நான் நான் நான்

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

தேவமைந்தன்


முக்கியமான தமிழ்ப்
பண்பாட்டுக் கருத்தரங்கு.
அதிகாரி நுழைகிறார்.
அமர்வு நிறுத்தப்படுகிறது.
கெஞ்சிக் கொஞ்சி
அழைக்கப்படுகிறார்.
கருத்தரங்கில் கட்டுரை
சமர்ப்பிக்க வந்தவர்களில்
கவுரவம் என்றொன்றும்
தன்மானம் என்னுமொன்றும்
அறிந்து உணர்ந்தவர்கள்,
‘ ‘ஓரம்போ! ஓரம்போ!
ருக்குமணி வண்டி வருது! ‘ ‘
அடிமைக்குரல் வந்தவுடன்,
ஒளவை சொன்ன
வழிப்படி ‘வில ‘கி
ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
அறிவும் ஆய்வும்
விருதும் ‘ ‘வாங்கிய ‘ ‘
காக்காய்கள், அதிகாரிசுற்றி.
‘ ‘ஈ…ஈ..ஈ.. ‘ ‘ ‘ ‘ஈ…ஈ..ஈ.. ‘ ‘
மின்னிடுகின்றன பல்வெளிச்சங்கள்.
அதிகாரி தமிங்கிலத்தில்
உரையாற்றத் தொடங்குகிறார்.
அவசியமில்லாத வார்த்தைகள்,
அவசரஅவசரமாகப் பிரசவமாகின்றன.
‘ ‘நான் படித்தது விஞ்ஞானம்
நான்நான் அறிவேன் எல்லாமும்
கழுதை உதைப்பது ஏன் தெரியுமா ?
நான்நான் நான் அறிவேன்.
நீங்களெல்லாம் ஞானம்பெற
வழிவகைகள் சொல்லுகின்றேன் ‘ ‘
என்று மொழிமென்றார்.
புளகாங்கித்துப் போயின
சந்தர்ப்ப முகமூடிகள்.
அரசியலும் அமைச்சும்
அதிகாரிமுன் வெட்கின.
எல்லாம் தெரிந்தவருக்கு,
தெரியவில்லை ஒன்றுமட்டும்.
இதைவிடவும் பெரியமேடையில்
இதைவிடவும் குழறிய
நான்நான்நான் ஒன்று –
ஒரு இனிய காலைப்பொழுதில்
நமதுநாட்டு
வடகிழக்கு மூலைக்கு
மாற்றப் பட்டதற்கும்,
பின்னால் சுயமான
‘நான் ‘ மறந்து ‘போன ‘தற்கும்
பின்னால் – இதே
காக்கைக் கூட்டத்தின்
மூதாதையர் இருந்தனர்
என்பது.
****
passoupathi@sify.com

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>

தேவமைந்தன்

தேவமைந்தன்