பச்சரிசி மாவு —1 ஆழாக்கு
வெல்லம் —125 கிராம்
ஏலக்காய் —4
தேங்காய்த் துருவல் —4 ஸ்பூன்
பால் —1/2 லிட்டர்
நெய் —1ஸ்பூன்
குங்குமப் பூ —சிறிதளவு
ஒரு கனமான பாத்திரத்தில் கால் ஆழாக்கு தண்ணீர் வைத்து, அது கொதிக்கும் போது பாதி வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைந்த பின், கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி, நெய் இவற்றைப் போட்டு பின் அரிசிமாவையும் போட்டு, விடாமல் (சுமார் ஐந்து நிமிடங்கள்) கெட்டியாக கிளறிக் கொள்ளவும். பின் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் இட்லி வாணலியில் கால் பாகம் தண்ணீர் வைத்து அதில் இட்லி தட்டை வைத்து அதன் மீது உருண்டைகளை வைத்து பதினைந்து நிமிடங்கள் வேகவைக்கவும். பாலைக்காய்ச்சி அதில் மீதி வெல்லத்தையும் போட்டு கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிதளவு குங்குமப்பூ, ஏலப்பொடி, வேகவைத்த உருண்டைகள் இவைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி விடவும். (பால் கெட்டியாக இருந்தால் ஒரு கரண்டி தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்.)
- நாதரட்சகர்
- இழப்பு
- சிகுமாரபாரதியின் கட்டுரை பற்றிய கருத்து:
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- இந்த வாரம் இப்படி – சூன் 3
- பிப் – ’14
- ஜீவ ராசி
- பாரத சமுதாயம்
- காதல் நதியினிலே
- சொல்லேர் உழவர்
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- அவல் உப்புமா
- அவல் கேசரி
- பால் கொழூக்கட்டை
- கனடா பல்கலைக் கழகம் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது கொடுத்துக் கெளரவித்தது
- கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!