எச்.முஜீப் ரஹ்மான்
நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் ஆறாவது அறிவுக்கு,,,,,,,
நாஞ்சிலன் எனது எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துக்களை இன்னும் விளங்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சத்தியமாக உள்நோக்கம் கொண்டது அல்ல என்று நம்புவோம்.எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது என்று சொன்னார்.நன்று ஆனால் உங்களுக்கு சரியாக வாசிக்க தெரியாது என்று நான் சொன்னால் அது அநாகரிகமாக போய்விடும்.ஆனால் உங்கள் பதில், சரியாக வாசித்தபோதும் விளங்காத தன்மையுடன் இருப்பது குறித்த விஷயத்தையாவது விளங்கிக்கொள்ளுங்கள்.நான் எனது மேதமையை வெளிப்படுத்த வேண்டியல்ல பட்டியல் போடுகிறேன்.குறைந்த பட்சம் விளக்கம்,புரிதல்,அறிவு ஆகியவை என்பது குறித்த பல மாற்று சிந்தனைகள் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே அவ்வாறு செய்தேன்.தற்போது புளூம் பீல்டு,எடனர் சர்லி,நோம் சாம்ஸ்கி போன்ற மாற்றிலக்கணம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இலக்கணம் குறித்து அவர் காமடி செய்வது நையாண்டி தர்பாராக இந்த விவாதத்தை ஆக்கிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.வஹ்ஹாபி, நான் முன்பு எழுதியிருந்த தவ்ஹீது பிராமணியம் குறித்து எதிர்மறைகள் என்ற பேரில் சில வினாக்களை எழுப்பினார்.அதற்கு நான் பதிலளிக்கவில்லை.காரணம் நான் சொன்ன கருத்துக்களை முழுமையாக விளங்கிக்கொள்ளாமல் தேவையற்று குரான் ஆயத்துக்களை சுட்டி தனது மேதமையை வெளிப்படுத்தியிருந்தார்.ஐயா ஒருவருக்கு காது கேட்குமானால் எவ்வளவும் சொல்லாம்.ஆனால் காதே கேட்காதவரிடம் நாம் என்ன சொல்லுவது? அந்த கதை தான் வஹ்ஹாபியின் மறுமொழிக்கும்.மீண்டும் நான் சொல்லும் அதே விஷயம் தான் பதில் எழுதுவதற்கு முன்பு அவர் சொன்னார் என்பதை நன்றாக படித்து பார்த்து விட்டு சொன்னால் மறு மொழி சொல்லுவது நன்றாக இருக்கும்.இல்லையென்றால் இலக்கணபிழைகளை சொல்லிக்கொண்டு தான் இருக்க முடியுமே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிய முடியாமல் பதிலளித்து கொண்டிருப்பது எவ்வளவு வன்முறையானது?
விளிம்புநிலை இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியருக்கிடையில் நிலவிவரும் பிராமணீய ஜாதீய மனபாங்கு குறித்தும் தலித் முஸ்லிம் பற்றியும் நான் தொடர்ந்து எழுதிவரும் வேளையில் வஹ்ஹாபி எனது எழுத்தில் பிராமணீயம் இருக்கிறது என்று சொன்னால் அறிவுடைய யாராவது ஒத்துகொள்வார்களா?சரி அவர் சொல்வது போல இருக்கட்டும்.ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லித்திரிபவர்கள் பிராமணீய மனோபாங்குடன் இல்லை என்று சொல்லமுடியுமா?அந்த கட்டுரையை பிரிண்ட் அவுட் எடுத்து நிதானமாக இரண்டிரண்டு தடவையோ,மும்மூன்று தடவையோ வாசிக்கட்டும்.மீண்டும் வஹ்ஹாபியின் காமடி தொடருகிறது. எனது மவ்லிது என்ற கட்டுரைக்கு 500 டாலர் பரிசு அளிக்க உத்தேசித்துக்கொண்டோ என்னவோ சில தமாசுகளை அள்ளிவிட்டிருக்கிறார்.அவரது கருத்துக்கு அண்மையில் சுன்னத் வல் ஜாமாத்துக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜாமத்துக்கும் இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில் சுன்னத் வல் ஜாமத்தின் மௌலவி ஜாமாலி நன்றாக பதில் சொல்லியிருக்கிறார்.விவாத சி.டிக்கள் விற்பனையில் உள்ளது வஹ்ஹாபி வாங்கிபடித்து தெளிவடைவாரென்று நம்புகிறேன்.நான் எனது கட்டுரையில் ஆலிம் மாதிரி சொல்லாமல் எனது பாணியில் சொல்லியிருந்தேன்.வஹ்ஹாபி இஸ்லாத்தில் மவ்லிது இல்லை என்ற வகாபிச கருத்தை சுட்டி வாயிலாக 500 டாலருடன் இணைத்து அரிகிரி அசம்பிளி நடத்தியிருந்தார்.முன்பு இம்மாதிரியான சில காமடிகள் நடந்ததுண்டு அதில் ஒன்று
The Million-Dollar Qur’an Challenge
By Robert Spencer
FrontPageMagazine.com
500டாலர்,1000 டாலர் என்றும் மில்லியன் டாலர் என்றும் பலவேடிக்கையான கூத்துகளுக்கு இணையத்தில் பஞ்சமேயில்லை.இதெல்லாம் வெறும் சரடுதான்.உலகமுழுவதும் இருக்கிற சுதந்திர சிந்தனையாளர்களும்,நாத்திகர்களும் இது போல பல மில்லியன் டாலருக்கு கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை பார்த்தும் இவ்வாறு கேட்பார்கள்.ஆகவே இது பொருட்படுத்த கூடியவிஷயம் அல்ல.மவ்லிது இஸ்லாத்தில் கூடுமா என்கிற கேள்விக்கு www.sunna.org/ibadaat/mawlid.htm
· ‘Ulum al-Qur’an: An Introduction to the Sciences of the Qur’an
· ‘Ulum al-Qur’an: An Introduction to the Sciences of the Qur’an
· The Principles of Tafsir of the Qur’an
· Qur’anic Studies
· Tafsir of Selected Surahs
· In the Shade of the Qur’an (Fi Zilal al-Qur’an)
· Al-Mizan
· The Message of the Qur’an
· Altafsir.com
· Al-Muhaddith Islamic Library and Search Program.
——————
- பாகிஸ்தானின் அவமானச்சின்னம் – 1971
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-6
- இரு கலைஞர்கள்
- தமிழ் வாழ்க ! “தமிழறிஞர்” ஒழிக !!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா – (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-11)
- கீதாஞ்சலி (83) : என் கண்ணீர் முத்தாரம்..!
- கபா
- நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் கருத்துக்கள்
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – மூன்றாம் பகுதி
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – இரண்டாம் பகுதி
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – முதல் பகுதி
- யோகா
- ஆய்வும் மனச் சாய்வும்
- அற்புதங்களுக்கான இன்றைய தேவை அதிகரிப்பும், மறுப்பும், உண்மை தேடலும்
- கடித இலக்கியம் – 15
- அனுபவங்களும் ஆற்றாமைகளும் – இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்- பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்
- அவர்கள் அவர்களாகவே…!
- மத்தியக்கிழக்குப் போரும் இந்தியாவும்
- போர் நிறுத்தம்
- ஆதமின் தோல்வி
- தொடர்ந்து ஏய்க்கும் மாடும் விடாது மேய்க்கும் மூலனும்
- மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்
- குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
- எண்ணச் சிதறல்கள் – குமுதத்தில் சாரு நிவேதிதா, கலகம், கள்வனின் காதலி, டாக்ஸி நெ.9211, கோபம் கொள்ளும் ஐயப்பன்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 9. தொழில் நுட்பம்
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -1
- இருளர் வாழ்வில் இசையும் கூத்தும்
- சிதம்பரமும் தமிழும்
- ப ரி சு ச் சீ ட் டு
- மீன்கூடைக் காரிகைகளும் பூக்கடைக்காரன் குடிசையும்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 31