வஞ்சிரம் மீன் — 3/4 கிலோ
இஞ்சி — 1 துண்டு
பூண்டு — 2 (முழுதாக)
எலும்மிச்சம்பழம் — 1
புளி — 100 கிராம்
காரத்தூள் — 50 கிராம்
வெந்தயத்தூள் — 1/4 டாஸ்பூன்
சீரகம் — 1 டாஸ்பூன்
கடுகு — 2 டாஸ்பூன்
வினிகர் — 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் — 1/4 மி.லி.
மஞ்சள் தூள் — 1/2 டாஸ்பூன்
மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் உப்புத்தூள், 2 டாஸ்பூன் காரத்தூள், மஞ்சள் தூள் பிசறி, தடவி இருபது நிமிட நேரம் ஊற வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து மீன் துண்டுகளை பொரித்து எடுக்க வேண்டும்.
புளியை ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை எண்ணெயில் வதக்கி சீரகத்தோடு சேர்த்து வினிகர் தெளித்து மைப் போ அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த மசாலா சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடவும். மீதி காரத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, எண்ணெய் மேலாக மிதந்து வரும் சமயம், எலுமிச்சம் பழச்சாறு, வெந்தயப் பொடி கலந்து விடவும். பிறகு மீன் துண்டுகளைப் போட்டு செம்மையாக கிளறி ஆறவைத்து பாட்டிலில் எடுக்கவும்.
- அஞ்சு ரூபா
- ஒரு பெண்ணாதிக்கக் கதை
- ஒர் ஆணாதிக்கக் கதை
- மாயை
- மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும்
- உடைவது சிலைகள் மட்டுமல்ல
- இந்த வாரம் இப்படி – மார்ச் 11, 2001
- பேசடி பிாியமானவளே…
- எலிப் பந்தயம்
- பாட்டி
- உயிர்த்திருத்தல்
- எம் ஐடி டெக்னாலஜி ரிவியூவில் வந்த 10 எதிர்கால தொழில்நுட்பங்கள் -9 – இயந்திர மனித வடிவமைப்பு(Robot Design)
- சிக்கன் எலும்பு சூப்
- வஞ்சிரம் மீன் ஊறுகாய்
- காட்சிப்படுத்தலும் கலை ஊடகங்களும்