திண்ணை அட்டவணை – டிசம்பர் 21 , 2001

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue


அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் தரும் பண முதலீடு : 1 பில்லியன் டாலர் ( நூறு கோடி டாலர்)

சூன் 2001-வருடம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் : 547,667

2000-2001 -இல் அமெரிக்கா வந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை – 54,664

2000-2001 -இல் அமெரிக்கா வந்த சீன மாணவர்களின் எண்ணிக்கை – 59,939

சென்ற ஆண்டு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விகிதம் : உலகம் முழுக்க மரண தண்டனை பெற்றவர்களில் : 70 சதவீதம் (பத்தில் ஏழு பேர்)

நேபாளத்தில் கருவுற்ற பெண்கள் மரணமடையும் எண்ணிக்கை : உலகம் முழுதும் மரணம் அடையும் பெண்களில் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது : 50 சதவீதம் (இரண்டு கருவுற்ற பெண்களின் மரணத்தில் ஒன்று நேபாளத்தில் நிகழ்கிறது.)

இதாலி, ஜெனோவாவில் பணக்காரா நாடுகளின் மாநாட்டின் போது (G-7 மாநாடு) கைது செய்யப் பட்ட நபர்களின் எண்ணிக்கை : 298

உலகெங்கும் இருக்கும் போராட்டக்குழுக்களில் இருக்கும் 18க்கும் கீழான வயதுடைய குழந்தை போராளிகளின் எண்ணிக்கை – 3,00,000

இந்த குழந்தைப் போராளிகளிலிலேயே மிகவும் குறைந்த வயதுடைய குழந்தைப் போராளியின் வயது – 8

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமே குழந்தைப் போராளிகளை ராணுவத்தில் இணைக்கும் நாடுகளின் எண்ணிக்கை – 18

(இந்த நாடுகளாவன – ஆசியாவில் பர்மா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஆஃப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சீனா

ஆப்பிரிக்காவில் அங்கோலா, பருண்டி சாட், காங்கோ, எரிட்ரியா, எதியோப்பியா, ர்வாண்டா, ஸியர்ரா லியோன், சோமாலியா, சூடான், உகாண்டா )

Series Navigation