யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

எச். பீர்முஹம்மது


லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி என்ற சிறுகதை தொகுப்பு, பெட்ரோ பாரமோ என்ற நாவல் இரண்டும் தமிழில் வெளி வந்திருக்கிறது. பெட்ரோ பராமோவின் காட்சி பதிவானது விரிந்து செல்கிறது.

கோமல்லாவின் கிராமத்திற்கு தந்தையை தேடி வரும் மகன் இருக்கும் நிகழ் காலமும், அவன் பெற்றோரின் இறந்த காலமும் கூடி அவன் இணையும் கதை வெளியானது சஞ்சலமடைகிறது.

கதையில் வரும் கோமாஇ கிராமம் எதுவுமற்ற நிசப்த நாம ரூபத்தில் தன்னை வெளிப்படுத்தி தொடர்கின்றது. மிகுவர் பராமோ, எடுவிஜஸ் ஆகிய இருவரும் நிச்சலனமான இடத்தை சுற்றி வருவது போன்ற உணர்வில் அலைந்து திரிகிறார்கள். இது போன்ற உணர்வுகளுடன் வரும் கதையாளர்கள் தங்களை மறுதிருப்பல் செய்து கொள்கிறார்கள். திருப்பல் மறுதிருப்பல் இரண்டுமே கதைப்போக்கு சார்ந்து ஒன்றை ஒன்று தாண்ட முயல்கின்றன. இம்மாதிரியான உணர்வுகள் இந்நாவலுக்குள் அதிகமாகவே தென்படுகிறது. லூதியானா மாகாணத்துக்கு சென்று திரும்பும் எடுவிஜஸ் காலத்தை பின்னோக்கி கதையில் நகர்த்துகிறார். மதநம்பிக்கையுள்ளவர்கள், இல்லாதவர்கள் இரண்டு பேரும் மாறி மாறி ஓயாமல் போர் புரிகிறார்கள். உலகில் நம்பிக்கையுடன் நகர்பவர்களுக்கும், நகர முடியாத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இடையேயான போராட்டம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. இவர்களுக்கிடையேயான உரையாடல் அடிக்கடி நிகழ்ந்த வண்ணமாக இருக்கிறது.

மெக்ஸிகோவில் வரலாற்றில் கிறிஸ்டெரோக்களின் கலகம் முக்கிய நிகழ்வாகும். இந்ந வரலாற்று சம்பவத்தில் இருந்து இந்நாவல் தொடக்கம் பெற்றாலும், எதார்த்தத்தை மீறி அதீத வெளிக்குள் கொஞ்சம் நகர்கிறது. கோமாஇஇன் கிராமத்தின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் மீது ஆரம்பிக்கும் கதைப்புள்ளி வேறொன்றுக்கு இறுதியாக்கலை அறிவிக்கிறது. ஒவ்வொரு புள்ளிகளுமே ஒன்றையொன்று விலகலாக, மாறியதாக நமக்கு காட்சிப்படுத்துகின்றன.

நாவல் காட்சி பதிவும், கதைவெளியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும் யதார்த்தம் சார்ந்த கட்டுமானத்திற்குள் தான் வலுவானதாக நிற்கிறது இந்நாவல். லத்தீன் அமெரிக்க வாழ்க்கை சம்பவங்களின் கோர்வையை நகலெடுத்து, பிரதிபஇக்கும் போது வாசக மனோபாவம் வேறொரு பிரதிபஇப்பை அவனுக்கு ஏற்படுத்தும். புனைவு வெளிக்குள் பயணித்தலே நாவஇன் பணியாக இருக்க வேண்டும். யுவான் ருல்ஃபோ தன் வாழ்நாளில் இரு தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறார். அந்த முறையில் அவருடைய இடப்பெயர்ச்சி இன்னும் அதிகமாயிருந்தால் வாசகனின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியதாக இருந்திருக்கும். சுருக்கமும், விரிவும் இன்னும் தெளிவாக நமக்கு குறிப்பீடுகளை வழங்க வேண்டும்.

***

peer mohamed

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது