வறுத்த வறுகடலை – 1

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

பால. மோ. குமார்


(கவிஞர் கரடிபுத்திரன் எழுதிய ‘ஒற்றை நாளிலே ‘ என்கின்ற பின் நவீனத்துவ கவிதையை (போஸ்ட் மாடர்ன் பொயட்றி என்றும் பாடம்) இங்கு தந்திருக்கிறேன். படித்து இன்புறுக!)

அவன்,

காலையில் எழுந்தான்

காபி குடித்தான்.

கக்…. போனான்

கால் கழுவினான்.

பல் விளக்கினான்

பத்திரிகை படித்தான்.

சட்டினி தொட்டான்

இட்டலி மென்றான்.

சட்டையை மாட்டினான்

சடுதியில் கிளம்பினான்.

பஸ்ஸில் ஏறினான்

பார்வையை ஓட்டினான்.

அவளினைக் கண்டான்

அருகிலே சென்றான்.

மெல்ல இடித்தான்

மிதி, அடி வாங்கினான்.

மெல்ல இறங்கினான்

மேனியைத் துடைத்தான்.

அங்குமிங்கும் பார்த்தான்

அலுவலகம் புகுந்தான்.

அரட்டை அடித்தான்

குறட்டையுடன் தூங்கினான்.

லஞ்சு உண்டான்

லஞ்சமும் தின்றான்.

கடிகாரம் பார்த்தான்

வீடு திரும்பினான்.

டி.வி. பார்த்தான்

டின்னர் சாப்பிட்டான்.

மனைவியை அணைத்தான்

மன்மதன் ஆனான்.

காலையில் எழுந்தான்

காபி குடித்தான்.

….

….

(அடுத்த வாரம் ‘புண் ‘பா புலவர் புகழ்தூக்கி எழுதிய ஒரு ‘புண் ‘பா. அப்பப்பா! ஏனிந்த அவசரம் ? பொறுத்திருங்களேன் ஒரு வாரம்!)

bmohankumar03@yahoo.co.in

Series Navigation

பால. மோ. குமார்

பால. மோ. குமார்