ஸ்ரீனி
10:15 PM.
‘பதினைந்து, பதினாறு …. அதோ இருக்கு..னா ஜன்னல் ஓரம் இல்ல. ஓக்கே..சமாளிச்சிடலாம்.. முன் சீட்ல இருக்கிற இந்த வயசான பெரியவரைத்தவிர யாரையும் காணோம். கொஞ்சம் இட நெருக்கடி இல்லாம உக்காரலாம்..மொதல்ல கொஞ்சம் தண்ணி … அப்புறம் தான் மத்தது.. ‘
‘அப்பாடா.. இப்ப தான் ப்ரெஷ்ஷா இருக்கு.. சரி பேக்கை கீழே சங்கிலியால் கட்டியாச்சு..அப்புறம் இந்த ஃபேனை போட்டுட்டா வீ வில் பீ ல் செட்..ஓக்கே … வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிஷம் இருக்கு..என்ன செய்யலாம் ? ஓ.க்கே.. ஒரு தம் போடலாம். ‘ வண்டியை விட்டு கீழே இறங்கியதும், சில்லென வீசிய தென்றலில், சற்றே உற்சாகமானேன். ஒரு வில்ஸை பற்றவைத்தேன். அந்த குளிருக்கு, புகையை நுரையீரல்
தூண்டி இழுக்கத்தோன்றியது. சில விநாடிகள் கண்ணை மூடினேன். நெருப்பு சிகரெட்டை முழுவதும் தின்னும் வரை இழுத்திருப்பேன். பாக்கெட்டில் இருந்த போலோவை எடுத்து ஒரு வில்லையை வாயில் போட்டுக்கொண்டேன்.
வண்டியின் உள்ளே ஏறி, என் இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். இடப்பக்கத்தில் ஒருவர் தூங்கிய வண்ணம் இருந்தார். அது எப்படி சிலருக்கு வண்டியில் ஏறியவுடன் தூக்கம் வருமோ தெரியவில்லை. வலப்பக்கத்தில் ஜன்னலோர இருக்கை காலியாக இருந்தது. பேக்கில் இருந்து
சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலையை கையில் எடுத்தேன்.பக்கங்களின் நடுவே மடிக்கப்பட்டிருந்த பக்கத்தை தேடி கண்டுபிடித்தேன். ‘இந்த புக்ஸ்ல எல்லாம் பக்கத்தை மடிச்சு அடையாளம் வெக்கிறவங்களை பாத்தா அவ்வளவு எரிச்சல் வரும் எனக்கு .. ‘ யாரோ என்னிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.தொழிற்சாலைக்குள் நுழையப் போன என்னை ஏனோ அந்த மின்விசிறியின் சத்தம் தடுத்தது. படிப்பதற்கும் அதற்
கும் சம்பந்தம் இல்லை என்று மூளை சொன்னாலும், ஏனோ ஒன்றில் மனம் பதிய மறுக்கும் போது குண்டூசி விழும் சத்தம் கூட பெரியதாய் கேட்கிறது. எத்தனை சத்தம் , இறைச்சலுக்கு மத்தியில் கூட ஒரு பக்தனால் தன் இறைவனிடம் முறையிட முடிகிறது.விட்டால் பறந்து போய்விடத் தயாராய் இருந்த கவனத்தை திசைதிருப்புவது சற்று கடினமான விஷயம் தான்.
சரி எங்கே விட்டேன்.. மறுபடி பக்கங்களை புரட்ட ரம்பித்தேன். மறுபடியும் அந்த மடித்து வைத்த பக்கத்தை அடையாளம் கண்டேன். மறுபடியும்
நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வர, மறுபடி சிந்தனை குதிரை வேலி தாண்டி ஒடத்துவங்க பிடித்து இழுத்து வருவதற்குள் போதும் என்றானது.
சிறிது நேரம் புத்தகத்தை மூடிவைத்து ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்த்தேன். ப்ளாட்பாரத்தில் பார்ப்பதற்கு தாஜ்மகாலா இருக்கும்.
சிமெண்டு பெஞ்சை சில விநாடிகளுக்கு மேல் வெறிக்கத் தோன்றவில்லை. மறுபடி புத்தகத்தை திறந்தேன். சொல்ல மறந்து விட்டேனே.. போன முறை மூடும் போது என் விரலை இடையே வைத்து மூடியிருந்தேன். அதை நினைத்தவுடன், அந்த நண்பன் என் முதுகில் தட்டி பாராட்டுவது போல் தோன்ற, ஓட இருந்த குதிரையை மறுபடி கட்டி இழுத்து வந்தேன். யப்பா.. சிந்தனையை ஒருமுகப்படுத்துதல் இவ்வளவு சிரமமான விஷயமா ?
‘சிந்தனைகளை தன் கட்டுப்பாடிற்குள் வைத்திருப்பவனை ஞானி என்கிறோம்.. விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் மற்றும் பல ஞானிகளும் செய்து வந்தனர் ‘ ஏதோ ஒரு டி.வியில் யாரோ ஒருவன் சொன்னது.அப்படியானால் விவேகானந்தரால் நான் இருக்கும் இந்த மன நிலையில் கனவுத்தொழிற்சாலையை முழுவதுமாக படித்ிருக்க முடியுமா ? மனத்தை ஒருமுகப்படுத்துதலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ?
வண்டி நகரத்துவங்கியதினால் நான் முன்னால் தள்ளப்பட, என்னை ஏமாற்றி விட்டு என் குதிரை நைசாக வெளியேறிக் கொண்டிருக்கிறதை உணர்ந்தேன். என்னப்பா இது .. எதை பற்றியும் சிந்திக்கக் கூடாதா ? என்ன விளையாட்டு இது.. எனக்குள் இருந்து இன்னொரு நான் கேட்க, நான் பதில் இல்லாமல் குழம்பினேன். என் மெளனத்தை பயன்படுத்திக் கொண்ட நான் எனக்கு மேலும் விளக்கங்கள் தர முனைந்தேன்.. மறுபடியும் அந்த டி.வி சேனல் போதனை வந்து போக.. என்ன சேனல் அது ? சன்னா இல்லை ராஜ் டி.வியா.. சன் தான் .. இல்லை விஜய் டி.வியோ ?
காலையில் வந்த ஒரு நிகழ்ச்சி அது.. ஹலோ தமிழாவா ? சே.. இல்லை அதில் சினிமா துறை தான் வலம் வரும்.. ஸ்ரீகாந்த், ஸ்னேகா, பரத் இப்படி பலர்.. காம்பெயர் பண்ணும் மமதி சாரி இஸ் அட்ராக்டிவ்.. ‘மச்சி நல்ல பிகர்டா அவ .. ‘ குமார் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. என் கூட ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வராம ஏமாத்திட்டியே.. திரும்பப் போனதும் கேக்கணும்.. கேட்டாலும் என்ன சொல்லப் போறான்.. இப்ப தான் கல்யாணம் னவன்.. எவ்வளவோ இருக்கும்.. ‘ஏன்டா குமார் .. ஒன் கல்யாணம் யாச்சு .. இவனுக்கு எடுத்து சொல்லக் கூடாதா ? நான் என்ன சொல்றது அவனையே கேளுங்க.. ‘ அம்மாவும் குமாரும். தொண்டையில் ஒரு வித வரட்சி தோன்றி
குதிரையை மறுபடி கூண்டில அடைத்தது.
பிஸ்லெரியை வாயில் கவிழ்த்தி ஜில்லென்ற தண்ணீர் தொண்டையில் இதமாய் இறங்க, கண்மூடியபடி தண்ணீர் பருக ரம்பித்தேன். ‘எக்ஸ்கியூஸ் மீ.. ‘ என்ற குரல் கேட்டதும் திரும்பினேன். அவள் அழகாக இருந்தாள். ஜீன்ஸும் டாஷ்ர்டும் உடும்புப் பிடியாய் உடம்பை கவ்வியிருக்க, அத்தனை
அழுத்தத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. டாஷர்ட்டையெல்லாம் போட்டுக்கொண்டுதான் தைத்திருப்பாளோ… ‘எக்ஸ்கியூஸ் மீ.. ‘ மீண்டும் ஒரு முறை கவனம் கலைக்கப்பட்டேன்.
‘எஸ் ‘.
‘என்னோட சீட்ல உக்காந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. ‘
‘யாரும் இல்லைன்னு தான் ஜன்னலோரம் உட்கார்ந்தேன்..ஸாரி.. ‘
‘தட்ஸ் ஓகே… ‘
என்னை தாண்டி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். மெலிதான வாசனை இதமாய் நாசியை துளைத்தது. சிலருக்கு தான் இதுபோல் மென்மையான செண்ட் வகையறாக்களை தேர்ந்தெடுக்க தெரிந்திருக்கிறது. பீஸில் ராதா உள்ளே வருவது கேபினில் உட்கார்ந்தபடியே உணர முடியும். தான் வருவதை அறிவிப்பது போல இருக்கும் அது. அருகில் இருந்தால் வாசனையின் வீரியம் இதத்திலிருந்து இம்சையாய் மாறும். ‘ட் eவங்களெல்லாம் குளிக்க மாட்டளுங்க போல.. ‘ என்ற விமர்சனங்கள் தன்னிச்சையாய் பறக்கும். ஒருவேளை பெண்களுக்குகுரிய பிரச்சனை
நேரத்தில் இந்த செண்ட் வீரியம் அதிகம் இருக்குமோ ?..
‘எக்ஸ்கியூஸ் மீ.. ‘
குதிரை மறுபடியும் திரும்ப வந்தது. அவள் என்னை பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
‘ஐயம் ஸாரி.. எஸ்… ‘
‘கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா.. நான் வெளியே போகணும்.. ‘
ஏனோ எழுந்திருக்க தோன்றாததால், காலை மட்டும் ஒரு திசையில் குறுக்கிக்கொண்டேன். அவள் என்னை உரசிக் கடந்து போனாள்.
வளைவுகளின் வசீகரம் நேர்கோடுகளில் இல்லை தான். ஒருவேளை கல்லூரி மாணவியாக இருக்குமோ ? இல்லை பள்ளி மாணவியாகவும் இருக்கலாம். இந்த காலத்தில் யார் எந்த வயது என்பது சரியாக சொல்ல முடியாத ஒன்று.. ராம் அடிக்கடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அவன் தெருவில் இருந்த சேட் பிகர் ஒரு நாள் ஸ்கூல் யூனிபார்மில் வந்த அவனுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்திருக்கிறாள். ‘மச்சி கடுப்பாயிடிச்சி டா.. அவ ஸ்கூல் படிக்கிறாடா… அதுவும் கொடுமைய கேளு.. அவகிட்ட நேத்து பேசினேன்.. அங்கிள்ன்னுட்டா.. ‘ ராம் எப்போதும் இப்படித்தான்..
எதிலும் ராய்ந்து செயல்படுவதில்லை.. என்ன இப்போது பக்கத்து தெரு பிகரை பார்க்க ரம்பித்திருக்கிறான்.. இதிலும் அதுபோல ஏதாவது
எதிர்பாராமல் இருக்குமோ ?
‘எக்ஸ்கியூஸ் மீ… ‘
மறுபடி அவள். இந்த முறை எழுந்து வெளியே வந்து நின்றேன். அவள் உள்ளே நுழைந்த படி ‘தேங்க்ஸ்.. ‘ என்றாள்.
‘நோ ப்ராப்ளம்.. ‘ அதற்கு மேல் ஏதோ பேசத் தோன்றினாலும் .. கோர்வையாய் ஒன்றும் கிடைக்காமல் போக, கொஞ்ச நேரம் இருவரும் பார்த்துக் கொண்டு பின்னர் அவள் திரும்பிக் கொண்டாள். ஏதாவது பேசியிருக்க வேண்டுமோ ? ‘மச்சி.. பிகருங்க தானா முன்னுக்கு வந்து பேச மாட்டாங்க.. நம்ம தான் பேச்சை வளர்க்கணும் மச்சி.. ‘ ராமு எப்போதும் ஏதாவது போதித்து கொண்டே இருப்பான். அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு. எந்த ஒரு விஷயத்திற்கும் அவனிடத்தில் ஒரு அபிப்பிராயம் இருக்கும். தெரிகிறதோ இல்லையோ, பழக்கமோ இல்லையோ, அவனிடத்தில் ஒரு போதனை காத்து இருக்கும்.. நானும் பல சமயங்களில் இது சரியா என யோசித்து இருக்கிறேன்.. பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது.. கேட்காத போது கூட தங்கள் அபிப்பிராயத்தை தெரியப்படுத்துவது. இதையே ஒரு நெருங்கிய நண்பன் செய்தால் சொல்லமுடியாமல் திணறும் சந்தர்பங்கள் வாய்க்கும்..
கனவுத் தொழிற்சாலை காலில் விழுந்து குதிரையை கூட்டி வந்தது..எதற்காக எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? இன்று கனவுத்
தொழிற்சாலையை படித்து முடித்தாகவேண்டும்.
கடிகாரத்தை பார்த்தேன். 11:00 PM என்றது. மெதுவாக திரும்பிப் பார்த்தேன். அந்த பெண் கைகளால் கண்களின் மேல் போர்வை அமைத்து உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இந்தப் பக்கம் திரும்பினால் அந்த வயதானவர் நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, கையில் இருக்கும் புத்தகத்தை பார்த்தேன், ஒரு மணி நேரமாய் என் கையில் இருந்து, கீழே விழந்து என தொய்ந்து தான் போயிருந்தது. அதை படித்து முடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
‘எக்ஸ்கியூஸ் மீ.. ‘
இன்னும் இவள் உறங்கவில்லையா ? என்ன வெளியே செல்ல போகிறாளா ? இல்லை என்னை ஏதாவது கேட்கப்போகிறாளா ? எங்கே போகிறீர்கள் என்று கேட்பாளா .. சே என்ன மடத்தன்மான கேள்வி.. கேள்விகளுக்காய் பலவித கேள்விகள்.. திரும்பி ‘எஸ் .. ‘ என்றேன். அப்பாடா .. எத்தனை சரியான கேள்வி..
‘உங்களுக்கு ப்ராபிளம் இல்லன்னா, கேன் வீ சுவிட்ச் ப் தி லைட் .. நேரம் இப்போ 11:00. நீங்க
படிச்சிகிட்டிருந்தீங்க, அதான் முன்ன கேட்க தயங்கினேன்.. பட் ஐ ஹாவ் டு ஸ்லீப் ..யு நோ.. ‘
‘ஷ்யூர்… ‘
கனவுத்தொழிற்சாலையை ஒரு முறை பார்த்தேன். இருள் சூழ்ந்த பின்னும் விழித்து கொண்டிருக்கிறேன்.
—-
nalladhorveenai@yahoo.com
- நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-4
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
- கவிதை….
- எழுநிலை மாடம்
- சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘
- விஷ்வதுளசி -இணையாத உறவுகள்
- வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்
- பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு
- ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2
- கடிதம் – ஏப்ரல் 1, 2005
- பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)
- பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்
- புஷ்பராஜன் நூல் வெளியீடு
- சடச்சான்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
- விடியலை நோக்கி
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)
- வலி
- யுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்
- ‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு
- பாப்லோ நெருதாவின் துரோகம்
- அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)
- அகத்தின் அழகு
- மா..மு..லி
- விடுதலை
- வேஷங்கள்
- தேன்கூடு
- து ணை -பகுதி 8 / குறுநாவல்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்
- முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா
- குரங்குகளின் ராஜ்ஜியத்தில்…
- உயிரே
- பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்
- கவிதைகள்
- கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்
- நிழல்களைத் தேடி …. (2)
- வம்ச விலக்கு
- றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்
- அதீத வாழ்வு
- ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை
- தொலைக் கடத்தி