கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா
தூக்கம் வராமல் புழுவாய் நெளிந்தேன். போர்வையின் உள்ளே ஒரு காலும் வெளியே ஒரு காலுமாய். வாயிலிருந்து புழு போன்றறு சிறிது எச்சில் வேறு ஊறச் செய்தது. குளிர்காற்றில் மண்தரையில் படுத்திருக்கிற மாதிரி கனவு.
சில சமயம் பாம்பு, தேள், பூரானாய் பிறக்கிறவன் மனிதனாய் பிறந்திட்டான் என்று என் பக்கத்தில் படுக்கும் நபர்கள் ( எல்லாம் அம்மா, மனைவி, அண்ணன், தம்பி போன்றவர்கள் தான் !) கூறுவர். அப்படி ஊர்ந்து கால் போடும் ஜமீந்தாராக்கும் நான்.
அப்பேற்பட்ட ஜமீந்தாருக்கும், சாதாரணப் புழுவிற்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா ?. புழு ஏணியில் ஏறி தொப்பென்று ஒரு படி கூடத் தாண்டாமல் இருக்கும் காட்சி என்னை உவகைக் கொள்ளச் செய்தது.
அதே சமயம் நான் புழு இல்லை. அதனினும் அற்ப “காசே தான் கடவுளடா” என்று தூக்கிக் கொண்டாடும் மனித வர்க்கத்தின் பிரதிநிதி. !
பூச்சிகளின் எதிரி ! இயற்கையின் அழிக்கும் அசுரனே நான் ! வீட்டிற்குள் கொசு கூட வராமல் இருக்க வலை கொண்டு கட்டியிருந்தேன்.
பூச்சிகள் வராமல் இருக்க, ஜன்னலை இருக்கச் சேத்தியிருந்தேன். அனைத்தும் கண்ணாடி ஜன்னல்கள். உள்ளே குளிர் பதன் ஏஸி வேறு. சிலந்தி வலைகள் இல்லாமல் இருக்க, மூட்டைப் பூச்சிகள் இல்லாமல் இருக்க வேண்டும் மட்டும் மருந்துகளை அள்ளித் தெளித்திருந்தேன்.
எறும்புகள் புகாவண்ணம் எறும்பி பவுடர் கலந்து விட்டிருந்தேன். எலி அடுக்குள்ளில் புகா வண்ணம் எலி மருந்து புகை கூண்டுக்கருகே தெளித்திருந்தேன். கரப்பான் தொல்லை வராவண்ணம் பேகான் ஸ்பிரே வேறு தெளித்திருந்தேன்.
இதை மீறி எது வந்தாலும் சாம்பிராணி போட்டு வீட்டினை, எனது மனைவி மக்களைப் பாதுகாத்திருந்தேன். பல்லிக்கும், தேளுக்கும் எனது வீட்டைக் கண்டால் பயம்.
சிலந்தி கதவிடுக்கில் மாட்டிக்கொண்டதால் அதைச் சட்னியாக்க கதவைப் பலமுறை “படீரென்று” அழுத்தச் சாத்தி ஒரு கதவையே உடைத்து விட்டிருக்கேன் தெரியுமா ?.
என் ஜமீந்தாரின் மீசையை முறுக்கி விட்டுக் கொள்கிறேன் !
ஆனால் இந்த அற்ப புழு ?
இதை எல்லாம் மீறி ஒரு அற்ப புழு என் பளிங்கு வீட்டிற்கு வந்து விட்டதே !
ஒரே கோபம் !
வீட்டின் வெளியே மாநிறத்தில் உடம்பை பிதுக்கி “சடக் சடக்” கென்று உடம்பைத் தோக்கி அசைந்து அசைந்து மன்றாடி தலை குப்புறப் படுத்து மீண்டும் தலை தூக்கி மெதுவாக ஊர்ந்த ஜந்துவைக் கூர்ந்து கவனித்தேன்.
அட ! அற்ப மண் புழு ! என்ன தைரியம் ? மண்ணில் உடம்பைத் துவைத்ததோடில்லாமல் இப்படியும் அப்படியும் உடம்பைப் புரட்டி பல லட்சக்கணக்கான மதிப்புடைய என் வீட்டு பளிங்குத் முற்றத்தில் களி மண்ணை அப்பி என்ன “ஜக ஜாலம்” காண்பிக்கின்றது ?
அந்த தைரியத்தில் என் காலை வைக்க ! மூஞ்சியிலே என் கையை வைக்க ! என் சுண்டு விரல் அளவு கூட அதன் மூஞ்சி இல்லை !
ஓங்கி அதை சட்னியாக நசுக்கலாம் என்று முடிவெடுத்தேன் ! ஆனால் என் பளிங்குத் தரை அசுத்தமாகிவிடுமே ?
கடவுள் தூணிலும் இருப்பான் ! புழுவிலும் இருப்பானல்லவா ?. புழுவாக அதன் மனதில் நுழைந்தேன்!
ஜாலியாக ஓடி ஆடிடும் மனிதனைப் போல துள்ளிக் குதித்துச் செல்லலானேன். மழை அப்போது தான் பெய்து முடிந்திருந்த படியால், மண் சாலைகளைக் கடந்து இந்தப் பளிங்குத் தரைக்குத் தவறுதலாய் வந்து விட்டேன். என் இடம் விட்டு, இந்த மனித அசுரனின் இடத்திற்கு வந்தது தப்பு !
மேலும் இந்த வழுக்குத் தரையில் எவ்வளவு தூரம் போக வேண்டுமோ ? என்று வேதனையில் என் உடம்பைத் தேய்த்து தேய்த்து நகரலானேன் ! நான் வளர்ந்த மண்ணில் உடம்பைத் துழாவி மெலிதாக இருக்கும் மண் துகள்களை நகர்த்தி இடம் விட்டு இடம் போகும் சௌகரியம் தனி தான்.
என்னை விடச் சிறிய பூச்சிகளைக் கபளீகரம் பண்ணி மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டு விட்டு மண்ணை உழத் தொடங்கினால் ஒரு நாள் முழுவதும் விளையாடலாம். மேலும் என் புழுக்குழந்தைகள் தங்கள் சிறிய உடம்புகளைக் கொண்டு என்னுடன் “டால்பின் “ மாதிரி மண்ணில் துவண்டு குதித்து என்னுடன் மண்ணைக் குழப்பி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மழை வந்தால் சகதியானால் எங்களுக்கு குஷி தான். ஈரமான மண்ணில் எங்களூர் மண் வாசனையை நுகர்ந்தவாறு பவனி வருவோம் !
மண்வாசனை மிக்கவர்கள் நாங்கள். மண்ணின் மைந்தர்களாதலால் “இட ஒதுக்கீடு” அவசியம் தேவை !
நாங்கள் பெண்களாகவும், ஆண்களாகவும் இருப்போம்.
பெண் புழு, ஆண் புழுவென்றில்லாமல் தாயும் நாங்களே, தந்தையும் நாங்களே ! அதோ தெரியும் ஆலமரத்தில் எனக்குத் தெரிந்த ஒரு கறுப்பி(பன்) இருக்கிறாள்(ன்). அவனோடு கட்டிப் படுத்துக்கொண்டால் தானே உடம்பில் விந்துக்களும், முட்டைகளும் கலந்து புழுக்குஞ்சுகள் ஒரு விதமான ஓட்டில் அடைகாத்துப் பிறகு வெளியே வரும். இவ்வாறு தங்கப்புதையல் போன்றுப் பெற்றெடுத்த என் செல்வங்களை இந்தப் பொறுக்கி சின்ன மனிதன் நசுக்கிக் கொல்கிறானே ! இவனைக் கடிக்க பல் கூட இல்லை ! எங்களுக்கு !
இந்தப் பாழாப் போன மனுஷன் பார்க்கிறானே ? என்னை வந்து நசுக்கி விடுவானோ ?. எனது குழந்தைகளாவது உயிரோடு இருக்கட்டும். பக்கத்தில் இருந்த ரோஜா செடிப்பக்கம் எனது புழுக்குஞ்சுகளைத் தள்ளினேன்.
அற்ப மனிதப் புழுவே ! சே ! நம்மையே கேவலப் படுத்திக் கொள்ளக் கூடாது !
அற்ப மனிதப் பதரே ! புதரில் வளர்ந்த எனக்கு ஈடாகுமோடா ?
செந்தமிழ் நன்கு எதுகை மோனையில் வருகின்றதே !
நானா அற்ப “புழு ?”
காலொன்று வந்து “பச்ச்”செக்கென்று நசுக்கியது.
நான் மனிதனாதலால், மனம் “விர்ரென்று” ஜமீந்தாராகியது !
அடி ! செருப்பால ! இந்தப் புழுவிற்கு என்ன தைரியம் ?. கசக்கி நசுக்கி விட வேண்டாமா ? கூப்பிட்டேன் என் வாண்டு மகனை.
அவனுக்குப் புழு, பூச்சிகளை நசுக்கிக் கொல்ல மிகவும் பிடிக்கும். என் குலத் தோன்றல் என் பெருமையைக் காப்பாற்ற மாட்டானா ? தெலுங்குப் படத்தில் வரும் வில்லன்களைப் போல காலில் கட்டைச் செறுப்பைப் போட்டு “சர்க் சரக்”கென்று நடக்கக் கற்றுக் கொடுத்திருந்தேன்.
ஜமீந்தார் மகன், அடுத்த நாள் அறிவியலில் உயிரியல் தேர்விற்காக மண் புழுவைப் பற்றிப் புத்தகத்தைக் குதறிக் கொண்டிருந்தான். மண் புழுவே இதற்குத் தேவலை. மண்ணை நன்றாக ஊரச் செய்து, கோதி விடும். புத்தகத்தின் மீது தூக்கத்தின் “ஜொள்ளு” விழுந்து அதனை ஈரமாக்கியது.
மகனோ, அறிவிற்கு அப்பாற்பட்ட ஆங்கில வார்த்தைகளில் படம் வரைந்து பாகத்தினைக் குறித்துக் கொண்டிருந்தான். பொழுது போகாத வெள்ளைக்கார உயிரியல் பேராசிரியர் ஏதாவது கப்பலில் புழுவைப் பார்த்து கூர்ந்து மனதில் பதிவு செய்து மாதக்கணக்கில் உட்கார்ந்து படம் வரைந்து வைத்திருப்பார்.
நம்மவர்கள் அதைச் சுலபமாகக் “காபி”யடித்துவிட்டனர். இப்போது சுலபமாக பள்ளிப் புத்தகத்தில் அவர் வரைந்த படத்தினை, பாகங்களோடு காப்பியடித்து விட்டனர். ஆகவே அதைப் பார்த்து மனதில் ஊரப் போட்டு, கிளறித் தகுந்த நேரத்தில் பேப்பரில் “வாமிட்” செய்ய வேண்டும்.
அப்போது தான் நல்ல மதிப்பெண்கள் தேர்வினில் வாங்கலாம். மனப்பாடம் பண்ண மனம் வரவில்லை. இந்த “அற்ப ஸ்கூல் பியூன்” புழுவிற்கு பணத்தை விட்டெறிந்தால், நமக்கு புத்தகத்தையே தேர்வின் போது வந்து தருவான். கவலையில்லை !
அப்பா, “டேய் இங்கே பாரு ! புத்தகப் புழுவாய் இருக்காதே ! நேரினில் புழு பார்த்தியோ ஒரே கொல்லு ! சட்னி பண்ணுடா !!!” என்று குரல் கொடுத்தார்.
( நன்றி: http://en.wikipedia.org/wiki/Earth_worm)
இந்தப் படத்தை ஒரு புழு கூடப் படிக்காது. படம் போடாது. !
அந்த ஆசிரியப் புழு கண்ணாடியை நோண்டிக் கொண்டே பாகங்களைக் குறி வைத்து சிகப்பு பேனாவால் கட்டம் போடும் !
ஜமீந்தாரின் மகனாகிய நான், படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் கொண்டு பகுதி, பகுதியாகப் புழுவின் உடம்பினை பேப்பரில் வரைந்து கிழிக்க ஆரம்பிதேன். என் தலை, வயிறு, கால், கை, தொப்பை என்று அனைத்து இடத்திலும் “பிட்” தயார் செய்தேன். ஞாபகம் வராமல் இருந்தால் “பிட்” கவசமிருப்பது தேர்வில் நல்லது !
ஜமீந்தாரின் மகன் நசுக்க வருகிறான் !
இதோ !
புழுவின் உடம்பில் புகுந்தேன் !
புழுவின் உடம்பில் வேதனை ! ஆ ! நசுக்க ஆரம்பித்து விட்டார்களே !
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் (எனக்குத் தான் கைகள் இல்லையே !), ஏதோ என் வாயை வைத்து எதையோ உறிஞ்சி வாழ்கிறேண். என் குட்டிகளுக்கும் சாப்பிட இட்டுச் செல்கிறேண். வாழ்வது இரு நாளோ ! மூன்று நாட்களோ ! இதற்குள் நசுக்க வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேங்கிறாங்களே !
கையில் ஆயுதம் எடுக்க கூட எனகு கையில்லை. ஓடக் கால்லில்லை. நன் என் வேலியைப் பார்த்து “தேமேனென்று போய் விடப் போகிறேன். அதற்குள் “வெட்டு ! குத்து !” என்று அலறுவதா ? நானென்ன இந்த வீட்டு மனுஷன் மாதிரி உட்கார்ந்து தின்று, பன்னி, மாடு, தின்று கழிந்து இயற்கையைக் குப்பையாக்குகின்றேனா ?
ஏதோ என்னால் ஆன மட்டும் மண்ணைத் தோண்டித் துருவுகின்றேன். இலையோ, செத்த உடம்போ வாயில் போட்டு மென்று எனது இரப்பைகளில் உமிழ் நீர் கலந்து உரமாக்கி மீண்டும் மண்ணிற்கே என் விட்டைகளைத் தானம் செய்கிறேண். பாஸ்பேட், நைட்ரகன் போன்ற நல்ல தாதுக்களை எனத் உடம்பில் அரைத்து பட்சணம் செய்து பொட்டலம் கட்டு வெளியே அனுப்புகின்றேன்.
என் மாதிரி உரமிடமுடியாது உங்களால் !
மட்டமானத் தரிசி நிலமாக இருந்தாலும் ஏக்கருக்கு நாங்கள் சுமார் 55,000 வரை இருப்போம். நாங்கள் ஒன்று கூடி இழுத்தால் அம்மியும் நகரும் !
உழவுத் தொழிலில் புரிவோரை போரை வந்தனம் செய்வோம் என்று இவர்கள் பாடவேண்டியது.! பிறகு எங்களைக் கால் மிதித்துக் கொல்ல வேண்டியது ! ஹும் !
ஐயப்பக் கடவுளே! என்னைக் காப்பாற்று ! நீ ஆண்ணுக்கும் மட்டுந்தான் சொந்தமாமே ! ஜெயமாலா சொல்வதாக இம்மனிதர்கள் பேசிக் கொள்கிறார்கள் !
நான் ஆணுமில்லை ! பெண்ணுமில்லை ! என்னை நசுக்குவதற்குள் காப்பாற்று !
ஜமீந்தாருக்கு ஒரே கோபம். மகன் நசுக்கும் போது கடவுளைக் கும்பிடுகின்றதே இம் மண் புழு ! அதுவும் தமிழிலல்லவா கேட்கிறது ? “ஓம் ஹ்றீம் ஹ்ரூம் ! என்றல்லவா நான் கும்பிடுகிற மாதிரி கேட்கணும் ! ரொம்பத் திமிர் தான் !
“ஆண்டே என்று என்னயல்லவா, தமிழில் வினவ வேண்டும் ?” நான் காப்பாற்றுவேனே ?.
புழுக்களின் தொல்லை அதிகமாகிப் போய் தொல்லையாகிவிட்டது. அதுவும் இட ஒதுக்கீடு கேக்கிறது. நான் இப்ப தான் கஷ்டப்பட்டு என் சொந்தக் காலில் சம்பாதித்து வீடு கட்டியிருக்கேன். எங்கிருந்தோ வரும் மண்புழு என் வீட்டு முன்னால் ஆட்டம் போடுவதா ?. அது இருக்குமிடம் மண் தானே !
டி.டி.டி, யூரியா போட்டு செயற்கை உரங்களை வைத்து அவற்றை அழிக்க வேண்டியது. பிறகு நாம செயற்கை உரங்களைப் போட்டு பயிரிடலாம் !
மகனே ! போய் மிதித்து விட்டு வாடா !
ஜமீந்தார் மகன் யோசித்தவாறே, அப்பா ! மண் புழு பாவமப்பா ! என் பாடத்தில் அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று போட்டிருக்கு ! (பையில் “பிட்” போறிப் பாதுகாக்க வேண்டியிருகின்றது !)
நம்மால் காலை வைத்துச் சகதியில் வேலை செய்ய முடியாதல்லவா ?அந்தச் செத்துப் போன பல்லியைக் கூட மெதுவாக வாயில் ஊறவைத்து மண்ணில் இழுத்துக் கொண்டு போய்விட்டதே ! நமக்காகக் கழுவும் இவற்றைக் கொன்றால் இந்தப் புழு கூட நம்மை மதிக்காதப்பா ! பேசாமல் பேப்பரில் வைத்து இது இருக்குமிடத்தில் விட்டு விடலாம் !
“எதிர்க்கவா செய்கிறாய் ! அற்ப புழுவே ! “ அப்பா கர்ஜித்தார் !
“சொன்னதைச் செய் !” கட்டளையிட்டார் !
சொன்னால் அதற்கு எதிர் மாதிரி நடக்கப் பழகியிருக்கும் மகன் புழுவைப் பத்திரமாகப் பேப்பரில் போட்டு மண்ணில் கொண்டு வந்து விட்டான்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் !
நானும் புழுலிருந்து, பூச்சியாகி, பல்லியாகி, தவழும் ஆமையாகி, மீனாகி, பன்னியாகி, மாடாகி மனிதனாகிவருவேன் !
வந்து ! ஒரே நசுக் !
புழுவும், மண்ணில் துள்ளித் தாவி மெதுவே நடக்கலாயிற்று.
தன் புழுக்குழந்தைகளுக்குச் கதைகளைச் சொல்லிற்று !
புழுவாயிருந்தாலும் மண்ணுக்கு உரமாகனும். பயிர்களை வாழ வைக்க வேண்டும்.
An acre of good garden or farm soil may be home to a million earthworms.
kkvshyam@yahoo.com
- ஆயுளைக் குறுக்கும் ஊழ்!
- எண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5
- கீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..!
- புதுமைப் பித்தன் கருத்தரங்கு
- கடிதம்
- கடிதம்
- மண் புழு
- கம்பரும் ஷெல்லியும் (அல்லது) மருத்துமலையும் தோட்டத்துச் செடியும்
- ஞமலி போல் வாழேல் !
- கடித இலக்கியம் – 14
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10)
- ஆறு கவிதைகள் 6!
- பெரியபுராணம்- 97 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்
- சிதையும் பிம்பங்கள்
- சலாம் மும்பை
- வ ழ க் கு வா ய் தா
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30