சேவியர்.
என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில்
சிாித்துக் கிடக்கிறது
என் மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும்
ஆளுயரக் கரடி பொம்மை…
வலது சுவர் ஓரத்தில்
விட்டம் விரலால் தொட்டுப்பார்க்கும் தூரத்தில்
செயற்கைக் குளிர் செலுத்திக் கொண்டிருக்கிறது
சிறு குளிர்சாதனப் பெட்டி.
என் கண்ணாடி மேஜைமேல்
கவிதைத் தனமாய் ரோஜாக்கொத்துக்கள்
கலைநயம் கலையாத
அமொிக்கத் தொலைபேசி.
மிக மெலிதாய் குளிர்காற்றில் கரைந்து
காதுக்குள் நழுவி வீழும்
பீத்தோவானின் சிம்பொனி.
மெல்லிய என்
இரவு ஆடையோடு உறவு கொண்டாடும்
ஆவின் பால் நிறத்தில்
என் அழகிய நாய்க்குட்டி.
என் தேகம் பொத்தும் அத்தனைக்
குமிழ்களையும்
உடைத்துக் குவிக்கும்
என் மேனி குத்தும் கிழிந்த பாய்.
கனவுகள் மட்டும் நாளையும் வரும்.
****
- வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ?
- ஆறுதல்
- பாராட்டு
- இந்த வாரம் இப்படி, மே 27, 2001
- இந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான்.
- நாளை மீண்டும் காற்று வீசும்…
- நண்பன்
- புறநானூறு 343
- தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்
- வீட்டில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி ?
- எலுமிச்சை ரசம்
- விளக்கு இலக்கிய அமைப்பு
- பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்