ஹெச்.ஜி.ரசூல்
1. தனது உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டத் தயங்கும் ஹாபி என்ற நபரே ஒரு புனைவு. ஹதீஸ் நெறிப்படிதான் சிறுநீர் கூட கழிக்கவேண்டும் என்று பேசும் இவர் மாறுவேடம் பூண்டு எழுதுவதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கிறதா என்பதை முதலில் சொல்லவேண்டும்.
2 மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல் 27-07-2006 நாளிட்ட திண்ணை இதழின் கட்டுரைப்பகுதியில் புனைவு மொழிக் கதையாடல்களாக இடம்பெறும் ‘ஹிள்ச்ள்ஞன்த்’துகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என விளக்கியுள்ளேன். அதைப்புரிந்து கொண்டால் ஹாபியின் சிறப்புச் செய்திகளை அவரே அந்த முறையியலை பயன்படுத்தி எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும் விளக்கம் தேவையெனில் தெரிவிக்கவும். அதற்கு முன் அல்லாவின் மொழி குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அல்லாவின் மொழிக்கு பிறகுதானே அவ்லியாவின் மொழியை புரிந்து கொள்ள முடியும்.
3 திருக்குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் 16 முதல் 24 வசனங்கள் வரை ‘அன்னை மர்யம்’ கணவன் துணையின்றி ‘வஹி’ மூலமாக கர்ப்பமுறுவதையும் நபி ஈசாவின் பிறப்பு குறித்துமான அல்லாவின் மொழியை ஹாபி எப்படி புரிந்துள்ளார் என்பதை விளக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கான பதிலில் சுட்டி 5 இணைப்பை தருவதாக தெரிவித்திருந்னஞஜச். அந்த சுட்டியில் அரபு மொழியில் ஒரு பக்க அளவிலான கட்டுரை இருந்தது. தமிழில் விவாதிக்கும்போது அரபு மொழிப் பதில். ‘ஹாபி’யின் அறிவாளித்தனம் வாழ்க! இனியேனும் ஹாபி ஏற்கனவே அரபில், தமிழில், ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பலப்பல தப்சீர்கள், விளக்க உரைகளை உதவியாக வைத்துக் கொண்டுக்கூட இவர் எழுத முற்படட்டும்.
4 மவ்லிது ஓதினால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்று நம்புவது மட்டும் தான் பித்அத் என ஹாபி சப்பைக்கட்டுவது பரிதாபத்திற்குரியது. (சில குழுவினர் அருள் கிடைக்கும் என நம்புகிறார்கள். உங்களால் அதற்கென்ன செய்யமுடியும்?) நபிகள் நாயகம் சொல், செயல் அனுமதிக்குள் வராதது அனைத்தும் ‘பித்அத்’ – (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது). இது வாழ்வின் அனைத்து செயல்பாடுகளிலும் நிறைந்துள்ளது.
எனவேதான் ஹாபி நபி முகமது பேசாத தமிழை பேசக்கூடாது. நபிகள் நாயகம் செய்யாத இன்டெர்நெட், தொலைக்காட்சி சேனல்கள், விசிடிகள் மூலம் வகாபிய பிரச்சாரம் செய்து வயிறு வளர்க்கக் கூடாது. கோடி கோடி ரூபாய் டிரஸ்டுகள், நிறுவனங்கள் அமைக்கக்கூடாது என்று சொல்லுகிறோம்.
நபி வழி திருமணம் செய்யும்போது தங்களது வயதை விட 15 வயது அதிகமுடைய , குழந்தைகளுக்குத் தாயான , விதவை பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும். கதிஜா நாயகியை நபிகள் மணம் செய்ததுபோல், அல்லது ஆயிஷா நாயகிணை மணம் செய்ததுபோல் ஆறுவயது சிறுமியை மணமுடிக்க வேண்டும். திருக்குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டுவது இதைத்தான் இவை அல்லாத பிற அனைத்தும் ‘பித்அத்’ தான் என இடம்பெற்ற அக். 19, 2006 திண்ணை இதழின் சூபி முகம்மது கடிதத்தை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. அன்னைஹப்ஸா குறிப்பில் கலீபா உமரின் மகளான என்று விடுபடலை வைத்து வரலாற்று சான்றை படித்துப் பார்த்து விளங்கி விட்டு எழுதவேண்டும் என எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் ஹாபி தம்பட்டம் அடித்து கொள்கிறார். ஏற்கனவே அன்னை ஹப்ஸா குறித்து திண்ணை ஏப்ரல் 7, 2006 இதழில் ஷரீஅத் குற்றவியல் கட்டுரையின் நான் எழுதிய பகுதியை அவருக்கு நினைவூட்டுகிறேன்.
கலீபா அபூபக்கர் தனது மகள் ஆயிஷா நாயகியை நபிகளாருக்கு மணம் செய்வித்து கொடுத்த நிலையில் மாமனார் என்ற அந்தஸ்தை பெறுகிறார். கலீபா உமர் அவர்களும் தனது மகள் ஹப்ஸாவை நபிகளாருக்கு மணம் செய்வித்து கொடுத்தே உள்ளார். 3வது நான்காவது கலீபாக்களான உஸ்மான், மற்றும் அலி ஆகியோர் நபிகளாரின் மகள்களை திருமணம் செய்தவகையில் நபிகளாரின் மருமகன்களாகி விடுகிறார்கள். எனவே இந்த குடும்ப வகை ஆட்சி முறையைத் தாண்டி வரலாற்றில் எதனை இஸ்லாமிய ஆட்சியாக கருதுவது என இப்பகுதி நீள்கிறது.
எனவே தாங்கள் மட்டும் தான் அறிவுக் கொழுந்துகள் என இறுமாப்போடு பேசித்திரியும் ‘ஹாபி’ குழுமங்கள் இன்னும் பல கருத்தியல் நெருக்கடிகளுக்கு ஆளாகவே வாய்ப்பிருக்கிறது.
6. 19-10-06 திண்ணைக்கடிதத்தில் ஹாபி அல்லாஹ் தன்னையே தான் புகழச் சொல்கின்றதான ஏராளமான வசனங்களை சுட்டிக்காட்டுகிறார். இங்கு விவாத மையத்தையே புரியாமல் விளக்கோ விளக்கென்று விளக்க முற்படுகிறார். புகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவன் அல்லா, மனிதர்களுக்கு தான் பிறர் புகழ வேண்டும் என்ற பேராசை எழும். எனவே மேற்கூறப்பட்ட ”வானங்களின் பூமியில் மற்றும் அகிலத்தாரின் இறைவனுமான அல்லாவுக்கே எல்லா புகழும்” – என்பதான பல வசனங்களும் அல்லாவின் உள்மனத் தூண்டல் பெற்ற நபிமுகம்மதுவின் வார்த்தைகளாகவே அமையப்பெற்றுள்ளன. இப்னு பஷீர் சுட்டிக்காட்டிய இமாம் மெளதூதி விளக்க உரைக்கும் இதுவே பொருத்தமானதாக இருக்கிறது. நபிகளாரை கடிந்து கொள்வது போன்ற வசனங்களும் நபிகளாரின் உள்மனம் வெளிமனத்தை நோக்கி எழுப்பும் குரல்களாகும். அதுபோன்ற கனவு நிலை மனமும் உள்ளது. நபிமுகம்மதுக்கு கனவில் கூட வஹி வந்துள்ளதான ஹதீஸ் குறிப்புகளையும் கருத்திற்கொள்ளலாம்.
7. நபிமுகமதுவிற்கு அல்லா அருளிய உள்மனத் தூண்டலே திருக்குர்ஆன் என்பதை கொய்ன்ராட் எல்ஸ்ட் சொன்னாரோ என்னவோ இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சர் சையத் அகமத் கான், குலாம் அகமது பர்வேஸ் உள்ளிட்ட பலர் விளக்கியுள்ளனர். இந்த அறிஞர்கள் எல்லாம் காபிர்களா… என்ன என்னைப் பொறுத்த வரையில் சர்சையத் அகமத்கான், குலாம் அகமது பர்வேஷ் போன்றோரின் கருத்துக்களை நிராகரிக்கும் ஹாபி, இப்னு பஷீர் – தான் காபிர்கள் என்று அர்த்தம் பெறுகின்றனர். ஏனெனில் காபிர் என்பவர் பிறர் ஒருவரின் கருத்தை நிராகரிப்பவரே ஹாபி கடிவாளங்களை அகற்றிவிட்டு உலகத்தை பார்க்க வேண்டும், இஸ்லாமிய முன்னோடிகளை வாசிக்கவேண்டும். இப்னு தைமியா இமாம் வகாப் மட்டும்தான் என குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டினால் அபத்தங்களைத்தான் சந்திக்க நேரிடும்.
8 அல்லாவின் புனைவு மொழி கதையாடல் – 2
இபுராகீம் நபியின் உரையாடல் தொடர்கிறது. இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும் ஆற்றல் பற்றி சந்தேகம் எழுப்பும்போது அல்லா சொல்கிறான்.
நான்கு பட்சிகளைப் பிடித்து பழக்கி அவைகளை துண்டு துண்டாக்கி ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து நீர்கூப்பிடும் அவை உம்மிடம் வந்து சேரும் (எனக்கூறி அவ்வாறு செய்து காண்பித்து) அல்லாஹ் வல்லோனும் நுண் அறிவுடையோனுமாக இருக்கிறான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக.
அல்பகறா 2-வது அத்தியாயத்தின் 260ஆவது வசனம். ஹாபியின் பகுத்தறிவு பூர்வமான விளக்கம் வேண்டி காத்திருக்கிறது. திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து நூற்றுக்கணக்கான புனைவுமொழி சொல்லாடல் வசனங்கள் இன்னும் ஹாபியின் பகுத்தறிவு பூர்வ விளக்கம் கோரி வரிசை வரிசையாக காத்திருக்கின்றன.
mylanchirazool@yahoo.co.in
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- கடிதம்
- வாணர்களும் விந்தியமலையும்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- National folklore support center
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- மடியில் நெருப்பு – 9
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- இலை போட்டாச்சு !
- நேற்று ! இன்று ! நாளை !
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- அவலம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- சிந்தனையில் சிலநேரம்
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- இரவில் கனவில் வானவில் – 8
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8