ஆசாரகீனன்
நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம் தாகூர் கலையரங்கத்துக்கு அந்த நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டது பற்றியும் சென்ற வாரங்களில் எழுதியிருந்தேன்.
மார்ச் 11 அன்று அமெரிக்காவின் பல மசூதிகளிலும் நடந்த வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது சிறப்புச் செய்தியை வழங்கிய இமாம்கள், பெண்கள் தலைமையில் நடைபெறும் தொழுகையை ‘இஸ்லாத்தை அழிக்க முயலும் ஒரு தீய முயற்சியாக ‘ சித்தரித்ததோடு, தலைமை தாங்க இருக்கும் அமினா வதூதையும் கடுமையாகத் தாக்கிப் பேசினர். நியூயார்க் நகரின் சில இமாம்கள் ‘வன்முறையைக் கையாண்டாவது இந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ‘ அறைகூவல் விடுத்தனர். வேறு சில முஸ்லிம்கள், தொழுகை நடைபெற்ற வெள்ளிக் கிழமைக்குள் அமினா வதூதுக்குத் ‘தக்க தண்டனையை அனுப்பி வைக்குமாறு ‘ அல்லாவிடம் கோரி தொழுகை நடத்தினர். பார்க்க: Not Heroic Enough ?
மேலும், சுந்தரம் தாகூர் கலையரங்க நிர்வாகிகளுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விடுத்த மிரட்டல்கள் காரணமாக, பாதுகாப்புக் கருதி அங்கு இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாது என்று கலையரங்க நிர்வாகத்தினர் கையை விரித்து விட்டனர். இதன் காரணமாக பெண்கள் தலைமையிலான இந்தத் தொழுகையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பினர் தள்ளப்பட்டனர். பார்க்க: A Statement from the Organizers of the March 18th Woman-led Jum’ah Prayer.
திட்டமிட்டபடி, பெண்கள் தலைமையிலான – இருபாலரும் கலந்து கொள்ளும் இந்த இஸ்லாமிய தொழுகையை மார்ச் 18-அன்றே நடத்த வேறு இடம் ஏற்பாடு செய்யப்பட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இது நடைபெறும் இடம் பற்றி முதல் நாள் வரை அறிவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. பேராசிரியர் அமினா வதூதுக்கோ, தொழுகையில் கலந்து கொள்ளும் குழந்தைகள் உள்ளிட்ட பிற முஸ்லிம்களுக்கோ எவ்வித ஆபத்தும் நேராது என்பது உறுதி செய்து கொள்ளப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடம் பற்றி தனிப்பட்ட முறையில் தகவல் தரப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
தொழுகைக்கு முந்தைய நாள் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் இடம் பற்றிய தகவல் தரப்பட்டது. பின்னர், முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பினரின் இணைய தளத்திலும் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
இஸ்லாமியப் பெண்களின் அடிப்படை உரிமையை உறுதி செய்து, சமூக நீதியை நிலைநாட்டும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பகல் 12-மணி வாக்கிலேயே வந்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சி நடந்த ஸினத் அரங்கம் (Synod House) கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு மிக அருகில் அமைந்திருந்ததும், அது கிறிஸ்தவ சர்ச் ஒன்றுக்குச் சொந்தமான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கவை. கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இந்தத் தொழுகையை நடத்துவதால் இந்த நிகழ்ச்சிக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என்றாலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டல்கள் காரணமாக வேறு எவரும் இடம் தர முன்வராத நிலையில், கிடைத்த இந்த இடத்தில் நடத்துவதைத் தவிர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
கட்டிடத்துக்குள் நுழையும் அனைவரும் உலோக சோதிப்புப் பொறிகள் (மெட்டல்-டிடக்டர்கள்) மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ‘உலகின் லிபரல் தலைநகர் ‘ என்று அழைக்கப்படும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்கும் நியூயார்க் நகரில் இத்தகைய பலத்த பாதுகாப்புடன் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது துரதிஷ்டவசமானது என்றாலும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவியிருப்பதை இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது. தொழுகைக்கு முன்னர் பகல் 12-மணி வாக்கில் செய்தியாளர்களுடனான சந்திப்பு நடந்தது. உலகின் பிரபல செய்தி நிறுவனங்களான சி.என்.என்., ராய்டர், ஏ.பி., பி.பி.சி. மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிலருடைய படங்களை கீழே காணலாம்:
செய்தியாளர் கூட்டத்தில் பேசும் ஸாரா எல்டன்டாவி (Sarah Eltantawi). இவர் முற்போக்கு முஸ்லிம் கூட்டணியைத் தொடக்கியவர்களுள் ஒருவர். மேலும், அதன் தகவல் தொடர்பு இயக்குனரும் ஆவார்.
தன் இனிய குரலில் தொழுகைக்கான அழைப்புகளை (Call to Prayer) விடுத்த ஸுஹய்லா எல்-அட்டார் (Sueyhla El-Attar). இவருடைய பாட்டனார் கெய்ரோ நகர மசூதி ஒன்றில் பல ஆண்டுகளாக தொழுகைக்கான அழைப்பு விடுத்து வருகிறார்.
தொழுகையின் ஆரம்பத்தில் கடவுளை நினைவு கூறும் ஜிகிர் (Zikr)-ஐ வழங்கிய கருப்பின முஸ்லிம் பெண் ஸலிமா அப்துல்-கஃபூர் (Saleemah Abdul-Ghafur).
இவர் எழுதியுள்ள Living Islam Out Loud : American Muslim Women Speak என்ற புத்தகம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கிறது.
செய்தியாளர் கூட்டத்தில் பேசும் முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பின் இயக்குனர் அஹமத் நாஸெஃப் (Ahmed Nassef).
எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி, தொழுகைக்குத் தலைமை வகித்த பேராசிரியர் அமினா வதூத் ஆகியோரும் செய்தியாளர் கூட்டத்தில் பேசினர்.
பின்னர் பகல் 12-மணிக்கு தொழுகை ஆரம்பித்தது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 100 முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பெண்களும், ஆண்களும் சம அளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தொழுகையின் போது செய்தியாளர்களும், பார்வையாளர்களும் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி ஸாரா எல்டன்டாவி பேசத் தொடங்கியபோது அரங்கத்துக்கு வெளியே பெரும் கூச்சல் எழுந்தது. பெண்கள் தலைமையில் நடக்கும் இந்தத் தொழுகைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைய முயன்ற சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முதலில் தொழுகைக்கு வந்தவர்களை எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி வரவேற்றுப் பேசினார். பின்னர், தொழுகைக்கான முதல் அழைப்பை ஸுஹய்லா எல்-அட்டார் விடுத்தார்.
அடுத்ததாக, ஸலிமா அப்துல்-கஃபூர் ஜிகிர் வழங்கினார். அதனை அடுத்து, பேராசிரியர் அமினா வதூத் ‘அஸ்-ஸலாம் அலய்கும் ‘ என்ற வாழ்த்துச் செய்தியை வழங்கினார். தொழுகைக்காகக் கூடியிருந்தவர்கள் ‘வலய்கும் அஸ்-ஸலாம் ‘ என்று மறுமொழி தெரிவித்தனர்.
பின்னர், தொழுகைக்கான இரண்டாம் அழைப்பை ஸுஹய்லா எல்-அட்டார் விடுத்தார்.
அதன் பிறகு, பேராசிரியர் அமினா வதூத் சிறப்புச் செய்தியை வழங்கியதோடு, தொழுகையையும் தலைமை தாங்கி நடத்தினார். தொழுகையின் போது எடுக்கப்பட்ட சில படங்களை கீழே காணலாம்:
மேற்கண்ட படத்தில் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி முதல் வரிசையில் இருந்து தொழுவதைப் பார்க்கலாம்.
சுமார் மூன்று மணியளவில் தொழுகை நிறைவு பெற்றது. தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிற்றுண்டியும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
தொழுகை நடந்து கொண்டிருந்தபோதே, அரங்கத்துக்கு வெளியே சுமார் 15 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் – இவர்களுள் பலரும் அரபு நாடுகளிலிருந்து வந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் – வஹாபிகள், பெண்கள் தலைமையிலான இந்தத் தொழுகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, அரங்கத்துக்கு வெளியே சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியே வரமுடியாதபடி காவல் துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். இந்த எதிர்ப்பாளர்களை பின்வரும் படங்களில் காணலாம்:
நுஸ்ரா என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட எதிர்ப்பாளர் ஒருவர், ‘அமினா வதூத் ஓர் ஆபாசமான அவமதிக்கும் செயலைச் செய்துள்ளார் ‘ என்றும் ‘அவருக்கு மரணதண்டனை வழங்குவதே சரியாக இருக்கும் என்றும் ‘ என்றும் சொன்னார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க, பெண்களின் உரிமையை – சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சி பற்றி வெளியான செய்திகளை பின்வரும் சுட்டிகளில் காணலாம்:
aacharakeen@yahoo.com
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-3
- கவிதைகள்
- மனிதச் சுனாமிகள்
- நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்
- பாவம்
- கவிதை
- அவரால்…
- கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்
- கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- விரல்கள்
- மழை நனைகிறது….
- சுவாசத்தில் திணறும் காற்று
- கவிதைகள்
- செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)
- ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘
- கவிதைகள்
- ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?
- வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?
- யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- கவிமாலை (26/02/2005)
- ‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!
- மூன்றாவது மொழிப்போரும் கீறல் விழுந்த கிலுகிலுப்பைகளும்
- ‘சோ ‘ எனும் சந்தனம்
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் பரிசு
- கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்
- நீங்கள் தொலைவிலிருந்தபோதும் உங்கள் அருகிலிருக்கும் இணையப் புத்தகக் கடை
- கல்லூரிக் காலம்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)
- யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி
- நூலறிமுகம்! – ‘மிஷியோ ஹகு ‘வின் ‘ஹைபர் ஸ்பேஸ் ‘!
- து ை ண – 7 ( குறுநாவல்)
- அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)
- ஒத்தை…
- கதவு திறந்தது
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) – காட்சி நான்கு – அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
- பச்சைக்கொலை
- இந்தியப் பெருங்கடல்
- வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
- மாங்கல்யச் ‘சரடு ‘கள்
- தெப்பம் – நாடகம்
- பிறந்தநாள் பரிசு
- மனக்கோலம்
- ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்
- தென்னகத்தில் இனக்கலப்பா ?
- சீனா – துயிலெழுந்த டிராகன்
- சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்
- கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…
- எச்ச மிகுதிகள்
- அன்பின் வெகுமானமாக…
- எனது முதலாவது வார்த்தை..
- நிழல்களைத் தேடி….
- அவரால்…