முட்டை சீஸ் பரோட்டா

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue


முட்டை –4

சீஸ் –50கிராம்

மைதாமாவு –300கிராம்

நெய் –50கிராம்

கொத்துமல்லி, புதினாத்தழை –1/2கப் பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் –3

மிளகாய்த்தூள் –1டாஸ்பூன்

மிளகுத்தூள் –1/2டாஸ்பூன்

மாவுடன் திட்டமாக உப்புத்தூள், நெய், நீர் சேர்த்து மிகமிருதுவாகப் பிசைந்து மெல்லிய ஈரத்துணியால் மூடி இரண்டு மணிநேரம் ஊற வைத்து விடவும்.

சீஸைத் துருவிக் கொள்ளவும்.

முட்டைகளை உடைத்து ஊற்றி உப்புத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு நுரை வர அடிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், புதினா, கொத்துமல்லித் தழை கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு, முட்டைக் கலவையை ஊற்றி நன்கு வதக்கி, பூப்பூவாக உதிர்ந்ததும் இறக்கவும்.

மாவை எடுத்து உருண்டைகளாக்கி பூரி போல் தேய்த்துவைக்கவும்.

ஒரு பூரியை எடுத்து அதன்மேல் முட்டைப் பொடிமாஸ்உம், சீஸ்துருவலும் பரவலாக வைத்து, அதன்மேல் இன்னொரு பூரியை வைத்து மூடி மறுபடியும் கவனமாகத் தேய்த்துவிடவும்.

தோசைக்கல்லில் 3டாஸ்பூன் எண்ணெய் விட்டு தயார் செய்து வைத்திருக்கும் பரோட்டா வட்டத்தைப் போட்டு சிவக்க வேக வைத்து, மறுபுறம் திருப்பிப் போட்டு, அந்தப் புறமும் சிவக்கவெந்ததும் எடுக்கவும்.

சூடாக இருக்கும்பொழுதே ஒவ்வொரு பரோட்டாவின் மீதும் ஒரு டாஸ்பூன் வெண்ணெய் தடவிப் பரிமாறவும்.

Series Navigation