ப்ரியா
தேவையான பொருட்கள்
1 கோப்பை கிரீம் (அமெரிக்காவில் ஹாஃப் அண்ட் ஹாஃப் ஒரு கோப்பை)
1 கோப்பை பால்
1/2 கோப்பை சர்க்கரை
1/2 தேக்கரண்டி வெண்ணலா எஸ்ஸென்ஸ்
4 கோப்பை ஐஸ் கட்டிகள்
1 கோப்பை கல்லுப்பு
1 ஜிப்லாக் பை அல்லது ஒரு கெட்டியான பிளாஸ்டிக் பை
1 டக்ட் டேப் அல்லது செல்லோ டேப்
1 மூடியுடன் இருக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் அல்லது டப்பா
செய்யும் முறை
பால், கிரீம், வெண்ணலா எஸ்ஸென்ஸ், சர்க்கரை எல்லாவற்றையும் பிளாஸ்டிக் பையில் ஊற்றவும். பிறகு ஒரு நல்ல இறுக்கமாக பிடிக்கும் டேப் கொண்டு மூடி ஒட்டவும். இது இறுக்கமாக பிடிக்க வேண்டும். ஏனென்றால் இதை நன்றாக உலுக்கும்போது பால் வெளியே வந்து விடும்.
இப்போது டப்பாவில் இந்த பிளாஸ்டிக் பையை போட்டு அதன் மேல் ஐஸ்கட்டிகள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக மூடவும். இதையும் தண்ணீர் வெளிவராமல் இருக்க டேப் போட்டு ஒட்டலாம்.
இப்போது நன்றாக பத்து நிமிடம் குலுக்கவும். அதிகநேரமும் குலுக்கலாம். பிறகு இந்த டப்பாவைத் திறந்து, பையை எடுத்து அதை ரெஃப்ரிஜ்ரேட்டரில் இருக்கும் ஃபிரீஜரில் வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து இந்தப் பையை திறந்து பாருங்கள். சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி.
- வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ?
- ஆறுதல்
- பாராட்டு
- இந்த வாரம் இப்படி, மே 27, 2001
- இந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான்.
- நாளை மீண்டும் காற்று வீசும்…
- நண்பன்
- புறநானூறு 343
- தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்
- வீட்டில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி ?
- எலுமிச்சை ரசம்
- விளக்கு இலக்கிய அமைப்பு
- பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்