மதிவாணன்
.
லாவணிக் கச்சேரி என்று ஒரு வகை உண்டு. காமனை சிவன் எரித்தது குறித்து எரிந்த கட்சி எரியாத கட்சி இரண்டு பேர் எதிரெதிராகப் பாடுவார்கள். தமிழ்நாட்டிலும் லாவணி நடக்கிறது. இங்கே இந்த கணத்தில் எல்லோரும் ஒரே கட்சியில் பாடுகிறார்கள். சேது சமுத்திரம் கொண்டு வந்ததற்கு யார் காரணம் ? நான்தான் என்பதில் அடிதடி நடக்கிறது. ஜெயலலிதா வழக்கம் போல ஆபாசத்தின் உச்சத்தில் போய் பேசுகிறார். என்னைப் பொருத்தவரை சுயபுராணம் பாடுவது போன்ற ஆபாசம் வேறு எதுவும் இல்லை.
சேதுசமுத்திரத் திட்டம் பற்றிய பொதுவிசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதாவது அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களின் கருத்துக்களைஸ்ரீ கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் வேண்டாம் என்று கூட சொல்லலாம் என்ற வாய்ப்பு இருப்பதைக் கண்டுகொள்ளாமல் பொருளாதார விவகார மந்திரிகள் கூட்டம் சேது சமுத்திரத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டது. வாழ்க ஜனநாயகம்!
பொதுவாகவே மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் எந்த முடிவிலும் மக்களின் கருத்து கேட்கப்படுவதில்லை. WTOவில் உங்களைஸ்ரீ கேட்டுக்கொண்டா கையெழுத்து போட்டார்கள் ? அல்லது தேர்தல் வாக்குறுதிகளில் WTO வில் கையெழுத்து போடுவோம் என்று அறிவித்து ஓட்டு கேட்டார்களா ? ஒரு எழவும் இல்லை. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு இந்தியா என்று தோள் கொட்டுவோமாக்!
சேது சமுத்திரத் திட்டம் பற்றிய பொது விசாரணை நடக்கும் இடத்திலெல்லாம் அமளிதுமளி நடக்கிறது. புதுக்கோட்டையில் மதிமுக கட்சியினர் மாற்றுக் கருத்து தெரிவித்தவர்களை அடி பின்னியேடுத்திருக்கிறார்கள். நாளையும் நாளை மறுநாளும் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் சிங்களஸ்ரீ கைக்கூலிகள் என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர். நமது அரசியல் கட்சிகள் அடிப்படையில் பாசிசப் போக்குள்ளவர்களாக இருக்கிறார்கள். மாற்றுக் கருத்து என்பதை சகித்துக்கொள்ளும் மனோநிலை இல்லை. சரி. சேதுசமுத்திர அரசியல் பற்றி பின்னர் பேசுவோம். முன்னதாக சேது சமுத்திரத் திட்டத்தின் உண்மை நிலை என்ன என்பது பற்றி முதலில் பேசுவோம்.
செயல்வடிவம் கொடுக்கப்படும் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் விளைவுகள் பற்றிய மதிப்பீடு என்ற அறிக்கையை தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக்கழகம் வெளியிட்டுள்ளது, இவ்வறிக்கையைத் தயார் செய்தது National Environment engineering Research Institute (NEERI) என்ற அமைப்பாகும். தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது நீரி அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம்தான். அந்த அறிக்கையில் அடங்கியுள்ள செய்திகளில் இருந்து பின்வரும் கேள்விகளை எழுப்புப வேண்டியுள்ளது.
1. சேதுசமுத்திரக் கால்வாயை சூயஸ், பனாமா போன்ற கால்வாய்களோடு ஒப்பிடுவது தவறு என்ற செய்தியை முதலில் சொல்லிவிட வேண்டும். மேற்சொன்ன கால்வாய்கள் நிலத்தை வெட்டி கடல்களை இணைத்தவை. அதனால் அவை நிலப்பரப்பினால் வடிவம் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், சேதுசமுத்திரம் கால்வாயோ கடலை ஆழப்படுத்துவதால் உருவாக்கப்படவுள்ளது. கடல் சூழல நிலத்தின் சூழல் போன்றதல்ல. மிகவும் கொந்தளிப்பான, மிகவும் விரைவாக மாறக்கூடிய தன்மைகொண்டது கடல் சூழலாகும். எனவே, கடலை ஆழப்படுத்துவதால் உண்டாகும் விளைவுகள் மிகவும் நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல நாம் கணிக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.
பாக் ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் உயிரியல் ரீதியாக அதிக உற்பத்தி உள்ள இடங்கள் என்று நீரி அறிக்கை சொல்கிறது. நடைமுறைப்படுத்த உள்ள கால்வாய் உள்ள பகுதியின் மொத்த அடிப்படை உற்பத்தி அளவு (Gross primary productivity Value) ஒரு நாளுக்கு 142 முதல் 472 மில்லிகிராம்/கன செ.மீ என்று நீரியே மதிப்பிடுகிறது. நடைமுறைப்படுத்தப்பட உள்ள கால்வாய் அமையவுள்ள ஆதம்ஸ் பாலம் பகுதியில் பவளஸ் பாறைகள் இல்லையென்று சொல்கின்ற அறிக்கை, கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்குகள், கடல் பசு, டால்பின் போன்ற மதிப்பு வாய்ந்த உயிரினங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனபோதும், கால்வாய் அமையவுள்ள பகுதியில் பொருளாதார ரீதியாகவும், சூழல் பாதுகாப்பு அடிப்படையிலும் முக்கியமான உயிரினங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்று அறிவிக்கிறது.
எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் கால்வாய் அமையவுள்ள பகுதியில் முக்கியமான உயிரினங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை என்ற முடிவுக்கு நீரி வந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பகுதி, பகுதியாகப் பிரிக்கப்பட்ட சூழல்களின் தொகுப்பு என்று கடல் சூழலை நீரி புரிந்துகொண்டுள்ளது. சூழல் நிலைமைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளவை. ஒரு பக்கத்தில் ஏற்படுத்தப்படும் சிறு பாதிப்பும் அதற்கே உரிய தாக்கத்தை அனைத்து பக்கத்திலும் ஏற்படுத்தும். சூழல் பற்றிய இந்த அடிப்படை விதியை நீரி கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.
எனவே, சூழல் தாக்கம் குறித்த நீரியின் அறிக்கை முழுமையானதல்ல என்று கருதுகிறேன். நீரி அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம்தான் இப்போது பொதுமக்களுக்குக் கிடைக்கிறது. நீரி அறிக்கையின் முழு விபரமும் பொதுமக்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும்.
2. வங்காள விரிகுடாவில் இரண்டு சுழல் நீரோட்டங்கள் இருக்கின்றன என்று நீரி அறிக்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால், சகதிகள் நகரும் விபரத்தைப் பற்றிப் பேசும்போது, மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் ஜலசந்திக்கும், பாக் ஜலசந்தியிலிருந்து மன்னார் வளைகுடாவுக்கும் இடையில் நடக்கும் சகதி பரிமாற்றத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது.
வங்காள விரிகுடாவின் நீரோட்டங்கள் பற்றிய சில பொதுவான செய்திகளை இப்போது பார்ப்போம்.
எதிர் புயல் நீரோட்டம் ஆண்டின் அனேக மாதங்களிலும், வலிமையான புயல் நீரோட்டம் நவம்பர் மாதத்திலும் வங்காள விரிகுடாவின் நீர் சுழற்சியின் குணாம்சமாக இருக்கின்றது. (வடக்கு பூமத்திய நீரோட்டத்தின் நீட்சி என்பதாகத் தோன்றுகின்ற வடக்கு நோக்கிய கிழக்கிந்திய நீரோட்டம்) மே மாதத்திலும் 0.7-1.0 m.s.1 என்ற விசைவேகத்தில் (Velocity) நீடிக்கிறது. இந்த முக்கிய அம்சம் பற்றி இன்னமும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அது வளைகுடாவின் கிழக்காக ஓடும்போது மழைக்காலங்களுக்கு இடையிலான நீரோட்டமாகிறது. தென்மேற்குப் பருவ மழையின்போது முழு வளைகுடாவிலும் உள்ள நீரோட்டம் பலவீனமானதாக இருக்கிறது. ….அக்டோபரில் பூமத்திய நீரோட்டம் வளைகுடாவின் கிழக்கில் நுழையும்போது புயல் சுழற்சி உருவாக்கப்படுகிறது. குளிர்கால கிழக்கிந்திய நீரோட்டம் ஆற்றல் மிகுந்த மேற்கு எல்லை நீரோட்டமாகும். அதன் விசைவேகம் 1.0-m.s-1 என்ற அளவுக்கு மேலாகவே எப்போதும் இருக்கும். (http://indianocean.free.fr/annual1.htm)
இந்த விவரங்களைஸ் பார்க்கும்போது கட்டுமானம் நடக்கவிருக்கும் பகுதியில் சகதி படிவது வேகமாக நடக்கும் என்றே தோன்றுகிறது. வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் துறைமுகத்திற்கு கப்பல்களே நுழையமுடியாமல் மணல் படிவதை நாம் அறிவோம். அதே போன்ற நிகழ்வு சேதுசமுத்திரத்திற்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் ? அவ்வாறு நிகழுமானால், சேது சமுத்திரத்தில் போடப்பட்ட பணம் உண்மையிலேயே கடலில் கொட்டிய பணமாகத்தான் இருக்கும்.
எனவே, சகதிகளின் இடப்பெயர்ச்சி பற்றிய தெள்ளஜ் தெளிவான மதிப்பீட்டுக்கு வருவது அவசியமாகும். மிக முக்கியமாக வங்காள விரிகுடாவிலிருந்து பாக் ஜலசந்திக்கும், தெற்குப் புறத்திலிருந்து மன்னார் வளை குடாவுக்கும் சகதி இடப்பெயர்ச்சி நடைபெறுகிறதா இல்லையா என்பதை தெளிவான வார்த்தைகளில் நீரி குறிப்பிட வேண்டும்.
மேலும் அதி முக்கியமான இரண்டு விவரங்கள் குறித்தும் நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.
? 300 மீட்டர் அகலமும், 10 மீட்டர் ஆழமும் உள்ள ஆழமான கால்வாய், நீரோட்டத்தின் மீது என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என்ற ஆய்வு செய்யப்பட்டதாக நீரியின் அறிக்கை சொல்லவில்லை. அதுபோன்ற ஆய்வுதான் சகதி படியும் முறை பற்றிய விவரத்தையும், அவ்வப்போது சகதி அகற்ற வேண்டிய வேலையைப் பற்றியும் விபரம் தரும். நீரோட்டத்தின் விசைவேகம் 0.2-0.4 மீ/வினாடி என்று அறிக்கை சொல்கிறது. கடலோடிகளின் அனுபவம் இது மிகக் குறைவான மதிப்பீடு என்று சொல்கிறது.
? Depth integrated Velocity and solute Transport (DIVAST) என்ற மாடலைப் பயன்படுத்தி நீரியங்காற்றல் (Hydrodynamics) மாதிரி ஆய்வு செய்யப்பட்டதாக நீரி அறிக்கை சொல்கிறது. இந்த மாடல் கணினி உதவியால் செய்யப்பட்ட சோதனைதான். கணினிக்குள் செலுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு இது. இம்முறையின் இரட்டைப் பரிமாண மாறுதல்களை மட்டுமே அறியமுடியும். அதாவது, நீரியங்கும் திசை மற்றும் வேகத்தை மட்டுமே அறியமுடியும். அலை உயர்வு என்ற மூன்றாவது பரிமானத்தை இதனால் கணிக்க முடியாது. இந்தமுறை கிடைமட்டத்திலான, ஒழுங்கற்ற நீரோட்டத்தைப் படிக்க பொருத்தமானது. மேல்நோக்கி எழுகின்ற, ஒழுங்கற்ற நீரோட்டத்தைப் படிக்க இந்த முறையைப் பயன்படுத்த முடியாது. ஒரு மீட்டர் உயரத்திற்கு அலையெழுகின்ற கடலின் இயக்கத்தைப் படிக்க இந்த முறையைப் பயன்படுத்தவது விவாதத்திற்குரிய ஒன்று.
? இந்தக் கடல்பகுதியின் பவளஸ் பாறைகளும், சகதி இடம்பெயர்வதும் நிலத்தின் நிலைத்த தன்மைக்கு அடிப்படையானவையாகும். கால்வாய் தோண்டுவதால் எழும் சகதிப் படிவு என்ன திசையில், எத்தனை தூரத்திற்கு நகரும், பவளஸ்பாறைகள் மீது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீரி அறிக்கை கூறவில்லை. மணல் துகள்களின் அளவு 125 ?m முதல் 600 ?m வரை என்று நீரி அறிக்கை சொல்கிறது. நீரோட்டத்தால் இந்தத்து துகள்கள் பவளஸ் பாறைகளின் திசைக்கு அடித்துச்செல்லப்படும் என்றால், பவளஸ் பாறைகளுக்கு அத்யாவசியமான தெள்ளிய நீரை அவை ஒழித்து விடும்.பவளஸ் பாறைகள் என்பது மிக நுண்ணிய உயிர்களின் தொகுப்பு. அவற்றைக் கொள்வதற்கு அவற்றுக்குள் மணல் நுழைவது போதுமானது.
? மன்னார் வளைகுடாவின் மீன் வளம்ஹ் மிக முக்கியமானதாகும். இந்த மீன் வளத்தின் அடிப்படை இங்கே உள்ள பவளஸ்பாறைகள்தான். பவளஸ்பாறைகள் மீது விழும் சூரியஒளியைப் பயன்படுத்தி இந்த நுண்ணுயிர்கள் (Zooxanthella) ஒளிச்சேர்க்கை நிகழ்த்தி, பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. பிராண வாயுதான் அனைத்து உயிர்களின் இருப்புக்கான ஆதாரம். நீரின் ஒளிபுகும் தன்மை குறைந்தாலே பவளஸ்பாறைகள் இறந்துபோகும். இந்தப் பவளஸ்பாறைகள் கடலின் மழைக்காடுகள் எனப்படுபவவை. அவற்றை அழிப்பது வறண்ட தென்மாவட்டங்களை மேலும் வறட்சிக்குத் தள்ளும்.
3. ஆதம் பாலம் பகுதியில் உள்ள உயிர்ச்சூழல் முற்றிலும், எப்போதைக்கும் எப்போதைக்குமாக ஒழிந்துபோகும் என்று அறிக்கை சொல்கிறது. ஆனால், மன்னார் வளைகுடாவின் 10, 500 சதுரகிலோ மீட்டர் பரப்போடு ஒப்பிடும்போது இந்த இழப்பு மிகவும் குறிப்பிடத்தக்க இழப்பு இல்லை என்றும் அறிக்கை சொல்கிறது. இந்த வாதத்தை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. ஏனென்றால், கடல் சூழலைத் தனித்தனியான சூழல் மண்டலங்களின் தொகுதி என்று நாம் பார்க்க முடியாது. கடலைத் தோண்டி எடுக்கப்படும் மண்ணின் அளவு மிகப் பிரம்மாண்டமானதாகும். 32.5 மில்லியன் கனமீட்டர் மண்ணைத் தோண்டி எடுத்து அப்புறப்படுத்தப்போகிறார்கள். அந்த மண்ணில் பெரும்பகுதியை ஆழக்கடலில் கொட்டப்போகிறார்கள். இது கடலடி உயிரினங்களைஸ் பாதிக்கும். இங்கே உள்ள கடலடி உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள்தான் கடல் உயிரினங்களின் அடிப்படையாகும். இந்த உயிரினங்கள் அழிய நேர்ந்தால் அது ஒட்டுமொத்த கடலுயிர்களின் உயிர் சுழற்சியிலும் சரிவைக் கொண்டுவரும்.
கடலோர நிலத்தில் கொட்டப்படும் மண்ணும், நீரில் கொட்டப்படும் மண்ணும் நாம் சொன்னதைக் கேட்டு அங்கேயே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கடல் நீரோட்டத்தின் காரணமாகவும் அரிப்பின் காரணமாகவும் அவை இடம் பெயரும். அப்படியானானல் அவை எங்கே செல்லும் ? அவை கால்வாயை மறுபடியும் மூடாதா ? அல்லது அரிப்புக்குக் காரணம் ஆகாதா ? கொட்டப்படும் மண் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டதா ? நீரி அறிக்கையில் இந்த விபரங்கள் இல்லை.
4. இந்துமகா சமுத்திரத்திற்கும், வங்காள விரிகுடாவுக்கும் இடையில் தோண்டப்படும் இந்தக் கால்வாய் வழியாக உயிரினங்கள் இடம் பெயரும் என்பதைத் தெளிவான வார்த்தைகளில் ஒப்புக்கொள்கிறது. அந்தப் பகுதி நீருக்குச் சொந்தமில்லாத உயிரினங்கள் உள்ளே வரவும், சொந்தமான இனங்கள் வெளியேறவும் செய்யும். ஆனால், என்னவிதமான உயிரினங்கள் உள்ளே வரும் எவை வெளியேறும் என்பதனை யாரும் கணக்கிட்டுச் செல்ல முடியாது. ஓரு சூழல் மண்டலத்தில் அந்நிய இனங்கள் நுழையும்போது என்னவகையான மாறுதல் வரும் என்பதனை நாம் அறிவோம். அதனால்தான், தொன்மை வனங்கள் சிலவற்றை அவ்வாறே இருக்கும்படி காப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளோம். புவிப்பரப்பில் எங்கெல்லாம் அந்நிய தாவரங்கள் வந்தனவோ அங்கெல்லாம் உள்நாட்டு இனங்கள் பல அழிந்ததை நாம் அறிவோம். கடலுக்குள் உள்ள உயிர்ச்சூழலில் நாம் செய்யும் மிகப்பெரும் மாற்றம் என்றே சேதுசமுத்திரத் திட்டத்தை நாம் சொல்லவேண்டும். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யாரும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், தற்போதுள்ள கடலுயிர்ச் சூழல் மிகப்பெரும் மாற்றத்திற்கு ஆட்படும் என்பதனை மட்டும் உறுதிபடச் சொல்ல முடியும்.
5. மீனவர்கள் மீது இத்திட்டம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனையும் நாம் பார்க்க வேண்டும். மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 138 கிராமங்களும் நகரங்களும் 5 மாவட்டங்களில் விரிந்து கிடக்கின்றன. மன்னார் வளைகுடா மீனவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் கீழ்நிலையில் உள்ளது என்று நீரி ஒப்புக்கொள்கிறது. மேலும், மீனவக் குடும்பங்களில் 40% கடனில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 1992ல் 55325 டன்னாக இருந்த கடலுணவு உற்பத்தி 2001ல் 205700 டன்னாக உயர்ந்துள்ள நிலைமையில்தான் மீனவர்களின் இந்த ஏழ்மை நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த பாவப்பட்ட மக்களுக்கு சேதுசமுத்திரம் என்ன விளைவுகளைஸ்ரீ கொண்டுவரும் ? சேதுசமுத்திரம் கட்டப்படும்போது உள்ள பணிகளின் காரணமாக பாரம்பரிய மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கப்படும் என்றும், அவர்களின் வருமானம் மேலும் சரியும் என்றும் நீரி அறிக்கைத் தெளிவாகச் சொல்கிறது. மேலும் கட்டுமானப்பணிகள் நடக்கும்போது அதன் காரணமாக மீனவ மக்கள் கடற்கரையோராத்தைப் பயன்படுத்துவதிலும் பிரச்சனை வரும் என்றும் நீரி அறிக்கை ஒப்புக்கொள்கிறது. தனுஷ்கோடி மீனவர்கள் நிரந்தரமாக இடம் பெயர வேண்டும் என்றும் சொல்கிறது. மேலும் கால்வாய் தோண்டப்பட்ட பின்னர் மீனவர்கள் கால்வயை கடக்க நேரம் ஒதுக்கப்படும் என்று நீரி சொல்கிறது. அதாவது மீனவர்கள் கப்பல்கள் நடமாட்டத்தை ஒட்டி கடலுக்லுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வானிலை, நீரோட்டம், பருவ நிலை போன்ற பல்வேறு காரணிகளை ஒட்டி மாறும் மீன் பிடி நேரம் கப்பல்கள் நடமாட்டத்தால் மேலும் சுருக்கப்படும் என்பது தெளிவு.
ஆக, திட்டம் துவங்கிய உடன் மீனவ மக்களின் வறுமை அதிகமாகும். திட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன் கடல் உயிர் இனங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக மீனவ மக்களின் வருமானம் தொடர்ந்து அடிவாங்கும். மீனவ மக்களை இடப்பெயர்ச்சி செய்வது அத்தனை எளிதான விஷயம் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், கடற்கரை வளஹ் பற்றிய பாராம்பரிய உரிமைகளையும் நாம் மாற்றவேண்டிவரும். அது புதிய மோதல்களைஸ்ரீ கொண்டுவரும்.
சேதுசமுத்திரத்தின் சமூக இழப்பு எவ்வளவு என்பதை நீரி கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை. மனிதர்களின் துன்பங்களையும், இழப்புகளையும் எந்த அளவைக்கொண்டு கணக்கிடுவது ?
6. சூழல் பாதிப்பு பற்றி நீரி சொல்லும் விஷயங்கள் மிகத் தெளிவற்ற வார்த்தைகளால் சொல்லப்படுகின்றன. ‘குறிப்பிடத்தக்கவை அல்ல ‘, ‘தூரத்தில் இருக்கிறது ‘, ‘அற்பமானது ‘ என்ற வார்த்தைகளில் சூழல் பாதிப்புகளை ஒதுக்கிவிட முயல்கிறது. ஒருவேளை அது திட்டத்தை அமுல்படுத்துவதற்கான விருப்பத்திலிருந்து துவங்கலாம். ஆனால், விஞ்ஞானபூர்வ ஆய்வில் விஷயங்கள் ‘கருப்பு வெள்ளையாக ‘ தெள்ளஜ் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும்.
மன்னார் வளைகுடாவை கடல் வாழ் உயிர் இனங்களின் சரணாலயமாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக ஐக்கியநாடுகளிடமிருந்து நிதியும் பெற்றுள்ளது. இப்பகுதியைப் பாதுகாப்பதற்காக 140 கோடிரூபாய் திட்டம் உள்ளது.
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் வளமாக நிறைந்துள்ள கடல். இது உலக முக்கியதுவம் வாய்ந்தது. பிடிபடும் மீன் வகைகள் 441. அவற்றில் அழகுக்கானவை மட்டும் 100. மன்னார் வளைகுடாவில் பிடிக்கப்படும் மீன் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் 20% ஆகும்.
இந்நிலையில் 10,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிக்கு 20 கி.மீ தொலைவுக்குள் கட்டுமானப்பணிகளைஷ செய்வது அரிதான கடல் உயிரினங்களையும், நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் மீன் செல்வத்தையும் அழிப்பதற்கே இட்டுச்செல்லும். ஆனால் வான் தீவுக்கும் கால்வாயுக்கும் இடைப்பட்ட தூரம் 6 கிமீட்டர் மட்டுமே. கால்வாயின் மற்றொரு புறத்தில் இருக்கும் சிங்ளே தீவுக்கும் கால்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய 20 கி.மீ. கால்வாயை அமைக்க வேண்டிய முடிவில் இருந்து துவங்கி வான் தீவுக்கு ஆபத்து இல்லை என்று சமாளிப்பு செய்யும் வேலையை நீரி அறிக்கை செய்கிறது.
7. எல்லாம் முடிந்து, கால்வாய் கட்டப்பட்டுவிட்டால் என்ன ஆகும் ?
அ) கடல் உயிர் வாழ் மண்டலம் நாம் கண்டுணர முடியாத மாறுதல்களுக்கு ஆளாகும்.
ஆ) மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
(இந்த இரண்டு விஷயங்களையும் நீரி ‘ஒரு மாதிரியாக ‘ ஒப்புக்கொள்கிறது.)
இ) கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மண்டலம் மெல்ல மெல்ல சிதைய ஆரம்பிக்கும்.
ஈ) கடல் நீரோட்டத்தின் காரணமாக மணல் படிவு தொடர்கதையாகும். அதன் காரணமாக மண் அள்ளுவது தொடர்கதையாகும். அதற்கான நிதி செலவு என்ன என்பதை யாரும் சொல்லவில்லை.
8) கால்வாயின் பயன்பாடு என்னவாக இருக்கும் ?
அ) தொடர்ந்து தூர் வார வேண்டியிருக்கும்.
ஆ) கால்வாயில் பயணம் செய்வது ஆழ்கடலில் பயணம் செய்வது போல அல்ல. முன்னோடிக் கப்பல் ஒன்று வழிகாட்டிச் செல்லும் என்று நீரி அறிக்கையே கூறுகிறது. இந்த செலவினம், கால்வாயைப் பயன்படுத்துவதற்காக கப்பல் கம்பெனி ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்வாக அலுவலக செலவினம், ஈழப்பிரச்சனையின் காரணமான பாதுகாப்புச் செலவினம் உள்ளிட்ட செலவுகளை கால்வாயைப் பயன்படுத்தும் கப்பல் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கட்டணைத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். கால்வாய் மூலதனத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதால் அது நிச்சயம் அதிகமாகவே இருக்கும். இந்த செலவுகளையும் மற்றும் (கால்வாயில் நுழைய, எரிபொருள் மாற்ற, கால்வாயில் எதிர்வரும் கப்பலுக்காக, முன்னோடி கப்பல் கிடைப்பதற்காக இன்னும் இதுபோன்ற காரணங்களுக்காகக் காத்திருப்பது, மெதுவாகச் செல்லவேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் ஏற்படும்) நேர விரயத்தையும் கணக்கிட்டால், மாற்றுப்பாதையான இலங்கையைச் சுற்றிப்போவதையே கப்பல் கம்பெனிகள் விரும்பும். விளைவாக தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கப்பல்களைஜ் தவிர வேறு கப்பல்கள் கால்வாயைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை.
இ) கால்வாய் வருவதால் வேலை வாய்ப்பு ஏற்படும் என்பது நம்பும்படியான கதை அல்ல. இன்றைய உலகமய பொருளாதாரத்தின் போக்கு ‘வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி ‘ (Jobless growth) என்பதாகவே மதிப்பிடப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட போர்டு கார் கம்பெனி போன்ற கம்பெனிகள் அளித்துள்ள வேலை வாய்ப்பைக் கணக்கிட்டாலே அது புரியும். போர்டு கார் கம்பெனி அளித்துள்ள நேரடி வேலை வாய்ப்பு 1000 பேருக்கும் குறைவு. கால்வாய் கட்டப்பட்டு அது லாபமாக இயங்கி, தொழில் வளர்ச்சி கண்டால் கூட அது பெரிய அளவு வேலை வாய்ப்பை ஏற்படுத்தாது. அவ்வாறு ஏற்படுத்தினால் நமது நாட்டு பொருளாதாரம் உலகமய காலகட்டத்தில் ஜீவிக்க முடியாது. எனவே, வேலைவாய்ப்புகள் உருவாகாத அதே சமயம், கப்பல் கால்வாய் வருகையால் ஏற்கனவே கடல் தொழிலை நம்பியுள்ள பல லட்சம் மக்கள் வாழ்க்கையை இழப்பார்கள்.
இந்த விரங்களை அரசாங்கத்திடம் கேட்கும்போதுதான் கலாட்டா நடக்கிறது. இதன் பின் உள்ள அரசியலை சற்றே ஊன்றி பார்க்க வேண்டியிருக்கிறது. இத்திட்டத்தால் முதலில் பாதிக்கப்படப் போகிறவர்கள் மீனவர்கள்தான். ஆனால், மீனவர்கள் தமிழகத்தில் ஒரு அரசியல் சக்தியாக இல்லை. அதற்கே உரிய பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களை ஒரு ஓட்டு வங்கியாகப் பார்க்கும் அரசியல் கட்சிகளுக்கு அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். அதனால் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கடலோர மீனவர் தொகுதி என்ற கோரிக்கையை அவர்கள் காதால் கேட்பது கூட இல்லை.
இந்தத் திட்டத்தால் பலன் பெறப்போகிறவர்கள் தமிழர்கள் இல்லை. அதாவது என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சி தமிழர்கள் இல்லை. மாறாக, தென்மாவட்ட முதலாளிகள், அதிலும், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வளர்ச்சி பெற்றால் வளர, மேலும் முன்னேற வாய்ப்புள்ள முதலாளிகள் இதனால் பயன்பெறுவார்கள்.
சேதுசமுத்திரக் கால்வாய் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்பதெல்லாம் காதில் பூச்சுற்றும் வேலை. நான் முன்னமேயே சொன்னபடி வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்பது இன்றைய உலகமயக் கொள்கையின் தாரகமந்திரம்.
சில கப்பல் கம்பெனி முதலாளிகளுக்கு, அதாவது மத்திய அமைச்சரான T.R. பாலு போன்ற கப்பல் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதாயம். மன்னார் வளைகுடா மீன் வளத்தை அள்ளஜ் துடிக்கும் பன்னாட்டு மீன் பிடி கம்பெனிகளின் பெரிய மீன்பிடி படகுகள்/ கப்பல்கள் கால்வாய் வழியே உள்ளே வரும் என்பதால் அவர்களுக்கும் ஆதாயம்.
திட்டம் அமுல்படுத்தப்படும்போதும் பின்னர் தொடர்ந்தும் செய்ய வேண்டிய மண் அள்ளும் வேலையை குத்தகை எடுக்கும் பன்னாட்டு இன்னாட்டு மண் அள்ளும் கப்பல் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதாயம்.
திட்டத்தை அமுல்படுத்தும் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரகுபதி போன்ற அதிகார வர்க்கத்தினருக்கு ஆதாயம். (எப்படி என்று சொல்லவேண்டுமா என்ன ?)
இத்திட்டத்தை கொண்டுவரும் அரசியல்வாதிகளுக்கும் ஆதாயம். எதற்காக கப்பல் துறையை கேட்டு திமுக ஒற்றைக் காலில் நின்றது என்கிறீர்கள் ? நான் சொல்வது புரியவில்லை என்றால், அருகே உள்ள TASMAC கடைக்குச் சென்று எந்தக் கம்பெனி சரக்குகள் அதிகமாக விற்பனை ஆகும்படி பார்த்துக்கொள்ளஸ்படுகிறது என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அந்தக் கம்பெனிகள் யாருக்குச் சொந்தம் என்று பத்திரிகைகள் எழுதின. இத்திட்டத்தை யார் கொண்டு வந்தது என்று உஙக்ளுக்கே தெரியும். சாராயக் கடைக்கே இப்படியென்றால், 2000 கோடி (இப்போதைக்குச் சொல்லப்பட்டிருப்பது மட்டும்) திட்டத்தை ஏன் கொண்டு வருகிறார்கள் என்று மறுபடியும் சொல்ல வேண்டுமா என்ன ?
நஷ்டம் ? மீனவர்களுக்கு. உங்களுக்கு… எனக்கு.
இவற்றை விட முக்கியமான வேறு சில செய்திகளையும் நாம் பார்க்க வேண்டும். இராமேஷ்வரத்தை கடற்படைத் தளமாக்குவது தேசபாதுகாப்புக்கு அவசியம் என்று சொல்கிறார்கள். தேசம் என்றால், அதில் உங்களுக்கும் எனக்கும் மீனவர்களுக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூடங்குளஹ் அணு மின் நிலையத்தைப் பாதுகாத்தாக வேண்டும். இந்துமகா சமுத்திரத்தில் நமது கப்பல் படையில் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வேண்டும். கல்பாக்கம் துவங்கி, அருமணல் கிடைக்கும் கன்னியாகுமரி வரை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தொழில் அமைப்புகளைப் பாதுகாத்தாக வேண்டும்.
ஆனால், ஆள்பவர்களைப் போன்ற முட்டாள்கள் என்றும் இருந்ததில்லை. அவர்கள் நுனி மரத்தில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவார்கள். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால், சூழல் பேரழிவை ஏற்படுத்துவதால் திட்டத்தின் அமுலாக்கத்தை ஒட்டியும், முன்னேயும் பின்னேயும் சேதுசமுத்திரம் வெட்டப்படுவது கடும் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும்.
சென்னை கடற்கரையை அழகுபடுத்தி பன்னாட்டு நாய்களுக்கு, மன்னிக்கவும், கம்பெனிகளுக்கு அளிப்பது, நவீன கட்டுமான முதலாளிகளுக்கு அளிப்பது என்ற எம்ஜிஆர் காலத்தில் துவங்கிய முயற்சியை இன்றுவரையும் கூட யாராலும் நடைமுறை படுத்த முடியவில்லை. அன்று துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான மீனவர்கள் ஒரு செய்தியைச் சொல்லி சென்றிருக்கிறார்கள்.
மீனவர்களின் அன்றாட வாழ்வு கடலோடு மட்டும் அல்ல, மரணத்தோடும்தான். வாழ்வதற்காக சாகத்துணிந்தவர்கள் அவர்கள். ஆட்சியாளகள் இந்த செய்தியைப் புரிந்துகொள்ளும்போது, அது காலம் கடந்த புரிதலாக இருக்கும். —-
- திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி
- ஆட்டோகிராஃப் 18-ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ?
- வைகறை இலக்கிய வாசல்-18-09-04
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கர்நாடக சங்கீத நிகழ்ச்சி -செப் 25,2004
- கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…
- சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)
- வாக்கிற்காக ஒரு வாக்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கவுரியின் எதிர்காலம் ?
- சொன்னார்கள்
- தேடுகிறேன் தோழி
- கவிக்கட்டு 25-காதலின் மறுவடிவம்
- அந்தத் தருணங்களில்…!
- எங்கள் பாரதி ஒரு தென்றல்.
- பசுமைப் புரட்சி….
- மெய்மையின் மயக்கம்-17
- கடிதம் செப்டம்பர் 16,2004
- தமிழ் தெய்வீகம் இஇணைய தளங்கள்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்
- இரவுத்தினவுகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37
- சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004
- ஆய்வுக் கட்டுரை: முகப்பேறு ஆய்வு
- வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்
- பெரியபுராணம் – 9
- பூகம்பம்
- பாரதி (பா)ரதத்தின் சாரதி
- அந்தத் தருணங்களில்…!
- சித்தனாய் நானிருந்தால்.. ?
- அக்கினி விதைகள்
- தோப்பு
- கழுதைகளுக்குத் தெரியுமா….
- நாட்குறிப்பு
- உயர் இரத்த அழுத்தம் – ஓர் அமைதிக் கூற்றுவன்
- பூச்சிகளைத் தின்னும் செடிகள்
- சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்
- வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
- ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…
- சமூக விரோதியாகிய கார்
- பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்
- அனைத்துலக அரங்கில் தமிழ்