மாஹ்ஷே

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

அராபியப்பலகாரம்


தேவையான பொருட்கள்

4 உருண்ட உருளைக்கிழங்குகள்

4 நடுத்தர குடை மிளகாய்கள்

4 சிறிய கத்தரிக்காய்கள்

4 பெரிய தக்காளிகள்

நிரப்புவதற்கு

1 1/2 கோப்பை ஊறவைத்த அரிசி

1 கோப்பை வேகவைத்து தூளாக்கிய கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி (போடாமலும் செய்யலாம்)

1 நடுத்தர அளவு வெங்காயம் நறுக்கியது

1/2 கோப்பை சோயா இலைகள் (அல்லது கீரை வகை)

1/2 கோப்பை கொத்தமல்லி

3 மேஜைக்கரண்டி எண்ணெய்

1 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்

2 சிவப்பு மிளகாய்கள்

1 தேக்கரண்டி பட்டைத்தூள்

1/2 தேக்கரண்டி உப்பு ருசிக்கு தகுந்தாற்போல

1 பழுத்த தக்காளி தூளாக நறுக்கியது

செய்முறை

நிரப்புவது: ஒரு பாத்திரத்தில் அரிசியையும், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, கீரை, கொத்தமல்லி, (கறி இருந்தால் வேகவைத்து தூளாக்கிய கறி) எண்ணெய், உப்பு, பட்டைத்தூள், மிளகுத்தூள் போடவும். உருளைக்கிழங்குகளைச் சீவி, சின்னச்சின்ன சதுரங்களாக இதில் போடவும்.

இப்போது இந்த காய்கறி, அரிசிக்கலவையை வேகவைக்க, காய்கறி ஸ்டாக் அல்லது கோழிக்கறி ஸ்டாக் ஒரு கோப்பையும், ஒரு கோப்பை சுடுநீரும், ஒரு மேஜைக்கரண்டி எண்ணெயும் ஊற்றி வேகவைக்கவும்.

கத்தரிக்காய்களின் தோலையும் அத்துடன் சற்று சதையையும் விட்டுவிட்டு, உள்ளே இருக்கும் சதையை எடுத்து விடவும். இதே போல தக்காளிகளையும் செய்யவும். குடை மிளகாயின் காம்புடன் தலையை வெட்டி உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.

அரிசிக்கலவை வெந்ததும், அதனை சற்று எடுத்து சிறிய கத்தரிக்காய்களின் உள்ளே வைத்து, அந்த கத்தரிக்காயை நடுத்தர தக்காளிகள் உள்ளே வைத்து அதனை எடுத்து குடை மிளகாய் உள்ளே வைத்கவும். இது போன்று எல்லாவற்றையும் பண்ணவும். மீதமுள்ள சாதத்தோடு, இந்த காய்களையும் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

எல்லாம் நன்றாக வெந்ததும், மூடியை எடுத்துவிட்டு, அரிசிசாதத்தோடு, இந்த காய்களையும் வைத்துப் பரிமாறவும்.

Series Navigation

அராபியப்பலகாரம்

அராபியப்பலகாரம்