ஷேக் உஸ்மான் பின்-முகம்மது பின்-லேடன் இன்ன பிறர்
(மொ.கு: இன்றைய ஆஃப்கானிஸ்தான் போரைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு முயற்சி. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அராபிய மூலம் இங்கே.
இந்த கீழ்க்கண்ட ஃபத்வா உலக இஸ்லாமிய முன்னணி அராபிய மொழியில் வெளியிட்டது. அமெரிக்கர் மீதான தாக்குதலில் ஒசாமாவின் பங்கு உண்டு என்பதற்கு சாட்சியாக இந்த ஆவணமும் அமெரிக்க அரசாங்கத்தினால் தரப் பட்டிருக்கிறது.
***
யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்
உலக இஸ்லாமிய முன்னணியின் அறிக்கை
23 பிப்ரவரி 1998
ஷேக் உஸ்மான் பின்-முகம்மது பின்-லேடன்
ஐமான் அல்-ஜவாஹிரி , எகிப்தின் ஜிகாத் குழுவின் தலைவர்
ஷேக் மீர் ஹம்சா, பாகிஸ்தானின் ஜமாத்-உல்-உலேமாவின் செயலாளர்
அபு-யாசிர், எகிப்திய இஸ்லாமியக் குழு
ஃபஸ்லுர் ரஹ்மான் , பங்களா தேஷ் ஜிஹாத் இயக்கத்தின் தலைவர்
அல்லாவைப் போற்றுவோம். புனித நூலை நமக்கு அருளிய , மேகங்களைக் கட்டுப்படுத்துகிற , மனிதருள் பிரிவுகளை முறியடிக்கின்ற அல்லா புனித நூலில் சொல்கிறார்: ‘நோன்பு மாதங்கள் முடிந்ததும், நம்பிக்கையற்றவர்களை எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் அவர்களைப் பிடித்து கொல்வதும், அவர்களைப் பிடிக்கக் காத்திருப்பதும் நம் போர் முறைகள் ‘ நம் தேவதூதர் முகம்மது பின் அப்துல்லாவின் மேல் அமைதி மேலோங்கட்டும். அவர் சொல்கிறார்: ‘ அல்லாவைத்தவிர வேறு யாரையும் யாரும் வழிபடக்கூடாது என்பதற்காகவே நான் கையில் வாளுடன் அனுப்பப் பட்டிருக்கிறேன். என் ஈட்டியின் நிழலிலே என் வாழ்வு என்று அல்லா நிர்ணயித்திருக்கிறார். என் கட்டளையைப் புறக்கணிப்பவர்களை அல்லா கீழ்மைப் படுத்திப் புறக்கணிப்பார். ‘
அராபிய தீபகற்பம் – அல்லா தட்டையாய் , பாலை நிலங்களை சமைத்து, கடல்கள் சூழ உருவாக்கிய அந்த நாளிலிருந்து – சேனைகள் எதுவும் இங்கே புகுந்து அதன் வளத்தையெல்லாம் தின்று கொழித்து, அதன் வயல் வெளிகளை அழித்ததில்லை. ஆனால் இப்போது முஸ்லீம்களை எல்லோரும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடுமையான சூழலில் , ஆதரவு எதுவுமற்ற நிலையில் இந்த நிகழ்வுகளை விவாதித்து, தீர்வு காண்பது நம் கடமையாகிறது.
எல்லோருக்கும் தெரிந்த மூன்று உண்மைகளைப் பற்றி யாரும் இப்போது விவாதிப்பதில்லை. எல்லோருக்கும் நினைவுபடுத்தத் தக்க அளவில் அந்த மூன்று உண்மைகள்:
முதலில், ஏழாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க நாடு இஸ்லாமிய நிலத்தை அதுவும் புனிதமான இடமான அரேபிய தீபகற்பத்தை ஆக்கிரமித்து, அதனைக் கொள்ளை அடித்து, அதனது ஆட்சியாளர்களை ஆட்டுவித்து, அதனது மக்களைக் கீழ்த்தரமாக நடத்தி, அதன் அருகிலிருக்கும் நாடுகளைப் பயமுறுத்தி, அங்கு அமைத்துள்ள அவர்களது இடங்களை அருகிலிருக்கும் முஸ்லீம் மக்களுடன் சண்டையிட வசதியாக்கி வருகிறது.
முன்பு இந்த ஆக்கிரமிப்பு பற்றி விவாதித்தவர்கள் கூட இப்போது இதனை ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்த உண்மையின் சிறப்பான நிரூபணம் ஈராக் மக்கள் மீது அமெரிக்கா செலுத்தும் ஆக்கிரமிப்பு ஆகும். இந்த ஆக்கிரமிப்பிற்கு (அரேபிய) தீபகற்பம் இருப்பிடமாகியிருக்கிறது. அந்தப் பகுதியை ஆளுவோர் எல்லோருக்கும் இது பிடிக்கவில்லை எனினும் அவர்களுக்கு( அமெரிக்காவை ஆதரிப்பது தவிர) வேறு வழியில்லை.
இரண்டாவதாக, ஈராக் மக்கள் மீது இந்தக் (கிரிஸ்தவப்) போராளிகளும் யூதர்களும் இணைந்த அணியினால் இழைக்கப் பட்ட பேரழிவுகள், இறந்துபட்ட பெருவாரியான பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் – என்று இவை தொடர்ந்தாலும் கூட, அமெரிக்கா மீண்டும் இந்தக் கொடூரமான படுகொலைகளை நிறுத்தவில்லை. இந்தக் கொடூரமான யுத்தத்தில் , பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட அழிவும், துண்டாடலும் அமெரிக்காவிற்குப் போதவில்லை. மிஞ்சியிருக்கும் மக்களையும் கொன்று குவித்து, அவர்களின் முஸ்லீம் அண்டை நாட்டாரையும் இழிவுபடுத்த முனைகின்றனர்.
மூன்றாவதாக, இந்தப் போர்களின் பின்னுள்ள அமெரிக்கர்களின் குறிக்கோள் மதம் மற்றும் பொருளாதாரம் என்றால், ஜெருசேலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள இஸ்லாமியர்களை கொன்று கொண்டிருக்கும் கேவலமான யூத நாட்டிற்கு விசுவாசமான முறையில் இவர்களின் கொடுமையிலிருந்து திசை திருப்புவதாயும் அவர்களது குறிக்கோள் இருக்கிறது. வலுவான அரேபிய அண்டை நாடான ஈராக்கை அழிக்க இவர்கள் கொள்ளும் ஆர்வம், ஈராக். எகிப்து, சவூதி அரேபியா , சூடான் போன்ற நாடுகளைப் பிளவுபடுத்தி, வெறும் பெயரளவிலான நாடுகளாய் அவற்றை இருக்கப் பண்ணி, இஸ்ரேலின் இருப்பை நிச்சயப் படுத்தி, (அரேபிய) தீபகற்பத்தை (கிரிஸ்தவப்) போராளிகள் கையில் தக்க வைத்துக் கொள்ளச் செய்யும் முயற்சியே , இதன் நிரூபணம்.
அமெரிக்கர்களால் இழைக்கப்பட்ட இந்த குற்றங்களும் பாவங்களும் அல்லா மீதும், அவரது தூதர்கள் மீதும், முஸ்லீம்கள் மீதும் தொடுக்கப்பட்ட திட்டவட்டமான போரே. முஸ்லீம் நாட்டை எதிரி அழிக்கும் போது ஜிஹாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம்களின் கடமை என்பது இஸ்லாமியரின் சரித்திரம் முழுவதிலும் உலேமாக்களால்(முஸ்லீம் மதகுருக்கள்: மொ.பெ) ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இது ‘அல்-முக்னி ‘யில் மாம் பின்-குவாடமா-வினாலும், ‘அல்-படாய் ‘-ல் மாம் அல்-கிசாயினாலும், அல்-குர்டுபியின் விளக்கத்தினாலும், ‘எதிரியைத் துரத்தக்கூடிய போரைப் பொறுத்த வரை, இறைத்தன்மையையும் மதத்தினையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் ஏற்பட்ட போர் இது. இது உலேமாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கடமை. மதத்தையும் உயிரையும் தாக்கக்கூடிய எதிரியை துரத்துவதைவிட புனிதமானது வேறெதுவும் இல்லை ‘ என கூறும் அல்-இஸ்லாமின் ஷேக்கின் புத்தகத்திலும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் மற்றும் அல்லாவின் ஆணைக்குட்பட்டு கீழ்க்கண்ட ஃபத்வாவை எல்லா முஸ்லீம்களுக்கும் பிரகடனம் செய்கிறோம்:
அல்-அக்ஸா மசூதியையும் மெக்காவின் புனித மசூதியையும் அவர்களது பிடியிலிருந்து விடுவிக்கத்தக்க அளவில், இஸ்லாமின் புனித மண்ணிலிருந்து அவர்களது ராணுவத்தினை தோற்கடிக்கப்பட்டும், இனி முஸ்லீம்களை பயமுறுத்த முடியாத நிலையிலும் (இந்த இடங்களிலிருந்து) வெளியேற்றவும், எந்த நாட்டிலெல்லாம் செய்ய முடியுமோ, அங்கெல்லாம் ராணுவ மற்றும் சாதாரண அமெரிக்கரையும் அவர்களது தோழமை நாட்டார்களையும் கொல்வது ஒவ்வொரு இஸ்லாமியரது கடமை. ‘மற்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து நம்முடன் போராடுவது போல அவர்களுடன் போராடவும் ‘ மற்றும் ‘கலகமும் அடக்குமுறையும் தீர்ந்து, நீதியும் அல்லா மீது நம்பிக்கையும் ஏற்படும் வரை சண்டையிடவும் ‘ என்கிற பெருமை வாய்ந்த அல்லாவின் வாசகத்திற்கு ஒத்துப் போகும் செயல் இது.
இது, ஆண்டவரின் கூற்றான இறைவனுக்காகவும், தெம்பில்லாதவர்களுக்காகவும், கீழ்த்தரமாக நடத்தப்படுபவர்களுக்காகவும், ‘இறைவா, இந்தக் கொடியவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்று. எங்களுக்கு உதவி செய்யக் கூடிய வகையில் முன்னோக்கி வருக ‘ என வேண்டிக்கொண்டிருக்கும் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஏன் நீ போரிடக் கூடாது ‘ என்பது அல்லாவின் சொற்கள் .
ஆண்டவரின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு முஸ்லீம்களையும் மற்றும் அவரது ஆணையான ‘வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்கர்களைக் கொன்று, அவர்களது பணத்தினைக் கொள்ளை அடிப்பதை ‘ நிறைவேற்றி (அல்லாவின்) வெகுமானம் பெற விரும்புபவர்களையும் அல்லாவின் உதவியுடன்னழைப்பு விடுக்கிறோம். மேலும் அமெரிக்க சாத்தானின் படைகளையும், அந்த பிசாசுடன் உறவு கொண்டு உதவி செய்பவர்களையும், அவர்கள் பின் நிற்பவர்களையும் தாக்குதல் செய்து சீரழிக்க முஸ்லீம் உலெமாவையும், தலைவர்களையும் இளைஞர்களையும் மற்றும் வீரர்களையும் அழைக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லா கூறுவது: ‘என்னை நம்புபவர்களே, ஆண்டவனும் அவரது தூதர்களும் உன்னிடம் கேட்கும் போது உனது உயிரைத் தியாகம் செய். ஒரு மனிதனுக்கும் அவனது உணர்வுகளுக்கும் இடையில் வரக்கூடியவர் அல்லா, அவருக்காக உங்கள் அனைவரும் திரட்டப் படுவீர்கள் என்பதை உணர்ந்து கொள்வாயாக. ‘
எல்லாம் வல்ல அல்லா மேலும் கூறுகிறார்: ‘என்னை நம்புபவர்களே. உங்களுக்கு என்ன ஆயிற்று ? ஆண்டவரின் காரியங்களுக்காகச் சேவை செய்ய உங்களை கேட்டுக் கொண்டால், இந்த உலகோடு ஒட்டிக் கொள்கிறீர்கள். இறைவனின் பணியை விட இவ்வுலக வாழ்க்கை உங்களுக்கு மேலானதாகத் தெரிகிறதா ? இறைவனின் பணியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வுலக வாழ்க்கை உங்களுக்குத் தருவது சொற்பமே. நீ இறைப் பணி செய்ய முயலவில்லையெனில் ஆண்டவன் உன்னுடைய மேன்மையை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டு உனக்குக் கொடிய தண்டனையைத்தான் கொடுப்பார். ஆண்டவனுக்கு உன்னால் எந்த கெடுதலும் செய்ய இயலாது, ஏனெனில் ஆண்டவர் சக்தி வாய்ந்தவர். ‘
எல்லாம் வல்ல அல்லா மேலும் கூறுவது: ‘மனம் உடைந்து போகாதே, அவநம்பிக்கைப் படாதே. உனது நம்பிக்கை உண்மையானதானால், நீ திறமை வாய்ந்தவனாக வேண்டும். ‘
***
- சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி
- வடிவ அமைதி
- நியதி
- பகல் நேர சேமிப்பு
- யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001
- நாகாிக மானுடமே!
- கலைமகளே!பதில் சொல்வாய்..!
- நிலவு
- கண்ணீர்
- கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்
- எனக்கு மழை வேண்டாம்
- மறக்க முடியுமோ ?
- பகல் நேர சேமிப்பு
- மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்
- கருவாட்டுக் குழம்பு