கண்டணுர் சசிக்குமார்
கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய 20ம் ஆண்டு திருக்குறள் விழாவின் நிகழ்வின் பதிவுகள் உங்களுக்காக
திரு ஹரிகிருஷ்ணன் தலைமையேற்க குமாரி இந்திராணி ராஜா (துணை சபாநாயகர் மற்றும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நன்று.
முதலில் வரவேற்றுப்பேசிய திரு ஹரிகிருஷ்ணன் இந்தியர்களைப் பார்த்து பயங்கொள்ளலாகாது என சிங்கப்பபூரர்களை தைரியப்படுத்தியது போன்ற பேச்சு அருமை
பார்வையாளர்களின் பலத்த கரவோசையால் திருக்குறள் விழாவில் பேசிய சிறப்பு விருந்தினரின் பேச்சு அருமை எனத்தெரிந்தது ஆனால் என்போன்ற பலருக்கு புரிந்தது வணக்கமும் நன்றியும்தான்.
சிறப்புரை வரிசையில் அடுத்து டாக்டர் ஹிமானா சையத் இந்தியாவில் இருந்து வந்தாராம் வாங்கிய வரும்படிக்கு சற்று அதிகமாகவே சிங்கப்பூரர்களை புகழ்ந்து தள்ளியதோடு மட்டுமல்லாமல் முனைவர் திண்ணப்பன் அவர்களை அடிக்கடி புகழ்ந்து திருவள்ளுவர் விழாவையே மறக்கச் செய்தது.
அடுத்து சிறப்பு பேச்சாளர் பாண்டித்துரை. இவருக்குக் குடுத்த தலைப்பு திருக்குறள் விருந்து
� மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து�
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி (அவரும் சொன்னார்) விருந்தினர் வாடித்தான் சென்றனர். மானமுள்ள மறத்தமிழர்கள்.
மலேசியா சிங்கப்பூர் இலங்கை போன்ற இடங்களில்தான் தமிழ் வாழ்கிறதா���?
அப்படியென்றால் ஏன் ஒரு உதாரணம் கூடக் கூறவில்லை? யாரால் வாழ்கிறது? விழாவிலே கலந்துகொள்ளும் அதிகப்படியான நபர்கள் யார்? யார்? இந்தியாவில் இருந்து சிறப்புப் பேச்சாளர் வரவழைக்கப்படாத எந்த ஒரு விழாவும் சிறப்புற்றதாக சரித்திரமே இல்லை என்பதை உணர்வீர்களா�.?
தமிழை எவ்வாறு வாழவைக்கிறீர்கள் என்பதை நிகழ்ச்சியின் முன்பாக கொடுத்த குறள் ஓவியமே காட்டியது. அதில் இருந்த எமுத்துப்பிழையை தமிழ் ஆர்வலர்கள் திரு சத்திய மூர்த்தி திரு விசயபாரதி திரு கோ. இளங்கோ திரு அருண் திரு ரமேஷ் திரு நீதிப்பாண்டி திரு பிரவின் திருத்திக் கொடுத்தது தெரியுமா?
கிருபானந்த வாரியார் சொன்னதாக ஒரு கதையைச் சொன்னீர்கள் அவர் சொன்னது இருக்கட்டும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் (புதுசாய் பேசுங்கள் பாண்டித்துரை அவர்களே)
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
தீமை இல்லாத சொலல்.
இது திருவள்ளுவர் சொன்னது (அர்த்தம் தெரியுமா�?) தமிழகத்தில் மட்டும்தான் நட்சத்திர உணவுவிடுதிகள் உள்ளனவா? பாருக்குள்ளே நல்ல நாடு�..? சென்னையிலே கூல்டிரிங்ஸ் ரெஸ்டாரெண்டு என்று எழுதி இருப்பதாகச் சொன்னார். அந்த கடைகளை வைத்திருப்பவர்களும் வாடிக்கையாளர்களும் பட்டதாரிகள் அல்ல பாண்டித்துரை அவர்களே! சென்னையிலே தமிழில் பிழை எமுதியிருப்பதைக் கண்டித்தீர்கள். நீங்கள் பேசிய மேடையிலே தஞ்சோங் பகார் என்று எழுதி இருந்ததே கவனித்தீர்களா? சிங்கையிலே தேக்கா மால் கவனித்தீர்களா? புக்கிட் மேரா ரெட்கில் டோபி காட் எல்லாம் கவனித்தீரா? இவற்றிற் கெல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் இல்லையா? உங்களால் கண்டிக்கத்தான் முடியுமா ? இல்லை கண்டித்துவிட்டு திரும்பி உங்கள் நாட்டிற்க சென்று விட முடியுமா? தன்னை கேவலப்படுத்திப் பேசியவனைக் கை தட்டி ஊக்கப்படுத்தும் மனஊனமுற்றவர்கள் இருக்கும் வரை உங்களால் எதுவும் பேச முடியும்.
திருவள்ளுவர் விழாவிலே திருவள்ளுவரின் சிலை ஓர் மூலையிலே � கேட்பாரற்று….! உமக்குக் கூட மாலை போட்டார்கள் திருவள்ளுவர் சிலைக்கு ஓர் மாலை கூடப் போடவில்லை. நீங்கள் வாழவைக்கிறீர்களா? இதைக்கூட கண்டிக்கும் திராணியற்ற நீர் வாழவைக்கிறீர்களா?
தொட்டதெற்கெல்லாம் இந்தியனைக் கேவலப்படுத்திப் பேசும் உரிமையை யாரையா உமக்குக் கொடுத்தது
தொலைப்பேசியிலே கேள்விகேட்ட நோயாளிக்கு மருத்துவரின் தனித் தன்மை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படை கூட வழக்குரைஞருக்குத் தெரியாதோ�.?
பாவம் சற்று மதி மயங்கி விட்டீர்கள் போலும்.
எப்பொருள் யர்யார் வாய் கேட்டாரோ அப்பொருளை அப்படியே நெஞ்சில் நிருத்தி முறையான பயிற்சியினால் சரியான நேரத்தில் ஒப்பித்து முடித்தது அருமையானது பாராட்டத்தகுந்தது
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்� இதைபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக
இடிப்பவன்: கண்டணுர் சசிக்குமார்.
kandanursasikumar@yahoo.com
- 7 th FILCA International Film Festival
- காதல் நாற்பது (17) என்னிடத்தைத் தேர்ந்தெடு !
- தில்லியில் ஒரு நாடக விழா
- யாகாவராயினும் �நா�காக்க
- இலை போட்டாச்சு ! -25 – எலுமிச்சம்பழச் சாதம்
- தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு (22.01.1926 – 01.04.2007)
- காரைக்கால் அம்மையார் பின்தள்ளப் பெற்றதன் சூழலும் அதில் உள்ள ஆணாதிக்க அரசியலும்
- ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி
- தமிழரைத் தேடி – 1
- திருக்குறள் விழாவில் விளம்பரமோகம்
- இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய மேதை டாக்டர் அப்துல் கலாம் -3
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 15
- திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்து
- காந்தி-பெரியார் பற்றி அருணகிரி
- நண்பர் அருணகிரிக்கு அன்புடன் ஓர் மறுமொழி.
- ஒன்று என்றால் ஒன்றுதானா?
- கி.மு. – கி.பி.க்களின் கட்டுடைப்பு
- கடிதம்
- மடியில் நெருப்பு – 34
- நட்பா, காதலா
- ஒரு சொல்.. தேடி..
- புரியாத புதிர்
- பெரியபுராணம்- 129 44. கணநாத நாயனார் புராணம்.
- காலமும் காலமும்/ பாரதியார் சாலை
- வார்த்தைகளாய் மாறிய சூபியின் ரத்தம்
- அம்மாவுக்காக சில வரிகள்
- கண்ணீர் விட்டு வளர்த்த கதை!
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – காந்தி கிரியும்,கருத்துச் சுதந்திரமும்
- சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை..
- நாதஸ்வாமி
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8)
- மாத்தா ஹரி – அத்தியாயம் 6