மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

கிரிஜா இராகவன்


ஐயா

மலர்மன்னனின் மேற்கண்ட கட்டுரையைப் படித்தேன். ஒரு இந்துத்வா பிரச்சாரகரிடம் எதிர்பார்த்த்து வீண் போகவில்லை.

அவரிடம் சில கேள்விகள்:

காண்டஹார் மாவட்டம் ஒரிசாவில் எங்கே இருக்கிற்து? காந்தேமால் என்றுதானே கேள்வி.

வனவாசிகளுக்கு எதிராக கிருத்துவ தலித்துகளை கிள்ப்பிவிட்டால் கிருத்துவ மிசுனோரிகளுக்கு என்ன லாபம்? ஏனென்றால், வனவாசிகளிடையும் அவர்கள் ஊழியம் சென்றடைந்து அவர்களும் மதமாறித்தானே உள்ளனர். வடகிழக்கு மானிலங்கள், சோட்டா நாக்பூர் (பீஹார்) இங்கெல்லாம் வனவாசிகள் அனவரும் கிருத்துவர்களாகத்தானே இருக்கிறார்கள். மிசோராம் சென்று மலர்மன்னன் பார்க்கட்டும். அங்கே எவரும் இந்துவல்ல..

காந்தேமாலில் மட்டும் மிசுனோரிகளுக்கு வனவாசிகள் ஏன் வேண்டாம்?

மலர்மன்னன் எழ்துகிறார்:

”உயர் சாதி மயமாக்கம், சமஸ்க்ருதமயமாக்கம் என்பதெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கண்டுபிடித்து உபயோகப்படுத்திக் காலாவதியாகிப் போன சமாசாரங்களாகும்.’

இவை காலவாதியாகிப்போனவையா? பின் ஏன் தமிழ்பார்ப்ப்னர்கள் சிதம்பரத்தில் தமிழை எதிர்க்கிறார்கள் ? ஏன் எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு திட்டத்தை எதிர்த்து கேசு போட்டிருக்கிறார்கள் ? இன்னும் ஏன் உபநய்னம் நடத்தி தங்கள் குழந்தைகளை ‘பிராமணன்’ ஆக்குகிறார்கள்?

இவையெல்லாம் உண்மையிலேயே காலவாதியாகிப்போனால், ‘இந்துவா, அவர்கள் எங்கே என்று தேடவேண்டாம்.. கிருத்துவர்களா, இசுலாமியர்களா, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தேடும்படி, அனைவரும் இந்துவாகவே இருப்பர்.

தன்னிடமுள்ள அழுக்கை அகற்றாமல், பிறரிடமுள்ள அழுக்கைப்பற்றிப்பேசினால், அது நகைச்சுவையைத்தான் தரும்.

இவண்

கிரிஜா இராகவன்

Series Navigation

கிரிஜா இராகவன்

கிரிஜா இராகவன்