புலம் பெயர்ந்த கடவுளர்கள்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

சந்திரா இரவீந்திரன்


இடம்: புலம் பெயர் மண்ணிலுள்ள ஒரு கடவுள் ஸ்தலம்)

கடவுளர்கள் அவரவர் அடையாளங்களைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் மேலைத்தேய நவீன உடையமைப்புகளுடனும் காட்சியளிக்கிறார்கள்)

சிவன்:- (சடாமுடி, கங்கை, நாகம், புலித்தோல் ஜீன்ஸ்…நவீனரக சப்பாத்துடன் காட்சியளிக்கிறார்)

பார்வதி:- (சேலையுடனான ஒரு நவீன அலங்காரத்துடன் நிற்கிறார்)

சிவன்:- பார்வதி..பார்வதி..எங்கே உன் சின்னமகன் முருகனைக் காணவில்லை.. ?

இங்கே அவனின் பக்தர்களெல்லாம் வெகு நேரமாக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்….அவன் அவர்களைக் கவனிக்காமல் அப்படியென்ன செய்துகொண்டிருக்கிறான் ?

பார்வதி:- முருகன் computerல் ஏதோ விளையாடிக்கொண்டிருக்கிறான்..கூப்பிட்டாலும் வருகிறானில்லை…அவனுக்கு அதே வேலையாகப் போய்விட்டது!

கணபதி:- இல்லையம்மா…அவன் வள்ளி, தெய்வானை என்ற இரண்டு பெண்களுடன் internet chatting செய்து கொண்டிருக்கிறானம்மா.

பார்வதி:- சிவ சிவா…

சிpவன்:- நான் இங்கு தானிருக்கிறேன்….என்னை எதற்காக இப்போ அழைக்கிறாய் ?

பார்வதி:- அவனைக் கூப்பிடுங்கள்…இப்படியே computerம் play stationம் என்று அவனின் பொழுதுகள் போய்விடுகிறது…படிப்புமில்லை…பாட்டுமில்லை…பக்தர்களைக் கவனிப்பதுமில்லை….

சிவன்:- கணபதி…நீ போய் உடனே அவனை இவ்விடம் வரச்சொல்லி விடு. (கணபதி…முருகனை அழைத்தவாறே செல்ல, முருகன் வருகிறார்)

முருகன்:- என்னப்பா ? என்னை அழைத்தீர்களா ?

சிவன்:- முருகா! நீ இப்படியே நாளும் பொழுதும் விளையாட்டுடன் இருந்தால்..உன் பக்தர்களை யார் கவனிப்பது ? இதற்காகவா நாமெல்லாம் சொந்த மண்ணைவிட்டு இங்கு வாழும் எங்கள் மக்களைக் காக்கவும் அருள் புரியவும் வந்தோம் ? அங்கே பார்..! எத்தனை பக்தர்கள் உனக்கு அபிஷேகம் செய்யவும், அர்ச்சனை செய்யவும் காத்திருக்கிறார்கள் ?

முருகன்:- அப்பா! இங்கிருக்கும் பக்தர்களெல்லாம் ஒரேவிதமான பிரச்சனையைத்தான் என்னிடம் எப்பவும் முறையிடுகிறார்கள்! அதைக் கேட்டுக் கேட்டு, எனக்கு ஒரே Boring ஆக இருக்கிறதப்பா!

பார்வதி:- அப்படியென்னப்பா ஒரே விதமான பிரச்சனை ?

முருகன்:- அம்மா! சொந்தமாக வீடு வாங்கியிருப்பவர்கள் mortgage கட்டுவதற்குக் கஸ்டமாக இருப்பதாகவும் அதற்கு ஒரு வழி கிடைக்க அருள் செய்யுமாறும் கேட்கிறார்கள். சொந்த வீடு அல்லாதவர்கள்….ஒரு three bed room வீடாவது வாங்குவதற்கு அருள் புரியுமாறு கேட்கிறார்கள். பழைய range ல் உயச வைத்திருப்பவர்கள் ஒரு புது range ல் car வாங்க அருள் புரிய வேண்டுமென்று கேட்கிறார்கள். Car ஏ இல்லாமல் நடந்து திரிகிறவர்கள் ஒரு நெளிந்த Car என்றாலும் பரவாயில்லை..வாங்குவதற்கு அருள் புரியவேண்டுமென்று கேட்கிறார்கள்….குழந்தைகளெல்லாம் வந்து இரண்டு தேவாரங்களைப் பாடி..என்னைப் பரவசப்படுத்திவிட்டு, computer, play station, mobile phone, football T-Shirt….இப்படியான பொருட்கள் தமக்குக் gift ஆகக் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று வரம் கேட்கிறார்கள். யாருமே இது வரை நன்றாகப் படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டுமென்றோ….அல்லது எனக்குப் பிடித்த மொழியான தமிழ் மொழியில் நல்ல புலமையும் தேர்ச்சியும் பெற்று, அதை புலம் பெயர்ந்து வந்திருக்கும் இந்த மண்ணிலும் பரப்ப அருள் புரிய வேண்டுமென்றோ ஒரு நாளும் என்னிடம் கேட்கவில்லை! இந்த நிலையில் எனக்கு சலிப்பு வராமல் என்னம்மா செய்யும் ? ?

பார்வதி:- சரி…சரி..நீ இன்னும் சாப்பிடவில்லை. அங்கே நல்ல பிரசாதங்கள் வடை, கடலை, பொங்கல், மற்றும் அறுசுவையுண்டி, பஞ்சாமிர்தம் என்று அமோகமான படையல் வைத்திருக்கிறார்கள்..முதலில் போய்ச் சாப்பிடு. அதன் பின்னர் ஆறுதலாக நாம் இதுபற்றி ஆலோசிக்கலாம்.

முருகன்:- அம்மா….இந்த பஞ்சாமிர்தத்தை எத்தனை நாட்களிற்குத் தான் சாப்பிடுவது ? இவையெல்லாம் tin fruitsஇல் செய்யப்பட்டது! அது போலவே இவர்கள் சமைக்கும் மரக்கறிகளெல்லாம் அரைவாசிக்கு மேல் packetல் அடைத்து பல மாதங்களாக fridgeல் பாதுகாக்கப்பட்டது! ஏன் அபிஷேகத்திற்கான பசுப்பால் கூட எத்தனை நாட்களாக fridgeல் வைக்கப்பட்டிருந்தது தெரியுமா ? என் மேல் அதனை அவர்கள் ஊற்றும் போது, அப்பப்பா உயிர் போய் வருகிறது..அத்தனை குளிராக இருக்கும்! இதையெல்லாம் எத்தனை நாட்களிற்குத் தான் நான் சகித்துக் கொள்ள முடியும் ? ?

பார்வதி:- சரி..இப்போதைக்கு போய் சாப்பிடு…நான் அப்பாவுடன் யோசித்து இதற்கு ஒரு வழி சொல்கிறேன்.

முருகன்:- நான் சாப்பிடமாட்டேனம்மா! எனக்கு இவற்றைச் சாப்பிட்டு நாக்கெல்லாம் மரத்து விட்டதம்மா…எனக்கு ஏதாவது pizza அல்லது noodles செய்து தாருங்கள்….

பார்வதி:- pizza வுக்கு நானிப்போ எங்கேயடா போவேன் ? எங்காவது order பண்ணித்தான் எடுக்க வேண்டும்…(யோசிக்கிறார்)

கணபதி:- அம்மா என் mobile phoneல் ஒரு supper pizza கடை number இருக்கிறது. நான் எடுத்துத் தருகிறேன். வேண்டுமானால் order பண்ணுங்கள்.

சிவன்:- முருகா…உன்னை நான் இந்த europe நாட்டிற்குக் கூட்டி வந்ததே பிழையாகப் போய்விட்டதோ என்று இப்போ வருத்தப்படுகிறேன்..

முருகன்:- ஏனப்பா ?

சிவன்:- பின்னயென்ன ? மக்கள் தான், மண்ணை மறந்து, ஏதேதோ காரியங்களிலெல்லாம் ஈடுபடுகிறார்களென்றால் ….எங்கள் பிள்ளைகளுமா… ?

கணபதி:- அப்பா, தம்பி சொல்வதிலும் ஆசைப்படுவதிலும் கூட நியாயம் இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.

பார்வதி: (சற்று அதட்டலாக) கணபதி! தம்பி தான் குழந்தைத் தனத்தில் ஏதேதோ கதைக்கிறான் என்றால் நீயுமா இப்பிடி எதிர் வாதம் செய்வது ? நாங்கள் உலகின் எந்தப்பாகத்திற்குப் போனாலும் எங்கள் ஒழுக்கங்களையும் பண்புகளையும் இயற்கையுடன் இணைந்த அந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைகளையும் மாற்றி விடக்கூடாது மகனே.

கணபதி:- அம்மா நாங்கள் எப்பவும் நாகரீகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடாது. இது computer யுகம் அம்மா..நாங்களும் கொஞ்சமாவது அதற்கேற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்…இல்லையென்றால் பக்தர்களே எம்மைப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்!

முருகன்:- நன்றாகச் சொல்லுங்களண்ணா. அம்மாவும் அப்பாவும் இப்பவும் சிந்துவெளி நாகரித்தில் இருக்கிறார்கள்…

சிவன்:- பார்வதி…இவர்களுடன் கதைத்து பிரயோசனம் எதுவுமில்லை….இவர்களாக உணரும் காலம் வரும் போது தாமாகவே உணர்ந்து கொள்வார்கள்..

(நாரதர் வருகிறார்)

நாரதர்:- ஓம்.. நமசிவாய..ஓம் நமசிவாய….ஈஸ்வரா!..மூவுலகங்களிற்கும் மூத்த பரமனே! முக்கண் முதல்வனே! நடராசப் பெருமானே! ஆணும் பெண்ணும் சரிபாதி என்றுணரச் செய்த சிவசக்திப் பெருமானே! ஆதியும் அந்தமும் நீயே!அரும் பெரும் சோதி நீயே!முழுமுதற் கடவுள் நீயே! (அவர் தொடர்ந்து ஈசனைப் போற்றிப் பேசியபடியே இருக்க)

முருகன்:_ என்ன ? நாரதர் மூச்சு விடாமல் புழுகித் தட்டிக்கொண்டு வருகிறார்.ஏதோ அலுவல் போலும். நாக்குச் சுழுக்கி விடப்போகிறது, நிப்பாட்டுங்கள் நாரதரே!

பார்வதி:- (அதட்டலுடன்) முருகா! வாயை மூடு! பெரியவர்கள் வீட்டிற்கு வரும் போது இப்படியா வரவேற்பது ?

நாரதர்:- (சிரித்தவாறே) பரவாயில்லை..அவனைத் திட்டாதீர்கள் தாயே! வாழும் நாடு அப்படி! அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். முருகனைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. பெரியவர்கள் நாங்கள் அவர்களையும் கூட்டிக் கொண்டு இந்த நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்தோமல்லவா..எங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

பார்வதி:- நன்றாகச் சொன்னீர்கள் நாரதரே! குழப்படி செய்யும் போது பேசித்திருத்தவும் முடியவில்லை, அடி கொடுத்துத் திருத்தவும் முடியவில்லை. சும்மா சாடையாக தட்டினால் கூட..முகத்தை நீட்டிக்கொண்டு அழுகிறான்….மிஞ்சினால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு social serviceல் போய் முறையிட்டுக் கொண்டு அங்கேயே தங்கிவிடுவேனென்று எங்களையே பயமுறுத்துகிறான்….நிலைமை இப்படியிருக்கிறது பாருங்கள்…!

நாரதர்:- (சிரித்தவாறே) இவற்றை நினைத்து மனவருத்தப்பட வேண்டிய நேரத்தில்….அப்பன் ஈசனோ…வெகு அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாரே…!

பார்வதி:- ம்..அவருக்கென்ன …நேரத்துக்கு நேரம் நான் எல்லாப் பணிவிடைகளும் செய்ய ராஜா போல வாழ்கிறார். நீங்களாவது கேளுங்கள் நாரதரே! அவருக்கு நான் பிள்ளைகளின் பிரச்சனைகளைச் சொன்னால்….நான் தான் செல்லம் கொடுத்து இவர்களை இப்படியாக்கி வைத்திருக்கிறேன் என்று என் மீது குற்றம் சொல்லிச் சமாளிப்பாரே தவிர, பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்று ஒரு முயற்சியும் எடுப்பதில்லை! அவரின் உலகம் வேறு என்பது போல அவர் ஜாலியாகத் திரிகிறார்!

நாரதர்:- என்ன தாயே! நீங்கள் ஒருவர் தான் ஈசனை இப்படித் திட்டுகிறீர்களே தவிர….அங்கே பக்தர்களெல்லாம் ஈசனடி போற்றி…எந்தையடி போற்றி…என்று உருகியுருகி பாடிப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்….

பார்வதி:- (கேலியாக) ம்…ம்…நன்றாகப் பரவசப் படட்டும்….அவரின் திருவிளையாடல்கள் எல்லாம் அவர்களுக்கெங்கே புரியப்போகிறது ?

சிவன்:- பார்த்தீரா நாரதரே! நான் சிவனேயென்று என்பாட்டில் இருந்தாலும் இந்தப் பார்வதி என்னை விட்டு வைக்கிறாளா என்று நீரே பாரும்…நான் என்னதான் செய்வது ?

பார்வதி:- இல்லை நாரதரே…நீங்கள் வந்த இடத்தில் நான் என் பிரச்சனையை சொல்லித்தான் ஆகவேண்டும்….

நாரதர்:- சிவ சிவா…என் தலை போய்விடாதபடி..சொல்லுங்கள் தாயே..!

பார்வதி:- போன கிழமை….இவர் குடியிருக்கும் கோயில் தலத்தில்….பக்தர்கள் குழுமியிருக்க….பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது….இவர் அங்கு நிற்காமல் சுற்றப்போய்விட்டார்….பக்தர்களுக்கெல்லாம் இது எங்கே தெரியப்போகிறது ?… கணபதி தான் ஓடிவந்து என்னிடம் வெளியில் சென்ற அப்பா இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை என்ற விசயத்தை என்னிடம் முறையிட்டான். அதன் பின்னர் தான், நான் முருகனை அனுப்பி எல்லா இடமும் தேடவிட்டேன். ( விம்மியழுதவாறே) அந்நேரம் அவர் எங்கே நின்றார் தெரியுமா….ஊர்க்கோடியிலுள்ள ஒரு pubல் நின்று பெண்களின் கபரே நடனம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். இதனை முருகன் வந்து என்னிடம் சொல்லும் போது எனக்கு செத்துவிடலாம் போல இருந்தது! அவரே இப்படியெல்லாம் செய்யும் போது நான் பிள்ளைகளை எப்படித் திருத்த முடியும் ? ?

நாரதர்:- சிவசிவா….சிவசிவா….

சிவன்:- நாரதரே….பார்வதி சொல்கிறாளே என்று நீரும் விளங்காமல்…என்னை அப்படி அழைக்காதீர். நான் pub ற்குச் சென்று நடனம் பார்ப்பதற்காகவா….இந்தச் சமுத்திரங்களெல்லாம் கடந்து இங்கு குடும்பத்துடன் வந்திருக்கிறேன் ? நீர் இதை உண்மை என்று நம்புவீரா ?

முருகன்:- அப்பா…பொய் சொல்கிறார்….நான் என் கண்ணால் கண்டேன்….அப்பா pub ல் நின்று ரசித்து ரசித்து நடனம் பார்த்துக் கொண்டிருந்ததை என் கண்ணால் கண்டேன்….

சிவன்:– (கோபமாக) முருகா….

பார்வதி:- அவனை ஏன் அதட்டுகிறீர்களா ? பார்த்தீர்களா நாரதரே! பிள்ளைகள் என்னிடம் வந்து உண்மையைச் சொன்னால்….இவர் பிள்ளைகள் மீது காரணமில்லாமல் பாய்ந்து விடுகிறார்….இவரின் கூத்துகள் எல்லாம் ஏற்கனவே உலகமறிந்த விடயம் தானே ?

விஷ்ணு:- வணக்கம் ஈஸ்வரா! வணக்கம் சக்தி தேவி!

சிவன்:- வணக்கம் விஷ்ணு! வா.ரும்… நல்ல சமயத்தில் வந்தீர்;….இந்தப் பார்வதியுடன் தினமும் ஒரே ரகளையாக இருக்கிறது….

விஷ்ணு:- அப்படியென்ன பிரச்சனை உங்களுக்கிடையில் இருக்கிறது ?

கணபதி:- விஷ்ணு மாமா! நான் சொல்கிறேன். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த முருகன் தான்! இவனின் தொல்லை தாங்கமுடியவில்லை மாமா! அப்பாவை pub ல் கண்டதாக இவன் அம்மாவிடம் வந்து கோள்முடித்து வைத்திருக்கிறான்….அதனால் தான் அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையில் தினமும் பிரச்சனை!

விஷ்ணு:- (சிரித்தவாறே) சரி சரி எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. நீங்கள் இனி எதுவும் எனக்குச் சொல்லத் தேவையில்லை.

சிவன்:- விஷ்ணு! நான் அன்று pubற்கு ஏன் போனேன் என்ற விடயம் எல்லாம் உமக்குத் தெரியும் தானே ? நீராவது இந்தப் பார்வதிக்கு எடுத்துச் சொல்லும்….கணவன் மனைவி பிரச்சனைகள் எல்லாம் இப்படித் தெருத்தெருவாய் நாறிப் போகிறமாதிரி இந்தப் பெண்கள் ஆக்கிவிடுகிறார்கள்….என்ன செய்வது ?

பார்வதி:- (கோபமாக) ஏன் பெண்களை இழுக்கிறீர்கள் ? ஆண்கள் நீங்கள் செய்யும் கோமாளி வேலைகளையெல்லாம் சரியென்று நாங்கள் கைககட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா ? ?

;

விஷ்ணு:- அடடா ?….இருவரும் சற்று நேரம் பொறுங்கள். (நாரதரைப் பார்த்து) நாரதரே! நீர் வந்த வேலை அமோகமாக நடக்கிறது என்று நினை;கிறேன்….அப்படித்தானே ?

நாரதர்:- சிவ சிவா….நான் எதுவும் அறியேன் மகாதேவா!…சுகம் விசாரிக்கலாம் என்று வந்தேன்….அவ்வளவு தான்.

விஷ்ணு:- ம்….இப்படித்தான்….அன்று லக்ஷ்மியிடமும் என்னை தருணம் பார்த்து மாட்டி வைத்தீர்….

நாரதர்:- சிவ…சிவா….அப்படியானால் நான் போய்விடட்டுமா மகாதேவா….

விஷ்ணு:- இனியென்ன போவது ? ஒரு வழி செய்து விட்டுத்தானே போகவேண்டும்….சரி….சக்திதேவி….நீங்கள் சற்று அமைதியாக நான் சொல்வதைக் கேட்பீர்களா ?

பார்வதி:- சரி கேட்கிறேன் சொல்லுங்கள்….

விஷ்ணு:- நாங்கள் வந்து குடியேறியிருக்கும் இந்த நுரசழிந நாடுகளில் எங்கள் மக்கள் என்னென்ன சொறி வேலைகளெல்லாம் செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா ?

பார்வதி:- எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்….அங்கே கோயில்களைப் பாருங்கள்….எவ்வளவு பக்தர்கள் என்று….

விஷ்ணு:- இதை மட்டும் வைத்து, எல்லோரையும் கணக்குப் போடுகிறீர்கள் நீங்கள். சற்று வெளியில் சென்று….நல்ல இடங்கள், கூடாத இடங்கள் எல்லாவற்றிற்கும் போய் சுற்றிப் பாருங்கள்….அப்போ தான் எங்கள் இளசுகள் எல்லாம் என்னென்ன சுத்துமாத்துகள் செய்கிறார்கள் என்பது தெரியும்!

பார்வதி:- அப்படியென்ன செய்கிறார்கள் ?

விஷ்ணு:- அப்படிக் கேளுங்கள் தாயே! அந்தத் திருகுதாளங்கள் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ஈஸ்வரன் அவர்கள் அதனைப் பார்த்து ஒரு முடிவு எடுப்பதற்காக நீங்கள் சொல்லும் அந்த pub ற்கும் ஒருநாள் போயிருந்தார்…அவர் நடனம் பார்ப்பதற்காகப் போவதென்றால்….ஏதாவது ஒரு பெரிய பொய்யாக உங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டுப் போகலாம் தானே ? அவருக்குரிய ஒரு பிரதானமான அபிஷேக நேரமா அவர் போகவேண்டும் ?

பார்வதி:- (யோசனையுடன்) ம்….அதுவும் சரிதான்.

விஷ்ணு:- அவர் போனது….அங்கே எங்களை ஆத்மார்த்தமாக வழிபடும் பெற்றோருக்குப் பிறந்த சில தமிழ் இளைஞர்கள் மது அருந்திவிட்டு….ஒரு girl friend பிரச்சனைக்காக….ஒருவரையொருவர் கத்தியால் வெட்டிக் குத்தி….சண்டைபிடித்துக் கொண்டிருந்ததை தடுத்து…அந்தப் பிள்ளைகளை அதிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான்….

கணபதி:- பார்த்தியா முருகா ? உன் குரங்குப் புத்தியால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை மனஸ்தாபம் என்று பார்த்தியா ?

பார்வதி:- சிவ சிவா….என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி!

சிவன்:- சரி …சரி உன்னை எத்தனை தரம் தான் மன்னித்து விட்டிருக்கிறேன். நான் காரணம் சொல்ல முயன்ற போதெல்லாம் போதும் உங்கள் புழுகெல்லாம் என்று எத்தனை தடவைகள் உன் காதுகளை மூடிக்கொண்டாய்….இப்போ விஷ்ணு சொன்ன போது தான் கேட்டாயாக்கும்…இனி ஒவ்வொரு தடவைகளும் நான் என் பிரச்சனைகளை விளங்க வைக்க விஷ்ணுவைத்தான் அழைக்க வேண்டுமோ….

நாரதர்:- சரி ….அப்போ…நான் வரட்டுமா ஐயனே ?

சிpவன்:- வந்த வேலை முடிந்தது தானே போய்வா….

நாரதர்:- (மேடையை விட்டுப் போனவாறே) சிவ சிவா….சம்போ மகாதேவா….

காட்சி – 2

____

(இடம்:- வீடு.)

காட்சி:- ( மேசையில் cake வெட்டுவதற்கான ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது. சுவரில் பிறந்த நாள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது)

(பாத்திரங்கள்:- சிவன், பார்வதி, கணபதி, முருகன், விஷ்ணு, லக்சுமி, நாரதர்,….யாவரும் நிற்கிறார்கள்)

சிவன்:- பார்வதி….இன்னும் யார்யாரெல்லாம் வரவிருக்கிறார்கள்…. ?

பார்வதி:- ம்…பிரம்மன் குடும்பம் இன்னும் வரவில்லை….நெருக்கமான உறவினர்களைத் தவிர வேறு யாருக்கும் நாம் சொல்லவில்லைத் தானே ?

(அந்நேரம் வள்ளியும் தெய்வானையும் வருகிறார்கள். அவர்கள் நவீன உடையான tight skirt & blouse , high heels அணிந்திருக்கிறார்கள்)

தெய்வானை:- (நடந்து வந்தவாறே) Hi….முருகா! எப்படி இருக்கீறீர்கள் ? Happy Birthday to You!

முருகன்:- Thank you! தெய்வானை.

வள்ளி:- Happy Birthday to You முருகா!

முருகன்:- Thanks வள்ளி.

நாரதர்:- கொஞ்சம் இருங்கள். (தெய்வானையைக் காட்டி) இவர் தெய்வானை…முருகனின் வருங்கால மனைவி. பெரியோர்கள் பார்த்து நிச்சயம் பண்ணியது! (பின்பு வள்ளியைக் காட்டி) இந்தப் பெண் யார் ?

முருகன்:_ ( நாரதரே!….இவள் just என் girl friend அவ்வளவு தான்.

நாரதர்:- ( முகத்தைச் சுளித்தபடி) சரி…சரி….பூலோகத்து மனிதர்கள் தான் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள் என்றால்…தேவலோகத்தவர்களுமா ? ?

கணபதி:- (மூச்சிரைக்க ஓடி வருகிறார்) அம்மா…அம்மா…பிரம்மன் uncle ம் சரஸ்வதி aunty யும் வருகிறார்கள்….இனி முருகனின் Birthday cake ஐ வெட்டலாம் அம்மா.

பார்வதி:- சரி….வெட்டுவதற்கு ஆயத்தப்டுத்துங்கள்.

(பிரம்மனும் சரஸ்வதியும் மேடைக்கு வருகிறார்கள்)

சிவன்:- பிரம்ம தேவனே வாருங்கள். எங்கே உங்கள் மனைவி…வீணையோடு வீட்டில் அமர்ந்து விடுவார்களோ என்று யோசித்தேன்…நல்லவேளை அவரும் வந்து விட்டார்.

பிரம்மன்:- சரஸ்வதி இன்று party க்கு வராமல் தப்பமுடியவில்லை. ஏன் தெரியுமா ? பார்வதி தேவி அவர்கள், phone ல் கையும் மெய்யுமாக பிடித்து, நிச்சயம் முருகனின் birthday க்கு வரவேண்டும் என்று சொல்லி விட்டா….அதன் பிறகு அவள் எப்படி வராமல் இருக்கமுடியும் ?

சரஸ்வதி:- (மெதுவாக புன்னகை செய்தவாறே) முருகனின் 21 வது பிறந்தநாள் அல்லவா ? வராமல் இருந்தால் நன்றாக இருக்காதல்லவா ?

பார்வதி:- மிக்க நன்றி எல்லோருக்கும். சரி…இனி நாங்கள் உயமந ஐ வெட்டலாம்.

( எல்லோரும் வெட்டுவதற்கு ஆயத்தமாகிறார்கள்….அந்த நேரத்தில்….ஒளவைப் பாட்டியும்….சில முனிவர்களும் வருகிறார்கள்)

ஒளவை:- சிவன் , சக்தி, விஷ்ணு, லக்சுமி, பிரம்மன், சரஸ்வதி….கணபதி, முருகன்….இன்னும் நாரதர்….முனிவர்கள் எல்லாரும் ஒன்றுகூடி நிற்கும் இந்த அற்புதமான நேரத்தை நான் தவறவிடலாமா என்று எண்ணி….நானும் அழையாத விருந்தாளியாக இங்கு வந்திருக்கிறேன். என்னை ஆசிர்வதியுங்கள் சுவாமி! ( எல்லோரும் ஏக குரலில்_)

(வருக…வருக…ஒளவையே! _ என்று வரவேற்கிறார்கள்)

ஓளவை:- எம்பெருமான் முருகனின் அழகு ! இன்று அவனின் பிறந்த நாளன்று அவனை நான் வாழ்த்தி ஒரு பாடல் பாடவே முக்கியமாக இந்நேரம் வந்தேன்.

சிவன்:- சரி…முதலில் cake ஐ முருகன் வெட்டட்டும்…அதன் பின் ஓளவைப்பாட்டி தன் பாடலைப் பாடட்டும்.

(பட்டாசுகளுடன் உயமந வெட்டப்படுகிறது. முருகன் எல்லோருக்கும் கேக் தீத்துகிறார்)

(அதன் பின் ஒளவைப் பாட்டி பாட ஆரம்பிக்கிறார்)

பாடல்:- பழம் நீயப்பா….காய் நீயப்பா….

தமிழ் ஞானப் பூ நீயப்பா….

கடல் நீயப்பா….குளம் நீயப்பா….

எல்லாக் குட்டைகளும் நீதானப்பா…

(இடையில் கணபதி குறுக்கிடுகிறார்)

கணபதி:- நிறுத்துங்கள்….ஒளவைப்பாட்டியாரே..! அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நீங்கள் எப்பவும் என் தம்பியைப் பற்றித்தான் அதிகமாகப் புகழ்ந்து பாடுகிறீர்கள்….என்னை, அவல் கடலை சுண்டல்..அரிசிக்கொழுக்கட்டையோடு மட்டும் நிறுத்திவிட்டார்கள்….இன்று நீங்கள் என்னையும் போற்றிப் பாடவேண்டும். பாடுவீர்களா ?

ஒளவை:- ஆனை முகத்தானே! தும்பிக்கையானே!…முருகனுக்கு மூத்தவனே! உன்னை நான் பாடாமலா !

(பாடல் ஆரம்பிக்கிறது)

ஒளவை:- “குளிர் பாலும்…சீனியில் கரைத்த தேனும்

பழைய பாகும் பருப்புமிவை

நாலும் கலந்து freezerல் வைத்தெடுத்து

நான் தருவேன்!

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!

நீ யெனக்கு இங்கிலீ.ல் நாலுவார்த்தை

பேசி மகிழ ….நல்லதொரு வரம் தா!”

(மேடையில் நிற்பவர்கள் அனைவரும் ரசித்து ஆரவாரப்பட்டுக் கைதட்டுகிறார்கள்)

சிவன்:- பிறகென்ன ஒளவைப் பாட்டியே ! உங்கள் கவிப்புலமையே புலமை! நீவிர் பெரும் பேறு பெற்று வாழ்வீர்! வாழ்க! வளமுடன்!

பார்வதி:- யாரோ வாசலில் வந்து நிற்பது போலத் தெரிகிறது. கணபதி…யாரென்று பார்.

கணபதி:- அம்மா…! order பண்ணிய pizza வந்துவிட்டது.

சரஸ்வதி:- (மெதுவாக) எனக்கு mushroom ஒத்துக் கொள்ளாது….

கணபதி:- சரஸ்வதி aunty , எல்லா variety pizzaவும் வந்திருக்கிறது. பயப்படாதீர்கள். நீங்கள் choose பண்ணிச் சாப்பிடலாம்.

சிவன்:- o.k….எல்லோரும் சாப்பிட ஆயத்தமாகுங்கள்.

முற்றும்.

பிரதியாக்கம்:- சந்திரா.இரவீந்திரன்.

er015g3919@blueyonder.co.uk

Series Navigation

சந்திரா இரவீந்திரன்

சந்திரா இரவீந்திரன்