புலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

இளைய அப்துல்லாஹ்



2 ஆண்டுகளுக்கு முன்பு இது நடைபெற்றாலும் நேற்றுப்போலுள்ளது. இப்பொழுதும் நிலமை இதுதான். லண்டனில் ILFORD நகர சபை மண்டபத்தில் அகதிகள் தொடர்பான அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் வந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் தமக்கு அரசியில் அகதி அந்தஸ்து கிடைக்காதா என்பது தான்.
அகதிகள் தொடர்பான கருத்தரங்குகள், விவாதங்களில் உண்மையில் தமிழர் மீதான அக்கறை கொண்டோர் பலர் பங்கு பற்றி ஆராய்ந்து வருகின்றனர். சுயலாபம் கருதாது பலர் ஈடுபட்டு வருவதை நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது.
அகதிகள் உண்மையில் அரசியல் நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்தோர், இன்னும் குடும்பக் கஷ்டம் காரணமாக இடம் பெயர்ந்தோர், வேறு சில காரணங்களுக்காக இடம் பெயர்ந்தோர் என்று பல வகையினர் இருக்கின்றனர்.
ILFORD கூட்டத்திற்கு வந்திருந்த அகதிகளில் 2 பேரைச் சந்தித்துக்கதைத்த போது. அவர்கள் மனநிலை குழம்பிக் காணப்பட்டார்கள். ஒருவர் தொடர்ச்சியாகப் பேசக் கஷ்டப்பட்டார். ஆனால் கதைத்தார். அவர் மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
அவர் அரசியல் நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்தவர். அவர் இலங்கையில் பல முறை சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் உடலிலும் பலத்த காயங்கள் இருக்கின்றன.
அடுத்தவர், பொலிஸ் சைரன் ஒலியைக் கேட்டாலே திடுக்கிட்டு பதறிப் போய் விடுகிறார். புலப் பெயர்வு வெளிநாட்டில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
அகதிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இன்னுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊயுஆடீசுஐனுபுநு பகுதியில் அமைந்துள்ள ழுயுமுஐNபுவுழுN அகதிகள் தடுப்பு முகாமுக்கு முன்பாக கொட்டும் மழையிலும் நடத்தப்பட்டது.
பிரித்தானியவுக்குள் தமிழ் அகதிகள் அதிகமாக உள்நுழையும் இடமாக HARWICH துறை முகமும் னுழுஏநுசு துறைமுகமும் அடையாளங்காணப்பட்டு அவை இரண்டு துறைமுகப் பொலிஸாரின் உயர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. அதி சக்தி வாய்ந்த லேசர் ஓ சுயல படப்பிடிப்பு கென்டயினர்களுக்குள்ளே ஊடுருவி நடத்தப்பட்டது. எல்லா வாகனங்களும் ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட், பெல்ஜியம் போன்ற இடங்களில் இருந்து வருபவை மிகவும் நுண்ணிய முறையில் சோதனையிடப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் பிடிபட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து அங்கு அரசியல் அகதி தஞ்சம் மறுக்கப்பட்டு லண்டனுக்கு வரும் அகதிகள் தொகை அதிகரிக்கத் தொடங்கியதும் பிரித்தானிய அரசு அகதிகள் தொடர்பான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டது.
இப்பொழுது ழுயுமுஐNபுவுழுN அகதிகள் தடுப்பு முகாமில் 400 அகதிகளும் ர்யுசுஆழுருனுளு றுழுசுவுர் அகதிகள் தடுப்பு முகாமில் 550 அகதிகளும் இருக்கிறார்கள். இதில் ஆண், பெண் அகதிகள் உள்ளடக்கம்.
ழுயுமுஐNபுவுழுN அகதி முகாமை தெரிவு செய்து அதற்கு முன்னால் தமிழர் அகதி அமைப்பொன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு காரணமாக அமைந்தது அங்குள்ள தமிழ் அகதிகள் தொடர்பான நலன்களை கவனிக்கக்கோரி அவர்கள் உண்ணாவிரதம் இருந்தமையே.
ஆனால், அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அங்குள்ள அதிகாரிகளோ அல்லது பிரித்தானிய அரசோ ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. “பசிவரும் போது தாமாக உண்பார்கள்” என அங்குள்ள அதிகாரி ஒருவர் கேவலப்படுத்தியதாக அகதி ஒருவர் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் விடயத்தில் அரசும் அதன் அதிகாரிகளும் என்ன அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள் என்னும் விடயத்தில் ஒரு தெளிவின்மையே காணப்படுகிறது.
அரசியல் தஞ்சம் தேவையாக உள்ளவருக்கு கேட்பவர்களுக்கு தஞ்சம் கொடுக்கும் நிலைமையும் பரவலாகக் காணப்படுகிறது.
இதற்கு சட்டத்தரணிகளின் பிழையான வழி நடத்தலே காரணம் வாழும் இடங்களில் எல்லாம் அகதித் தஞ்சம் கோரியவர்களின் வழக்குகளிலே நாம் தான் அதிகமாக வழக்குகளை வெற்றி பெறச் செய்திருக்கிறோம் என்ற விளம்பர அறிவித்தல்களுடன் சட்டத்தரணிகள் கடைகள் இருப்பதனை லண்டன் செல்லும் எவரும் பார்க்கலாம்.
லண்டன் விளம்பரப் பேப்பர்களிலும் தமிழ்; ஓலைகளிலும் இவற்றினைக் காணலாம். அகதிகள் விடயத்தில் தம்மை நாடிவரும் தமிழர்களை மொழி, அரச கருமங்கள் போன்றவற்றைக் காட்டி பயமுறுத்தி காசு பிடுங்கும் நிறுவனங்களாக சட்டத்தரணிகள் அலுவலகங்கள் காணப்படுகின்றன.
அகதிகள் விடயத்தில் தம்மை நாடிவரும் தமிழர்களை மொழி, அரச கருமங்கள் போன்வற்றைக் காட்டி பயமுறுத்தி காசு பிடுங்கும் நிறுவனங்களாக சட்டத்தரணிகள் அலுவலகங்கள் காணப்படுகின்றன. அதிகளுக்கான சட்டச் செலவுகளுக்காக அரசாங்கம் போதுமான தொகையைக் கொடுத்த போதும் அப்பாவி மனிதர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையை சட்டத்தரணிகள் செய்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இப்பொழுது பிரித்தானிய அரசாங்கம் அகதிகள் விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடிக்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட், பெல்ஜியம் போன்ற இடங்களில் இருந்து வரும் அகதிகளை உடனடியாக அந்தந்த நாடுகளுக்கே திருப்பியனுப்புகிறது. நேரடியாக விமானம் மூலம் வரும் அகதிகளை 7 நாட்களுக்குள் அவர்களது விசாரணையை முடித்து விடுகிறார்கள். அநேகமாக வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு தகுந்த அரசியல் காரணமின்றி வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
இதில் அதிகாரிகளுக்கு அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்து இருப்பதாக குடிவரவு, குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல உயரதிகாரிகள் அடிக்கடி இடம்மாற்றப்பட்டு புதிய வேகமாக அகதிகள் விடயத்தில் செயற்படக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்படுவதை நேரடியாக கண்டிருக்கிறேன்.
தமிழ் அகதிகள் இப்பொழுது பெரும் சிரமத்துக்கும் இன்னலுக்கும் ஆளாகி இருக்கின்றனர். நுயுளுவு ர்யுஆஇ றுயுடுவுர்யுஆளுவுழுறு போன்ற இடங்களில் இருக்கும் தமிழ் அகதிகள் ஊசுலுனுழுNஇ ர்ழுருNளுடுழுறு போன்ற இடங்களில் இருக்கும் அகதிகள் பராமரிப்பு அலுவலகங்களுக்குச் சென்று மாதமொரு தடவை அல்லது வாரமொரு தடவை சிலவேலை தினமும் கையெழுத்து இடவேண்டிய நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். இது உதாரணத்துக்கு இங்கு தூரம் ஒரு பிரச்சனை. ஒரு நாள் தேவை போய்வர… வேலைக்கு லீவு எடுக்க வேண்டும் இப்படி பல்வேறு பிரச்சினைகளை அகதிகள் எதிர் நோக்குகின்றனர். ர்யுசுறுஐஊர் னுழுஏநுசு போன்ற பகுதிகளுக்குச் சென்று கையெழுத்து வைக்க வேண்டிய அகதிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இதனால் அகதி வாழ்வின் மீது தமிழர்கள் வெறுப்புக் கொண்டவர்களாக இருக்கின்றர் 2004 ஆம் ஆண்டு 500 இற்கும் அதிகமான தமிழர்கள் அரசு கொடுக்கும் நெருக்கடி காரணமாக திரும்பி சொந்த நாட்டுக்கு போக சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கின்றனர்.
அப்படி சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பி வர விரும்பிய பலர் வந்திருக்கின்றார்கள். இலங்கையில் உள்ள அமைதி நிலைவரம் அகதிகளை சொந்த நாட்டுக்கு வரும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறது.
பிரித்தானியாவில் இருக்கும் பொழுது அகதிகள் படும் சமூக பொருளாதார நெருக்கடிகளும் தம்மை அகதிகள் என்று சொல்லிக் கொள்ள கூச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
1983 கலவரத்துக்கு முதல் சென்றவர்கள் படிப்பதற்காகவும் தொழில் நிமித்தமும் வந்த சிறந்தவர்கள் என்றும், அதற்கு பின் லண்டன் சென்றோரை அகதிகள் என்றும் பார்க்கும் ஒரு தன்மையும் லண்டன் வீடுகளில் காண முடியும்.
“கொழும்பு தெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்” என்று அங்கலாய்ப்பவர்களைக் கண்டிருக்கிறேன்.
பொருளாதாரத்திலும் எந்தவித பெருத்த முன்னேற்றத்தையும் காணாதவர்கள் பலர், இரவு பகலாக கஷ்டப்படும் அவலமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. பிரித்தானியாவில் 8 மணித்தியாலம் வேலை சட்டப்படி செய்ய முடியும். அதற்கு மேல் ழுஎநச வுiஅந செய்தால் அரசாங்கம் நிறைய வரி வுயஒ வெட்டும், ஆகவே இலக்கம் (Nழுஆடீநுசு) பதியாமல் வேலை செய்தால் தமிழ் முதலாளிமாரும் ஏனைய முதலாளிமாரும் குறைந்தளவே சம்பளமாகக் கொடுப்பார்கள். இதனால் அதிக உழைப்பு உறிஞ்சப்பட்டு வேதனம் குறைவாகக் கிடைப்பதனால் பலர் மிகவும் நொந்து போயுள்ளனர்.
இரவு பகலாக கஷ்டப்பட்டு வீட்டு வாடகை, சாப்பாடு, உடுப்பு என்று செலவு செய்து மிச்சப்படுத்த முடியாமல் எத்தனையோ பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். லண்டன் வந்த பயணக் காசு பத்து இலட்சம் இருபது லட்சம் என்று கடன் சுமை அழுத்த இன்னும் உழைத்து உழைத்து தேய்ந்து போனவர்களை நேரில் கண்டிருக்கின்றேன். ஒரு பவுண் 184 ரூபாய் என்று கணக்குப் பார்க்கும் குடும்பத்தினர் அங்குள்ள செலவுகளை அறியாதவர்களாக இருக்கின்றனர். ஒரு முறை முடிவெட்ட குறைந்தது இலங்கை ரூபாப்படி 1810 ரூபா. ஒரு தேநீர் 184 ரூபா. ஒரு பஸ் பயணத்துக்கு ஒரு ஹோல்ட் அல்லது அதற்கு மேல் 184ரூபா. என்று செலவுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை சிரமப்பட்டு நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.
அகதி வாழ்வு அலுத்துப் போய் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்னுமொரு சிக்கல் தோன்றியிருக்கிறது 2000 ஆம் ஆண்டுக்கும் அதற்கு முன்பும் பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரிய குடும்பங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சார்ள்ஸ் இளவரசர் அண்மையில் சில இலங்கை குடும்பங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமைச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதிலும் சில சிக்கல்களை தமிழ் அகதிகள் எதிர்நோக்குகின்றனர். குடும்பங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகைகளைப் பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். அதற்கு அகதிகள் ஆரம்பத்தில் நாட்டுக்குள் நுழைந்த பொழுது பிழையான வழிநடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமையேயாகும்.
ஏற்கனவே நாட்டில் இருக்கும் நண்பர்கள் உறவினர் மூலமாக அகதிகளுக்கான நடைமுறைகளை அரை குறையாகத் தெரிந்து கொண்டுவிட்டு அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றியதன் விளைவை இப்பொழுது அனுபவிக்கின்றனர்.
அரசு அகதிகளுக்கான உதவிப்பணம் வழங்கி வருகின்றது. ஒரு குடும்பத்துக்கு ஒரு தொகை தனிநபருக்கு ஒரு தொகை என்று உதவிப்பணம் வழங்கப்படும். ஒரே குடும்பமாக அல்லாமல் தனித்தனியாக கணவன் வேறாக மனைவி வேறாக பதிவு செய்தால் உதவித் தொகை அதிகமாகக் கிடைக்கும்.
இந்த பண வருவாயை மட்டும் மனதில் கொண்டு செய்த காரியம். மனைவி திருமணம் முடிக்கவில்லை என்று வேறாகவும் கணவன் திருமணம் முடிக்கவில்லை என்று வேறாகவும் பணம் பெற்று வந்தனர். பணம் ஸ்ரேலிங்பவுண்ஸ் இல் நிறையக் கிடைத்தது. இப்பொழுது குடும்பங்களுக்கு நிரந்தர உரிமை வழங்கும் போது நாம் கணவன் மனைவி தான் என்று சொல்ல முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
சிலநேரம் கணவனுக்கு வதிவிட உரிமை வழங்கப்பட மனைவி ஊருக்கு திருப்பி அனுப்பப்படுகிறார். சில இடங்களில் மனைவிக்கு வதிவிட உரிமை வழங்கப்பட கணவன் திருப்பி அனுப்பப்படுகிறார். பண வரும்படியும் பிழையான வழிநடத்தலும் இப்படியான இக்கட்டான நிலையைக் கொணர்ந்துள்ளது. கைவிரல் அடையாளம் ஏற்கனவே அகதிகளாய் நுழையும் போது அவர்களிடம் எடுக்கப்படுகிறது. இப்பொழுது பிரித்தானிய தூதரங்களில் விசா கேட்கும் போது எடுக்கப்படுகிறது இது ஒப்பு நோக்கப்படுகிறது.
அண்மையில் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கேட்ட ஒருவர் மனைவிக்கு வதிவிட உரிமை வழங்கப்பட்டதன் பின்பு கணவனுக்கு மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கையில் வைத்து மீண்டும் ஒரு வருடத்தின் பின்பு கணவனுக்கு மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கையில் வைத்து மீண்டும் ஒரு வருடத்தின் பின்பு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பித்த பொழுது கைவிரலடையாளம் அவர் ஏற்கனவே அகதியாய் இருந்தவர் என்பதைக் காட்டிக் கொடுத்து விட மனைவி பிரித்தானியாவிலும் கணவன் இலங்கையிலுமாக பிரிந்திருந்து கஷ்டப்படுகின்றனர்.
சிலர் பிரித்தானியப் பிரஜைகளைத் திருமணம் செய்து அங்கு வதிவிட உரிமை பெற்றிருக்கின்றனர். வதிவிட உரிமை என்பது ஐரோப்பாவில் ஒரு சீதனமாகக் கொள்ளப்படுகிறது. பத்திரிகை விளம்பரங்களிலும் வதிவிட உரிமைக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனும் வாசகங்களடங்கிய மணமக்கள் தேடல் பக்கங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட அகதிகளுக்கு இங்கிலாந்து ஒரு வரவேற்கும் மையமாகத் திகழ்ந்தது. ஆனால் அது இப்பொழுது அப்படியல்ல….
யுத்தமும் நெருக்கடியும் தமிழர்களை உள்ளுரிலும் வெளிய+ர்களிலும் மனநிலைக் குறைபாடு மனஅழுத்த வேதனைக்குள்ளானவர்களாக ஆக்கியுள்ளது.
சிலர் விஷமருந்தியும் சிலர் ஓடும் ரயில்களில் முன்னால் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இலங்கையில் என்றால் மகன் லண்டனில் இருக்கிறான் என்று பெருமைப்படும் உறவினர்களையே காண்கின்றேன்.
எந்தவிதமான எதிர்ப்புப் போராட்டங்களும் அகதிகள் மீதான கரிசனை கொண்ட விடயங்களும் உண்ணாவிரதமும் அரசை ஒன்றும் செய்துவிடாது என்பதை நேரடியாகக் கண்டேன். அரசு தனக்கு வழங்கப்பட்ட அகதிகள் சாசனசட்டப்படியே நடந்து வருகிறது. இன்னும் நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு அகதிகள் மீதான அழுத்தங்களும் சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பொழுது அகதிகள் வருகையை அரசு கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறது. அகதிகள் பிரித்தானியாவுக்குள் வருவது குறைந்து விட்டது.
அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு உடனடியாக அனுப்பப்படுகிறார்கள்.
தடுப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள் பற்றி அக்கறை செலுத்தப்படுவது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வழக்குகளை முடித்து அகதிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
நாட்டில் இருக்கும் மற்றும் வேலை செய்யும் அகதிகளுக்கான அழுத்தங்கள் இப்பொழுது மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வேலை செய்பவர்களது வேலை அனுமதி முன்னறிவித்தல் எதுவுமின்றி பறிக்கப்படுகிறது. இதனால் வீட்டு வாடகை உணவு, உடை போன்ற விடயங்களுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்படும் அகதிகளைப் பார்க்கிறோம். பிரித்தானியாவில் வாழவும் முடியாமல் இலங்கையிலும், வந்தால் உயிராபத்தை எதிர்நோக்கும் பலரை சந்தித்திருக்கிறேன். இருபக்கப் பிரச்சனைகளால் விரக்தியடைந்தும் உளம் பாதிக்கப்பட்டும் பலர் இருக்கிறார்கள். தொடரும் துன்பங்களோடு….
பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் மறுக்கப்படும் விடயங்கள் இப்பொழுது எல்லா இடங்களிலும் செய்தியாக பரவி வருகின்றது. பிரித்தானிய ஊடகங்களும் இதனை மும்முரமாக பரப்பி வருகின்றன.
பிரித்தானியா தான் அகதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் பிரச்சனையில்லாத ஒரே நாடு என்ற நிலை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. உண்மையும் அதுதான்.
—————————————-

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்