மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

அறிவிப்பு


நிகழும் திருவள்ளுவர் ண்டு 2035 சுறவம் 22,23(பிப்ரவரி05,06-2005) நாள்களில் மதுரையில் உலகத்

திருக்குறள் மாநாடு நிகழவுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் உள்ள

திருக்குறள் பேரவை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை

அமைச்சர், தமிழக ளுநர், முதல்வர், அமைச்சர்கள், தமிழறிஞர்கள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள்,

முதலானோரை அழைத்து, நடத்த ஏற்பாடாகிவருகிறது.

மாநாட்டுத் தலைவர்: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்.

வரவேற்புக்குழுத் தலைவர் : ‘திருக்குறள் செம்மல் ‘ ந.மணிமொழியன் அவர்கள்,

செயலர் : ‘திருக்குறள் மாமணி ‘ நா.சண்முகம் அவர்கள்

இணைச்செயலர் : புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள்,

பொருளர் : வள்ளல் அண்ணாமலையார் அவர்கள்,

வரவேற்புக்குழுப்பொருளர் : சங்கர சீத்தாராமன் அவர்கள்,

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:

முனைவர்தமிழண்ணல், முனைவர்வளனரசு, முனைவர்மீனாட்சிமுருகரத்தினம், முனைவர் இரா.மோகன்

05-02-2005மாலையும்,06-02-2005முற்பகல்,பிற்பகல் இருவேளையும் ‘முப்பால்ஒளி மிளிரச் செய்வோம் ‘

எனும் பொருளில் நடைபெறவுள்ள கருத்தரங்குகளில் உலகமெங்கிலும் உள்ள தமிழறிஞர்கள் ய்வுக்கட்டுரைகள்

வழங்க உள்ளார்கள். 06-02-2005(ஞாயிறு) மாலை நிறைவு விழா நிகழவுள்ளது.

—-

பேராளர் / கட்டுரையாளர் / சிறப்பு அழைப்பாளர்:

பதிவுக்கட்டணம் : உள் நாட்டினர் உரூபா.300-00

வெளி நாட்டினர் 50 அமெ. தாலர்

உணவு உறையுள் : அதற்குரிய பதிவு விண்ணப்பம் பெற்றுப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

—-

மாநாட்டினை ஒட்டி, அழகிய முறையில் கருத்துக் கரூவூலமாய்ச் சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

ஏறத்தாழ 300 பக்க (ஏ4) அளவில் வரக்கூடிய இம்மலரில், பல்துறைசார்ந்த உலகச்சான்றோர்களின்

வாழ்த்துச்செய்திகளும் அறிஞர்களின் ய்வுக்கட்டுரைகளும் இடம்பெறவுள்ளன.

பதிவுக்கட்டணம், மலர் விளம்பரம், மற்றும் நன்கொடைகள் ‘உலகத் திருக்குறள் மாநாடு, மதுரை ‘ எனும்

பெயரில் காசோலை / வரைவோலையாக ஏற்கப்படும்.

—-தகவல் : muthunilavan@yahoo.com —-

====

Nandri,vaNakkam.

Naa.Muthu Nilavan,

Pudukkottai-Tamil Naadu.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு