நண்டு -10
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சி -1துண்டு
பூண்டு -6பற்கள்
மிளகாய்த் தூள் -3டாஸ்பூன்
தனியாத்தூள் -1 1/2ஸ்பூன்
கொத்துமல்லித்தழை -தேவையான அளவு
தாளிப்பதற்கு -கடுகு
நண்டை சுத்தம் செய்யவும்.
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டை மைய அரைக்கவும். கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கவும்.
நண்டு துண்டுகள் மீது உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரை கப் நீர் விட்டு வேக வைத்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம், கொத்துமல்லித்தழை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்க்கவும். இஞ்சி, பூண்டு அரைத்த விழுது சேர்த்து அவையும் தக்காளியுடன் சேர்ந்து வதங்கியதும், வேக வைத்திருக்கும் நண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
மசாலாவுடன் சேர்ந்து நண்டு வதங்கி, நன்கு வறுபட்டதும் இறக்கவும்.
திண்ணை
|