நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பி ஆர் வீரமணி


ஜெயமோகனுகாக நெருப்புநிலவன் வரிந்து கட்டிக் கொண்டுவாரி இறைத்திருப்பது

‘விளம்பரசெறு ‘ தான் என்று எண்ணவேண்டி உள்ளது. ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பில்

தன்னை அறியாமலேயே வெளிப்படுகிறான். அந்த வகையில் ஜெயமோகன் காவி வண்ணத்துடன்

வெளிப்பட்டிருக்காலாம். அரசு பதில் என்பதுஅரசுவின் திறனாய்வுப் பார்வை தவறு என்றால் அந்த

கருத்துகளைக் காரண காரியத்துடன் மறுப்பதை விடுத்து கருணாநிதியுடன் ஒப்பிட்டு

ஜெயமோகனை உயர்த்துவதாக்கருதி கருணாநிதியை இழிவு படுத்துவதேன்.

இந்தமாதிரிக் கதையெல்லாம் வாசகர்கள் நிறையவெ கண்டிருக்கிறொம். ஒருமுறை ஜெயலலிதா

சென்னை கடற்கரையில் உண்ணா நோன்பு இருந்த போது பாலகுமாரன் சென்று பார்த்து

வந்ததைச் சுதாங்கன் [ஜுனியர்விகடன்] மாய்ந்து மாய்ந்துஎழுதித்தீர்த்தார். ஏனொ நீங்கள்

விளம்பரத்தாலெ உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்பதை உணர மறுக்கிறிர்கள்.

ஜெயகாந்தனைக் கருணாநிதி ரசித்ததைப்போல ஜெயமோகனை ரசிக்கும் காலம் வரும் வரை

நெருப்புநிலவனும் பொருத்திருப்பது நல்லது.ஏதோ ஜெயமோகன் என்ற மாமேதை மீது அரசு

மிகப்பயங்கரமான குற்றச்சாட்டைக் கூறிவிட்டது போல நெருப்புநிலவன் அனலைக்

கக்குவதுநெருப்புநிலவனுக்கும் மலிவான விளம்பரம் தேவைப்படுகிறது என்பதையே காட்டுகிறது.

குமுதம்,ஆனந்த விகடன் போன்ற ‘ பேசும் படங்கள் ‘ இலக்கியத்தரம் வாய்ந்த இதழ்களாக

நெருப்புநிலவன் கருதிப்பேசுவதும் ,அரசு பதிலே ஜெயமொகனுக்கு எழுதப்பட்ட உச்சநீநிமன்ற

தீர்ப்பு போலவும் எழுதுவது வெற்றுகூச்சல் .

‘ஈரோடு தமிழர் உயிரோடு ‘ என்று எழுதிய பிரபஞ்சனின் பேனாவில் ‘பிராமண எதிர்ப்புமை ‘

என்று எழுதும் நெருப்புநிலவனுக்கு அது ‘ பகுத்தறிவுமை ‘ , ‘ தன்மானமை ‘ என்று உணரமுடியாமல்

போனது ‘தமிழர்கள் செய்த பாக்கியமா ? ‘

நெருப்புநிலவன்பேனாமை குழப்ப மையா ? அறியா மையா ? விளம்பர மையா ?

—-

brvmani@sify.com

Series Navigation

பி ஆர் வீரமணி

பி ஆர் வீரமணி