ebrahimi) மற்றும் டாஸோ அடாமோ (Daso Adamo) ஆகிய இரு பெண்களும் திருமணமானவர்கள். கள்ள உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்த இருவரும் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று நீதி வழங்கப்பட்டுள்ளது.

தங்களது அபிமானத்துக்குரிய அரபு இனவாதத்துடனும், அரபு ஏகாதிபத்தியத்துடனும் சம்பந்தப்பட்டது என்பதாலும், இடதுசாரியினரின் அபிமான மதமான இஸ்லாத்தின் பெயரால் என்ன செய்யப்பட்டாலும், இடதின் தற்காலிகப் போர்த் தந்திரமான பன்முகப் பண்பாட்டு வாதத்தின் வழியே அதைக் காணாதது போல இருந்து கொள்ள வேண்டும் என்பதாலும், இதையெல்லாம் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை. இது போன்ற அநியாயங்களைத் தடுத்த நிறுத்த இடதுசாரிகளின் உதவியை எதிர்பார்ப்பதில் இனி அர்த்தமில்லை. இந்திய வலதுகளை இந்துத்துவா என்று ஏறகனவே ஓரம் கட்டியாகிவிட்டது. ஆகவே அவர்கள் எதைச் சொன்னாலும் அதைக் கேட்க யாரும் தயாரில்லை. நடுவில் இருப்பவர்கள், அதாவது கட்சி சார்பில்லாத சாதாரண மக்கள்தான் ஏதும் செய்தாக வேண்டும்.

நியாயமாகப் பார்த்தால் இத்தகைய காட்டுமிராண்டித் தனங்களைத் தடுத்து நிறுத்த மனித குலம் முழுவதும் தம் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பும், இரான், நைஜீரிய நாடுகளுடன் நல்லுறவு வைத்துள்ள பிற நாடுகளும், இத்தகைய கொடூரமான தண்டனைகளை விதிக்கும் நாடுகளை வன்மையாகக் கண்டித்து இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டும். அவற்றிற்கு எதிராக பொருளாதாரத் தடை முறையைக் கூடக் கையாளலாம். தென்னாப்பிரிக்காவின் இனவெறி வெள்ளையர் அரசு அப்படி ஒரு தடையால்தான் கவிழ்ந்தது என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கும்.

இப்படி ஓர் உலகளாவிய எதிர்ப்புக்குத்தான் பலன் ஏதும் இருக்கும் என்பதால் உலகில் உள்ள தமிழரும், இந்தியரும் இந்தக் கொடும் வன்முறைக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவிப்பது அவசியம். தனி நபர்கள் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறை அல்ல இது. அரசாங்கங்கள், சட்டம் என்ற பெயரில் பெண்களைக் கொல்கிற மிருகத்தனமான முறை இது. (இரானில், கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனை ஒன்று நிறைவேற்றப்படும் ஒளிப்படக் காட்சியைக் காண விரும்பும் கடின இதயம் படைத்தவர்கள் பார்க்க வேண்டிய வலை மையம்:

www.iran-e-azad.org/stoning/video.html)

ஆகவே, திண்ணை வாசகர்கள் அனைவரும் இரானின் அதிபர் மொஹம்மத் கடாமி, நைஜீரிய அதிபர் Ousegun Obasanjo ஆகியோருக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதத்திலோ அல்லது தங்களுக்கு விருப்பமான வாசகங்களைக் கொண்டோ கடுமையான கண்டனத்தைக் கடிதங்கள் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இரானிய அதிபருக்கு விடுக்க வேண்டிய கோரிக்கை:

– முறையற்ற உறவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, பெண்களை ஷரியத் சட்டத்தின்படி கல்லால் அடித்துக் கொல்வது மற்றும் பிற வழிகளில் தண்டிப்பதை உடனடியாகக் கைவிடுக. (Immediate abolition of stoning and all other forms of punishment for extra-marital relations and all other Shari ‘ah laws)

– முறையற்ற உறவில் ஈடுபட்டதாக தண்டிக்கப்பட்டுள்ள 14-வயதே ஆகும் ஜிலா என்ற பெண்ணையும், பிறரையும் உடனடியாக விடுதலை செய்க. (Immediate release of Zhila the 14-year-old girl and all those imprisoned for extra-marital relations)

அனுப்ப வேண்டிய முகவரி:

Email: khatami@president.ir அல்லது www.president.ir

Fax: 0098 21 649 5880

இந்தியாவில் இருக்கும் இரானிய தூதரகத்தின் முகவரி:

5 Barakhamba,

New Delhi 110001

Tel.: +91 11 23329600

E-mail: Help@Iran-Embassy.org.in

நைஜீரிய அதிபருக்கு விடுக்க வேண்டிய கோரிக்கை

– கல்லால் அடித்துக் கொல்லுதல் மற்றும் பிற ஷரியத் சட்டங்களை உடனடியாகக் கைவிடுக. (Immediate abolishment of stoning law and all other Shari ‘ah laws)

– ஹாஜர் எப்ரஹிமிக்கும், டாஸோ அடாமோக்கு விதிக்கப்பட்டுள்ள கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையை உடனடியாக ரத்து செய்க. (Immediate annulment of Hajar Ebrahimi and Daso Adamo’s stoning sentence)

அனுப்ப வேண்டிய முகவரி:

The Presidency

Federal Secretariat, Shehu Shagari Way, Abuja, Nigeria

Tel: +234-9-2341010

Fax: +234-9-2341733

Email: presidency@nopa.net

இந்தியாவில் இருக்கும் நைஜீரிய தூதரகத்தின் முகவரி:

High Commission of the Federal Republic of Nigeria

21, Olof Palme Marg,

Vasant Vihar,

New Delhi-110057

Phone :687-6228, 687-6646

Telex :82062 NHC IN

Fax :6876641, 6876647

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐ.நா. அமைப்பை வலியுறுத்தும் கடிதத்தை அனுப்ப வேண்டிய மனித உரிமைகள் அமைப்பின் முகவரி:

Petitions Team

Office of the High Commissioner for Human Rights

United Nations Office at Geneva

1211 Geneva 10, Switzerland

Fax: + 41 22 917 9022 (particularly for urgent matters)

E-mail: tb-petitions@ohchr.org

ஐ.நா. பெண்கள் நிலை பற்றிய அமைப்பின் முகவரி:

Commission on the Status of Women

c/o Division for the Advancement of Women, Department of Economic and Social Affairs

United Nations Secretariat

2 United Nations Plaza, DC-2/12th Floor

New York, NY 10017, United States of America

Fax: + 1-212-963-3463

மேலும், இதைப் போன்ற வேண்டுகோள் ஒன்றை வாசகர்கள் கவனத்துக்குக் கொண்ட்டுவரக் கோரி உள்ளூர் நாளிதழ்களையும் (ஹிண்டு போன்ற பத்திரிகைகளை விட்டு விடலாம்) திண்ணை வாசகர்கள் வலியுறுத்த வேண்டுகிறேன்.

மேலதிக விவரங்களுக்குப் பார்க்க:

International Committee against Stoning

Iran-e Azad

The International Society for Human Rights

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்