லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

மகேஷ்.


ப்ரிய ஷங்கரநாராயணன்,

உங்கள் கட்டுரையைப் போலவே கடிதமும் நகைச்சுவையாய் இருந்தது. தொடர்ந்து இதுபோல் பெருஞ்சுற்றிதழ்களில் ‘பவனி’ வந்து
எழுத வாழ்த்துகிறேன்.

உங்கள் வீரதீரபராக்ரமங்களை தனிக்கட்டுரையாய் எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் குழாமும் வாசகர் கூட்டமும் படித்து பரவசமடையட்டும்..

ஆனால் லா.ச.ரா மறைவை முன்வைத்து உங்கள் முதுகு சொறியும் வேலை வேண்டாம்..

சுமார் 20 பக்க கட்டுரையில் சுமார் 14 பக்கங்கள் உங்கள் புராணமே..

மேலும், சாவு வீட்டுக்குப்போய் ‘இவர் நல்லவர்தான்.. ஆனால் போனவாரம் 50 ரூபாய் வாங்கினார். திருப்பிக்குடுக்கவில்லை.. ‘ என்கிற தொனியில் இருந்தது உங்கள் கட்டுரை..

அதைதான் நான் சுட்டிக்காட்டினேன்..விமரிசனம் செய்யும் நேரமல்ல இது.. லா.ச.ரா என்னும் மாபெரும் கலைஞன் மறைந்ததற்கு அஞ்சலி செலுத்திய பின், உங்கள் விமரிசனம்(??) படைக்கப்படட்டும்..

இலக்கிய விமரிசனம் வேறு..தனி மனித விமரிசனம் வேறு..

‘ஒரு நெகிழ்ந்த மன நிலையில்’ உங்களிடம் அவர் நிகழ்த்திய தனிப்பட்ட உரையாடல்களை விமர்சனம் என்ற போர்வையில் முன் வைப்பது ..??

அது நிஜமா.. பொய்யா என்று மறுதலிக்க அவர் உயிருடன் இல்லாத போது..

லா.சா.ரா, ஆதவன் முதலான சில தமிழ் எழுத்தாளர்களின் இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை..

உங்களின் இது போன்ற எதிர்மறை எழுத்தால் சில நாட்கள் மட்டுமே பிரபலம் ஆகலாம்..

நன்கு முயற்சி செய்யுங்கள்.. நல்ல எழுத்து உங்களிடமிருந்து கூட வரக்கூடும்.. யார் கண்டது..? அப்போது உங்கள் புகழை ஊர் பாடும்..
நீங்களாக உங்கள் பரணி பாட வேண்டிய அவல நிலை இருக்காது..

உங்கள் கட்டுரை ‘அல்வாத்துண்டில் மயிர் இல்லை’.. மயிர்க்கற்றையில் அல்வா..

ப்ரியங்களுடன்

மகேஷ்.

பிகு: லா.சா.ரா நினைவரங்கத்த்ற்கு வருகிறேன்..


umahesh2000@gmail.com

Series Navigation

மகேஷ்

மகேஷ்