மழைக்கால அவஸ்தைகள்

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

கே ஆர் மணி


ஷுவுக்குள் போன மழைநீர்.
காற்றோடு கலந்து பெய்ததில்
ஈரமாகிப்போன முதுகு.

தெறித்து விழுகிற
துளிகளினால்
பேண்டின் நுனியில்
அழுக்குப்பொட்டு.ம்..
கழுவுவது கடினம்.

கூட்டநெரிசலில்
ஈசுகிற எச்சில் ஈரங்கள்

மழைநின்ற பின்பும்
காற்றசைவில்
தலைதுடைக்கும் மரங்கள்
ஒதுங்கையில் தீடீரெனநீர்
துப்பும்.

மற்றவனின் குடை நீர்
ஒழுகல்
என்னை ஈரமாக்கும்போது
ஏராளமான எரிச்சல்.

இத்தனை எரிச்சலுக்குப்
பிறகும்
எனக்குள் ஒரு குழந்தை
அடைமழைக்காய் தவம்
கிடக்கும்.

mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி