மனுசங்கடா, நாங்க மனுசங்கடா

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

சாம்பரன்


செய்தி1

பிரான்சில் அண்மைக்காலமாக இனவெறித்தாக்குதல்கள் அதிகாித்து வருவது யாவரும் அறிந்ததே. ஆனால் இவ்வாரம் நடந்த சம்பவமானது வெளிநாட்டவரை மேலும் அவமானத்திற்கும் ஆத்திரமூட்டலுக்கும் உள்ளாக்கியுள்ளது. பாண்டிச்சோி தமிழர் ஒருவர் உணவுவிடுதியொன்றில் தான் செய்த வேலைக்குாிய மாதச் சம்பளத்தை முதலாளியிடம் கேட்டபோது ஆத்திரமடைந்த முதலாளியும், அவர் உறவினரும் சேர்ந்து அவரைத் தாக்கி மலத்தை உண்ணச் செய்து நிர்ப்பந்தித்தும் உள்ளனர்.

கேட்கவே அருவருப்புக் கொள்ளவும் ஆத்திரமூட்டவும் செய்கிறது இந்தச் செய்தி. மற்றைய செய்தியையும் படித்துப் பாருங்கள்:

செய்தி2

லால்குடி தாலுக்காவுக்கு உட்பட்டது திண்ணியம் கிராமம். அக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பையா என்பவர், தனது தங்கை பானுவுக்கு தொகுப்புவீடு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோாி முன்னாள் பஞ்சாயத்துத் தலைவி ராஐலட்சுமியிடம் ரூ.2ஆயிரம் பணம் கொடுத்தார். ஆனால் தொகுப்பு வீடோ, கொடுத்த பணமோ திரும்பக் கிடைக்கவில்லை. இதனை ஊருக்கள் கருப்பையா தொிவித்தார். ஆத்திரமடைந்த ராஐலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணி, மகன் பாபு மற்றும் உறவினர்கள் சேர்ந்து கருப்பையா மற்றும் முருகேசனை கொடுமைப்படுத்தினர். மலம் உண்ணச் செய்து சித்திரவதை செய்தள்ளனர்.

நம்பவே முடியாதுள்ள இவ்விரு செய்திகளில் இர ண்டாவதே உண்மையாகும். இதுபற்றி தினமலர் 03.06.02ல் செய்தி வந்துள்ளது.

முதலாவது, 2வது செய்திகளைப் படித்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள் ? புின்னர் உண்மைச் சம்பவத்தை அறிகிறபோது எவ்வாறு உணருகிறீர்கள் ? ? ?

தமிழ் மக்கள் இசை விழாவில் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் ராமசாமி கூறியுள்ளதை இவ்விடத்தில் கூறவேண்டும். பாண்டவர்கள் தாம் தப்புவதற்காக தம்மைப்போல் உருவ ஒற்றுமையுள்ள தலித்தகளை அரக்குமாளிகைக்கு அழைத்து உணவளித்துவிட்டு உள்ளே தாளிட்டு கொளுத்தி அவர்களைக் கொன்று தாங்கள் எாிந்துபோனோம் என்று கதைவிட்டதை, பாண்டவர்கள் தப்பிவிட்டார்கள் என்று சந்தோசப்படும் எமது மனநிலையை கேள்வி கேட்கின்றார். (புதிய கலாச்சாரம், 4.02)

தீண்டாமையென்பது சகமனுசனுக்கு, சகமனுசிக்கு செய்கின்ற கீழ்மைப்படுத்தலாகும். ஓவ்வொரு கணமும் சிறுமைப்படுத்துதலாலும், அவமானப்படுத்துதலாலும் மனுசப்பிறவியென்பதை மறுப்பதாகும். இன்றைய பொழுதுகளில் தலித்துக்கள் தமது உாிமையை உரத்து கேட்கிள்ற போதில் இன்னும் அவமானப்படுத்தப்படவும், தாக்கப்படவும், பலாத்காரப்படுத்தப்படவும், கொலைசெய்யப்படவும் படுகின்றனர். மேற்குறிப்பிட்ட செய்திகள் பலருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதே கொடுமையாகும். ஓரு மனுசனுக்கு நடந்த கொடுமையாகவோ அல்லது ஒரு இந்தியனுக்கு நடந்ததாகவோ, தமிழனுக்கு நடந்ததாகவோ வேதனைப்பட முடியாமல் எம் சாதிய மனம் தடுக்கிறது.

புதுச்சோியில் நாடகத்துறை பேராசிாியராக இருக்கும் டாக்டர் கே.ஏ.குணசேகரன் (அழகிபடத்தில் டாக்டாின் கிராமத்து நண்பனாக வருபவர்) பாாிசிற்கு வந்திருந்தபோது, இப்பேராசிாிய+கூட இன்றும் தனது கிராமத்திற்கு செருப்பணிந்து செல்ல முடியாது என்றது இன்னும் வலியைத் தருகிறது. ” மனுசங்கடா, நாங்க மனுசங்கடா ” என்று குரலெடுத்து உணர்வோடுபாடிய பாடல் இன்னும் எம்மில் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

***

‘samparan ekalaivan ‘

Series Navigation

சாம்பரன்

சாம்பரன்