நீ வருவாயா ?

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

வத்ராப் சுந்தர்.


********
நான் பூமியில் ?னித்த நேரம்
நீயும் இருந்ததைப் பார்க்க முடியவில்லை
ஒருநாள் இருநாளல்ல; சில மாதங்களுக்கு.
தவழ்ந்த நாளில் பார்த்தாலும்
உன்னை உணரவில்லை நான்.
எழுந்து நின்று பார்க்கையில்
சற்று பயமாக இருந்தது
பார்க்காதே என்று அம்மா அதட்டினாள்!
உன்னை கவனிப்பதை விட்டுவிட்டேன்
யாரும் உன்னை கவனிக்கவில்லை
இருந்தாலும் நீ வளர்ந்தாய் – என்னுடன்.
சாலையில் தனித்து நடக்கையில்
என் காலடியில் விழுந்து கிடந்து
என்னை விட்டுச் செல்ல மறுப்பாய்.
குழந்தையாய் ஒட்டிக் கொள்வாய் – சிலசமயம்
கோபமுற்று வி ?வரூபம் எடுப்பாய்
நான் கண்டுகொள்ளவில்லை
நாம் காதலர்களல்ல சகோதரர்களல்ல
எவ்வுறவும் நமக்குள் இல்லை
நானே நீயா என்ற கேள்வி எழுந்தபோது
‘சே.. நீ நல்லவன் ‘ என்றார்கள் என்னை.
ஆனாலும் சில சந்தர்ப்பங்களில்
நான் செய்யும் செயல்களுக்கு
உன் முகத்தைக் கட்டிக் கொண்டேன்
வருடங்கள் உருண்டோடிவிட்டன
என்னில் பல மாற்றங்கள் – ஆனாலும்
நீ அப்படியேதான் இருக்கிறாய்
நடக்கத் தடுமாறி கோல் ஊன்றியபோது
என்னில் பரிதாபப் பட்டோ என்னவோ
நீயும் கோலூன்றிக் கொண்டாய்
எனக்குத் தெரியும் உனக்கது தேவையில்லை என்று.
நீ விழுந்துவிட மாட்டாய்.
உனக்கு யாரும் தேவையில்லை – என்னைத் தவிர.
அப்படி என்ன செய்துவிட்டேன் உனக்கு ?
ஏன் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் ?
கேட்கமுடியவில்லை உன்னிடம்
ஏனென்றால் நீ பதில் சொல்லமாட்டாய்.
இதோ படுக்கையில் நான்
இறுதி நாள்களை எண்ணிக்கொண்டு.
என்னைக் கொண்டுசெல்கிறார்கள்
என்னுடன் வருகிறாய் என்று அறிவேன்.
உன்னைப் பார்க்கத்தான் முடியவில்லை
?னித்த நாள்களைப் போல.
இவ்வுலகைவிட்டுச் செல்கிறேன்
சொர்க்கத்திற்கா நரகத்திற்கா ?
எங்கேயென்று தெரியவில்லை.
எங்கு நான் சென்றாலும்,
அங்கும் என்னுடன் வருவாயா –
என் நிழலே ?
***
gitaravi@omantel.net.om

Series Navigation

வத்ராப் சுந்தர்.

வத்ராப் சுந்தர்.