அ. முத்துலிங்கம்
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே 18ம் தேதி மாலை நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நவீன தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழின் சிறப்பை உலகறியச் செய்துவருபவர் இவர். மொழிபெயர்ப்புக்கு வழங்கும் உயரிய விருதான Hutch Crossword Book Award இவருக்கு இருதடவை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து இலங்கை இந்தியா கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புபட்டறைகளும் நடாத்தி வருகிறார்.
தன்னுடைய ஏற்புரையில் லக்ஷ்மி மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். உன்னதமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியுலகத்துக்கு தெரியவருவதில்லை என்றும், இந்தக்குறை எதிர்காலத்தில் நீங்கி தமிழின் புகழ் உலகளாவும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் ‘யாமம்’ நாவலுக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில்
‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ நூலுக்காக நாஞ்சில் நாடனுக்கும், கவிதைப் பிரிவில் ‘தொலைவில்’
கவிதை தொகுப்புக்காக வாசுதேவனுக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்காக முனைவர் கே.கல்யாணசுந்தரத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
- பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6
- அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்
- லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.
- ” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !
- தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)
- புரண்டு படுத்த அன்னை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்
- எவ்வித ஆதாரமும் சொல்லாமல்
- தெய்வ மரணம் – 2
- அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”
- கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்
- அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!
- மலர் மன்னனுக்கு பதில்!
- முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை
- மலர்மன்னன்
- கடிதம்
- கடிதம்
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி
- உள்ளூர் கோயபல்ஸ்கள்!
- National Folklore Support Centre announces Sir Dorabji Tata Fellowships For North Eastern India
- நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு
- ‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி
- உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்
- துவம்சம்” அல்லது நினைவறா நாள்
- வானம்
- தாஜ் கவிதைகள்
- செப்புவோம் இவ்வன்னை சீர்
- தனிமை
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1
- மும்பை விசிட்-சில தகவல்கள்
- தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
- மீட்சி
- மனிதம் நசுங்கிய தெரு !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12
- போதி மரம்