நாகரத்தினம் கிருஷ்ணா
வணக்கத்திற்குரிய ஆசிரியருக்கு,
எனது நீலக்கடல் புதினம், தமிழக அரசின் (வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளில்) சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த நாவலுக்கான முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
” இப்படைப்பின் வெற்றிக்கு, மூவர் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.
1. திண்ணை இதழும், ஆசிரியர் குழுவும்: இப்படைப்பைத் தொடராக திண்ணை இணைய இதழில் எழுதுவதற்கு நான் விருப்பம் தெரிவித்தபோது, மனமுவந்து ஏற்றார்கள். முழுச்சுதந்திரத்தோடு என் எழுத்தைப் பதிவு செய்ய இறுதி அத்தியாயம்வரை அனுமதித்தார்கள். நீலக்கடல் பேசப்படுமானால், திண்ணை இணைய இதழின் அணைப்பும் ஆதரவும் பேசப்படவேண்டும்.
2. இடைக்கிடை எனக்கு உற்சாகமளித்த மின்னஞ்சல்கள்
3. என் படைப்புகளில் முதல்வாசகரும், எழுத்துப் பிழைகளை கூடியவரை குறைக்க உதவிய எனது இலங்கை நண்பர் மரியதாஸ், எனது அலுவற்பணிகளைக் குறைத்து எழுத்தில் அக்கறை கொள்ளவைக்கிற என் துணைவியார்.
இம்மூவர் அணியோடு படைப்புக்குறிய தகவல்களைப் பெற்றுத் தந்த காஞ்சிபுரம் குபரக்கோட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்: திருவாளர்கள் சீனுவாசன், தேவராயன்; எனது தேடுதல் வேட்டைக்குத் துணபுரிந்த நண்பர்கள் புதுச்சேரி ராஜசேகரன், பாரீஸ் முத்துக்குமரன், மொரீஷியஸ் பாவாடைப்பிள்ளை அனவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக என்னை நாவலொன்று எழுதவேண்டுமென்று அன்பு கட்டளையிட்ட, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவோ எழுதவோ அறியாதவராகவே மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்திற்கும் எனது நன்றிகள், கண்ணீருடன்.”
என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளிநடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும்.”
எனக் குறிப்பிட்டிருந்தேன்.
இது தவிர பரிசு பெற்றிருக்கும் இந்த நேரத்தில் வேறு சிலரையும் மறக்க முடியாமல் இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது
குறிப்பாக விகடனில் பிரசுரமான எனது சிறுகதை ‘பார்த்திபேந்திரன் காதலி’யே(9-5-04) பின்னர் நீலக்கடலாக விரிவாக்கம் பெற்றது. விகடனில் பிரசுரமாகி தனிப்பட்டக் கவனம் பெற்றதால், அதனையே கருவாககொண்டு நாவலொன்று எழுதினேன். எனவே ஆனந்த விகடனுக்கும் எனது நன்றிகள்.
பிறகு திரு. சுஜாதா அவர்கள். நான் அவரது அபிமானி, ஏகலைவன், கட்டை விரலை கேட்கமாட்டாரென்கிற நம்பிக்கையில், நிறைய கடன் பட்டிருக்கிறேன்.
இது தவிர கீழ்க்கண்டவர்களும் எனது வெற்றிக்கு ஏதோவொரு வகையில் பொறுப்பு: திருவாளர்கள் அவ்வை நடராசன், கி. அ. சச்சிதானந்தன், பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், இரா.முருகன், சதாரா மாலதி, பதிவுகள் ஆசிரியர் கிரிதரன், சுதா இராமலிங்கம், அனைவருக்கும் நன்றிகள்.
மீண்டும் திண்ணை ஆசியருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்..
பணிவுடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
நீலக்கடல் வெளியீடு:
1.சந்தியா பதிப்பகம்
•பிளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57-53வது தெரு, அசோக் நகர்,
சென்னை -600 083
2.Any.Indian.comலும் கிடைக்கிறது.
nakrish2003@yahoo.fr
- Salute el Presidente
- பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- யானை வரும் முன்னே
- நீர்வலை (7)
- காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !
- என் அறை
- இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)
- ‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு
- பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா
- தப்புக் கணக்கு
- எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்
- கூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9
- NFSC Screening – ” Chennai:The Split City” by Shri Venkatesh Chakravarthy
- கடித இலக்கியம் – 41
- சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
- “மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”
- வாய் மொழி வலி
- பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்
- எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு
- உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
- வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)
- கொழும்பு குதிரை
- மடியில் நெருப்பு – 21