வீட்டிலே நிஜமாகவே கேட்ட கடி ஜோக்குகள்

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

கோமதி நடராஜன்


‘மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? ‘

‘ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. ‘

‘எங்க ஃபேமிலியிலே நிறைய வெப் டிசைனெர் இருக்காங்க.. ‘

‘நீங்க சொல்லணுமா,அதான் சுவத்தில ஒட்டடையப் பார்த்தாலே தொியுதே! ‘

‘கம்ப்யூட்டரை வைரஸ் வராம பார்த்துக்றதில எங்க அப்பாவை மிஞ்ச ஆளே கிடையாதுடா ‘

‘அப்படி என்னடா ஸ்பெஷல் கவனிப்பு ? ‘

‘எங்களுக்கெல்லாம் ஜலதோஷம் காய்ச்சல் வந்தா கம்ப்யூட்டர் பக்கம் போகவே கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லியிருக்கார்னா பார்த்துக்கோயேன் ‘

‘என்னடா தம்பி ? நானும் பார்த்துட்டே வரேன்,மெட்டாசின் க்ரோசின் அனாசின்னு

கம்ப்யூட்டர்லே டைப் பண்ணிட்டே வாியே எதுக்குடா ? ‘

‘கம்ப்யூட்டர்லே வைரஸ் வந்திருக்கு மாமா,ஒரு நாளைக்கு மூணு வேளை தட்டினா சாியாயிடும் ‘

‘சும்மா சொல்லக் கூடாதுன்னா,இந்த கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துச்சு,நம்ம எலிகளுக்கெல்லாம்,மெளஸ் ரொம்பத்தான் கூடிப் போச்சு ‘

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்