தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

அன்பன் சைதன்யா


—-

பாடல்/1


இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது

இயற்கை கனவு தந்தது
செயற்கை களவு செய்தது


தாவித் திரியும் கன்றுக்குட்டி
கயிறு மாட்டிக் கொண்டது
கூவித் தரியும் கிளிகளுமே
கூண்டுக்குள்ளே போனது
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது


கல்லில் நிழல்குடை பஸ் நிறுத்தம் – அது
ஒருகால் விருட்சம் நின்ற இடம்

சொல்லில் செயலில் உலகமும் சகலமும்
கற்பனை ஒப்பனை மிகவாய்ப் போச்சு
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது


காற்று விட்டது பெருமூச்சு அதில்
காதலின் முகமே கறுப்பாய் ஆச்சு

நேற்றின் சுவடுகள் நினைவில் இல்லை
இன்றின் கசடுகள் நிதமும் தொல்லை
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது


பூமியின் தனமும் கலப்படப் பாலை
ஊற்றித் தருகிற ஊழிக்காலை

மனிதா அனைத்தும் நின்செயல் அன்றோ
நின்தலை மண்ணே அட்சதை நன்றோ
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது


காதல் கவிதை வாழ்க்கை சிவிகை
சிந்தனை நன்று வாழிய நின்று

நாதம் இழையும் நரம்புகள் இழையை
நாமே முன்சென்று அறுத்தல் பிழையே
வாழிய மனிதர் வாழிய உயிர்கள்
சூழிய நலம்பெற காளி யருள்க

————
/பாடல் 2/
————

அழகு அழகு
அழகு அழகு
பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை

அன்னை அழகு அரவிந்தர் அழகு
அறிவின் சுடராய் அனைத்தும் அழகு
அழகு அழகு
அழகு அழகு


இளமையில் காதல் கனவுகள் அழகு
அழகு அழகு
அழகு அழகு
முதுமையில் ஞானம் மிகவாய் அழகு

பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு


கல் அழகு
கல்லில் கடவுளை வணங்குதல் அழகு
அழகு அழகு
அழகு அழகு

பசி அழகு உணவே அழகு
பசி நிறைந்திட்டால் சகலமும் அழகு

பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு


கனி அழகு கனிமரம் அழகு
காட்சிகள் அழகு கண்ணின் அழகு
அழகு அழகு
அழகு அழகு

பனி அழகு பனிதரும் சிகரம்
நுனிப்புல் அழகு நுண்புலம் அழகு

பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு


சிரிப்பழகு சிந்தனை அழகு
சிந்தனை நடுவே சிரிப்பது அழகு
அழகு அழகு
அழகு அழகு

மண்அழகு மன்பதை அழகு
மன்பதை பேணும்
மனமழகு

அன்னை அழகு அரவிந்தர் அழகு
அழகின் நிரந்தரம் அவரிடம் பழகு
பழகு பழகு
பழகு பழகு

பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு ……..

from the desk of sankarfam@vsnl.net

Series Navigation

அன்பன் சைதன்யா

அன்பன் சைதன்யா