புலம் பெயர் வாழ்வு (2)

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

இளைய அப்துல்லாஹ்


லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் “தம்பி… இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சாிவராது ஒரு கோயிலைத் திறந்திட்டம்” ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

லண்டன் தெருக்களில் ஈஸ்ட்ஹம்,இல்பேட்,லூசியம்,விம்பிள்டன்,அல்பேட்டன்,வெம்பிளி,ஹரோ என்று இலங்கைத் தமிழர்கள் கூடி வாழும் ஊர்களில் கோயில்கள் பல அடிக்கடி முளைக்கும். ஒரு கோயிலின் தர்மகர்த்தாவோடு சண்டை பிடித்துப் போய் பிாியும் ஐயர் இன்னொரு கோவிலை பிரதிஷ்டை செய்வார்.

கட்சிகளின் பெயர்கள் போல கோவில்களின் பெயர்களும் வைக்கப்படும். உதாரணமாக தி.மு.க. பிாிந்து அ.தி.மு.க போல… அநேகமான கோவில்களில் ஐயர் மாருக்கு உாிய வேதனம் கொடுக்கப்டுவதில்லை. ஆலயத்தை மட்டும் நம்பி இலங்கையில் இருந்து செல்லும் ஐயர்மாருக்கு தங்குமிடம், விசா, உணவு என்று கொடுத்து விட்டு இலங்கை ரூபாப்படி சம்பளம் கொடுப்பதாகவும் ஒரு ஐயர் வருத்தப்பட்டார்.

கோயில்கள் மக்களின் மன அமைதியைத் தரும் ஞானாலயங்களாக கருதப்பட்ட காலங்கள் போய் இப்பொழுது வருமானங்கள் தரும் ஒரு பணப்புழக்கமுள்ள இடங்களாக மாறியிருக்கின்றன. லண்டனில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள் பணம் கொழிக்கும் இடங்களாக இருக்கின்றன. கோவில்களிடையே சண்டைகள் லண்டனில் மிகவும் பிரபலம்.

ஒரு சில கோவில்கள் சேர்ந்து ஒரு திதியை அறிவிக்கும். ஏனைய கோவில்கள் மற்றொரு நாளில் அந்த அனுஷ்டானங்களை மேற்கொள்ளும். தைப்பொங்கல், தீபாவளி போன்ற விடயங்கள் சித்திரை வருடப்பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி கூட சில நேரம் கோவில்களுக்கிடையில் மாறுபடும். சண்டையாக மாறிவிடும்.

கோவில்கள் சைவாின் அடையாளங்களாகவும் ஆத்ம விமோசன தலங்களாகவும் இருக்க வேண்டியவை வெறும் சண்டை சச்சரவுக்குாிய இடங்களாக இருப்பது கண்டு சைவர்கள் மிகவும் நொந்து போயுள்ளனர்.

இந்தியக் கோவில்களின் கருத்துக்கணிப்பு, நேரக்கணிப்பு இலங்கைக் கோவில்களின் நேரக் கணிப்பு என்று இரண்டு வகைக் குழப்பங்களையும் லண்டனில் காணக்கூடியதாக இருக்கும். இரகுநாதையர் பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என்ற பிாிவுகள் பெரும் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துபனவாக இருக்கின்றன.

இரகுநாதையர் பஞ்சாங்கத்தை பின்பற்றுகிறவர்கள் ஒரு நாளும், வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்கள் இன்னொரு நாளும், விசேஷ தினங்களை பங்குபோடும் பொழுது பொது மக்கள் பாவம் குழம்பிப்போய் நிற்கின்றனர்.

சைவத் திருக்கோவில் ஒன்றியம் என்ற ஒன்று இப்பொழுது பல மாநாடுகளை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த சைவத் திருக்கோவில் ஒன்றியத்தினால் கூட எல்லாத் திருக்கோவில்களையும் ஒன்றிணைக்க முடியவில்லை.

ஏன்! என்று அதன் தலைவரைக் கேட்டால் “போய் இணையாத கோவில்களைக் கேளுங்கள்” என்கிறார். இணையாத கோவில்களை வினவினால் சைவத் திருக்கோவில் ஒன்றியத்திடம் நம்பிக்கையின்மையைத் தொிவிக்கின்றன. இந்நிலையில், நம்பிக்கையும் சமூக அக்கறையும் இளைஞர்கள் மீது காிசனையும் வைக்க வேண்டிய சமய நிறுவனங்கள் தங்களிடையேயுள்ள குடுமி பிடி சண்டையைத் தீர்ப்பதற்கே நேரமில்லாமல் அலைகின்றன.

புகலிடத் தமிழர்கள் பற்றிய அக்கறையை அல்லது அவர்கள் மீதான காிசனையை அங்குள்ள ஊடகங்கள் வெளிப்படுத்துகின்ற போதும் பொது அமைப்புகள் பாராமுகம் காட்டுகின்றன.

யோகாசனம் பயிற்றுவித்தல், பிரசங்கங்களுக்கு ஆட்களை இலங்கையில் இருந்து அழைப்பித்தல் போன்ற விடயங்களோடு ஐந்து கால நைவேத்தியங்களுடனான பூஜைகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் இளைஞர்கள் மீது காட்டப்படுவதில்லை….

அதனால் இளைஞர்கள் வழிதவறியவர்களாக ஆகிவிட்டார்கள். மேற்றோ போலிட்டன் பொலிஸ் பத்திாிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அழைத்து தமிழ் இளைஞர்கள் பயன்படுத்திய சாமுராய் வாள்களையும், கிறிஸ் கத்திகளையும் கைத்துப்பாக்கிகளையும் ஆயிரக்கணக்கான கள்ளமான முறையில் தயாாிக்கப்பட்ட கிறடிட் காட்களையும் காட்டியது.

அவற்றை பார்த்த பிறகாவது சமூக அமைப்புகள் இளையவர்கள் மீது அக்கறை செலுத்தினவா என்றால் இல்லை.

இங்கு ஊாில் ஒரு பையன் கெட்டவனாக மாறுகிறான் என்றால், சமூகத்தின் கண் அவன் மீது வெறுப்பையுமிழும். லண்டனில் அவனைப் பார்த்து பெருமை பேசுகின்றனர். அதனால் இவன் இன்னும் அலைக்கழிந்து போகிறான்.

முழுக்க முழுக்க தமிழர் சமூக அமைப்புகளின் அக்கறையின்மையே இவற்றிற்கு காரணம் பணம் பறித்தல் அல்லது கிறடிட் காட் தொடர்பாக… கணினியை வெகு இலாவகமாகப் பயன்படுத்த தொிந்த தமிழ் இளைஞர்கள் கடன் அட்டைகளை தாங்களே செய்கிறார்கள். இது கிாிமினல் குற்றமாகும்.

அண்மையில் ஒரு செய்தி: கிறடிட் காட்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் மெசின்கள் லண்டனில் பார்க்குமிடமெல்லாம் இருக்கும். தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் மெசின் ஒன்றின் உட்பக்கமாக நுண்ணிய கமராவைப் பொருத்தி காட்டை உட்செலுத்தும் போது கார்ட்டின் நம்பரையும்-இரகசிய “பின்” நம்பரையும் கமரா மூலமாக களவாடி அதேபோல் புதிய நகல் ஒன்றை செய்து பணம் முழுவதையும் எடுத்து விட்டார்கள் தமிழர்கள். இன்னொரு சம்பவம். சவுத்ஹோல் பகுதி தமிழர்கள் நிறைந்து வாழும் இடங்களில் ஒன்று, ஒரு தமிழ் தாதி இரவு 11.30 அளவில் வேலை முடிந்து வரும் பொழுது அவரை அள்ளி காாில் திணித்து விட்டு அவாிடம் இருந்த “கிறடிட் காட்டுகள்” இரண்டினை அபகாித்து இரவு 11.30 இற்கு 1000 பவுண்கள் எடுத்து விட்டு பின்பு அவரை அப்படியே காாில் வைத்து அழுத்திப் பிடித்து அதிகாலை 12.10 இற்கு மேலும் 1000 பவுண்களை காட்டில் இருந்து எடுத்துவிட்டு அந்தத் தாதியை நட்ட நடு றோட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.

லண்டனில் ஒரு நாளுக்கு 500 பவுண்கள் கார்ட்டில் எடுக்க முடியும் தாதியும் தமிழ், களவெடுத்தவர்கள் அல்லது அபகாித்தவர்களும் தமிழர்கள். இது உதாரணத்திற்கான இரண்டு சம்பவங்கள். இப்படி பல வன்முறைகளில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களின் செயல்களைப் பார்க்கிறோம்.

இது தமிழர் மீதான இங்கிலாந்து அரசாங்கத்தின் நெருக்கடியை அதிகப்படுத்துவதை நேரடியாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு கொலை வழக்கில் செய்தி சேகாிப்பதற்காக சென்றிருந்த பொழுது தலைமைப் பொலிஸ் அதிகாாி சொன்னது ஞாபகம் வருகிறது. “இப்படி தமிழர்கள் செய்தால் இங்கிலாந்து அவர்கள் மீது இரக்கம் காட்டாது” உண்மைதான். பல தமிழ் இளைஞர்கள் இங்கிலாந்து சிறைகளில் இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். இன்னும் பத்து வருடங்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பல இளைஞர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் சிறைக் கம்பிகளுக்குள்ளேயே முடங்கிப் போய்க்கிடக்கின்றது.

ஒரு தந்தை சொன்னார்: “தம்பி…இஞ்சை பொம்பிளைப் பிள்ளையளையோ நாளும் நடக்கிற சம்பவங்களைப் பார்க்கும் போது ஊரோடை போய்விட வேணும்”.

உண்மையில் பல பெற்றோர்களுக்கு இந்த எண்ணம் வந்து விட்டது.

கலாசார பிறழ்வு, தாய் தந்தையர் உறவுகள் பற்றிய அசட்டை என்று பொியவர்கள் தாங்க முடியாத அந்தரங்களை சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இந்நிலையில், தமிழர்களின் குற்றச் செயல்கள், நடவடிக்கைகள் அகதிகள் விடயத்தில் பல பாதகமான திருப்பங்களை இங்கிலாந்து அரசு எடுப்பதற்கான நிர்ப்பந்தங்களை எதிர்கொள்கிறது. சுதேசிகளாலும் அரசியல் எதிர்ப்புக் காரர்களாலும் இந்த அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு வருகின்றன. உள்துறை அமைச்சும் குடிவரவு, குடியகல்வு அமைச்சும் இது தொடர்பான அறிக்கைகளை அடிக்கடி மாற்றி மாற்றி தொிவிக்கும் போது அகதிகள் தொடர்பான நெருக்குதல்கள் அதிகாிக்கின்றன.

முக்கியமாக அகதிகளின் வேலை செய்யும் அனுமதியை எவ்வித முன்னறிவித்தலுமின்றி அரசாங்கம் பறித்து விடுகிறது. அதனால் அவர்கள் ஜீவனோபாயத்துக்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.

ஆதனோடு நாஸ் எனும் அகதிகளுக்கான உதவும் அமைப்பும் இப்பொழுது கொடுப்பனவுகளை நிறுத்தி விட்டது. அகதிகள் தொடர்பாக வழக்குகளில் வாதாடும் சட்ட நிறுவனங்களுக்கு கொடுத்து வந்த ஒரு தொகைப் பணத்தையும் சில நிறுவனங்களுக்கு நிறுத்தி விட்டது. சில நிறுவனங்களுக்கு குறைத்து விட்டது.

இந்த நிலையில், அகதிகள் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளி அவர்களை இங்கிலாந்தில் இருந்து வலுக்கட்டாயமாக திருப்பி தமது நாடுகளுக்கு அனுப்பும் விடயத்தையே அரசும் உள்துறை அமைச்சும் செய்து வருகின்றது.

சில அகதிகள் மாதமொரு முறை அதற்கென அமைக்கப்பட்ட நிலையங்களுக்கு வந்து கையெழுத்திட பணிக்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு வாரமொரு தடவை சிலருக்கு ஒவ்வொரு நாளும். இப்படியான நெருக்குதல்களும் திருப்பி அனுப்புவதிலும் தொடர்ந்த வண்ணமிருக்கும் நிலையில், அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் பலரை அரசு கையெழுத்திடக் கூப்பிட்ட தினங்களில் திருப்பி அனுப்பும் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.

ஊடகங்களுக்குத் தொியாமல் சமூக நிறுவனங்கள் அகதி உதவி நிலையங்களுக்குத் தொியாமல் நடைபெறும் சங்கதிகள் இவை.

இந்தப் பிரச்சனைகள் பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டிய சமூக அமைப்புகள் இன்னும் பிரசங்கங்களில் மட்டும் வாளாவிருக்க முடியாது. மற்றையை அமைப்புகளில் எவ்வளவு அழகாக பஞ்சாபிகள், குஜராத்திகள், கிறிஸ்தவர்கள் எவ்வளவு அழகாக சமூக கட்டமைப்பை முன்நிறுத்தி வாழ்கிறார்கள். தமிழ், சைவ சமூக கட்டமைப்பை சீர்செய்ய வேண்டியது ஒவ்வொரு சமூக அமைப்புகள் சங்கங்களினதும் கடமையாகும். தமிழர்கள் தொடர்பான ஒரு சந்தேகமற்ற அரசுக்கு தொந்தரவற்ற நிலை வரும் வரைக்கும் தமிழர்கள் மீதான நெருக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இது இங்கிலாந்திலுள்ள தமிழர் சமூக அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் கவனத்திற்கு….

இளைய அப்துல்லாஹ்

லண்டன்

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்