வில்லியம் டக்கர்
(ஜெருசலம் போஸ்ட், நவம்பர் 14, 2004)
ஆண்களின் பெருத்த வன்முறையை அறிய ஒரு தடயம்
இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறு தீவில் கண்டறியப்பட்ட குள்ள மனிதர்கள் (Hobbits) இனம், மனித இனம் எந்த அளவுக்கு உயிரியல் பரிணாமத்துக்கு மிக நெருங்கியதாக இருக்கிறது என்பதை நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறது.
எல்லா விஷயங்களும், நமது ஜீன்களுக்குள் புரோகிராம் போல எழுதி வைக்கப்படவில்லைதான். தீவிர சமூக உயிரியலாளர்கள் (சமூகப் பழக்கங்களுக்கு உயிரியல் (ஜீன்) காரணம் உண்டு என்று கூறுபவர்கள்) கூட 40லிருந்து 50 சதவீத பழக்க வழக்கங்களே மரபணுவால் நிர்ணயிக்கப்படுகின்றன என்று கூறுகிறார்கள். கலாச்சார பழக்க வழக்கங்களும், தனிமனித தேர்வும் இதே போல முக்கியப் பங்கு வகிக்கின்றன. பரிணாமமும் உயிரியலும் ஒரு சில அடிப்படை நியமங்களை மட்டுமே ஏற்படுத்தித்தருகின்றன.
உருவத்தில் பெரிய இனங்கள் ஒரு தனித்தீவில் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த இனத்தை வேட்டையாடும் பெரு மிருகங்களும் இல்லாத நிலையிலும் மிகக்குறைவான வாழத்தேவையான மூலங்கள் இருக்கும் நிலையிலும் அளவில் சிறியதாக ஆகின்றன. இதுதான் Hobbits என்றழைக்கப்படும் குள்ள மனிதர் இனத்துக்கும் ஆகியிருக்கும் என்று கருதலாம்.
ஒரு கலாச்சாரம் பலதார மணத்தை தனது இனப்பெருக்க முறையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது, மிக அதிகமான ஆண் வன்முறையையை அனுபவிக்கும் என்பது இன்னொன்று.
பலதார மணத்தின் நியமங்களும், ஒரு தார மணத்தின் நியமங்களும் பல அறிவியலாளர்களுக்கு நன்றாகத் தெரிந்தவையே. இதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள சிறிய கணக்கீடே போதும். ஒரு சமூகத்தில் ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையுள்ள ஆண்களும் பெண்களுமே பிறக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரே ஒரு இணையை மட்டுமே எடுத்துக்கொள்ளும்போது, ‘ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆண் ‘ என்று இருந்தால், எல்லோருக்கும் ஒரே அளவு இணை கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்.
ஒரு சமூகம் பலதார மணத்தை அங்கீகரித்தால், இந்த சமன்பாடு மாறுகிறது. ஒரு ஆண் பல பெண்களை மணந்துகொள்ளும்போது, மற்ற ஆண்களுக்கு ஒன்றும் கிடைக்காது. ஒரு இடத்தில் நான்கு பெண்களுக்கு ஐந்து ஆண்கள் இருந்தால், ஐந்தில் ஒரு ஆண் திருமணமாகாமல்தான் இருக்க வேண்டும்.
இது சமூகப் பிரச்னைகளை உருவாக்குகிறது. அதே போல உருவாக்கிய சமூகப்பிரச்னைகளுக்கு தீர்வுகளையும் உருவாக்குகிறது. ஒன்று குழந்தைத் திருமணம். மனைவி பற்றாக்குறை இருப்பதால், ஆண்கள் இன்னும் கீழிறங்கி பெண்கள் மணத்துக்கு தயாராவதற்கு முன்னரே திருமணம் செய்யலாம் என்ற நிலையை கொண்டுவருகிறார்கள். இன்னும் சில பழங்கால சமூகங்களில் ஆண்கள் குழந்தைகளை திருமணம் செய்துவிட்டு அவர்கள் பூப்படைய காத்திருந்தார்கள்.
அதே போல, பலதார மணம் உள்ள சமூகங்கள் கட்டுப்பெட்டியாகவும், பெண்களை பூட்டி வைப்பவையாகவும் (extreme puritanism and be restrictive toward women) இருக்கின்றன. பெண்கள் குறைவானவர்களாக இருப்பதினால், பெண்களை பூட்டிப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. அதே போல, பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் மணப்பெண்ணுக்கு பரிசப் பணம் (brideprice) தரவேண்டும். (வரதட்சிணை என்னும் டெளரி பெண்ணை திருமணம் செய்து அனுப்ப மாப்பிள்ளைக்கு பணம் கொடுக்கும் வழக்கம். இது ஒருதார மண சமூகத்தின் அடையாளம்) மணப்பெண்ணுக்கு கொடுக்கும் பணம் ஏழை ஆண்களிடையே இருக்கும் திருமணமாகாத ஆண்களுக்கு கிடைக்கிறது.
இவ்வாறு சாதாரண, குடும்பம் சார்ந்த சமூகத்தில் இடம் கிடைக்காமல் வெளித்தள்ளப்பட்ட ஆண்கள், இது போன்ற இதர ஆண்களுடன் இணைந்து கோஷ்டிகளை உருவாக்குகிறார்கள். இவர்கள் குற்றவாளிகளாகவும், போர்க்குணமிக்கவர்களாகவும் ஆகிறார்கள். பலதார மணம் அதிகம் இருக்கும் பூமத்தியரேகை பிரதேச ஆப்பிரிக்காவில் ‘புரட்சிகர ராணுவங்கள் ‘ ஏராளமாகத் தோன்றி புதர்களில் பலவருடங்கள் மறைந்திருந்து கிராமங்களிலிருந்து பெண் குழந்தைகளையும் மற்றவர்களின் மனைவிமார்களையும் கடத்திச் சென்றுவருகின்றன.
பலதார மணம் மட்டுமே இப்படிப்பட்ட சமச்சீர் குலைவுக்கு காரணம் அல்ல. சீனா தன்னுடைய ‘ஒரு குழந்தை ‘ கொள்கை மூலம் , பலதாரச் சமூகங்கள் அடைந்திருக்கும் அதே இடத்தை (அதாவது பெண்கள் திருமணம் கொள்ளக் கிடைக்காமல் , ஆண்கள் தனிமைப்பட்டிருக்கும் நிலை – மொ பெ) அடைந்திருக்கின்றது.
‘மொட்டையான கிளைகள். ஆசியாவின் மிதமிஞ்சிய ஆண்கள் மக்கள்தொகை ‘ ( Bare Branches: The Security Implications of Asia ‘s Surplus Male Population) என்ற நூலாசிரியர்கள் ஆன்ரியா எம் டென் போயர் மற்றும் வேலரி ஹட்சன். பெற்றோர் செய்த ஆண்குழந்தைத் தேர்வு (பெண்சிசுக் கொலை) காரணமாக, இன்று 100 பெண்களுக்கு 120 ஆண்களாக உருவாகியிருக்கின்றது என்று ஆண்டிரியா எம் டென் போவர், வெலரி ஹட்சன் ஆகியோர் தெரிவிக்கிறார்கள். ‘பெய்ஜிங் தலைவர்கள் இப்படிப்பட்ட ஒரு சமூக பிரச்னையை வெகு விரைவில் எதிர்கொள்ள வேண்டும் ‘ என்று எச்சரிக்கிறார்கள். இது வேறு வழியின்றி ‘பிரிவினைவாத, இனவாத வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்றும், அது சர்வாதிகார சமூகத்துக்கே இட்டுச் செல்லும் ‘ என்றும் எச்சரிக்கிறார்கள்.
பலதார மணத்தை பிரபலமாக அங்கீகரித்த ஒரு கலாச்சார அமைப்பு இஸ்லாமாகும். இது பாலைவனத்தில் முன்பு இருந்த சமூக பழக்கவழக்கங்களிலிருந்து பெற்ற பழக்கம் என்று மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள். (ஹீப்ரூ மூதாதையர்களும் இது போன்ற பலதார மணத்தை நடைமுறையில் கொண்டிருந்தார்கள்.) சவூதி அரேபியாவில் ஆண்கள் பெண்கள் விகிதம் 125-100ஆக இருக்கிறது. இது உலகத்திலேயே மிக அதிகமான விகித பிரிவு. முஸ்லீம் சமூகங்களில் மிகவும் அதிகமாக பெண்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வளர்ப்பது, பெற்றோரால் நிர்ணயிக்கப்பட்ட திருமணத்துக்கு அவர்களை தயார் செய்வதற்காகவே. ஒரு சில தாராளவாதம் கொண்ட உறவுமுறைகள் , ஒரு பலதார மணம் உள்ள சமூகத்துக்கு அச்சுறுத்தலாய் அமைகிறது.
இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் பாலைவன பழங்குடிகளுக்கு மிகவும் உதவியிருக்கக்கூடிய பலதார மணமுறை, இன்று நகரம் சார்ந்த சமூகத்தில் மிகவும் வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஆபத்துகளை உருவாக்குகிறது. மித மிஞ்சிய ஆண் மக்கள் தொகை என்பது ஒரு டைம்பாம் போன்றது. இது நிலைத்த சமூக அமைப்புக்கு தொடர்ந்து குழி வெட்டுகிறது. சர்வாதிகார அமைப்புக்கள் இன்னும் பெரும் ஆபத்தை இதன் மூலம் எதிர்நோக்குகின்றன. இப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்புகளுக்கு இந்த வன்முறையை கட்டுப்படுத்த ஒரே வழி அந்த வன்முறையை வெளியே அனுப்பி வெளியில் இருக்கும் சமூகங்களைத் தாக்குவதுதான். பலதார மணம் உள்ள சமூகம் தொடர்ந்து தன் அருகாமை சமூகங்களுடன் தொடர்ந்த ஒரு போரிலேயே ஈடுபட்டு இருக்கும் என்பதை அறிவியல் பார்வை உறுதி செய்கிறது.
இந்த மேற்கண்ட காரணங்களால், இஸ்லாமிய சமூகங்கள் இதர உலக சமூகங்களுடன் கொண்டிருக்கும் பிரச்னையின் வேர் பலதார மணத்திலேயே இருக்கிறது என்ற முடிவுக்கு வராமலிருப்பது கடினம். தற்கொலைப் படையினர் பலதார மண சமூகத்தின் கடினமான உண்மையை உள்ளார உணர்ந்து கொண்டவர்களாக இருக்கலாம். அதாவது ஒரு சில ஆண்கள் சமூகத்திற்குத் தேவையற்று உதறிவிடப்படக்கூடியவர்கள். அப்படியாயின் மதமே இந்த அழுத்தங்களை தன் அருகாமை சமூகங்களுக்கு எதிராக திருப்பி விடுகிறது.
ஒருதார மணம் என்பது பெரும்பாலான மனித சமூகங்களில் அமைதியான இயற்கையை உருவாக்க முனையும் சமூக ஒப்பந்தம். ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு இணை கிடைக்கும் என்பதை வாக்குறுதியாக அளிக்கும் இந்த சமூகம், ஆண்களை அமைதிப்படுத்துகிறது. இதனால் சமூக இணக்கமும் ஏற்படுகிறது.
ஒரு சில இஸ்லாமியச் சிந்தனையாளர்கள், இன்று பலதார மணம் தனது உபயோகத்தை நகர்சார்சமூகங்களில் இழந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இந்தப் பலதார மணம் மதத்தாலேயே அங்கீகரிக்கப்படாமல் ஒருவேளை இருக்கக்கூடும். இப்படிப்பட்ட சீர்திருத்தத்தின் பாதை நிச்சயம் செல்லத்தக்கது.
**
- தமிழின் மறுமலர்ச்சி – 6
- பயங்கரவாதமும், பலதார மணமும்
- பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்
- காஞ்சி சங்கராச்சாரியார் கைது
- ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்
- இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்
- ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்
- போரும் இஸ்லாமும்
- செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்
- மெய்மையின் மயக்கம்-26
- காணாமல் போன கடிதங்கள்
- தமிழர்களின் அணு அறிவு
- வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
- ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை
- ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்
- மக்கள் தெய்வங்களின் கதை – 10
- பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு
- கடிதம் நவம்பர் 18,2004
- கடிதம் நவம்பர் 18,2004
- ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
- கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்
- ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…
- ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்
- அவளோட ராவுகள் -3
- எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்
- அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
- செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
- வெகுண்டு
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46
- சகுந்தலா சொல்லப் போகிறாள்
- நெஞ்சுக்குள்ளே ஆசை
- நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்
- கவிதைகள்
- தீ தந்த மனசு
- கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்
- ஞானப் பெண்ணே
- மீரா – அருண் கொலட்கர்
- புரூட்டஸ்
- நன்றி, சங்கரா! நன்றி!!
- பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
- கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு
- இந்தமுறை
- பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)
- சங்கடமடமான சங்கரமடம்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்