மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

சோலை.தியாகராஜன்


ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் ( கும்பாபிஷேகம் )

மியம்மார் (பர்மா)நாட்டின் வர்த்தகத் தலைநகராகிய யாங்கோன் மாநில மைய நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னத் தமிழகம் என்று போற்றப்பெறும் திருக்கம்பை மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள

ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் (கும்பாபிஷேகம் ) நேற்று 27-1-2010 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ உ.வே.பத்மஸ்ரீ அலங்கார பூஷகர் (ப்ரதான பட்டாச்சாரியார் )மற்றும் திரு.S.வெங்கட கிருஷ்ண பட்டாச்சாரியார் உள்ளிட்ட ஏழு பட்டாச்சாரியார்கள் 22.1.2010-ம் நாள் தொடங்கி விசேஷ யாக பூஜைகள் தினமும் சிறப்பாக நடத்தி, விக்கிரக பிரதிஷ்டைகள் செய்து நேற்று காலை ராஜ கோபுரத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கண்டனர்.
நேற்று மாலை திருத்தேர் உலாவும் நடைபெற்றது..
பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தி உணர்வுடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போது இரங்கூன் முனிசிபல் காண்டிராக்ட் தொழிலதிபர் திரு.வேங்கடசாமி நாயகர் 1904-ம் ஆண்டு தமிழக ஸ்தபதிகளைக் கொண்டு இக்கோயிலை எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினார்.
சைவ – வைணவத் தலங்கள் நிறைந்தும் திருத்தேர்கள் உலாக் காண்பதால் இவ்வூரை திருக்கம்பை என தமிழறிஞர் கி.வா.ஜ அவர்கள் தமது வருகையின் போது கவிபாடினார்.
மியம்மார் நாட்டின் மிகப்பெரிய தேவஸ்தானக் கும்பாபிஷேகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியும் படங்களுடன்,
என்றும் அன்புடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar.
009598022897

Series Navigation

சோலை.தியாகராஜன்

சோலை.தியாகராஜன்