மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

கோட்டை பிரபு


சீனப்புத்தாண்டையும் சிறப்பித்து 81வது கடற்கரைச்சாலை மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு 18.02.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள கிழக்கு கடற்கரைச் ப+ங்காவில் நடைபெற்ற நிகழ்வின் பகிர்வு உங்களுடன்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு-குறள்
என்ற மாதானுபங்கியின் வார்த்தைகளுக்குப் பணிந்து இச்சிறு கட்டுரையைத் தொடர்கிறேன்.

இரைட்டைக்கவிஞர்கள் ந.வீ.சத்தியமூர்த்தி ந.வீ.விசயபாரதி இவர்களின் அன்பான வரவேற்போடு இனிதே துவங்கியது கடற்கரைச் சாலை கவிமாலைக் கவிஞர்கள் மற்றும் குடும்பத்தினரின் சந்திப்பு.

கடலின் ஈரக்காற்று இதயத்தைத் தொட புல் தரையின் இதமான ஸ்பரிசம் உடலைத்தொட நிகழ்ச்சியின் மொத்த அங்கத்தினராக 52 பேர் குழுமியிருக்க நிகழ்வு தொடர்ந்தது.

முதலில் அனைவரின் அறிமுக நிகழ்ச்சியும் பின்னர் கவிமாமணி மா.அன்பழகன் அவர்கள் தமிழ் அறிஞர் முனைவர் ரா.பி.சேதுப்பிள்ளை பற்றி ஒரு முழுமையான உரை நிகழ்தினார். நிறைய செய்திகளை உள்ளடங்கிய பயனுள்ள உரையாக அமைந்தது

தொடர்ந்;து இலக்கிய விவாதம் நடைப்பெற்றது. அதில் கவிதை என்பது என்ன என்று துவங்கி தற்கால வளர்ச்சி போக்கு ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டது. அவ்வேளையில் கவிஞர்கள் அமீன் கண்டனூர் சசிக்குமார் பனசை நடராஜன் செல்வக்குமார் ஆகிய இளம் கவிஞர்கள் எடுப்பான பல சந்தேகங்களை மிகவும் துடிப்பாகவும் தெளிவாகவும் தெளிவுபடுத்தினார் ஆசியான் கவிஞர் க.து.மு இக்பால் அவர்கள்.

விவாதத்தின் ஒரு குறிப்பான கட்டத்தில் கவிஞர்கள் மற்றவரை திருப்திபடுத்தவோ பிறர் பாராட்டுதலுக்காகவா எழுத்துப்பயணத்தில் எதிர் பார்க்க வேண்டாம் என்பதை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பிச்சனி காட்டு இளங்கோ அவர்கள் மிக நயமாக எடுத்துரைத்தார்.

அடுத்த அங்கமாக உணவருந்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் கவிதாயினிகள் கலையரசி செந்தில் குமார் திலகவதி அன்பழகன் மலர்விழி இளங்கோவன் ஆகியோரின் அபரிதமான உபயத்திலும் கவிஞர் சேவகன் திருமதி பூங்கொடி சேவகன் இருவரின் அன்பான பரிமாறுதலாலும் அறுசுவை உணவே அமிர்தமாகப் அருந்தியபடி அனைவரும் மனம் நிறைவு பெற்றது என்றால் அது மிகையாகாது.

சிறிய இடைவேளையைத் தொடர்ந்து �விலகு� எனும் தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெற்றது. அதில் கவிஞர்கள் சா.வீரையா அசோகன் சேவகன் அகரம் அமுதா நான் உள்ளிட்ட பல கவிஞர்கள் கவிதை வாசித்தோம். இந்நிகழவில் வழக்கத்திற்கு மாறாக முடிவுகள் கவி இரசிகர்களிடம் வெளிப்படையான பரிந்துரையின் படி பரிசுக் கவிதைகள் தேர்தெடுக்கபட்டன.

தொடர்ந்து கவிப்போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்கள் அகரம் அமுதா திருமுருகன் இன்பா கோவிந்தராஜ் மலர்விழி இளங்கோவன் ஆகியோருக்கு ஆசியான் கவிஞர் இக்பால் கவிஞர் செவ்வியன் பரிசளித்தனர்

அடுத்தாற்போல் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த கவிஞர் செவ்வியன் அவர்கள் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் � என் வாழ்வில் இன்றைய நாள் மிக முக்கியமான நாள்� முழுக்க முழுக்க கவிஞர்களும் அவர்தம் குடும்பத்தாரும் இணைந்திருக்கும் இந்நாள் மகிழ்ச்சிக்குரிய பயனள்ள நாளாக அமைந்தது. மேலும் நல்ல இலக்கியத்திற்கு உணர்ச்சி முக்கிய வடிவம் அவ்வகையில் இருப்பினும் கவலை வேண்டாம் என்றும் சமூகப்பயஉணர்வு அதிகரிக்கும் போது ஒழுக்கம் தானாக வளர்ந்துவிடுகிறது என்ற நற்கருத்தையும் கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து கவிபாடிய இனிய நிகழ்வினையும் பகிர்ந்து கொண்டார்.

பின் கவிஞர் அரங்க செந்தில்குமார் அவர்கள் தொகுத்தளித்த பொது அறிவு மற்றும் இலக்கிய இறிவு தொடப்பான வினாடிவினா நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறியவர் பெரியவர் என அனைவரும் மிக ஆர்வமாக பதில் அளித்து இவ்வங்கத்திற்கு சிறப்பாக அமைந்தது.

பின் மீண்டும் இலக்கிய விவாதம் நடந்தது. இதில் கவிஞர் அருண்முல்லை தமிழக ஜோதிட நிபுணர் சுடர்ஒளி ஆசிரியர் சக்திதாசன். சிவதாஸ் மரபுக்கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம் பனசை நடராஜன் இராமசந்திரன் ஆகியோர் மிக அருமையாக பல நல்ல தகவல்களையும் தமிழ்மொழியன் ஆளுமைபற்றியும் விவாதித்தனர்

அடுத்து பாட்டுக்கு பாட்டு நிகழச்சி அரங்கேறியது அனைவரும் இரு பிரிவாக பிரியப்பெற்று தமிழ் திரைப்பட பழைய புதிய பாடல்கள் மிக சுவாரஸ்யமாக பாடப்பெற்றது. இவ்வங்கம் மிக நீண்ட நேரம் தொடர்ந்தது. இதில் திரு குமரன் திருமதி கலைமதி குமரன் இருவரின் தனித்த குரல்களில் ஒலித்த பாடல்கள் நெஞ்சை தொட்டன. இவ்வங்கத்திற்கு கவிஞர் சத்தியமூர்த்தி நடுவராக இருந்து சிறப்பு சேர்த்தார்.

பின்னர் அலைமோதும் கடற்கரையில் கபடி உள்ளிட்ட பல பாரம்பரியமிக்க தமிழக விளையாட்டுகள் சிறுவர் பெரியவர் என அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மகிழ்வித்தனர் நிகழ்வுகளோடு அனைவரும் இன்றையபொழுதின் இனிமையான நிகழு;வுகளை நினைவுபடுத்தி பிரியா விடை பெற்றபோதும் கவிஞர்கள் இனியதாசன் நிதீப்பாண்டி உள்ளிட்ட சக கவிஞர்கள் வரதவறியது என்னின் மகிழ்சியில் சற்றே தொய்வடையசெய்தது.

கடற்கரைச்சாலை கவிமாலை குடும்பத்தினர் சந்திப்பு இனிதே நிறைவுபெற்றது

பொருள் வேண்டி கடல் தாண்டி வந்துள்ள எனக்கு பல குடும்பத்தினருடன் இணைந்திருந்த வேளையில் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை .

தொகுப்பு: கோட்டை பிரபு


kottaiprabhu@yahoo.com

Series Navigation

கோட்டை பிரபு

கோட்டை பிரபு