இந்தி: கங்காபிரசாத் விமல்
தமிழில்: செளரி
வேட்டை விவகாரம்
அவனுக்குப் புரியாத விசயம்
செல்வச்செழிப்பை நாடி
கடல் மலை பாலை படு இடங்களில்
தேடித் திரிகிறான்
சோர்ந்து சலித்துப் போகையில்
ஜாதகக் கணிப்பில் சஞ்சரிக்கும்
ராசி- கிரகங்களைத் திட்டுகிறான்
அவனுக்கு அதிர்ச்சி-
தான் நம்பிப் பாதுகாக்கும்
வாழ்நெறி லட்ட்சியங்களை
பட்டணக்கரை சந்தைகளில்
சல்லிசாக விற்றுவிடுகிறார்கள்
பாவம்-சாபம்- பச்சாத்தாபம் எதுவும்
அவர்கலை தீண்டுவதில்லை
செல்வச் செழிப்பு மண்டிய
சொர்க்கத்தைத் தேடி வந்தவனுக்கு
புரியாத விஷயம்-
நரகத்துக்கு மேலே
பிரகாசச் சுவர்களுக்குள்
வசதியாய் படுத்திருக்கிறது
நாகரீகச் சொர்க்கம்
கிராமத்து வீட்டில்
கவிந்த இருள் மறக்கவில்லை
ஒட்டுறவு நீங்கா நினைப்பு
பட்டினத்து பவர்புல் வெளிச்சத்தில்
அதெல்லாம் மறைஞ்சே போச்சு
அதில் அவன் தினமும்
வேட்டையாடப்படுவது
அவனுக்கே தெரியவில்லை!