பாரதிதேவராஜ்
மாலைநேரம்-.
ஆரஞ்சுவண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான். மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான்
இம்மாதிரி வேலைகளுக்கு ரகுதான் லாயக்கு. அவனை எங்கே பார்ப்பது நாளொருதிருட்டும் பொழுதொரு ஜெயிலுமாய் அலைகிறவன்
அர்ச்சகர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் இட்டுகொண்டு வெளியே வந்தான்.சீனு. தூரத்தில் ஆட்டோ ஸ்டாணட் ஓரமாய் சீனுவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ரகுதான் நின்றிருந்தான்.
“டேய் ரகு! ” உரக்கக்கூப்பிட்டான்.
சட்டென முடியை சிலுப்பிக்கொண்டு திரும்பினான் ரகு.
“டேய் சீனு நீயா! என்னப்பா என்ன அக்கரையா கூப்பிடற ஏதாச்சும் கல்யாணம் கான ஏதாச்சுமா?”
“அட நீ ஒண்ணு அது ஒண்ணுதான் குறைச்சல்.”
“உனக்கென்னப்பா.வேலைக்குப்போறே.மாசமானா சம்பளம்.”
“இங்க பார் ரகு. இநதக் காலத்திலே சம்பளம். உத்யோகம் இதெல்லாம் ஒண்ணும் நடக்காது எம்முதலாளியைப் பாரு. ஒவ் வொரு நாளும் லட்சக்கணக்காதான் வியாபாரம்பண்றான். பாங்கு க்கு போறதுக்கும்வர்றதுக்கும்தான் என்னை நம்பறான் அனாவசி யமாய் சம்பளத்தைதவிர பைசா கழுவின தண்ணியக்கூட காட்ட மாட்டேங்றான்அதனாலே ஒருபிளான் பண்ணியிருக்கேன். நீ தான் உதவி பண்ணனும்.”
“பிளானப்பத்தி அப்புறம் பேசுவோம் மொதல்ல அய்யர் கடை இடலியைபத்தி கொஞ்சம் பேசணுமாம். போலாமா?”.
“ம்”
கிருஷ்ணா கபே காற்று வாங்கியது.
2
உண்மையிலேயே கிளீனர் பையன் ஈக்களை விரட்ட படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். இருவரும் உட்கார்ந்தார்கள்.
கிருஷணய்யர் கேட்காமலே சுடச்சுட இட்லியை இலை யில் வைத்தார்.
ரகு “ஐயரே தொண்ட ஒருமாதிரியிருக்கு கொஞ்சம் வெள்ளி கொண்டா.”
என விரட்டினான்
“இப்ப சொல்லு”
“ நாளைக்குக் காலையிலே ஒரு பார்ட்டிக்குக்கொடுக்கறதுக் காக பாங்கியிலே நாலு லட்சம் எடுத்துட்டுவரப் போறோம்.நானும் டிரைவர் மட்டும் தான் கார்லே போறோம்.சாயிபாபா காலனி “கோவைபாங்கிலே“ பணத்தை எடுத்துட்டு தடாகம் ரோடு வழியா வருவோம். ஜி.சி.டி தாண்டினதும் ஈ காக்கா கூட அந்தநேரத்திலே இருக்காது. திக்பாரஸ்ட். ரெண்டு பக்கமும் கருவேலமரங்கள்தான் நிக்கும். ஆனைகட்டி போற பஸ்களும் பன்னென்டு மணிக்குத் தான் லாரிக எப்பவாச்சும் வரும்.அங்க ஒருசின்ன பால மிருக்கும். அந்த பாலத்துக்குப் பின்னாடி நீ நிக்கணும். காரை நிறுத்திட்டு இறங்குவோம்.“
“எதுக்கு”
“ ஒண்ணுமில்லே. ஒண்ணுக்குப் போகத்தான். அங்கதான் போறது வழக்கம்.”
“ ஓகோ!”
“நாங்க ரெண்டுபேரும் இறங்கி ஜிப்பை திறக்கறதுக்குள்ளே பின்பக்கமாக சட்டுன்னு பெட்டிய எடுத்துட்டு ஏதாவது கட்டையா லே முதல்லே லேசா என் மண்டையப் பாத்து அடி. நா கீழே விழுந்துடுவேன். முடிஞ்சா அவனையும் ரெண்டுசாத்து சாத்து. அவனும் கீழே விழுந்துடுவான்.டைம் பார்த்துட்டு பாங்க்குக்கு போ ன் பண்ணுவாரு பணத்தை எடுத்தாச்சுன்னா கண்டிப்பா காரெடுத் துட்டு தேடிட்டுவருவாரு. ஆஸ்பத்திரிலே.சேர்ப்பாரு. போலிஸ்லே
3
கம்ப்ளைண்ட் கொடுப்பாரு. நீ பெட்டிய நம்ம ரூம்லே வச்சுட்டு தைரியமா உலா வரலாம் ரெண்டுநாள் கழிச்சு, டிஸ்சார்ஜ் ஆயிடு வேன். போலிஸ் விசாரணையில் என்னைய விட டிரைவர் தெளி வா சொல்வான்.நா கவலைப் படாம வீடு வந்து சேர்ந்துடறேன். நைட்டோட நைட்டா மங்களுர் எக்ஸ்பிரஸ்லே வடக்கே எங்கியாவது கிராமத்தில செட்டிலாயிடலாம்.”
தன் திட்டத்தை விஸ்தாரமாய் விளக்கினான் சீனு.
“நீ என்ன சொன்னாலும் சரி எனக்கென்னவோ இது வொர்க்அவுட் ஆகிறமாதிரி தெரியல.”
“ நோ நோ கண்டிப்பா சக்ஸஸ் ஆகும். நாளைக்குக் காலையிலே நீ தயாரா இரு.”
சீனு புறப்பட்டான்.
மறுநாள் திட்டப்படி எல்லாமே சரியாக நடந்தது. ஆனாலும் எல்லோரும் அவசரக்காரர்களாய் போய்விட்டதால் கொஞசம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே நடந்துவிட்டது.
திட்டப்படி சீனுவும் டிரைவரும் பணம் நாலு லட்சத்தை பெட்டியில் சுமந்து கொண்டு பதட்டப்படாமல் தடாகம்ரோடு சின்னப் பாலத்தினருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி முள்வேலி ஓரமாய் ஒதுங்கிய அதே வேளையில் ரகு நல்லஇரும்புத்தடியால் மண்டையைப் பார்த்து நெஜமாகவே இருவரையும் செமத்தியாய் தாக்கினான்.நிஜமாகவே இருவரும் மயங்கி விழுந்தனர். இருவ ரின் மண்டையிலிருந்தும் ரத்தம் லேசாய் எட்டிப்பார்த்தது. இப்போ ரகு உஷாரானான். அவனுடைய திட்டப்படி இன்னும் இரண்டு மைலில் வரும் இடையர் பாளையத்தில் பஸ் ஏறி ஆனைகட்டி வழியாய் கேரளா சென்று கேரளாவாசி ஆகிவிடுவது எனபது அவன் திட்டம். பெட்டியை தூக்கிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடீனான். அவனுடைய துரதிர்ஷ்டம் அழகேசன் சாலையிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதை யில் இவனையே குறிபார்த்து சரியாய் மோதி மரத்தோடு சாய்த்து விட்டு பயத்தில் இறங்கி வந்த வழியே ஓடிவிட்டான்.
4
லாரி இடையில் சிக்கிய ரகுவும் பணப்பெட்டியும் ஒரு சேர வாயைப் பிளந்தனர்.
பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த நான்கு லட்சங்களும் கோவை நகர காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அரசின் வனத்துறை கருவேலமரங்களில் போய் உட்காரத் துவங்கின.
-00000
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4
- சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1
- சூரிய சக்தியில் முதலில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த வானவூர்தி (ஜூலை 8, 2010)
- மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்
- காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)
- மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)
- இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்
- பழமலையும், ப க பொன்னுசாமியும்….
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23
- மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT
- சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்
- புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.
- யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!
- தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி
- கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது
- கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து
- தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து
- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா
- வேத வனம் விருட்சம் -95
- துப்புரவு
- மறுபடியும் ரகு
- தொட்டுப் பாக்கணும்
- குடைராட்டினம்
- எழுதப்படாத கவிதை
- முள்பாதை 38
- பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி
- இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்
- சங்கதி என்னவாயிருக்கும்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்
- முகத்தினைத் தேடி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2
- நடுமுள்
- மெளனவெளி
- நஞ்சு பாசனம்
- களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்