தொலைக் கடத்தி

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

கிருஷ்ணகுமார்


நாம் அனைவரும் தற்போது தொலைப்பேசி, தொலைக்காட்சிகளில் பரவசப்பட்டு மூழ்கி உள்ளோம். தொலைப்பேசி – சரி! தொலைவில் நாம் பேசும் ஒலி அலைகளை கடத்தி செல்லுகின்றது. அதுவும் ‘செல் ‘ மூலம் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நம்மவர் திளைக்கின்றனர். தொலைக் காட்சியில் ஒலியும், ஒளியும் கண்டு களித்து ஆடல் பாடல்களில் திளைத்திருக்கின்றோம்.

சென்னை அருகே இருபதியொன்பது பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றனவாம். அதைத் தவிர கலைக் கல்லூரிகளிம் படிக்கும் மாணவ மாணவிகள் அதிகம். எப்போதும் நாம் மற்றவர் பசி நோக்காமல், கண் துஞ்சாமல் காரியமே கண்ணாயிருந்து தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க கால் மேல் கால் போட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா ?. மற்றவர் நம் உழைப்பில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் ?. அவ்வாறு உழைத்து பெருமை சேர்க்க ‘தொலைக் கடத்தி ‘ தொழில்நுட்பத்தில் பணி செய்யலாம். அது என்ன ? தொலைக்கடத்தி ? ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களையோ அல்லது ஆட்களையோ ஒளி வேகத்தில் கடத்துவது. இதில் கடத்தப்படுவது பிரபுதேவாவின் நடனம் ஆடும் பிம்பமில்லை. பிரபு தேவாவையே !

நமது உடலில் பல்வேறு அணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு மூலக்கூறுகளால் ஆனவை. கார்பன் சேர்ந்த இந்த படிமங்களை ஒளியினால் வருடி அதைப் பற்றி 3-D டைமன்ஷனில் தகவல் திரட்ட வேண்டும். அப்போலோ ஆஸ்பத்திரிக்குப் போனால் மேக்னடிக் ஸ்கேன் பண்ணுவது போன்று உடலை வருடி தகவல்களைத் திரட்டவேண்டும். பிறகு எந்த அணு எப்படி உடம்பினுள் எந்த இயக்க நிலையில் இருந்ததோ அந்த தகவலையும் திரட்ட வேண்டும்.

பிறகு வேண்டிய இடத்தில் காஷ்மீரில் தீவிரவாதியிருக்கும் இடத்திற்கு அந்த தகவல்களைக் கொண்டு

டில்லியில் இருந்த ராணுவ வீரரை கொண்டு தொலைக் கடத்தி சேர்க்க வேண்டும். கேட்க சுவாரசியமான கதை. ஆனால் நடைமுறைப்படுத்துவது எப்படி ? ஐபிஎம்மை ச்சேர்ந்த விஞ்ஞானிகள் முயலுகின்றனர். 1993 முதல் அவர்கள் ஏற்கொண்ட முயற்சிகள் ஆரம்பக் கட்ட ஆராய்சியில் இருக்கின்றது. ஒரு போட்டான் (ஒளித்துகளை) வெற்றி கரமாகக் கொண்டுபோயுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஒரு முழு லேசர் பிம்பத்தையே இடம் பெயரச் செய்துள்ளனர். ஒற்றி எடுக்கும்போது ‘ஏ ‘ என்ற பொருளை வருடி அதன் தகவல்களைச் சேர்த்து வைக்க வேண்டும். பிறகு ‘பி ‘ மற்றும் ‘சி ‘ (படம் பார்க்க) பொருட்களுடன் சேர்த்து பிணைந்து ஒளி மூலம் வருட வேண்டும். இப்படி பிணைந்து இரு தடவை ‘ஏ ‘ வினை ஒற்றி எடுத்தால், ‘பி ‘ மூலமாகவும், ‘சி ‘ மூலமாகவும் ‘ஏ ‘ வின் முழுத் தகவலும் ஒரு இடத்திலிருந்து தொலைக் கடத்தலாம்.

FLY ‘ ப்ளை ‘ என்ற ஆங்கிலப் படத்தில் ஒரு இளம் விஞ்ஞானி, ஒரு ‘ஈ ‘ யுடன் பிண்ணி பிணைந்ததால் அவன் உடம்பு கோணி அவன் ‘ஈ ‘ மாதிரி மாறும் காட்சிகள் திகில் நிறைந்தது.

சன் தொலைக்காட்சியில் ‘மை டியர் பூதம் ‘ சீரியலில் இடம் பெயரும் காட்சிகள் உண்டு. அதைக் கற்பனைப் பண்ணி பாருங்கள். இதை வைத்து நம்மவர் நிறையக் கதைகள் புனையலாம். கவிதை வரையலாம். ஆனால், மற்றவர் கண்டுபிடித்து நாம் சுலபமாக உபயோகப்படுத்தலாம். இல்லையா ?. ஸ்டார் ட்ரெக் என்னும் சீரியலில் கேப்டன் கிர்க் ‘என் பிம்பதைக் ஏறிட்டனுப்பு ‘ ( ‘Beam up Scotty ‘) என்று சொல்லும் வார்த்தைகள் உண்மையாக உழைக்க வேண்டாமா ?. சித்தர் பாடல்களில் வரும் கற்பனைகைளெளம், விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் நம் முன்னோர்களின் பறந்தக் கற்பனைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாமல், இறக்கக் கூடாது. இன்றைய தமிழர்கள் நாளைய நூற்றாண்டுகளுக்குத் தயாராக வேண்டும். தமிழா ஆங்கிலமா என்ற சர்ச்சையில் அதிகம் நேரத்தினை செலவழிக்காமல் ஒன்றை வைத்து மற்றொன்றை ‘தொலைக் கடத்திட ‘ வேண்டும்.

மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து இதை எவ்வாறு செயல்படுத்தலாமென்று முனைந்தால் தமிழர்களும் உலகிற்கு பாடல், ஆடல், கவிதை தவிர மற்ற பொருட்களை ஐ.பி.எம். விஞ்ஞானிகள் போன்று உருவாக்கலாம். இதற்கு சுமார் 100-200 ஆண்டுகள் ஆகலாம். பல்கலைக் கழகங்கள் தமது ஆராய்சியினை மிகத்தொலைநோக்குடன் உருவாக்க வேண்டும். மற்றவர்களுக்கு அடிமையாகாமல் நமது சுயசிந்தனையோடு கூடிய நுண்ணறிவுடன் ஏன், எதற்கு, எப்படி என்ற காரணங்களை ஆராய வேண்டும். அணுவைப் பிளந்து ஏழ் கடலைக் குடைந்து குறுகத் தறித்த குறள் என்று எம்முன்னோர் பாடியதால் எங்களுக்கு அப்பவே விவரங்கள் தெரியுமென்று மார்தட்டாமல், நம்மால் ஆன சேவையை உலக அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு, நம் அறிவை அகலாமாக்கி, பின் ஆழ உழுது வெற்றி காண வேண்டும்.

நம்மை நாமே அந்த திறனுக்கு தொலைக் கடத்துவோமா ?.

Reference

1.

Quantum Teleportation. IBM Corporation. 1995. Retrieved from www on Mar 7, 2005 from http://www.research.ibm.com/quantuminfo/teleportation/.

2. A fun talk on Teleportation.

http://www.research.ibm.com/quantuminfo/teleportation/braunstein.html

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

கிருஷ்ணகுமார்

கிருஷ்ணகுமார்