ரதன்
“பாதிரிமார் யாழ்ப்பாணத்துக்கு வராவிடின் நாவலராற்றிய அரும் பெரும் பணிகள் நிகழ்ததற்கு தருணமெழுந்திராது” என நாவலர் ஆற்றிய சேவைகள் பற்றி க.கணபதிப்பிள்ளையவர்கள் கூறியதாக பேராசிரியர் கைலாசபதி தெரிவித்துள்ளார் (நாவலர் மாநாடு விழா மலர் 1969). கைலாசபதி மேலும் “நாவலர் இலங்கைத் தேசியத்தை (தமிழ் தேசியமல்ல) வலியுறுத்தினார்” என கருத்து தெரிவித்துள்ளார். (“புதுமை இலக்கியம் – தை 1974 “நாவலர் அடிச்சுவட்டில் தேசியம்”) இலக்கிய மேதைகளும், அறிஞர்களும் புகழ்ந்த நாவலரைப் பற்றி குறமகள் பின்வருமாறு கூறுகின்றார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” குறமகளின் இந்தக் கூற்று உண்மையானது. நாவலர் சாதியத்துக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் செயற்பட்டார். குறமகளின் மேற்கூறிய ஆய்வு நூலிலேயே, இவர் நாவலரைப்பற்றி துணிச்சலாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“குறமகள், பெண்ணியம், மனதிநேயத்திற்குப் புதிய பொலிவும் அர்த்தமும் ஆழமும் பாய்ச்சுதல் வேண்டும். இதனைத் துல்லியமாக உணர்ந்தவர்” என அந்தனி ஜீவா தெரிவித்துள்ளார் (புதிய பார்வை – தை 16-31 2008) குறமகள் எழுத வந்து 35 ஆண்டுகளின் பின்னர் குறமகள் கதைகள் என்ற நூல் வெளிவந்நது. ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சாதித்தவற்றிற்கு ஒரு மெய் ஆவணமாக இவரது குறமகள் கதைகள் நூல் திகழ்வதாக எஸ. பொ தெரிவித்தாக அந்தனி ஜீவா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். குறமகள் இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளார்களில் ஒருவர். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். இப்பொழுதும் ஆர்வத்துடன் இலக்கிய, பெண்ணிய கூட்டங்களில் கலந்துகொள்கின்றார்.
“பயந்தாங்கொள்ளிகளாக வீட்டில் முடங்கிக் கல்வியறிவற்று உலக அனுபவமின்றி வாழந்த இவர்கள் ஒரு நூற்றாண்டு காலத்துள் எப்படி மாறினார்கள், இவர்களின் விலங்கொடுத்தவர்கள் யார்?, கல்வியறிவ+ட்டியவர்கள் யார்?, தன்னம்பிக்கையை வளர்த்தவர்கள் யார்? இவ் வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியே இந் நூல்” என தனது முன்னுரையில் குறமகள் குறிப்பிடுகின்றார்.
குறமகளின் ஆய்வுப் பொருளானது முக்கியமானது. பொருளாதார ஆட்சிக்கு கல்வியறிவு முக்கியமானது. இது கிழக்கில் மாத்திரமல்ல மேற்கிலும் அதே நிலை தான். பெண்களுக்கு வாக்குரிமை இன்றைய நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் வழங்கப்பட்டது. திருமணம் என்ற பந்தமே தவறானது. இது பொதுவாக பெண் ஒடுக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூறும் அடிப்படைக் கருத்து. அதற்கு அப்பால் ஒவ்வெரு தனி மனிதனுக்கும,; மனுசிக்கும் தனது பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும். இங்குதான் ஓழுக்க கோட்பாடுகள் முன்வைக்கின்றன. பெண்கள் இன்று கல்வியில் முன்னிலையில் இருந்தாலும், இந்த ஓழுக்க கோட்பாடுகளே பெண்களை கட்டுப்படுத்துகின்றன. இந்த உலகம் ஆணிய மொழிகளையும், ஆண்களால் எழுப்பப்பட்;ட சட்டங்களையும் கொண்டுள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்கள், பெண் ஒடுக்கு முறையின் மூலமான குடும்பம், ஓழுக்க மதீப்பீடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.
பேராசிரியர் சிவத்தம்பியின் ஓர் ஆய்வு “யாழ்ப்பாணம் – சமூகம் பண்பாடு கருத்து நிலை”, குறமகளின் நூலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றியது. இது ஏன்? யாழ்ப்பாணத்துக்கு வெளியே பரந்து வாழும் தமிழர்களை தவிர்ப்பது ஏன்? தமிழ் என்றால் யாழ்ப்பாணம் என்ற நிலையை ஏற்படுத்த முற்படுத்துவது மிக மோசமான தவறாகும்.
குறமகள் தனது ஆய்வை 1810க்கு பின்னர், 1830-1865, 1865-1900 போன்ற பகுதிகளாக பிரித்து மேற்கொள்கின்றார். இவரது ஆய்வின் பிரகாரம் பெண்கள் கல்வியானது ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னரே ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இவர் புள்ளி விபரங்களையும் அளித்துள்ளார். இலங்கை சட்டசபையின் முதலாவது உறுப்பினர் குமாரசாமியின் மனைவிகூட எழுத்தறிவற்றவர் என்ற குறமகளின் கூற்றே பெண்கள் கல்வியறிவைப்பற்றி தமிழ்ச் சமூகம் கவலை கொள்ளவில்லை என்பதனை உறுதிசெய்கின்றது. அண்மைக்கால ஆய்வொன்றின் பிரகாரம் 70களில் க.பொ.த (சா) சித்தியடைந்த பெண்களில் 50வீதமானோர் உயர்தர பரீட்சைக்கு தோன்றவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் உயர்தர பரீட்சைக்கு முன்பாக திருமணம் செய்துவிட்டார்கள். இது தமிழ்ச் சமூகம் பெண்கள் மீது கொண்டிருந்த ஒடுக்கு முறை பாசத்தை வெளிப்படுத்துகின்றது. பெண்கள் கல்விகற்க விரும்பிய போதும், அதற்கான பாடசாலைகள் தோற்றுவிக்கப்பட்ட பின்னரும், பெண்கள் கல்வி கற்பதை ஆண்கள் எதிர்த்து வந்துள்ளனர். இவரது ஆய்வு இதனை தெளிவாக வெளி;ப்படுத்தியுள்ளது. பெண்கள் தொழில்சார் நிலைகளிலும், வர்த்தக ஈடுபாடுகளிலும் காலத்துக்கு காலம் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். சிவத்தம்பி முன்னுரையில் குறிப்பிட்டது போல் “நெல்லியடியில் மில் தொழிலகங்களை பெண்களே நிhவகித்து வந்தனர்”. பிற்காலங்களில் பெண்கள் பெற்ற கல்வியானது குடும்ப நிhவாகத்துக்கு முக்கியமானதாக இருந்தது. அத்துடன் சீட்டு பிடித்தல் போன்ற சில குடும்ப, வர்த்தக, பண முதலீடுகளுக்கு இந்த பெண்கள் கல்வி பயன்படுத்தப்பட்டது. இதுவும் ஓர் வகை பெண் ஒடுக்கு முறையே. காலத்துக்கு ஏற்ப ஒடுக்குமுழறையின் வடிவம் மாறுகின்றது.
உலகில் வாழும் தமிழ்ச் சமூகங்களில் இலங்கையில் மாத்திரமே ஆண் திருமணம் முடித்த பின்னர், பெண் வீட்டிற்கு வந்துவிடுவான். இதற்காக தாய் வழிசமூதாய எச்சசொச்சம் என கூறமுடியாது. சொத்துக்களில் பெண்களின் ஆதிக்கம் இருந்தது. ஆனாலும் ஆண்களே இதனை வழிநடத்தினர். இது சட்டமாகவும் உள்ளது. எனவே பெண்கள் வளர்சிக்கு சமூகமும், சட்டமும் முட்டுக்கட்டையாக உள்ளன.
சிவத்தம்பி தகுதியானவரா?
“யுhழ்ப்பாண சமூகத்தின் பிராதான கருத்து நிலையானது அந்தச் சமூகத்தின் அதிகாரபடி நிலைத்தன்மையை நியாயப்படுத்துவதாக அமைவது அவசியம். இங்கு சைவமும் தமிழும் என்ற கருத்து நிலை முக்கியத்துவம் பெறுகின்றது” என சிவத்தம்பி யாழ்ப்பாணம் – சமூகம் பண்பாடு கருத்து நிலை என்ற நூலில் தெரிவிக்கின்றார். உண்மையில் தமிழுடன் சைவத்தை மாத்திரமல் கிறிஸதவத்தையும் இணைத்துப் பார்க்கும் வழமைதான் இன்று நிலவுகின்றது. இதற்கு உதாரணம் பெண்கள் பாடசாலைகளில் பாடங்களாக வீட்டு விஞ்ஞானம், தையல் போன்றன போதிக்கப்பட்டன. இதனை பி;ன்னர் அனைத்து பாடசாலைகளும் பின்பற்றின. இவர் தொடர்ச்சியாக பெண் நிலை ஒடுக்குமுறைக்கும், சாதியத்துக்குமான காரணங்களாக “சைவமும் தமிழும்” என்ற கருத்தியல் கோட்பாடுகளை நிறுவுகின்றார். இந் நூலின் முன்னுரையில் “குடும்பத்தின் பொருளாதார அமைப்பில் பெண்களுக்கு முக்கிய இடமுண்டு என்றும், பால் நிலை காரணமாக ஆண்களுக்கு சில முதன்மைகள் உண்டு, ஆனாலும் பெண்கள் வாயில்லாப் ப+ச்சகளாக கருத்ப்படுவதில்லை” எனவும் சமாதானம் கூறுகின்றார். மேலும் ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ கல்விக்கு எதிராக குரல் கொடுத்தார். இது ஓர் தேசிய பண்பு என சிவத்தம்பி வாதிடுகின்றார். இவரது “ஈழத்து தமிழிலக்கிய தடம் 1980-200” என்ற நூலில் புலம் பெயர் எழுத்தாளர்களை அடையாளம் காணும் சிவத்தம்பி பெண் நிலை எழுத்துக்களை அடையாளம் காணவில்லை. உதிரிக் குறிப்புக்களாக சங்கரி பற்றி மட்டும் குறிப்பிடுகின்றார். சிவரமணி, செல்வி ஏற்படுத்திய அதிர்வுகளை இவர் தமிழிலக்கியமாக கருதவில்லை. 1980-2000 க்கும் இடைப்பட்ட கால பகுதியில் பல பெண் எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை பதித்துள்ளனர். இது கூட இவரது பார்வைக்கு எட்டவில்லை. சிவரமணி, செல்வி போன்றவர்களை கூட சிவத்தம்பி மறந்து விட்டார். பெண் ஒடுக்குமுறைக்கு சமாதானம் கூறும் சிவத்தம்பி, “சைவமும், தமிழும்” என நியாப்படுத்துகின்றார். மேற்கத்திய நாடுகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என தனது புதிய கண்டுபிடிப்பபை முன்வைக்கின்றார். இவரது முன்னுரை இந்த நூல் கூறும் கருத்தை மறுதலிக்கின்றது. உண்மையில் இந்த நூலுக்கு ஓர் பெண் ஆய்வாளரே முன்னுரை எழுதியிருக்க வேண்டும்.
சிவத்தம்பி உட்பட மரபு அறிவு ஜீவிகள் அனைவரும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களே. இது ஆறுமுகநாவலரது வழிவந்த மரபு அறிவு ஜீவிகளின் பண்பாகும். இந்து சிந்தனை மையம் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டு வந்துள்ளது. கோயில்களில் பெண்கள் எவரும் ப+சை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களை மையப்படுத்தியே சமயச் சடங்குகள் உள்ளன. மொழியும், மதமும் அடிமைத்தனத்தையும், சாதியுத்தையும் வளர்க்குமாயின் அப்படிப்பட்ட மொழி தேவை தானா என்ற கேள்வி எழுகின்றது.
கிறிஸ்தவர்கள் குறிப்பாக அமெரிக்க மிசன்கள் தமது பாடசாலைகளில் கல்வி கற்போர் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை கொண்டிருந்தன. இப்பொழுதும் யாழ் பரியோவான் கல்லூரியல் அதிபராக புரட்சன் கிறிஸ்தவர்களே வரமுடியும். கத்தோலிக்கர்கள், இந்துக்கள் அடுத்த நூற்றாணடில் கூட இக் கல்லூரியில் அதிபராக முடியாது. ஆனால் இங்கு கல்வி கற்பவர்கள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அதே நிலை இந்துக் கல்லூரிகளிலும் காணப்படுகின்றது. அரசாங்கப் பாடசாலைகள் தொடர்ந்து மதத்தின் பெயரைக் கொண்டு தொடர்ந்து இயங்குவது ஏன்? இலங்கை கல்வித்திட்டத்தில் மதம் ஒரு பாடம் மாத்திரமே. கிறிஸ்தவ மதத்தை பரப்ப இருவிடயத்தை ஆங்கிலேயர்கள் கையாண்டார்கள் 1. தமிழில் ஆராதனைகளை மேற்கொண்டது. 2. பேண்கள் கல்வி 3. ஒடுக்கபட்ட சமூகங்களுக்கு கல்வியறிவை வழங்கியமை. இந்துக் கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்ட பலருக்கு(சாதி காரணமாக) கிறிஸ்தவ பாடசாலைகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்த பின் இரண்டையும் நாவலர் எதிர்த்தார். நாவலர் சாதி வெறிபிடித்தவர். இவரது செயற்பாடுகள் இந்து மேலாதிக்க வாதிகளை சார்ந்தே இருந்தது. இதனை தமது ஆய்வில் குறமகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறமகளின் ஆய்வின் சிறப்பம்சங்கள் தரவுகளுடன் மாத்திரம் நின்று விடாது, சமூக பிண்ணணியையும், காரண காரியங்களையும் ஆய்வுக்குட்படுத்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் கல்லூரி அதிபர்கள், அவர்கள் ஆற்றிய பணிகளும் பதிவாக்கப்பட்டுள்ளன. தரவுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்படவில்லை. தரவுகள் பற்றிய சீரிய விமர்சனங்கள் முன்வைக்கபட்டுள்ள போதும், தரவுகளின் பிண்ணனி பற்றிய தெளிவின்மை ஆய்வுக் கட்டுரையின் முதற் கட்டமாகவே இந்த நூலை பார்க்க வேண்டியுள்ளது. இதற்காண காரணம் போர்ச்சூழல், ஆய்வாளரின் புலம் பெயர்வு என்பன உண்மையே.
உலக பெண்கள் அனைவரும் ஓரு மொழியையே பேசுகின்றனர் என ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலை வாசித்து முடித்த பின்னர் “நான் இந்த சமூதாய வழியில் வந்தவன்” என்ற நினைப்பு வெட்கத்தை கொடுக்கின்றது.
Simon de Beauvoir கூறிய கூற்று “பெண் பெண்ணாக பிறப்பதில்லை, அவள் உருவாக்கப்படுகின்றாள்”.
rathan@rogers.com
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’
- தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !
- கருணாகரன் கவிதைகள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்
- பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )
- பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )
- மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்
- சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )
- அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்
- திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை
- சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்
- குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்
- தாஜ்மகால்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6
- நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
- கதை சொல்லும் வேளை … 1
- பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008
- அஜீவன் இணைய தளம்
- நேசகுமாரும்…. நல்லடியாரும்….
- இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
- நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை
- வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்
- முக அழகிரி – பன்ச் பர்த்டே
- விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்
- திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008
- கவிதை
- யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்
- மந்திரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)
- மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்
- அந்தரங்கம்
- சிங்கப்பூர் – ஜுரோங் தீவு
- பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்
- வலியும் புன்னகைக்கும்
- குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
- Last Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை ?/ சீமானின் உரை
- தத்துவத்தின் ஊசலாட்டம்
- தீராக் கடன்
- மாற்று வழி
- சாம்பல் செடி