பறவையின் பாதை

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

நாகூர் ரூமி


==============

சிறகுகள் விரித்துச் சென்றது
சின்னப் புறா ஒன்று.
உன்னிப்பாய் உள்வாங்கியும்
ஒன்றுமே தெரியவில்லை.
பார்த்துக் கொண்டே இருந்தும்
பார்வைக்குத் புலப்படவில்லை — அது
பறந்து சென்ற பாதை.

எனினும்
தயக்கமேதுமின்றி
தெளிவாகப் பறந்தது புறா.

சுவடுகளே இல்லாத பாதைதான்
சத்தியத்தின் பாதையோ?

படம் போட முடியாது
பறவையின் பாதையை.
பறப்பது ஒன்றுதான் வழி
பாதையறிந்து கொள்ள.

இறந்தால்தான் தெரியும்
சொர்க்கமும் நரகமும்.
பறந்தால்தான் புரியும்
பயணமும் பாதையும்.

12:48 AM 5/3/2006

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி