அறிவிப்பு
மருதம் – புதிய இணைய இதழ்
அறிவிப்பு
சொல்புதிது சார்பில் www.marutham.com என்ற புதிய இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. சொல் புதிதை இணையத்தில் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் மேலும் பல அரசியல் கலை விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் .
15 நாட்களுக்கு ஒரு முறை இது புதுப்பிக்கப்படும் .2.10.2002 ல் முதல் இதழ் வெளியாகியுள்ளது .
சொல் புதிதைப் போலவே கலை இலக்கியம் அரசியல் வரலாற்றாய்வு அறிவியல் தத்துவம் ஆகிய தளங்களுக்கு அழுத்தம் தரக்கூடிய இதழாக இது இருக்கும். ஆன்மீகத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் . ஆனால் மதம் தவிர்க்கப்படும் . மைய ஓட்டத்துக்கு வெளியே உள்ள ஆன்மீக நீரோட்டங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம்.
விரிவான தமிழாராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும் . தமிழ் இசை , தமிழியக்கம் ஆகியவற்றை சொல் புதிது போலவே மருதமும் முன்னிறுத்தும்
பொதுவாக தீவிரமான வாசகர்களுக்கு உரிய இதழாக இது இருக்கும் . தமிழாராய்ச்சியாளர் குமரிமைந்தன் , வளவ துரையன், விமரிசகர் வேத சகாயகுமார் , அறிவியல் எழுத்தாளர் தி ஸ்ரீனிவாசன் , எழுத்தாளர் பாவண்ணன் , போன்ற பலர் தொடர்ந்து எழுதுவார்கள்
முதல் இதழ் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது . இணைமதி TSC !! எழுத்துர்வில் உள்ளது . அந்த எழுத்துரு இருந்தால்மட்டுமே படிக்கமுடியும். வாசகர்கள் வாசித்து கருத்து சொல்ல விரும்புகிறோம்
எழுத்தாளர் பங்களிப்பை நாடுகிறோம்.
சரவணன்
மதுரை
ஆசிரியர்
saravanan@marutham.com
yaazhini@rediffmail.com
***
- சமயவேல் கவிதைகள்
- ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?
- தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)
- மருதம் – புதிய இணைய இதழ்
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)
- சமோசா
- கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்
- காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை
- பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா
- நள பாகம்
- கவலையில்லா மனிதன்
- நம்பிக்கை
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
- எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்
- ஜனனம்
- ஓட்டம்
- காவிரி ஆறு – ஒரு சோகக் கதை
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002
- சீன மொழி – ஒரு அறிமுகம் புத்தகம் பற்றி
- நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- சீனம் கற்க தமிழில் முதல் நூல்
- எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)
- வேஷம்