பொண்ணுங்க மாறிட்டாங்க!

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

நவநீ



ஸ்வேதா! என்னாச்சு ஒனக்கு? ஒம்பின்னாடியே எத்தனை நாள் இப்படி நாய் மாதிரி அலையிறது? ப்ளீஸ்… நீ இந்த மாதிரி சைலன்ட்டா இருந்தா நான் அப்பறம் காலேஜ்-க்கே வரமாட்டேன். என்னோட ஃபியூச்சரே ஸ்பாய்ல் ஆனாலும் பரவால்ல! இந்தக் காலேஜ் முழுக்க என்ன பேசுறானுக தெரியுமா? ‘என்னாச்சு மச்சான் ஒன்னோட ஆளு ஸ்வேதா வேற யாரையோ கரெக்ட் பண்ணிட்டா போல. ரெண்டரை வருசமா ஒங்கிட்ட பழகிட்டுருந்தா, இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி அவளையும் கூடவே ஸ்மாட்டான ஒரு ஹீரோவையும் அஷ்;டலட்சுமி கோயில்ல பாத்தேன்னானுக’. நான் நம்பல ஸ்வேதா. ஆனா நீ எங்கிட்ட ஒரு மாசமா பேசாம இருக்கறதப் பாத்தா எனக்கே கொஞ்சம் டவுட்டு வரு..து..” ராஜேஷ்; ஸ்வேதாவின் கையைப்பிடித்தான்.

“ஸோ…நீங்க டவுட் பட்டா நாங்க பேசிறணுமா? மொதல்ல இந்த மாதிரி காலேஜ் காம்பஸ்-குள்ள இன்டீசன்ட்டா நடந்துக்கறத ஸ்டாப் பண்ணு. ப்ளீஸ்.. என்னெ தொந்தரவு பண்ணாத. ஒன்னோட ஃப்ரண்ட்ஸ் சொன்னதுல எந்த டவுட்டும் இல்ல. நான் இன்னொருத்தர லவ் பண்றேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன். வர்ற செமஸ்டர் முடிஞ்சதும் கல்யாணம். சாரி….ராஜேஷ்; நீ அந்த மாதிரி நெனச்சு இத்தனை நாளா எங்கிட்ட பழகிருந்தா என்னெ மன்னிச்சுரு. எனக்கும் ஒம்மேல அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனா நான் தனியா திங்க் பண்ணிப் பாத்தப்போ அவருதான் எனக்கு பொருத்தம்னு தோணுது. இனி என்னெப் பாக்காத, பேசாத. எக்ஸ்ட்ரீம்லி சாரி” ஸ்வேதா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

இதை ராஜேஷ்; கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவனாய் வாய் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு கண் கலங்க நகர்ந்தான்.

“ஏய்!…இதெல்லாம் ஒனக்குத் தேவையாடா? நீ காலேஜ்-ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி என்னடா செய்ய? அவ்வளவு பேருக்குமே நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கணு தெரியுமேடா. இப்ப என்ன செய்யப்போற? போய் தூக்குமாட்டிட்டு சாவுடா. டேய்! இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பாதடா, பொண்ணுங்க முன்னாடி மாதிரி இல்ல, இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாளுங்கடான்னேன். கேட்டியா நீ! இப்ப முட்டிகிட்டு சாவுடா”. நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் ஒருமையில் அவளையும் சேர்த்துத் திட்டினார்கள்.

“இவளுக்குத்தான் அறிவு இல்ல, அந்த டாபருக்கு புத்தி எங்கடா போச்சு. நீங்க லவ் பண்றது தெரிஞ்சும்; இவளோட சுத்துறான்னா, அவன் சரியான சோமாறிடா. மச்சான் அவன் எந்த ஏரியாடா? அட்லீஸ்ட் எந்தக் காலேஜ்-னாச்சும் யாருக்காவது தெரியுமாடா? மவனே அந்தப் பொறம்போக்கெ தீத்துடுவோம் மச்சான்.

“ஏய்! அதெல்லாம் வேணாண்டா. எனக்காக நீங்க எதாச்சும் செய்யணுன்னா ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்கடா. அவங்கிட்ட என்னோட மேட்டர மட்டும் பக்குவமா சொல்லி, அவள விட்டுறச் சொல்லுங்கடா. அவன் மனசு வச்சா நடக்கும் மச்சான் ப்ளீஸ்” ராஜேஷ்; வெட்கத்தை விட்டுச் சொன்னான்.

“தோடா! என்ன காதல் பிச்சையா? இதெல்லாம் வேலைக்கி ஆவாது மச்சான். மவனே! கையக் கால எடுத்துருவோம் எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆள் இருக்குடா” ஒரு மேதாவி சொல்லி முடித்தார்.

ஒரு வழியாக ராஜேஷ்-ஸ்வேதா விசயத்தை அவனிடம் பக்குவமாகச் சொல்ல ஒத்துக்கொண்டார்கள். செமஸ்டர் தொடங்கியது. அனைவருமே படிப்பிலும், தேர்விலும் மும்முரமாக இருந்தனர். ஒரு நாள் கல்லூரி முடிந்து மொத்தமாக வெளியே வந்த ராஜேஷின் நண்பர்கள் அந்தக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர்.

ஒரு பார்வையற்ற வாலிபனுக்கு உதவுவதற்காக, அந்த வாலிபனின் கையைப்பிடித்துக்கொண்டு, போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை, ராஜேஷ்; கடந்து கொண்டிருந்தான். ஸ்வேதாவோடு அஷ்;டலட்சுமி கோவிலில் பார்த்த அந்த வாலிபன் பார்வையற்றவன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

அடுத்த நாள் கல்லூரி சென்ற ராஜேஷ்; தன் நண்பர்கள் யாருமே தன் கண்ணில் படவில்லையென்பதால் அனைவரையும் ஒரு வழியாகத் தேடிக் கண்டுபிடித்தான்.

“மச்சான் என்னெ மன்னிச்சுருங்கடா! ஒங்களயெல்லாம் என்னால மறக்க முடியாதுடா. நீங்க நெனக்கிறமாதிரி எனக்கு ஒங்கமேல கோபம் இல்லடா. ஒரு தப்பான தகவல் ஏன் குடுத்தோம்னு நீங்க ஃபீல் பண்றது எனக்குப் புரியுது மச்சான். ஆனா தப்பு அங்க இல்ல மச்சான், எம்மேலதான்டா. ஸ்வேதா என்னெ முழுசா லவ் பண்ணலடா. அப்படி ஒரு ஃபீலிங் இருந்ததென்னமோ உண்மைதான்டா. ஆனா இப்ப எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சுடா. இனிமே அவளை நான் நெனைச்சுப் பாக்கக்கூட அருகதை இல்லடா. அவ ரொம்ப பெரிய மனசு உள்ளவ மச்சான். நீங்க சொன்ன மாதிரி பொண்ணுங்க ரொம்ப மாறிட்டாங்கடா. முன்னாடி மாதிரியெல்லாம் இல்லேங்கறது நூத்துக்கு நூறு உண்மைடா.

“டேய்! என்னடா புதிர் போடுற? என்னடா ஆச்சு ஒனக்கு? மாறிட்டாங்கங்குற, பெரிய மனசுங்குற.. ம்ம்…என்ன?”

ஆமடா மச்சான்! அவ அந்த ஹீரோவ லவ் பண்றாடா. பார்வை இல்லேன்னு தெரிஞ்சும் எந்தப்பொண்ணுடா லவ் பண்ணுவா? நம்மதான்டா பொண்ணுகள தப்பாவே கணக்குப்போட்டு வச்சுருக்கோம். அவ அவளோட வாழ்க்கையையே அவனுக்கு குடுக்க நெனைக்கிறப்போ, ஆஃப்டர் ஆல் என்னோட லவ் என்ன மச்சான் பெருசு? அவனுக்கு எதோ ஜாப் சம்மந்தமா எக்ஜாம் எழுதறதுக்கு ஹெல்ப் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கு. இவ ஹெல்ப் பண்ணிருக்கா. அவனுக்கு அந்த வேலை ஓகே ஆயிடுச்சு. அப்பறம் அவனுக்கு நெறைய எய்ம் இருக்கு மச்சான், ஐஏஎஸ் எழுதணுங்கறான். ப்ரிபேர் பண்ணிகிட்டுருக்கான். இன்னும் என்னென்னமோ சாதிக்கணுங்கறான். இப்படிப்பட்ட பார்வையில்லாத ஒரு இளைஞனோட கனவுகள முழுசா பூர்த்தி செய்ய ஸ்வேதா முழு மூச்சா இறங்கிட்டாடா. பார்வை இல்லாட்டிக்கூட அவனோட தைரியம், லட்சியம், கனவு, இவளோட ஹியூமானிடி இதெல்லாம் பாக்கறப்போ நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம் மச்சான். காதல் கீதல் எல்லாத்தயும் விட வாழ்க்கையில எதையாவது சாதிக்கணுங்கற ஒரு வைராக்கியந்தான்டா முன்னாடி நிக்கிது. அவனுக்கு நெறைய உதவிகள் செஞ்சுகிட்டுருக்கா மச்சான். அப்படியே அவங்களுக்குள்ள நல்ல ஒரு அன்டர்ஸ்டேன்டிங் ஆகி, அது மேரேஜ் வரைக்கும் போய்டுச்சு… எப்படியோ நல்லாருக்கட்டும் மச்சான். ஷீ இஸ் ரியலி க்ரேட் மச்சான். ராஜேஷால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

நண்பர்களின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.


navneethsmart@yahoo.com

Series Navigation

நவநீ

நவநீ