முட்டை பஜ்ஜி

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue


முட்டை –10

கடலை மாவு –150கிராம்

அரிசிமாவு –25கிராம்

காரத்தூள் –2டாஸ்பூன்

சீரகத்தூள் –1/2டாஸ்பூன்

பஜ்ஜிகலர் –தேவையானஅளவு

சோடா உப்பு –2சிட்டிகை

பொரிப்பதற்கு –எண்ணெய்

முட்டைகளை வேக வைத்து, ஓட்டினை உரித்துக் கொள்ளவும்.

அகலப் பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, காரத்தூள், சீரகத்தூள், பஜ்ஜிகலர், சோடாஉப்பு, தேவையான அளவு உப்புத்தூள், திட்டமாக நீர்விட்டு பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

முட்டைகளை நீளமாக இரண்டிரண்டாக நறுக்கவும். மொத்தம் இருபது முட்டைத் துண்டுகளாக தயார் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய வைக்கவும்.

ஒவ்வொரு முட்டைத் துண்டையும் மாவுக்கரைசலில் தோய்த்து எடுத்து (இப்படி செய்யும் பொழுது, மஞ்சள் கரு வெளியே வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளவும்.) எண்ணெயில் போட்டு இருபுறங்களும் வெந்து சிவந்ததும் எடுக்கவும்.

அசைவப் பிரியர்கள் மாலை நேரங்களில் உருளைக்கிழங்கு, வெங்காய, வாழைக்காய் பஜ்ஜிகளுக்குப் பதிலாக இப்படி முட்டை பஜ்ஜி தயாரித்து உண்ணலாம்.

Series Navigation