முழுக்க விழுந்தபின்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

குசும்பன்


(வலைப்பூக்களில் நிகழ்ந்த, நிகழும் வாத, பிரதிவாதங்களை என் கண்ணோட்டத்தில் (அஃதாவது குசும்புடன்) யாரையும் குறிப்பிட்டோ அல்லது குத்துமதிப்பாகவோ புண்படுத்தாமல் சில பதிவுகளைச் செய்தேன். அவற்றுள் ஒன்றே இப்பதிவு. பிம்பங்களை வளர்ப்பதோ, கட்டுடைப்பதோ அல்லது இப்படி பல பெரிய வார்த்தைகளைக் காட்டி பயமுறுத்துவதோ நோக்கமில்லை. பெண்ணுரிமை/என்னுரிமை/சிற்றிலக்கிய மற்றும் சாதீய எதிர்ப்பு எ(போ)ன்ற பரப்புகளில் பரிச்சயமில்லை எமக்கு. படித்து, முடிந்தால் நகைத்து, பிடிக்காவிட்டால் முறைத்து விட்டு மறக்கவே இப்பதிவு.)

ஜெயலட்சுமியின் செவ்வியைப் http://www.vikatan.com/jv/2005/jun/26062005/jv0601.asp படிக்க நேர்ந்தது.

குவியப்படுத்தப்பட்ட வியாபார யுக்தியொன்று வீழ்ந்தபோது அது எனக்கு மிக ஆழமான வேதனையை, தவிப்பை, நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது; இத்தனைக்கும் அதுவும் தனிமனித வியாபாரத்தையும், வர்த்தக சுரண்டலையும் ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட எந்த ஒரு கொள்கையையும், மைக்ரோஸாப்ட் போன்ற ஒரு காழ்ப்புணர்வு அரசையும் போல வெட்கமின்றி, தயக்கமின்றி, கொடுங்கோன்மையுடன் நிறைவேற்றி வந்த ஒரு அமைப்புதான் என்று அறிந்திருந்த போதும் அவ்வேதனை இருக்கவே செய்தது. அதுபோல சமீப காலங்களில் ஜெயலட்சுமியின் வியாபாரப்பற்று, மேலாண்மை விரோத மனப்பான்மை, காவல்துறை மோகம் இவைகளின் (ஆமாம் இவைகள், அவைகள் தூய தமிழ்ப்பதங்களா ? பாரா ‘மல் போய்விடுங்கள்) தடங்களை அவரது பிற்காலத்திய ப(து)டைப்புகளில் இருந்து உருவியெடுக்க( ?) முடி ‘ந்திருந்தும் அவரது இன்றைய வீழ்ச்சி அடைந்த தோற்றம் பரிதாபம் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அவரது இந்தச் செவ்வி அதன் உச்சம். இவ்வளவு கோமாளித்தனமாக அவரே இன்னொரு முறை செவ்வி கொடுக்க ஏலாது.

வெற்று சமாளிப்புகள், எந்தத்தரவுகளும் இன்றி சொல்லமுடியாத அங்க(த)ங்கள், பாமரத்தனமான ஒப்பீட்டின் கீழ் உண்டாக்கும் எங்கேயோ இள(ங்)கியகோவனுக்குண்டான கிசுகிசு மூட்டல்கள், பொய்யான சவடால்கள், அற்பத்தனமான தீர்மானங்கள், இவைதான் அவரது செவ்வி.

சபலிஸ்ட், பேராசைலிஸ்ட் இவர்கள்தாம் MLM ‘மை (Multi-Level Marketing) கடவுள் என்கிறார். இது போன்ற ஒப்பீடுகளை செரீனா (கஞ்சா அழகி), மற்றும் தனுஜா, சுகன்யா போன்ற நடிப்புலக செம்மல்களின் செவ்விகளிலோ, மாளவிகா போன்ற திறந்தோய்ந்த மாய்மால திரைப்படங்களிலேயோ மட்டும் தான்( ?) காணமுடியும். கடவுள் என்ற கருத்தாக்கம் தனி

நபரின் (ர.ராம்கி மன்னிக்க) தலைவீக விழைவில், நிறுவனப்படுத்தப்பட்ட நடிப்பின் அரசியலில் எந்த இடங்களை ஆக்கிரமிக்கிறது, அது தனிமனிதனிடத்தில், சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன இவைகளை மேலே குறிப்பிட்டவர் அறியமாட்டார்கள்; ஆனால் ஜெயலட்சுமி அறிவார். ஆனாலும் பின்னர் நக்கீரன் இதழில் குறிப்பிட்டபடி இந்த கேவலமான பொய்மை கலந்த, கைத்தட்டலை நேசிக்கும் முன்வைக்குமளவுக்கு நேர்மை குன்றியவராக ஆகிப்போயிருக்கிறார். பாமர(ரை)க்கனி ஒருமுறை சொல்வார், ‘நான் யாருக்கும் மூடியில்லை. திறந்திருப்பவர்க்கும் கூட. இன்னும் சொல்வதானால் ஆணழகனும், இன்பத்தில் தமிழனுமான பெரியபிள்ளையானுமோன அப்படி ஒரு பிள்ளை இல்லையே என்றே நான் வருந்துகிறேன். என்னுடைய உழைப்பாலும், சக்தியாலும் அப்படியொரு பிள்ளையை உண்டாக்க முடியுமானால் அதற்காக நான் உழைக்கத் தயங்கமாட்டேன் ‘ என்று.

என் மார்க்கெட்டிங்கையே நேசிப்பதும், என்னுடைய கஸ்டமர்களையே நேசிப்பதும் மானுட இயல்பானதாக இல்லையே, அது இயந்திரத்தனமாகவல்லவா இருக்கிறது என்கிறார். அப்படி நேசிப்பவர்களாக தமிழர்களை (குறிப்பாக மதுரையையும், மதுரையை சுற்றியும்), மார்க்கெட்டிங்யுரிமை குறித்து பேசுபவர்களை குறை சொல்கிறார். ஆனால் நேர்மையுடன் சொல்வதானால் ஒரு வியாபார யுக்தியை (ஜெயலட்சுமியியத்தை) வேறு வியாபாரிகள் விற்றுவிடக்கூடாதென்பதை தீவிரமாகக் கைக்கொண்டதினால் அந்த யுக்தியையே அழித்தவர்களையும், வேறு யுக்திகளை குறிப்பாக ஜெயலட்சுமியியத்தை பேசுவது தீண்டத்தகாதது என்பதாக தீவிரமாக நம்பி ஒழுகி வந்த இளங்கோக்களுக்கும்தான் இவர் இந்த அறிவுரையைச் சொல்லவேண்டும். தமிழர்கள் ஏற்கெனவே சொரணை அற்றவர்கள். மரியாதை தெரியா(இல்லா)தவர்கள், மற்ற (ஆங்கில, வாந்தி, சமஸ்கிருத) மொழியறிவை ஞானபீடத்தின் (நீ வாடா வா) குறி ‘யீட்டாகக்கருதி, அம்மொழி பேசுபவர்களை பேரறிஞர்களாகக் கருதும் அளவுக்கு மனம் நோய்மை அடைந்தவர்கள். இவர்களிடம் போய் தமது மார் ‘கட்டிங்கையே நேசிக்கும் மிருக உணர்ச்சி கொண்டவர்கள் என்று சொல்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீத நோக்கம் கொண்டதுமாகும்.

கணேசன் என்றொரு சிவகங்கைக்கு அருகிலுள்ள சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவன். கணேசன் நிறுவனப்படுத்தப்பட்ட வணிகவியலைப்பற்றி பேசும்போது பாடமொழி மட்டுமல்ல, பள்ளிக்கழிவறைகட்டிடங்கள் கூட வாஸ்து முறைப்படியே கட்டப்பட்டிருக்கவேண்டுமல்லாது, அவு(ஸ்)த்தேரிலியா முறைப்படி க(ா)ட்டப்பட்டிருக்கக்கூடாதென வலியுறுத்துவான். அன்றைய அரசையும், தமிழர்களையும் குறித்துப்பேசும் போது தமிழின் மீது நம்பிக்கைஇல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு இசைவு, களிபாடு, வசை, வலை, கலவி இப்படி எல்லாத் துறைகளிலும் இணையத்தமிழே தமிழ் நாட்டில் முதன்மையாக இருக்கவேண்டும் என்று சீறியும் சினந்தும் சொல்வான்.

ஜெயலட்சுமி கா( ?)நேசனின் அம்மிருகத்தனமான உணர்ச்சி குறித்து என்ன நினைப்பாரோ ? இல்லை தமிழின் இழிநிலை, தமிழர்களின் மனப்பான்மை மாறிவிட்டதா ? அதுவும் மேலாண்மை தளத்தில் வியாபாரத்தை திணிக்க, அதன்மூலம் தனது தன்னை மேன்மைப்படுத்திக்காட்டிக்கொல்ல, வருட, வருடிப் படுக்கும் ‘முனைவர் ‘ காலடியில் கிடந்தும், பொலீஸ் தளத்தில் சபலத்தை தி(த)ணித்து, தனது பெண்ணீயத்தை வைத்து ஒரு காலனி மனப்பான்மையை வளர்க்கவும், பண அடையாளத்தை அழிப்பதன் மூலம் அடுத்தவர் வளங்களை சுரண்டவும் முனைவரின் தோளோடு தோள் நின்றும் ஜெயலட்சுமி மற்றவரை நேசிக்கும் மனித குணத்தை மேடையேறி தமிழர்களுக்கு போதிக்கிறார். இது சூழ்ச்சியன்றி வேறென்ன ?

தமிழர்களின் சான்றாக, கணேசனின் சார்பாக இப்போரை, வணிகத்தின் பாதுகாவலர்களை அவர் குற்றம் சொல்ல, கண்டிக்க, அவர்கள் நோக்கம், வழிமுறைகளில் இருக்கும் தவறை சுட்டிக்காட்ட அவருக்கு நியாயமான எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர் தம்மீதுள்ள நம்பிக்கையின்பால் உள்ள பேரன்பினாலும், சான்றாண்மையாலும், இக்கேடுகெட்ட மக்களின் எதிர்காலம் கருதும் முன்னோக்காலும், கெட்டிப்படுத்தப்பட்ட வியாபார யுக்தியின் முன்னோக்காலும், இளங்கோ ‘வழிப்பை முன்னெடுக்கும் சதிகாரர்களின் வழிமுறைகளை உணர்ந்துகொள்கிற சாதூர்யத்தாலும் இன்னும் சரியான, முறையான, எளிதான, அழகான வழிகளில் எப்படி மார்க்கட்டிங்கை காப்பாற்றுவது என்பதை சொல்லியிருந்தால், அதை முன்னெடுத்து உழைத்திருந்தால் அவருக்கு இன்றைய MLM ‘மை பேசுபவர்களை விமர்சிக்கும் தகுதி தன்னால் வாய்த்திருக்கும். நாமும் அவரையும் அவரது கண்டனங்களையும் கணேசனின் கண்டனங்களை எப்படி புரிந்துகொள்கிறோமோ அப்படி மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.

ஆனால் ஜெயலட்சுமி எதிரிகளின் பக்கமிருந்து கொண்டு குறைவான ஆயுதங்களோடும், ஆட்படைகளோடும் போராடுகின்றார். எள்ளி நகையாடுகிறார். அவர்களிடம் இருக்கும் போலித்தனங்களை சுட்டிக்காட்டி அந்நோக்கங்களின் நியாயங்களையும் எதிரிகளின் வழிமுறைப்படியே கேலிசெய்கிறார். அதற்காக அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், தனது சாதுர்யத்தையும் பயன்படுத்துகிறார். இந்தக் கயமையே அவர் மீது அருவருக்கத்தக்க உணர்வை ஏற்படுத்துகிறது. மற்ற வழிகளை வளர்த்தெடுத்தால் மார்க்கெட்டிங் வளரும் என்கிறார்; அது சரிதான். ஆனால் அதற்கும் முறையிருக்கிறது. நிச்சயம் ஜெயலட்சுமி செய்வதும் சொல்வதும் அம்முறைகளின் பாற்பட்டதல்ல. அதுவும் இன்றைய நிலையில்.

அவர் மார்க்கெட்டிங் பற்றி, யுக்தியைப் பற்றி அவர் சொல்கிற கருத்துக்கள் தேர்ந்தெடுத்த கயமைத்தனமானவைகள். மார்க்கெட்டிங், ஏஜண்ட் ஏமாற்றுவதால் வாழ்வதில்லையாம், இவர்

போன்றவர்கள் மார்க்கெட்டினால்தான் வாழ்கிறதாம். எவ்வளவு கயமைத்தனம் நிறைந்த தற்பெருமை ? MLM ‘ல் இல்லாத வியாபார விற்பன்னர்களா ? பொருட்களா ? இல்லையில்லை வஸ்துக்களா ? அப்படி இருந்தும் ஏன் அழிந்தது (என நான் நினைக்கின்றேன்) ? அது மக்களிடமிருந்து, அவர்கள் வாழ்வுக்கு தேவையானது என்ற இடத்தில் இருந்து விலகியதால் தான். இது ஜெயலட்சுமிக்குக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள் ?

MLM ‘பற்றி அவர் சொல்வது அவரது மார்க்கெட்டிங் வெறியைத் தெளிவாகக் காட்டுகிறது. ‘பொதுவாக அது ஒரு நல்ல திட்டம்னாலும், இப்ப நெறைய பேர் மக்களை ஏமாத்ததான் பெரும்பாலும் பயன்படுத்துறாங்க. பெரிய பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் நடத்துற இந்தத் திட்டத்துல கடுமையான உழைப்புக்கு அஞ்சாதவங்களும், ஆர்வம் உள்ளவங்களும் சேர்ந்தாத்தான் லாபம் பாக்க முடியும் ‘ என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்.

அப்போது கணேசனின் ‘‘‘என்னைப்போல இன்னும் நிறைய பேர் எம்.எல்.எம். பிஸினஸ்ல மாட்டிக்கிட்டு வெளியில வரமுடியாம நிக்கிறாங்க. ஆசைவார்த்தைக்கு மயங்கி இதுக்குள்ள தலைக்குடுத்து, இப்ப சொத்தையும் வாழ்க்கையையும் சேத்து தொலைச்சுட்டு நிக்குறேன். இந்த வியாபாரத்துல பெண்கள் பலபேர் ஈடுபட்டுருக்காங்க. அவங்கள்ல பலபேர் தவறான பாதைக்கு தள்ளப்படுற கொடுமையையும் நான் பாத்துருக்கேன். அதுக்கு உதாரணம் சிவகாசி ஜெயலட்சுமி. ‘ என்று கணேசனுக்குத்தான் MLM இல்லை என்று சொல்லி புடம் போட்ட வியாபார சூழ்ச்சியுடன் முறையற்ற உவமைகள், மேற்கோள்களுடன் ஜல்லியடிக்கிறார்.

இது கணேசன் ‘எதிர்காலத்துல எதையாவது சாதிக்கணும்னு நெனைக்கிற என்போன்ற இளைஞர்கள இப்படி மூளைச்சலவை பண்ணி சாகடிச்சுக்கிட்டிருக்காங்க. கிட்டத்தட்ட இதுவும் ஒரு வழிப்பறி மாதிரிதான். என்னை மாதிரி யாரும் மாட்டிக்கக் கூடாது’’ என்ற ‘ஓடுமுறைப்போராட்டத்தின் ‘ மூலமாகத்தான் முறியடிக்க முடியுமென்றால் அப்படித்தான் செய்யவேண்டும் என்று சொன்னதை வசதியாக மறந்துவிடும் கயமைத்தனம். திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். அதற்கு கணேசனையும் துணைக்கழைத்துக்கொள்ளும் வஞ்சகம்.

அடுத்தது அவர் சொன்னதில் கண்டிக்கத்தக்கதும், அவரது உண்மை முகத்தை உரித்துக்காட்டுவதும் அவர் குறிப்பிட்ட, ‘இதுல நாம நமக்கு கீழே ‘சேத்து விடுறவங்களுக்கு ‘ நாமதான் ஜாமீன் போட்ட மாதிரி. அவுங்க நம்மளைவிட பயங்கரமா வேலை பார்க்கணும். அப்படி அமையுறது ரொம்ப கஷ்டமான விஷயம். நாம எவ்வளவுதான் கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு ஆள் சேத்தாலும், நீங்க சேத்து விட்ட ஆளுங்க சரியில்லாததால்தான் கமிஷனே கிடைக்க மாட்டேங்குதுனு அசால்ட்டா சொல்லிருவாங்க. நாம யாரையும் போய் நோக முடியாது ‘ ஏன் ‘கீழே சேத்து விடுறவங்களுக்கு ‘ எதிராக இருக்கிறது ? ஏன் கணேசன், இளங்கோ, இன்னபிற கா(ஏ)வளார்கெலாம் MLM ‘களுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றால் ஜெயலட்சுமி இப்படி பேசுவது உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்காது.

வியாபாரத் திரிபுடைய மாந்தருக்குத்தான், ‘கொஞ்சம் அசந்தாகூட கடல்ல போட்ட பெருங்காயம் மாதிரி காசு காணாமப் போயிடும். அந்தச் சாமர்த்தியம் இல்லாம இந்தத் திட்டத்துல சேர்ந்தா, நம்மளுக்கு நாமே நாமம் போட்டுக்குறோம்னு அர்த்தம் ‘, கொஞ்சம் அசந்தாகூட கடல்ல போட்ட பெருங்காயம் மாதிரி காசு காணாமப் போயிடும். அந்தச் சாமர்த்தியம் இல்லாம இந்தத் திட்டத்துல சேர்ந்தா, நம்மளுக்கு நாமே நாமம் போட்டுக்குறோம்னு அர்த்தம் பொருத்தமானதாம், மற்றவர்களுக்கு இல்லையாம் (இதைச் சொல்லும் போது அவர் செவ்வியில் இருந்த சீற்றத்தை, வெறுப்பை கவனிக்கிறேன்; கிடைத்த ஆஹாகாரத்தை எண்ணிப் பார்க்கின்றேன்).

இப்போது இந்தியா என்பது அரசியல் கருத்தா(கர்த்தா கூட இல்லை சாமியோவ்!), ஆன்மீக வடிவமா, நிலப்பரப்பா என்று எதன் அடிப்படையிலும் அணுகாமல் வியாபாரத் திரிபுடைய மாந்தர்களின் பால் கொண்ட வெறுப்பை மட்டும் காட்டும் பேரினவாத மனப்பான்மையோடு அணுகும் தன்மையையே காட்டுகிறார்.

எனக்கு டெல்லி CBI ‘யை விட சேதுசமுத்திர நீரிணைப்பை கடந்து வாழும் தமிழர்கள் தான் பக்கத்தில் இருக்கிறார்கள். அந்த ‘மானை விட இவர்கள் எனக்கு அருகில் இருக்கிறார்கள். இந்த நாடென்ற அரசியல் அமைப்பை விட அதிக நூற்றாண்டுகள் தொடர்புடையோராய் இருக்கிறார்கள்.

பசுதேவ குடும்பகம் பால்கறக்காதது போல இவரது ‘பகைவனை போட்டுத் தாக்காய் கூட ‘ இப்போது கடைச்சந்திக்கு வரவில்லை. சுடுபவர் எல்லாம் பகைவனாய் இருந்தாலும் அருளவேண்டும் என்று கனிந்த உள்ளம் தமிழனுக்கு மட்டும் ஏன் சுருங்க மறுக்கின்றது ? MLM ‘ல் நாம் படும் பாட்டை, ‘அதாவது முப்பது பேர் சம்பாதிக்க கிட்டத்தட்ட இருபதாயிரம் பேர் இழக்கிறார்கள். தடை செய்யப்பட்ட லாட்டரி வேறு வடிவத்தில் பிஸினஸ் போர்வை போர்த்திக் கொண்டு வந்திருக்கிறது. ஆண்கள் இழந்தால், குடும்பம் தெருவுக்கு வருகிறது. பெண்கள் இழந்தால், ஜெயலட்சுமிகள் ஆகிவிடுகிறார்கள் ‘,என்று குறை(ரை)த்ததெங்கே ? மற்றபடி அவர் செவ்வியெல்லாம் அபத்தம் என்று ஒதுக்கமுடியாது. அதை தமிழர்கள்(!) என்று நவிலும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவர் நமது எதிரிகளின் குரலை மிகத்தெளிவாக, வெளிப்படையாக பேசுகிறார். நாம் எதிரிகளை நேசிக்கவேண்டும்; அதனினும் அதிகமாக அவர்களது செவ்விகளை.

மற்றபடி ஜெயலட்சுமியின் செவ்வியோடு நான் உடன்படுகிறேன். அவர் புறக்கணிக்கப் படவேண்டியவர் தான். அவருக்கு கிடைக்கும் கண்டனத்தைக்கூட தனது வியாபாரத்துக்கு பயன்

படுத்திக்கொள்வதில் அவரும் அவரது அடிப்பொடிகளும் வல்லவர்களே என்பதும் உண்மைதான். ஆனால் அவருக்கு பின்னுள்ள சக்திகள், அவர்களது நோக்கங்கள், அவர்களது

வழிமுறைகள் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. ஒரு ‘சே ‘ சங்கரை எப்படி புரிந்துகொள்கிறோமோ, எப்படி எதிர்கொள்கிறோமோ அப்படியே அணுகப்பட மட்டுமே ஜெயலட்சுமியும்

தகுதி படைத்தவராகிறார்.

நன்றியறிவித்தல் (acknowledgement):

செவ்வியை தனது தளத்தில் கொடுத்து ஏ(கே)னையோர் படிப்பதற்கு வழிஏற்படுத்தியமைக்காக ஜூ. விகடனார் அவர்களுக்கு நன்றிகள்.

குசும்பன் என்னா சொல்றேன்னா மத்த வேலைவெட்டிகளை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு நம்ம வலைப்பூக்கள் பக்கம் ஒரு Ego Trip அடிங்க!!! நான் சொ(கொ)ல்வது புரியும். விளம்பரம் அல்லது சுய-தம்பட்டம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்… இதோ நம்மளோட வலைப்பூ:

http://kusumban.blogspot.com/

podankho@gmail.com

Series Navigation

குசும்பன்

குசும்பன்