செல்வன்
‘யாருக்காக அறிவியல் ? ‘ என்ற கேள்வி நீண்ட நெடுங்காலமாக அறிவியல் உலகில் கேட்கப்பட்டு வந்தது.பல விதமான விடைகள் இருந்தன. ‘அறிவியல் என்பது மக்களுக்காக ‘ என்ற ஒரு வாதம் நீண்ட நாளாக இருந்து வந்தது.அதாவது மக்களுக்கு பிரயோஜனப்படும் ஆய்வுகளே அறிவியலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொன்னார்கள்.
ஒரு உதாரணம் பார்த்தோமென்றால் ‘புதன் கிரகத்தில் காலநிலை அளப்பு ‘ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.இன்னொரு ஆய்வு ‘கடல்நீரை சுத்திகரித்து நல்ல நீராக்குவது எப்படி ‘ என்று நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.மேலே சொன்ன வாதப்படி கடல்நீர் ஆய்வே சிறந்த ஆய்வு.மக்களுக்கு பயன் தரும் ஆய்வு.புதன் கிரகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன ?அது மோசமான ஆய்வு….
‘அறிவுக்காக அறிவியல் ‘ என்று இன்னொரு வாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இந்த வாதத்தின்படி ஆய்வாளர் விரும்பும் எத்துறையையும் ஆய்வு நடத்தலாம்.அதனால் என்ன பலன் என்றெல்லாம் கேட்கக்கூடாது.புளூட்டொ கிரகத்தின் நிலவை ஆராய விரும்பினால் கூட அதை செய்ய வேண்டும்.அதற்கு அரசு பணம் தர வேண்டும்.இதனால் என்ன பலன் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘அறிவியலுக்காகவே அறிவியல்,மக்களுக்காக அல்ல ‘….
அதாவது சுருக்கமாக சொன்னால் ‘எனக்கு பிடித்த தலைப்பில் நான் ஆய்வு நடத்துவேன்.மக்களுக்காக அல்ல ‘
இந்த இரு வாதங்களில் வென்றது எந்த வாதம் ?
சர்வ நிச்சயமாக இரண்டாம் வாதம் தான் சரி.வென்றது அதுதான்.மக்களுக்காக அல்ல அறிவியல்.அறிவியலுக்காகவே அறிவியல்.விஞ்ஞானியின் curiosityயை தணிக்கவே அறிவியல்.மக்களின் தாகம் போக்க அல்ல.
முதலாம் வாதம் தான் சரி என்று சொன்னால் உலகின் அனைத்து விஞ்ஞானிகளும் இன்று வேளாண் ஆய்வில் தான் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும்.அக்ரிகல்சுரல் எகானமிஸ்டுகளாக,விவசாய வேளாண் நீர் நிபுணர்களாகத்தான் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் இருக்க வேண்டும்.மாசேதுங் சீனாவில் செய்தது அதைத்தான்.
‘அங்கே கிராமத்தில் நிலத்தை உழ ஆள் கிடைக்காமல் விவசாயி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே என்னடாவென்றால் வெள்ளை கோட்டு போட்டுக்கொண்டு ஏர்கன்டிஷனிர் ரூமில் செவ்வாய் கிரகம் பற்றியா பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ?ஓடுங்கடா கிராமத்துக்கு.. ‘ என்று சொல்லி கலாச்சார புரட்சியை துவக்கினார் மாசேதுங்.விஞ்ஞானிகள்,கல்லூரி ஆசிரியர்கள்,சிந்தனையாளர்கள் அனைவரும் பார்சல் செய்யப்பட்டு கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன..விளைவு…சீன உற்பத்தி 1968 ‘ல் 12% குறைந்தது.
‘மக்களுக்காக அறிவியல் ‘ என்ற வாதத்தில் பிரச்சனை என்னவென்றால் மக்களுக்கு எது பிற்காலத்தில் பிரயோஜனப்படும் என்பது யாருக்கும் தெரியாது.மேட்ரிக்ஸ் அல்ஜீப்ரா கீபி இரண்டாம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால் கிபி 17ம் நூற்றாண்டு வரை அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.ஆனால் இப்போது புள்ளியியல் துறையின் அடிப்படையே மேட்ரிக்ஸ் அல்ஜீப்ரா தான்.அது இல்லாவிட்டால் இன்று முக்கால்வாசி துறைகளில் ஆய்வுகள் நடக்காது.
‘அணுவுக்குள் இருப்பது என்ன ‘ என்பது ஒரு காலத்தில் தேவையில்லாத ஆய்வு.கிரேக்கர் காலத்தில் இருந்து அந்த ஆய்வு நடந்து வந்தது. ‘அணு என்றால் என்ன ? ‘ என்பதை அறிந்து அக்கால மக்கள் பெற்றிருக்கக்கூடிய பலன் ஒன்றும் இல்லை.பலனற்ற ஆய்வு என்று அதை அப்போதே நிறுத்தியிருந்தால் இன்று இழப்பு மானிட சமூகத்துக்குத்தான்.
அன்றைய கிரேக்கர் அணுவை ஆராய காரணம் என்ன ?பழங்கால ரோமானியர் விண்ணை உற்றுநோக்க காரணம் என்ன ?வடதுருவம்,தென் துருவம்,எவெரெஸ்ட் என்று உயிரை பணயம் வைத்து விஞ்ஞானி போவதன் காரணம் என்ன ?…
To satisfy his intellectual curiosity.If that curiosity is dead the entire field of science is dead.Scientist seeks knolwedge because he loves knolwedge.
‘Science for the sake of Science,Research on mars for the sake of mars,research for the sake of curiosity, knolwedge for the sake of knolwedge, this is the foundation of scientific research… ‘
—-
holyox@gmail.com
- நவீன கலை இலக்கிய பரிமாற்றம்
- தி கிங் மேக்கர் : திரைப்படம்
- பெண்ணுடலை எழுதுதல்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -2 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “மங்கலான கதைச் சொல்லல்கள்” (எம்.ஜி . சுரேஷின் “37”)
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
- பாரதி தரிசனம்
- சாதனைகள் பலதைத் தனதாக்கிக் கொண்ட சைவமங்கையாின் நவரச மேளா
- சேரனிடம் யார் சொன்னார்கள் ?
- வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
- விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள்
- நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்
- கடிதம் (ஆங்கிலம்)
- காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள்
- அரைகுறை நிஜங்களின் ஊர்வலம்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்
- தமிழ் மையம் – மோஸார்ட் இந்தியாவைச் சந்திக்கிறார்
- லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி
- தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்
- ராகு கேது ரங்கசாமி – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வரி விளம்பரம்
- அந்த நான்கு பேருக்கும் நன்றி!
- ஈ.வே.ரா. சிறியார் அல்ல
- குழந்தைத் திருமணமும், வைதீகமும்
- பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM)
- (புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்
- நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்
- புலம் பெயர் வாழ்வு (5) – கென்டயினர் பயணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13
- பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (65) என்விழி மூலம் உன் படைப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சுடாக்கு
- வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.
- வலியின் மொழி
- கவிதைகள்
- Alzhemier- மறதி நோய்-1
- யாருக்காக அறிவியல் ?