சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம் !
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் !
மகாகவி பாரதியார்.
“வெண்ணிலவுக்குப் பயணம் செய்யும் அத்திட்டம் மற்றைய விண்வெளித் தேடலுக்குப் பாதையிடும். மற்ற அண்டக் கோள்களுக்குச் செல்ல நிலவுத்தளம் ஒரு தங்கு பீடமாய் அமையும். நிலவின் ஈர்ப்பாற்றல் சக்தி பிற அண்டக் கோள்களுக்குப் பயணம் செய்ய ஆற்றலும் அளிக்கும்.”
வி. ஆதிமூர்த்தி, துணை ஆளுநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
(இந்தியாவின் மனிதரற்ற விண்வெளிப் பயணம்) திட்டமிட்ட இது ஒரு தணிவு முயற்சி (Modest Mission). இது வெற்றி பெற்று, நம் நாடும் அந்த பயணத்தை விரும்பினால், அது நமது அண்டவெளித் தேடலின் முதற்படியாக அமையும். அந்த விண்வெளிப் பயணத்தால் நமது விஞ்ஞான அறிவு பல்விதத்தில் விருத்தி அடைய வாய்ப்புகள் உள்ளன.”
டாக்டர் கஸ்தூரிரங்கன், தலைவர் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகம்
Fig. 1
Moon Voyage Probe
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”
டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )
“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”
டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).
Fig. 1A
Indian Polar Orbiter
பாரதத்தின் மனிதரில்லாத விண்வெளிப் பயணத் திட்டங்கள்
2007 ஏப்ரல் 4 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகம், [Indian Space Research Organization (ISRO)] “இந்தியா விண்வெளித் தேடலில் மனிதரற்ற ஆய்வுத் திட்டங்களில் முற்பட்டு நிலவை நோக்கிப் பயணம் செய்யப் போகிறது,” என்று பெருமையுடன் அறிவித்து விண்வெளிப் பயண வரலாற்றில் ஒரு மைல் கல்லை நாட்டியது. “இந்தியாவின் மனிதரற்ற விண்வெளிப் பயணம் ஒரு தணிவு முயற்சி (Modest Mission). இது வெற்றி பெற்று, நம் நாடும் அப்பயணத்தை விரும்பினால், அது நமது அண்டவெளித் தேடலின் முதற்படியாகும். அதனால் நமது விஞ்ஞான அறிவு பல்விதத்தில் விருத்தி அடைய வாய்ப்புகள் உள்ளன,” என்று அதன் தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் எடுத்துக் கூறினார். மனிதரற்ற விண்வெளித் தேடலில் நிலவை நோக்கிச் செல்லும் பயணத்தின் பெயர் “சோமாயனா-1” (Somayana-1). முதல் விண்வெளிப் பயணத்தைச் செய்யப் போகும் விண்ணூர்தியின் பெயர் “வாமனா-1” (Vamana-1). சோமாயனா விண்வெளிப் பயணத் திட்டம் 2007-2008 ஆரம்பமாகி 2012 ஆண்டுகளில் நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.
Fig. 2
Indian Lunar Mission
புதிய நூற்றாண்டில் இந்தியாவைப்போல் ஜப்பான், சைனா போன்ற ஆசிய நாடுகளும் விண்வெளிப் பயணத் திட்டங்களில் இறங்கி யுள்ளன. சோமாயன விண்வெளித் தேடல் நாட்டின் விஞ்ஞான அறிவைச் செழிப்பாக்கும். இளைய தலைமுறையினர் புதுப்புது விஞ்ஞானப் பொறித்துறைப் பணிகளில் பங்கெடுக்க ஆதரவு அளிக்கும். 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கில் நிறைவேறப் போகும் அந்த விண்வெளித் திட்டத்தை இந்தியாவில் பலர் வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அப்பெரும் தொகையைச் சமூகப் பொருளாதாரத் துறைகளுக்கு உபயோகிக்கலாமே என்று செய்தி தொகுப்பாளர் குறைகூறினார்கள். “இந்தியாவிடம் எந்த அபிவிருத்தித் திட்டத்துக்கும் நிதி உள்ளது; அந்த தொகையை எதிர்கால விண்வெளித் தேடல் திட்டங்களிலிருந்து எடுத்துக் கொள்ளத் தேவையில்லை,” என்று கஸ்தூரிரங்கன் பதிலளித்தார்.
Fig. 3
Polar Rocket Launch Pad
இஸ்ரோ பொறியியல் விஞ்ஞானிகள் (ISRO) 2007 ஆண்டில் 60 மைல் (100 கி.மீ) தணிவு உயரத்தில் பூமியைச் சுற்றிவரும் “துருவச் சுற்றி ஊர்தியை,” (Polar Orbiter) ஏவப் போவதாக அறியப்படுகிறது. அது தணிவு உயரத்தில் பறந்து, பூதளத்தின் மேல்தள ஆய்வு செய்யும். மேலும் மிகக் கூரிய ஒளிப்பட்டை உளவிகளைக் கொண்டு பூமியிலுள்ள தாதுக்களின் இருக்கைகளைத் தேடுவதுடன் இரசாயனத் தளப்படத்தை வரையும் (Mineralogy & Chemical Mapping by High Spacial & Spectral Resolution Sensers). துருவத் துணைக்கோள் ஏவு வாகனம் [Polar Satellite Launch Vehicle (PSLV)] எதிர்காலத்தில் நிலவுக்குப் போகும் விண்ணூர்தி சோமாயனாவைத் தூக்கிச் செல்லும். அது நிலவின் முப்புற தளப்படத்தை அரை மைல் உயரத் துல்லிமத்தில் [3 Dimensional Atlas] வரையும்.
Fig. 4
Future Lunar Flight
வெண்ணிலவை நோக்கி எதிர்கால விண்வெளிப் பயணம்
இன்னும் 5 ஆண்டுகளில் (2012) இந்தியா அசுர ஆற்றல் கொண்ட தனது துருவத் துணைக்கோள் ஏவு ராக்கெட்டை வெண்ணிலவுக்கு அனுப்பப் போகும் திட்ட மிருப்பதாகத் தெரிகிறது. அதன் விண்ணூர்தி வாமானா-1 நிலவை 60 மைல் உயரத்தில் சுற்றிப் பறந்து பௌதிக இராசயன மற்றும் தாதுப் பொருட்களின் செழிப்புத் தன்மைகளைப் படமெடுக்கும். விண்ணூர்தி வெண்ணிலவை நெருங்க 5 நாட்கள் ஆகும். அண்டி அதன் சுற்று வீதியில் இரண்டு ஆண்டுகள் சுற்றித் தகவலைப் பூமிக்கு அனுப்பும். 300 கோடி ரூபாய்ச் செலவில் அந்த திட்டம் முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. “அது நிலவை நுணுக்கமாய் உளவிடும், சவாலான ஓர் உன்னத விஞ்ஞானத் திட்டம். இரட்டைகண் காமிராக்களைக் கொண்டு கால் மைல் உயரத் துல்லிமத்தில் படமெடுக்கும்,” என்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் [Vikram Sarabhai Space Centre (VSSC)] டைரக்டர் டாக்டர் பி.எஸ். கோயல் கூறினார். “வெண்ணிலவுத் திட்டத்தின் சாதன டிசைன்கள் முடிந்து விட்டன. திட்ட முறைகள், விளைவுகள் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்திடம் அங்கீகாரமாகக் கொடுத்திருக்கிறோம்,” என்று தற்போதைய அதன் தலைவர் ஜி. மாதவன் நாயர் கூறினார். மேலை நாடுகள் போல் பாரதமும் அண்டவெளிப் பயணத்தில் தீவிரமாக முனைந்து விஞ்ஞான ஆய்வுகளைச் சேகரிக்கப் போகிறது என்பது வரவேற்கத் தக்கது.
Fig. 5
Former & Present Chairman
(தொடரும்)
தகவல்:
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
28 Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
29 Moon Mission First Step towards Planetary Exploration ISRO (The Times of India) 2007
30 Mission to Moon “Somayana -1” [www.hinduonnet.com/thehindu]
******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2007)
- கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8
- நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.
- தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்!
- காதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !
- குமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு
- எறும்பாய் ஊர்ந்த உலகம்
- ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.
- வெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்
- இலை போட்டாச்சு ! (31) திடீர் அடை – ஐந்தாம் வகை
- ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை
- மீண்டும் காண்பேனா?
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை
- ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை
- பிறைநதிபுரத்தானுக்கு பதில்
- சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்
- நரேந்திரன் அவர்களுக்கு,
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
- வாழ்வின் பயணம்
- மெழுகுவர்த்தி
- பெரியபுராணம்-133 (நிறைவுப் பகுதி)
- என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?
- “கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
- தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்
- அணுகுமுறை
- நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி)
- காட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.
- ஸஹாரா
- மாத்தா-ஹரி அத்தியாயம் 12
- உன் பாதை…
- பூங்கொத்து கொடுத்த பெண்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)