மதிவாணன்
தேர்தல்களுக்கு முன்பு தனுஷ்கோடி சென்றிருந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையில் மீனவ மக்களை ? சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். யாருக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதில் கிடைத்தது, நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். இரட்டை இலைக்கு வாக்களிப்பதைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள் என்று அறியப்பட்ட மக்களிடம் நான் அப்படியொரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னும் முடிவு செய்யவில்லையா ? என்று எதிர் கேள்வி கேட்டேன். இரட்டை இலைக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால், யாருக்கு வாக்களிப்பது என்றுதான் முடிவு செய்யவில்லை என்று அடுத்த அதிர்ச்சியை அளித்தார்கள். ஏன் இரட்டை இலைக்கு வாக்களிக்கக் கூடாது என்ற என் கேள்விக்கு, ‘என்ன செய்திருக்கிறார்கள் நாங்கள் வாக்களிப்பதற்கு ? ‘ என்று எதிர் கேள்வி கிடைத்தது. தமிழகத்தின் மாற்றத்தின் காற்று புயலாகக் கருக்கொள்வதை என்னால் அன்று அந்த அத்துவானக் காட்டில் அறிய முடிந்தது. அங்குமட்டுமல்ல என் நாடோடி வாழ்க்கையில் அலைந்து திரிந்த அனைத்து இடங்களிலும் இதே செய்திதான் மறுவுறுதி செய்யப்பட்டது.
அதிமுகவுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்திருந்த மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் முடிவு செய்யாமலிருந்தார்கள் என்பதையும் நான் கவனித்தேன். மயிலாடுதுறையின் உட்கிடைக் கிராமங்களில் மக்களை ? சந்திந்தபோது தேர்தலுக்கு இரு வாரங்கள் முன்புவரை எந்தவித ஆர்ப்பாட்டத்தையும் காணோம். அனைத்து அரசியல் கட்சிகளைஹ் அதிருப்தியுடன், கோபத்துடன் எதிர்கொண்டனர். சில கட்சிகளை சில கிராமங்களில் உள்ளே விடவே மறுத்தனர். அதிமுக கட்சிக் கொடிகளைக கட்டுவதற்கு ஆட்களை– தேடிக்கொண்டிருந்தார்கள். கை கட்சிக்கும் அதே நிலைதான். கட்சிக்கொடிகள் தோரணங்கள் வருகை தந்தபின்னர் விசாரித்தால், ‘அதோ அந்த ஆள்தான் காசு வாங்கிக்கொண்டு கட்டினான் ‘ என்று ஒற்றை ஆளை ? சுட்டிக்காட்னார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனங்கள் படையெடுத்தபோது, மக்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாளில் மயிலாடுதுறை நகரில் நடந்துகொண்டிருந்தேன். ஒற்றை ‘பைக்கில் ‘ வந்து கொண்டிருந்த ஒருவன் ‘டாக்டர் கலைஞர் ‘ என்று முழங்க பின்னடியிருந்தவன் ‘வாள்க ‘ என்று வெறிக்கூச்சலிட்டான். வாக்களித்த வெகு ஜனங்கள் விநோதப் பிறவிகளைப்ஸ் போல அவர்களைஸ் பார்த்தார்கள். கார்களில் முடங்கிக் கொண்ட மணி சங்கர் அய்யரின் ஆதரவாளர்கள் ஊர்வலம் போனார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து பத்தாயிரம் வாலாவை பற்ற வைத்தார்கள். திருவாளர் ? பொதுஜனம் மெளனமாக அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததார். திமுகவின் மாபெரும் வெற்றி ஊர்வலங்களைக்க கண்ட 45 வயதான எனக்கு இது ஒரு செய்தியைச் சொல்வதாகப்பட்டது.
மாபெரும் வெற்றியை திமுக-காங்கிரஸ் அணிக்கு அளித்த பொதுஜனத்தின் மெளனத்தின் பொருள் என்ன ? இந்த வெற்றி ஜெ-பாஜக அணிக்குஎதிரான வாக்கு மட்டுமே. திமுக அணிக்கான வாக்கு அல்ல. தனுஷ்கோடி மீனவரின் கூற்றை நான் மறுபடியும் ஒருமுறை அசைபோட்டு பார்த்துக்கொண்டேன்.
அப்படியானால், எந்த விஷயம் வாக்காளர்களின் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயல்பட்டது ? அனேகமாக இது விஷயத்தில் அனைவரும் ஒரே கருத்தையேச் சொல்கின்றனர். இது அரசின் கொள்கைக்கு எதிரான தீர்ப்பு என்பதுதான் அது. ஆந்திராவின் தலைமை நிர்வாகி என்று அறிவித்துக்கொண்ட உலகமய பொருளாதாரக் கொள்கையின் முன்னோடி ஒட்டு மொத்தமாக மூட்டைக் கட்டி வீட்டுக்கனுப்பப்பட்டுள்ளார். கர்நாடகத்தின் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் ஜெ- மீது மக்கள் கொண்டுள்ள கோபம் அக்கட்சி எந்த சட்டமன்றத் தொகுதியிலும் (ஒன்றைத் தவிர) கூடுதல் வாக்குப் பெறமுடிவில்லை என்ற செய்தியில் வெளிப்படுகிறது. இந்தியா ஒளிர்கிறது என்று துணிந்து பொய் சொல்லி அந்த பொய்யை மெய்யானதென்று காட்ட முயன்ற பிஜேபி, உறுமலில் ஆரம்பித்து அழுகையில் அடங்கும்படி ஆனது. ஆனபோதும் எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளிவந்து NDAவின் தோல்வியை முன்னறிவித்த உடனேயே பங்கு சந்தை வீழ்ச்சி கண்டது. 52 ஆயிரம் கோடி ஒரே நாளில் இழப்பு ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து தனியார் மயக் கொள்கை பற்றிய விவாதம் எழுந்த உடனேயே இழப்பின் எல்லை 3 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது. பங்குச்சந்தையில் தென்படும் இந்த பதற்றத்தின் காரணம் என்ன ? உலகமயப் பொருளாதாரக் கொள்கை பின்னுக்குத் தள்ளப்படும் என்ற அச்சமே காரணம் என்று பங்கு சந்தை நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே, மக்கள் அளித்த தீர்ப்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது என்பதும், இந்திய மூலதனக்காரர்கள் (முதலாளிகள் + முதலீட்டாளர்கள்) உலகமயத்தின் ஆதரவாளர்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசுகளும் உலகமயப் பொருளாதரக் கொள்கையையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமுல்படுத்தி வந்துள்ளன. மத்தியில் ஆண்ட NDA அரசு அந்தக் கொள்கையின் அதிதீவிர அமுலாக்கத்தில் மும்முரம் காட்டியது. உலக மூலதனத்திற்கு இந்தியக் கதவுகளை– திறந்துவிடுவதில் சற்றும் தயக்கம் காட்டவில்லை. அந்த அரசு தொலைந்த காரணத்தால் லாபம் ஈட்டும் இந்திய அரசு நிறுவனங்கள் பன்னாட்டு மூலதனத்தின் பிடியிலிருந்து தப்பித்து சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றன. பொதுமக்களின் உணவு, குடிநீர், வேலை, கூலி என்ற அடிப்படை பிரச்சனைகளில் அரசு தொடுத்த தாக்குதலே மக்களின் கோபத்தைக் கிளப்பியது. இறுதியில் மக்கள் சக்தியின் அதிரடி என்னவென்பதைத் தேர்ததல் காட்டியிருக்கிறது.
ஆனால், இந்த அதிரடி மக்கள் தீர்ப்பு அதனளவில் உலகமயப் பொருளாதராக் கொள்கையைப் பின்னுக்குத் தள்ளுமா ?
இந்தக் கேள்விதான் மக்களிடம் தென்படும் தேர்தலுக்குப் பிந்தைய நிலைமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. உலகமயம் இந்தியாவில் கால்பதிக்கக் காரணமான மன்மோகன்சிங் பிரதமமந்திரி ஆகிவிட்டார். இலவச மின்சாரம் என்ற கொள்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்பதை இரண்டாவது நானிலேயே மன்மோகன் தெளுவாகச் சொல்லிவிட்டார். உலகமய சீர்திருத்தங்களில் எந்த பின்னஆயும் இருக்காது என்பதைத் தெளுவுபடுத்தியுள்ள அவர், அதற்கு மனித முகம் இருக்கும் என்று நமக்கு உறுதியளித்திருக்கிறார். இப்படியாக, வாக்களித்த பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க மனித முகம் பற்றியும், என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கும் மூலதனக்காரர்களுக்கு சீர்திருத்தம் தொடரும் என்ற பதிலும் என இரட்டை முகத்தோடு மன்மோகனின் ஆட்சி துவங்குகிறது,
தனியார்மயமல்ல, கண்மூடித்தனமான தனியார்மயம்தான் பிரச்சனை என்று ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள், ஏன் வலது இடது கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு முன்பும், பின்பும் உலகமய ஆதரவாளர்கள்தான். தேர்தல் முடிவு வெளி வருவதற்கு முன்னமேயே, இன்றைய இந்திய முதலாளிகளின் முன்னோடியான அனில் அம்பானி சோனியாவைச் சந்தித்துச் சென்றார், அதன் பின்னரே சோனியா பதவி ஏற்பதில்லை என்ற முடிவை அறிவித்தார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்,
கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் உலகமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தீர்ப்பு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகம் இருக்கவில்லை. முக்கியமாக ஜெ ‘க்கு அதில் சந்தேகம் இருக்கவேயிுல்லை. இலவச மின்சாரம் உள்ளிட்ட மிக முக்கியமான தனது சீர்திருத்தங்களை அவர் கைவிட்டிருக்கிறார். மததாற்றத் தசைிசட்டத்தைக் கைவிட்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்குக் கருணை காட்டியிருக்கிறார். அவர் மனம் திருந்திவிட்டதாக பத்திரிகைகள் எழுதின. அது தொடர வேண்டுமென விருப்பம் தெரிவித்தன. ஆனால், விருப்பங்கள் எதனையும் சாதிப்பதில்லை. பொருளாதார சீர்திருத்தத்தைத் தொடரவேண்டும் என்று கோருபவர்கள் அரசின் மீது நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஜெயலலிதாவை அறிந்த்வர்கள் அவர் அடிப்படையில் எளிய மக்களின் விரோதி என்பதை அறிவர். அவர் பதுங்குவது பாய்வதற்கு மட்டுமே. வேறு மறைமுகமான வழிகளிளோ அல்லது சாத்தியமாகுமென்றால் நேரடி வழிகளிலோ அவர் மீண்டும் பாய்வார். அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் அவரைச் சும்மா விடப்போவதில்லை. ஓட்டுப் போடும் மக்களைச் ? சமாளித்துக்கொண்டு உத்திரவு போடும் பன்னாட்டு இன்னாட்டு முதலாளிகளுக்குச் சேவைசெய்வது எவ்வாறு என்ற விஷயத்தில் ஜெ இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான் பிரச்சனை.
நல்லவேளையாக இடதுசாரிகள் ஆட்சியில் அங்கம் வகிப்பதில்லை என்று முடிவு செய்திருகிறார்கள். வயதான கட்சியான சிபிஅய் மற்றும் வயதான தலைவர்களான ஜோதிபாசு போன்றவர்களின் துடிப்பு சற்றே அடக்கப்பட்டுள்ளது. உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர்களான காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள் பங்கெடுப்பது இடதுசாரிகளை மேலும் பலவீனப்படுத்தும்.
மற்றொரு அபாயமான இந்துத்துவ அரசியல் உலகமயத்தின் மற்றொரு முகமாகும். அதனை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளார்கள். அவர்களின் பரிசோதனைச்சாலையான குஜராத்திலேயே அவர்கள் அடிவாங்கத்துவங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த அபாயம் தணிந்துவிடவில்லை. அதி தீவிர வலது பொ!ருளாதாரக் கொள்கையின் இரட்டையான அதிதீவிர வலது கருத்தியல் தன்னை மறு அறுதியிடல் செய்துகொள்ள சற்றும் தளராது முயலும். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் அடிவருடிகளாக இருந்த இந்த தேசத்துரோகிகள், உலகமயக் காலத்தில் ஏகாதிபத்தியத்தின் செல்லக்குழந்தைகளாக வளர்க்கப்பட்டவர்கள். மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் ஆட்சியை எதிர்ப்பதற்கு அவர்கள் 1980களின் நடைமுறையைச் சற்றும் தயங்காமல் கைக்கொள்வார்கள். சோனியா பதவி ஏற்பதற்கு எதிரான இந்துத்துவாக் கூச்சல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சோனியா ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வெற்றிபெற்றுவிட்டார் என்று நம்புவது ஆர்எஸ்எஸ் அமைப்பை எளிமையாக எடைபோடுவதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் பதவியேற்க முடியும் என்று அரசியல் சாசன நிலை இருக்கும்போது, வெளிநாட்டவர் என்ற கூச்சல் வெற்றிபெற்றிருப்பது மக்கள் முடிவை எள்ளி நகையாடும் பாசிசத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். மிதவாத இந்துத்துவாவை கைக்கொண்டுள்ள காங்கிரசின் ஆட்சி இந்துத்துவா வெறியை வலுவாகக் கட்டமைப்பதற்கான விளைநிலமாக அமையும் அபாயத்தையே சோனியா விலகிக்கொண்டது காட்டுகிறது. மற்றொரு மசூதி இடிப்புக்கும் வெறித்தனமான சூழலுக்கும் நாம் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும்.
அப்படியானால் என்னதான் வழி ? வெற்றிக்கு சுருக்குவழிகள் ஏதும் இல்லை. உலகமயம் காவிமயத்தை உறுதியாக எதிர்க்கும் சக்திகள் வலுப்பெறாமல் இந்த அபாயங்களிலிருந்து நாம் மீளமுடியாது. உழைக்கும் வர்க்க அரசியல் வலுப்பெறாமல் நாம் அதனைச் சாதிக்க முடியாது. காங்கிரஸ்-திமுக போன்ற கட்சிகளை நம்பி நமது நாட்டின் தலையெழுத்தை ஒப்படைக்க முடியாது.
இந்தக் கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே அவர்களின் தயக்கமான அணுகுமுறை காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கையை போதுமான அளவுக்கு இடதுசாரிகள் பெற்றுவிடவும் இல்லை. அனைத்து இடசாரிக் கட்சிகளுமே நாட்டின் சில மூலைகளில் உள்ள மூலைகளில் முடங்கிக் கிடப்பதை நாம் அச்சத்துடன் கவனத்தில் கொள்ள வேண்டும். இடதுசாரிகள் தங்கள் சுதந்திரத்தை உறுதி செய்துகொண்டு முயற்சிகளை பலமடங்கு பெருக்கி மக்களை அமைப்பாக்கி காவிமய-உலகமய எதிர்ப்பு அரசியலை அமைப்பாக்க வில்லையென்றால், பாசிசச் சக்திகள் பல மடங்கு வலுவுடன் மீண்டு வருவது உறுதி.
பின்னிணைப்பாக சில செய்திகளை ? சொல்ல வேண்டியிருக்கிறது. அது சற்று நீளமாகப் போனால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
இந்தமுறை தலித் கட்சிகளை கருணாநிதி கைவிட்டுவிட்டார். கருணாநிதியின் துரோகம் குறித்து தலித் அரசியல் தரப்பிலிருந்து புலம்பல் முதல் சாபம் வரை அனைத்து வகை ஓசைகளும் எழுந்தன. ஆனால், கருணாநிதியிடமும், ஜெவிடமும் வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும் ? அவர்களின் பங்களிப்புடன் தலித் அறுதியிடல் நடக்கும் என்று நம்பும் மனிதர்களின் அறிவாற்றல் குறித்து நாம் எப்படி மதிப்பிடுவது ? கருணாநிதி மற்றும் இதர அவ்வகைத் தலைவர்கள் கட்சிகளின் தலித் துரோகத்தைப் பற்றி புதிதாகப் பேசுவதற்கு செய்திகள் ஏதும் இல்லை.
ஆனால், அமைக்கப்பட்ட மக்கள் கூட்டணி பற்றி பேசியாக வேண்டும். விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் அய்க்கிய ஜனதள கட்சியின் வேட்பாளர்களாக தமிழகத்தில் போட்டியிட்டனர். அது என்ன கட்சி ? BJPஎன்ற அரக்கனுக்கு மனித முகத்தை வழங்கும் வேலையைப் பார்த்தது NDA என்றால் அதன் அமைப்பாளராகச் செயல்பட்டவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் என்ற அரசியல் தரகர். அவரின் கட்சிதான் அய்கிய ஜனதா தளம். JD(U) க்குப் போடப்படும் வாக்கு மறைமுகமாக BJP க்குப் போடப்படும் ஓட்டு. இந்த காரியத்தைத் தயக்கமின்றி செய்த சிறுத்தைகளையும், புரடசியாளர் ? கிருஷ்ணசாமியையும் என்ன சொல்லி அழைப்பது ? தலித் அறுதியிடலுக்கு வாக்களியுங்கள் என்று பேசிய அவர்கள் தங்களின் காவிக் கூட்டை இறுதி வரை மறைத்தே வந்தார்கள். தலித் மக்களை அணியாக்கி அதனை விற்பனை செய்து வாழும் பிழைப்பை இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் தலித் மக்கள் அனுமதிப்பார்கள் ?
மேற்படி தலித் தலைமை ஜெ கட்சியுடன் தேர்தலின் இறுதி நேரத்தில் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டதாக அவர்கள் அமைப்பிலிருந்தே வாக்குச் சாவடிகளுக்குச் செய்திகள் ுவந்தன. அதன் பின்னிணி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் ஜெவின் நிலையை ஆதரித்து பேசும் ஒரே அரசியல் அமைப்பு மக்கள் முன்னணி மற்றும் அதில் அடங்கியுள்ள தலித் கட்சிகள் என்பதை தேர்தலுக்குப் பிந்தைய பத்திரிகை செய்தகள் காட்டுகின்றன.
இந்த கேடுகெட்ட தலித் துரோக அரசியலுக்கு முடிவு கட்டியாக வேண்டும். தலித் மக்களின் வாழ்க்கை என்பது அவர்களின் அதிகாரம், வேலை, கூலி, நிலம் என்ற பிரச்சனைகள் தொடர்பானது. இவற்றை கையிலெடுக்கும்போது மட்டுமே தலித் அரசியல் என்பது ஸ்தூலமான அரசியல் ஆகும். இடதுசாரிகள் இவ்விஷயத்தில் பின் தங்கியிருப்பதே தலித் துரோக தலித் அரசியல் மறுபடியும் மறுபடியும் புதிய முகத்துடன் எழுவதற்குக் காரணம். இடதுசாரிகள் தாங்கள் சொல்லிக்கொண்டுள்ள காரியத்தை செய்து சாதிக்க என்றுதான் நடவடிக்கை எடுப்பார்கள் ?
ரஜினியின் பாபா படம் வருவதற்கு முன்பு அவரின் இந்துத்துவ சார்பு பற்றி நான் ஒரு கட்டுரை எழுதினேன். நிறைய பேர் புருவத்தை உயர்த்தி அதீத கூற்று என்றார்கள். இப்பொழுது பூனை வெளியே வந்துவிட்டது. அதுவரை மகிழ்ச்சிதான். அந்தப் பூனை எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதும் தெளுவாகிவிட்டது. ஆனால் என்னுடைய கவலை சமூகத்தின் அனைத்து சந்துபொந்துகளிலும் புகுந்து இந்துத்துவத்தை அமைப்பாக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நரித்தனமான செயல்பாடு பற்றியது. அந்த அபாயம் குறைந்துவிடவில்லை. மாறாக இன்னும் அதிகமாகியிருக்கிறது.
மந்திரிசபையில் என்ன பொறுப்பு என்பது பற்றி தற்பொழுது திமுக தகராறு செய்துகொண்டுள்ளது. தனது பேரனான இளைய மாறனுக்கு முதன்முறை எம்பியான உடனேயே கேபினட் பதவியை கருணாநிதி கேட்டுப்பெற்றுக்கொண்டுள்ளார். கருணாநிதியின் தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் காக்கவும் குடும்ப நலனைக் காக்கவும் அவர் எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள். தமிழர் தலைவரான அவர் நீண்ட காலம் வாழவேண்டும், தனது கொள்ளுப் பேரனுக்கும் கேபினட் பதவி வாங்கித் தரவேண்டும். பின்னர் எப்படித்தான் தமிழகம் ஜொலிப்பதாம் ?
– சி.மதிவாணன்
25.05.2004
mathivanan_c@yahoo.com
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- வதை
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்